Articles

Must-Watch K-Dramas From 2016 – Part 1 – தமிழில் / dramalookup

கொரிய மற்றும் ஆசிய நாடகங்கள் பற்றிய விமர்சனங்கள், கட்டுரைகள், செய்திகள் என்று உங்களுக்கு எங்கள் தளத்தில் எழுத விருப்பமா? ஆம் எனில் தொடர்பு கொள்ளவேண்டிய ஈமெயில் முகவரி 'dramalookup@gmail.com'. பொழுது போக்கு கட்டுரைகளை எழுதி, தொடர்ந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

korean dramas in tamil - dramalookup

பார்க்க வேண்டிய கே-டிராமாக்கள் [2016 -ல்] - பகுதி 1

             2016 ஆம் ஆண்டின் நாடகங்கள் கிட்டத்தட்ட எல்லாமே சர்வதேச அளவில் உள்ள ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆகும். சிறந்த, பெரிய நடிகர்கள் நடித்தவை மட்டுமல்ல, மிகச் சிறந்த அற்புதமான நாடகங்கள் கூட இந்த ஆண்டில் தான் அதிக அளவில் வெளியாயின. ஏறக்குறைய எல்லா நாடகங்களும் ஒன்றை ஒன்று விஞ்சியவையாகத் தான் பார்க்கப்படுகின்றன.
           நாம் அவை என்னென்ன என்பதையும், அவற்றின் விவரங்களையும் இந்த பக்கத்தில் காணலாம்.

மூன்லைட் டிரான் பை க்லௌட்ஸ்

[ Moonlight Drawn by Clouds ]

             இந்த நாடகத்தின் கதாநாயகன் 2016 – ஆம் ஆண்டில் ஒரு நாடகத்தில் அல்ல இரண்டு நாடகங்களில் முன்னிலை வகித்தார். “Moonlight Drawn by Clouds”-ல் ஹீரோ தனது குடும்பத்திற்கும் மற்றும் தனது மக்கலுக்கும் சரியானதைச் செய்ய, அரசியல் சூழ்ச்சிக்கு எதிராக அந்த நாட்டின் இளவரசராகவும், ராஜாவாகவும் போராடுகிறார்.
          அந்த போராட்டத்திற்கு இடையே அரண்மனை ஆண் பணியாளாக மாறுவேடம் பூண்ட முன்னாள் ராஜாவின் மகளை காதலிக்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து தங்களின் நண்பர்களின் உதவியுடன் அந்த ஆபத்தான அரசியல் சிக்கலை எவ்வாறு களைகிறார்கள் என்பதே இதன் கதை.

Moonlight Drawn by Clouds Trailer :

டேசெண்டன்ட்ஸ் ஆப் தி சன்

[ Descendants of the Sun ]

            இது இராணுவ – மருத்துவ காதலை மையமாக வைத்து வந்த நாடகம் ஆகும். உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட நாடகம் மட்டுமல்ல, இதில் நடித்த ஜோடி நிஜ உலகிலும் காதலித்து தம்பதியரான செய்தியும் மிக்க பரபரப்பாக பேசப்பட்டது. [ இப்போது பிரிந்து விட்டது வேறு கதை ] இயற்கை பேரழிவு, போர்கள், சர்வதேச நெருக்கடி என்று நிச்சயமாக ஒரு பெரிய நாடகத்தை நமக்குக் கொண்டுவருவதற்காக உழைத்து இருகிறார்கள்.
             இதில் வரும் சின்ன சின்ன காட்சி அமைப்புகளுக்காகவே மிகவும் ரசித்து பார்க்கப்பட்ட நாடகம் இது. உதாரணமாக கதாநாயகி தனது கண்ணீர் ஒலிபெருக்கி ஒப்புதல் வாக்குமூலத்தை நிறுத்த ஓடுவதைச் சொல்லலாம்.
இந்த நாடகத்தில் மேலும் ஒரு ஆச்சர்யமாக அற்புதமான இரண்டாம் நிலை ஜோடிகளைக் கூற வேண்டும். அதிலும் ஆண் நண்பர்கள் இருவருக்கும் இடையில் அமையும் அந்த அற்புத கெமிஸ்ட்ரி, பாஸ்… நாடகம் பாருங்கள்…உங்களுக்கே புரியும்.

Descendants of the Sun Trailer :

அன்கன்ட்ரோலப்லி ஃப்அன்ட்

[ Uncontrollably Fond ]

             தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்கும், தனது தம்பியைப் பராமரிப்பதற்கும் போராடும் கதாநாயகி, அதே நேரத்தில் ஒரு ஆண் நட்சத்திரமாக திரையில் ஒளிர்ந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் கதாநாயகன், இருவருக்கும் இடையில் நிகழும் உணர்வுப் பூர்வ நிகழ்வுகளே இந்த நாடகம்.
            தாமதமாகிவிடும் முன் சரியானதைச் செய்ய விரும்பும் அவனுக்குக் குறுக்கே வரும் வேறு ஒரு ஜோடி, அதனால் விளையும் விளைவுகள் என்று கதை மனதைத் தொடும் விதத்தில் கொண்டு செல்கிறார்கள்.
             சோகத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு மிக அற்புத நாடகம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

Uncontrollably Fond Trailer :

“டபிள்யூ” - டூ வோர்ல்ட்ஸ் அபார்ட்

[W – Two Worlds Apart ]

             2016 ஆம் ஆண்டின் மறக்கமுடியாத நாடகங்களில் இதுவும் ஒன்று. “டபிள்யூ” என்ற இந்த நாடகம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றதுடன், அதிசயமாக காட்சிகள், கதாநாயக கதாநாயகியின் வெற்றிகரமான அழகான நடிப்பு, உண்மையான உலகத்திற்குள்ளே கார்டூன் உலகம் என்று ஒன்றிப்போகும் அளவுக்கான கதை, மர்மம், ஆச்சரியம் மற்றும் தனித்துவமான காதல் என்று எல்லா வகையிலும் பேசப்பட்ட நாடகம். அதிலும் இதன் கதாநாயகன் உண்மையில் ஒரு காமிக் புத்தக ஹீரோவைப் போலவே இருப்பதை யாரும் மறுக்க முடியாது! நாடகம் பாருங்கள் மயங்கிப் போவீர்கள்.

W – Two Worlds Apart Trailer :

ஸ்கார்லெட் ஹார்ட்: கோரியோ

[ Scarlet Heart: Goryeo ]

              2016 ஆம் ஆண்டு வெளிவந்த நாடகங்களில் தன்னை மறந்து ஒன்றும் அளவுக்கான நாடகங்களில் இதுவும் ஒன்றாகும். முதல் அத்தியாயத்தில் இருந்து இறுதி அத்தியாயம் வரை நம் இதயங்களைக் கைப்பற்றி, தொடர்ந்து ஒரு ஆர்வத்தைத் தருபவையாக இந்நாடகம் உள்ளது. அழகான மற்றும் லட்சிய சகோதரர்களின் கலவை மற்றும் கண்களுக்கும் இதயத்திற்கும் ஒரு விருந்தாக்கும் காட்சி அமைப்புகள் கொண்டிருக்கிறது.
              மிக கடின வாழ்கையை வாழும் ஒரு போர் வீரனாகவும், இளவரசனாகவும் உள்ள கதாநாயகன், காலப் பயணம் செய்து மன்னர் ஆட்சிக்கு வந்த கதாநாயகி, அவளால் ஏற்படும் குளறுபடிகளால் வரலாற்றில் நிகழும் கொடூர சம்பவங்கள், அதனால் அவர்கள் வாழ்வில் விளைந்து விட்ட மாற்றங்கள் என்று இந்த நாடகம் தனக்கே தனக்கான ஒரு தனித்தன்மையுடன் காலப் பயணம் செய்கிறது.

Scarlet Heart: Goryeo Trailer :

dramalookup

This site is about Korean and Asian dramas' storiesin Tamil language. It is to make story telling videos for Korean drama Tamilfans. And also it makes enterainment news about Asian dramas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *