
‘Agent Kim Reactivated’ – கொரிய நாடக விளக்கம்
.
Agent Kim Reactivated | Official Trailer | Netflix [ENG SUB]
.
So Ji-sub தலைமையில் வெளிவந்த இந்தத் தொடர், தனது மகளைக் காப்பாற்ற எதையும் செய்யத் துணியும் ஒரு தந்தையின் மனதைத் தொடும் கதையுடன், தீவிரமான சண்டைக் காட்சிகளையும் கலந்து நமக்கு ஒரு நல்ல ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு தொடராக இருக்கிறது. முதல் இரண்டு அத்தியாயங்கள் சீரான வேகத்தில் நகர்ந்தாலும் அவை, கதை முழு வீச்சிலான ஆக்க்ஷன் காட்சிகளாக மாறும் முன்பு இந்த நாடகத்தின் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ளப் போதுமான நேரத்தை அளிப்பதாகவே இருக்கின்றன.
Agent Kim Reactivated – கொரிய நாடகத்தின் கதை சுருக்கம் :
‘மேனேஜர் கிம்‘ ஒரு வங்கியின் அலுவலக ஊழியராகவும், ஒற்றைப் பெற்றோராக இருந்து பள்ளி செல்லும் ஒரு டீனேஜ் பெண்ணுக்கு தந்தையாகவும், அவர் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமூக சிக்கல்கள், சண்டைகள், ரௌடிகள், ஏன் போலீஸ் பார்வையில் இருந்து கூட ஒதுங்கியே வாழ்கிறார். ஆனால் உண்மையில் ‘மேனேஜர் கிம்’ என்று அழைக்கப்படும் இவர் கிம் டோ-ஹியான், வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் ரகசிய உளவாளி. தனது மறைந்த மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இவ்வாறு தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
அவரது இளம் வயது மகள் மின்-ஜி கடத்தப்பட்டபோது, அவளை மீட்க, கிம் தனது மறைவு வாழ்வை விட்டுவிட்டு எதை பற்றியும் கவலை கொள்ளாமல், மீண்டும் தனது தனது கடந்தகால போர்ப் பயிற்சியை மற்றும் ரகசிய வாழ்வு முறையை பயன்படுத்துகிறார். இவரின் மக்களுக்கான தேடுதல் வேட்டையின் போது, கிம், முன்னாள் உளவாளிகளான சியோங் ஹான்-சு மற்றும் பார்க் ஜின்-சியோல் ஆகிய இரண்டு தந்தைகளுடன் இணைகிறார். இவர்கள் இருவரும் கிம் க்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவரது இந்த திடீர் நடவடிக்கை தேசிய சிறப்புப் பணிகளுக்கான பணியகத்தின் கவனத்தை ஈர்க்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த மூவரும், கட்டுமான நிர்வாகியான ஜூ காங்-சான், சாங்-ஆ என்ற கூட்டாளி, மற்றும் வட கொரிய உளவாளியான பார்க் காங்-சியோங் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர்.
முக்கியக் கதாபாத்திரங்கள் :
கிம் டோ-ஹியோன் / மேனேஜர் கிம் [ So Ji-sub ]
வெளிப்படையாக ஒரு சாதாரண வங்கி மேலாளராகவும், ஒற்றைத் தந்தையாகவும் வாழ்கிறார். அவருடைய மகள் Kim Min-ji தான் அவரது உலகம். ஆனால், அவரது உண்மையான அடையாளம் மிகவும் ஆபத்தான முன்னாள் ரகசிய முகவர். அதாவது மிகவும் ஆபத்தான சிறப்பு உளவாளி (Black Ops Agent). முழுவதும் அமைதியான, பொறுமையான மனிதராகத் தெரிந்தாலும், மகள் காணாமல் போன பிறகு, பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த அவரது கொடூரமான போர்திறன் மீண்டும் வெளிப்படத் தொடங்குகிறது.
கிம் மின்-ஜி [ Seo Su-min ]
கிம் ன் மகள். டீனேஜ் பெண். பள்ளியில் தனிமை, கொடுமைப்படுத்தல் (bullying) போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள். அம்மா இல்லாமல் வளர்வதால், அப்பாவுடன் உணர்வு ரீதியாக சில இடைவெளி இருக்கிறது. எபிசொட் 1-இன் இறுதியில் அவள் காணாமல் போவது, முழுக் கதையையும் முன்னோக்கி நகர்த்தும் முக்கிய சம்பவமாகிறது.
முக்கியமான தந்தை–மகள் உறவு.
கிம் ஒரு முன்னாள் ரகசிய ஏஜென்ட். தற்போது சாதாரண வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும், தனது மகள் மின்-ஜிக்கு ஆபத்து ஏற்பட்டவுடன் மீண்டும் தனது பழைய Agent வாழ்க்கைக்குத் திரும்புகிறார். மின்-ஜி கடத்தப்பட்டிருப்பது கிம்முக்கு ஒரு சாதாரண விசாரணை அல்ல. தனது மகளை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கம்.
மறுபுறம், மின்-ஜியும் தந்தையை மிகவும் நம்புகிறாள். ஆனால் கடத்தப்பட்ட சூழலில், தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உறவு:
கிம் → தந்தை | மின்-ஜி → மகள்
சியோங் ஹான் [ Choi Dae-hoon ]
கிம் ன் நெருங்கிய நண்பன். மிகவும் திறமையான முன்னாள் ரகசிய முகவர் பணிபுரிந்தவர். அதுமட்டும் அல்லாது முன்னாள் டேக்வாண்டோ தங்கப் பதக்கம் வென்றவரும் கூட. தற்போது குழந்தைகளுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். மின்-ஜியைத் தேடும் முயற்சியில் கிம்முக்கு உதவுவதன் மூலம், அவர்களுடைய பழைய நட்பின் ஆழம் தெரிகிறது.
கிம் தனியாகச் செயல்படும்போது கூட, Han-soo அவருக்கு துணையாக நிற்கிறார்.
பார்க் ஜின்-சியோல் [ Yoon Kyung-ho ]
இவரும் கிம் ன் நீண்ட கால நண்பர். சமூக சேவையில் மகிழ்ச்சி அடைபவராக இருக்கிறார். ஒரு காலத்தில் “போர்க்கடவுள்” என்று அழைக்கப்பட்ட மிகச்சிறந்த போர்வீரர்; டா-பின்னின் தந்தை. Han-soo உடன் சேர்ந்து கிம்முக்கு உதவுகிறார். ஆபத்தான சூழ்நிலைகளிலும் கிம்மை விட்டுவிடாமல் அவருடன் நிற்கிறார்.
இந்த மூவரின் உறவு, கிம்மின் பழைய வாழ்க்கையிலிருந்து உருவான நம்பிக்கை மற்றும் நட்பு அடிப்படையிலானது.
பழைய 66
கடந்தகால உறவு. Agent ஆக இருந்த காலத்தில் கிம்மும் 66-மும் நெருங்கிய சகாக்கள். இருவரும் ஒன்றாக ஆபத்தான Operation-களில் ஈடுபட்டவர்கள். 66 இறக்கும் சூழ்நிலையில் கிம் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். எனவே, 66-ன் மரணத்திற்கு கிம் காரணம் என்ற எண்ணம் உண்மையல்ல.
இவர்களுடைய உறவில் நட்பு, நம்பிக்கை, தியாகம் ஆகியவை முக்கியமானவை.
புதிய 66 – பழைய 66
புதிய 66 என்பது இறந்த பழைய 66-ன் தம்பி. அதனால் தனது அண்ணனின் மரணத்திற்குக் கிம் தான் காரணம் என்று முதலில் நினைத்து, கிம்மீது கடுமையான கோபம் கொள்கிறார். இதுதான் புதிய 66-க்கும் கிம்முக்கும் இடையிலான மோதலுக்குக் காரணமாகிறது.
பின்னர் உண்மையான சம்பவம் தெரிய வரும்போது, கிம் தனது அண்ணனைத் துரோகம் செய்யவில்லை என்பதை புதிய 66 புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்.
உறவு:
புதிய 66 → பழைய 66 = தம்பி → அண்ணன்
Golden Teeth
Golden Teeth, மின்-ஜியை கடத்தி வைத்திருக்கும் எதிரி தரப்பைச் சேர்ந்த முக்கிய நபர்.
ஜூ காங்-சான் [ Joo Sang-wook ]
கிம் ன் மகளின் வகுப்பு மாணவி [ ஜூ ஹே-ரி ]யின் தந்தை இவர். தனது இலக்குகளை அடைய எதையும் செய்யும் இயல்பு கொண்டவர். பெரும் செல்வந்தரான இவர் ஒரு முன்னாள் கேங்ஸ்டர். இந்நாள் ‘ஜூஹாக் கன்ஸ்ட்ரக்ஷன்’ (Juhak Construction) நிறுவனத்தின் தலைவர்.
ஜங் சாங்-ஆ [ Son Na-eun ]
மேலாளர் கிம் ன் சக பெண் ஊழியர். இவர் உண்மையில் ‘தேசிய சிறப்புப் பணிகள் பணியக’த்தில் (National Special Missions Bureau) பணிபுரியும் ஏஜென்ட் ஆவார்.
இன்னும் தொடரும்….
கதாபாத்திரங்களும் அவர்களுக்குள் உள்ள உறவு முறையும் :
| கதாபாத்திரம் | அடையாளம் | முக்கிய உறவு |
|---|---|---|
| Kim | முன்னாள் ரகசிய உளவாளர்; தற்போது தந்தை | Min-ji-யின் தந்தை; 73 என்ற குறியீட்டுடன் கடந்தகாலம் |
| Min-ji | Kim-ன் மகள் | Kim-ன் உயிருக்கும் மேலான மகள் |
| Han-soo | Kim-க்கு உதவும் நபர் | Kim-ன் நம்பகமான கூட்டாளி |
| Jin-cheol | Kim-ன் தேடுதல் நடவடிக்கையில் இணைபவர் | Kim-ன் கூட்டாளி |
| 66 | Kim-ன் பழைய பயிற்சி நண்பர்/கூட்டாளி | Kim-ன் கடந்தகாலத்துடன் தொடர்புடையவர் |
| Ri Eung-ryeong | Kim-ஐ சிறுவயதில் தேர்ந்தெடுத்து பயிற்சிக்கு அனுப்பிய அதிகாரி | Kim-ன் முன்னாள் பயிற்சி/அமைப்பு தொடர்பு |
| Golden Teeth | குற்றக் கும்பல் தலைவர் | Mr. Ju-வுடன் தொடர்புடையவர்; Min-ji கடத்தலில் முக்கிய நபர் |
| Mr. Ju / Gang Chan | Golden Teeth-ஐ விட அதிக அதிகாரம் கொண்டவர் | Hye-ri-யின் தந்தை; Golden Teeth-ன் மேலதிகாரி |
| Hye-ri | Mr. Ju-வின் மகள் | தந்தையின் பாதுகாப்பில் இருப்பவர்; கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் |
.
Tags,
korean dramas in tamil explanation, Agent Kim Reactivated korean drama in tamil, korean drama explanation in tamil, dramalookup, தமிழில் கொரிய நாடகங்களின் விளக்கம், கொரிய நாடக விளக்கம்,
.