You are currently viewing மூன் இன் தி டே (2023)  / Story in Tamil – Dramalookup

மூன் இன் தி டே (2023) / Story in Tamil – Dramalookup

நீங்கள் ஆசியன் டிராமாக்கள் பார்ப்பவரா? அவற்றை அப்படியே தமிழில் விளக்கமாக உங்களால் எழுத இயலுமா?.... அப்படியெனில் நீங்கள் நேரம் இருக்கும் போது, பகுதி நேர வேலையாக அதனை செய்து, அதன் மூலம் நீங்கள் பணமும் சம்பாதிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் facebook ல் Pengal Thalam ல் தொடர்பு கொள்ளுங்கள். https://www.facebook.com/pengalthalam4u/ - ஈமெயில் முகவரி 'dramalookup@gmail.com'. பொழுது போக்கு கட்டுரைகளை எழுதி, தொடர்ந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Moon in the Day (2023)

கதை : மூன் இன் தி டே

           சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு படைத்தலைவன் அவனது மனைவியான காதலியால் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது காலம் அந்த நேரம் முதல் மேற்கொண்டு நகராமல் நின்று விட, அவர் தனது பழிவாங்கும் காலத்திற்காக 1500 ஆண்டுகள் காத்திருந்து, இறுதியாக துரோகத்திற்கு பழிவாங்குகிறார்.

        ஆனால் தற்காலத்தில், ஒருமுறை அவரைக் கொன்ற பெண், அவரைப் பாதுகாப்பதாக சபதம் செய்த தீயணைப்பு வீரராக மறு அவதாரம் எடுத்துள்ளார். நிகழ்காலத்தில் அவர்களின் தொடர்புகள் அவர்களின் கடந்த காலத்தால் சிக்கலாகின்றன.

           ஏனெனில் டோஹா உயிருடன் இருந்தபோது அவர் நேசித்த பெண்ணின் மீது மற்றொரு பழிவாங்கும் ஆவி தாக்குகிறது.

          மேலும் 1,500 ஆண்டுகளாக, அவர் அவளுடனே இருந்து, காலங்கள் கடந்தும் பழிவாங்க கோபம் கொண்டு காத்திருக்கிறார். தன் நின்று போன காலத்தில் இருந்து வெளியேற அவருக்கு வாய்ப்பு இறுதியாக ஒரு நாள் கிடைக்கிறது. இதனால், அவர்களின் அழிந்த கதை மீண்டும் தொடங்குகிறது.

             எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கும் ஒரு ஆணும், மறந்த ஒரு பெண்ணும் – இது அவர்களின் தொடக்கமா? அல்லது முடிவா?

விவரம்

  • நாடகம்: மூன் இன் தி டே (ஆங்கில தலைப்பு)
  • எழுத்தாளர்: ஹீ யம் (வெப்காமிக்)
  • நெட்வொர்க்: ஈஎன்ஏ, ஜெனி டிவி
  • அத்தியாயங்கள்: 14
  • வெளியீட்டு தேதி: நவம்பர் 1 – டிசம்பர் 14, 2023
  • மொழி: கொரியன்
  • நாடு: தென் கொரியா

முக்கிய கதாபாத்திரங்கள் :

ஹான் ஜூன்-ஓ (Kim Young-Dae) – ஹீரோ 1500 வருடங்களுக்கு முன்பும், இப்பொழுதும்…

அன்று :
வளர்ப்புத் தந்தைக்கு அடிமையாக, அவர் சொல்வதை எல்லாம் வெறுப்புடன் செய்யும் படைத்தலைவன். கொலை செய்வதை விரும்பாத, அழுத்தமான திறமைவாய்ந்த ஆளுமையான அனாதை.
இன்று :
ஹான் ஜூன்-ஓ (Kim Young-Dae) கொரியாவில் ஒரு சிறந்த நட்சத்திர கதாநாயகன். வெகு அழகான, உயரமான ஆனால் படபடப்பான மற்றும் திறமையும், ஆளுமையும் சற்று குறைவான ஹீரோ.

காங் யங்-ஹ்வா (Pyo Ye-Jin) – ஹீரோயின் 1500 வருடங்களுக்கு முன்பும், இப்பொழுதும்…

அன்று :
தன் ஊர் மக்களை, தன் குடும்பத்தை மொத்தமாக கொன்று அழித்த படைத்தலைவனைப் பழிவாங்கும் வெறி கொண்டு, அவனிடம் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பெரிய பிரபுதன குடும்பப்பெண்.
இன்று :
தீயணைப்பு படையில் வேலை செய்யும், நடுத்தர குடும்ப பெண்.

ஹான் மின்-ஓ (On Joo-Wan) – ஹீரோவின் சகோதரர்

ஹீரோவின் சகோதரர் மற்றும் சினி ஏஜென்சியின் CEO. தன் உடன் பிறந்தவனின் திடீர் என்று மாறிய நடவடிக்கையின் காரணத்தை அறிய முயலும் பாசமான சகோதரர் இவர்.

படைத்தலைவனின் வளர்ப்புத் தந்தை 

பிகினிங் என்டர்டெயின்மென்ட்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.

இவர் கெட்ட ஆவினால் தாக்கப்பட்டு, சுயநலத்துடன் பழிவாங்க எண்ணும் வீடற்றவர்.

Episodes :

Moon in the Day – Official Trailer :

dramalookup

This site is about Korean and Asian dramas' storiesin Tamil language. It is to make story telling videos for Korean drama Tamilfans. And also it makes enterainment news about Asian dramas.

Leave a Reply