பொதுவா இந்த தளத்திற்கு வரும் அனைவரும், ஒன்று ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் கொரியன் நாடகம் சிலவற்றைப் பார்த்திருப்பீர்கள் அல்லது இணையத்தில் ‘whatsapp’ – ல் பார்த்து கேள்விப்பட்டு இருப்பீர்கள் ….
Korean Drama Introduction in Tamil – கொரிய நாடக அறிமுகம்
புதுயுகம் தொலைகாட்சி அல்லது whatsapp என்று இந்த கொரியன் நாடகங்கள் சிலவற்றைப் [சில தான்] பார்த்துவிட்டு, அட புதிதாய் இருக்கின்றனவே என்று எல்லோருமே எண்ணினார்கள் தான். சிலர் நேர்மையாய் விமர்சனம் செய்தாலும், பலர் எதிர்மறை விமர்சனங்களையே செய்தனர்.[korean drama in tamil]
எது எப்படி இருந்தாலும், நாம் அனைவருமே கொரியன் நாடகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள்தான் ….நானும் இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தான் ‘அதில் அப்படி என்ன விஷயம் இருக்கின்றது?’- அவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் ‘youtube’ – ல் மட்டும் தான் தொடர்களைப் பார்க்க முடியும்…என்று நினைத்திருந்தேன் .
பல்வேறு தளங்கள் இதற்காகவே இருக்கின்றன, என்று அறிந்து அங்கு சென்று பார்க்கத்தொடங்கினேன் …ஒரு சின்ன அசௌகர்யம் எது என்றால் அவை யாவும் தமிழில் இல்லை… ஆனால் கீழே ஆங்கில மொழி பெயர்ப்பு இருந்தது …முதலில் அது நிச்சயமாக அசௌகர்யமாகவே இருந்தாலும், பிறகு எதிலும் நல்லதே இருக்கும் என்ற நிச்சயப்படி நான் ஆங்கிலம் ஓரளவு தெளிவாகவே [korean drama in tamil] பிறகு தான் இணையத்தில் கற்றுக்கொள்வதற்கும் அதுவே காரணமாயிற்று…
பொதுவாக ‘ரமணிச்சந்திரன்’ அவர்களின் கதைகள் மாதிரி காதல் நிறைந்த கதைகள் படிக்கும் என்னைப் போல உள்ளவர்களுக்கு அதைக் கண்முன்பாக காட்சிகளாக பார்க்கும் வாய்ப்பை இந்த கொரியன் நாடகங்கள் அளிக்கின்றன என்பது உண்மைதான்….ஆனால் சில காட்சியமைப்புகள் நம் இந்திய கலாச்சாரத்திக்கு ஏற்புடையது அல்ல…
என்றாலும் ….அவை ‘இந்திய நாடகங்கள் அல்லவே’ ‘அவர்கள் கலாச்சாரப் படி தானே அவர்கள் எடுப்பார்கள்‘ – என்று தோன்றுகிறது…என்ன நாம் எழுத்துக்களில் படிப்பதை அவர்கள் காட்சிகளாக காட்டுகிறார்கள்…[korean drama in tamil]
ஆனால் அது மட்டுமே கொரியன் நாடகங்களா? என்றால் கண்டிப்பாக இல்லை..அதைத் தாண்டி அவர்கள் கதைக்கும் மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள், என்பதை மறுக்கவே முடியாது…அவர்கள் நாடகங்களை உருவாக்கும் விதமே அலாதியாக இருக்கின்றது ..
‘அட என்ன ஒரு காட்சியமைப்பு’ என்று வியந்து போகும் அளவுக்கு, ‘ இப்படிக் கூட ஒரு ஆண் தன் பெண் தோழிக்காக தன்னை மாற்றிக்கொள்வானா’ என்று ஆசைப் படும் விதத்தில், ‘வாவ்!!! இதை எதிர்பார்க்கவே இல்லையே’ என்று சிலிர்க்கும் அளவுக்கு, கதையோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார்கள்….[korean drama in tamil]
அப்படி ஒன்றிப் போகின்றவர்களால், இது தன் வாழ்க்கை, இதை தான் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் என்ன ?? ..என்ற எண்ணம் கொள்வது மட்டும் அல்லாது, தன்னைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கூட இதமான மனதுடனே எதிர்கொள்ளத் தயாராகிறார்கள் …என்றே தோன்றுகிறது.