Agent Kim Reactivated கொரியன் நாடகம் எபிசொட் 1 கதை சுருக்கம் – Drama Lookup

Agent Kim Reactivated கொரியன் நாடகம் எபிசொட் 1 கதை சுருக்கம்

Agent Kim Reactivated முதல் எபிசொட்-ன் கதை சுருக்கம் :

Agent Kim Reactivated ஒரு ஆக்ஷன், உளவு (Spy), மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கொரிய தொடர். முதல் எபிசோட்டிலேயே முக்கியமான கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த சம்பவங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

தன் பெண்ணுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, அவளுக்கு மட்டுமே முன்னுரிமை என்று வாழும் தந்தை. ஒரு வங்கியில் மேலாளராக வேலை செய்கிறார். மாத சம்பளம் வாங்கும் சாதாரண நடுத்தர குடும்பத்தின் சராசரி ஆண். பள்ளியில் படிக்கும் அவரின் டீனேஜ் மகள். தன் பள்ளியில் தன்னை வெகுவாக தொந்திராவுக்குள்ளாக்கும் சகா பெண்களை, அவர்களைக் கண்டு பயந்துவிடாமல், அதே நேரம் எதிர்த்தும் ஏதும் செய்யாமல் ‘போய்த்தொல்லை’ என்று ஒதுங்கிப் போகும் அழுத்தமான சிறு பெண். இவர்களை சுற்றி தான் கதை ஆரம்பிக்கிறது. சாதாரண மிரட்டல் என்றாலும், அடிதடி சண்டை என்றாலும், பெரிய அதிகார மோதல் என்றாலும் அடங்கி ஒதுங்கி செல்லும் தந்தையைக் கண்டு பெண்ணுக்கு கோபம் வெகுவாக வருகிறது. தந்தை மீது பாசம் இருப்பதும் உணர முடிகிறது. ஆனாலும் ஒரு கட்டத்தில் தன் மீது தவறே இல்லாமல் இருந்தும் கூட, தன் சக வகுப்பு மாணவியின் முன்னால் அவளின் பெற்றோரிடம் தந்தை மண்டியிட்டதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போக, பெண்ணும் காணாமல் போகிறாள். பெண்ணுக்காகத்தான் அத்தனை சகித்தலும்…அந்த பெண்ணே காணாமல் போனால்…அந்த தந்தையின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கான பதிலுடன் முதல் எபிசொட் முடிகிறது. 

(So Ji-sub) ஒரு தந்தையாக தன் பெண்ணின் அன்புக்கு எங்கும் இடத்தில், தன் மேலதிகாரியின் ஏமாற்று வேலை தெரியும் நேரம் அதனை சகித்து ஒதுங்கி போகும் இடத்தில், ரௌடியிடம் அடிவாங்கும் போது தோன்றும் கோவத்தை நொடியில் அடக்கி, முகத்தை அமைதியாகும் இடத்தில், தன் பெண்ணுக்காக என்றாலும் மற்றவர்களின் முன் மண்டியிடும் இடத்தில் என்று எல்லா இடத்திலும் ‘கிம்’ [ அதாவது ஹீரோவின் பெயர் கிம்.] ஸ்கோர் செய்கிறார். மகளைப் பற்றிய அக்கறை, அமைதியான குணம், உள்ளுக்குள் புதைந்திருக்கும் வலி ஆகியவற்றை வசனங்களைவிட முகபாவனைகளால் கிம் அதிகம் வெளிப்படுத்துகிறார். இயல்பான குடும்ப அமைப்பிலும், இவரின் அதிரடி நொடி நேரம் இவரிடம் வந்து போகும் இடத்தில் இவர் அசாதாரணமானவர் என்பதை நமக்கு சட்டென்று உணர்த்தி விடுகிறார். அதற்கு தகுந்தாற் போல, தன் பெண் காணாமல் போய் விட்டால் என்று தெரியும் இடத்தில் துவங்குகிறது இவரின் அசாதாரணம்.

முதல் எபிசொட் முழுவதும் தந்தை பெண் பாசத்தை உணர்த்தும் கதை முடிவில் அதிரடியை கையில் எடுக்கிறது. காணாமல் போன தன் பெண்ணை பற்றி கேள்வி கேட்கும் போது இடையில் நுழையும் ஒரு ரௌடி தன் பயங்கமான [ அவனின் நினைப்பு அது ] உடம்பை காட்டி கிம் ஐ மிரட்டும் வேளையில் கிம் ன் சட்டை கிழிந்து அவனின் உடம்பு வெளியே தெரிய…கண்டவனுக்கோ இப்போது அதிர்ச்சி. முன் உடல் முழுவதும் கத்தி காய வடுக்களும், துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்களும் என உடம்பே அதிரடியாக இருக்க, அதை விட அதிரடி, கிம் ன் அடி. இது ஆரம்பம் மட்டுமே. இந்த அடியே இனி அந்த சாதாரண தந்தை தன் மகளைக் கண்டுபிடிப்பதற்காக தன் பழைய வாழ்வுக்கு திரும்புகிறான் என சொல்லாமல் சொல்கிறது எபிசொட் முடிவு.  இறுதியில் வரும் இந்த திருப்பம், அடுத்த எபிசோட்டை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

Agent Kim Reactivated – நாடகம் எபிசொட் 1 குறித்து சில சமூக ஊடக கருத்துக்கள் :
  • பெரும்பாலான கே-டிராமாக்களைப் (K-dramas) போலவே, ‘ஏஜென்ட் கிம் ரியாக்டிவேட்டட்’ (Agent Kim Reactivated) தொடரின் முதல் அத்தியாயம் மெதுவாகவே நகர்கிறது. ஆனால், கதாபாத்திரங்களையும் கதைக்களத்தையும் அறிமுகப்படுத்தும் அந்த இடைவெளியிலேயே, முன்னாள் ஏஜென்ட் கிம் ஏன் இப்போது அமைதியான சுபாவம் கொண்ட மேலாளர் கிம்மாக மாறியிருக்கிறார் என்பது குறித்த தெளிவான புரிதலை இது நமக்கு அளிக்கிறது.
  • நான் சோ ஜி-சப் (So Ji Sub)-க்காகத்தான் இதைப் பார்க்க வந்தேன், ஆனால் இது ஒரு சிறந்த முதல் அத்தியாயம். அமைதியான அலுவலக ஊழியராக அவரது நடிப்பு அருமையாக இருக்கிறது!! குறிப்பாக, அந்த அத்தியாயத்தின் முடிவு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அவரது மகளின் தோழி தொலைபேசியில் மிகவும் மோசமாகவும் மரியாதையின்றியும் பேசினாள். கொரியக் குழந்தைகள் பெரியவர்களிடமும், அதிலும் குறிப்பாகத் தங்கள் நண்பரின் பெற்றோரிடமும் இப்படித்தான் பேசுவார்களா? என்ன கொடுமை இது!

.

Tags,
korean dramas in tamil explanation, Agent Kim Reactivated korean drama in tamil, korean drama explanation in tamil, dramalookup, தமிழில் கொரிய நாடகங்களின் விளக்கம், கொரிய நாடக விளக்கம்,

.

=====================

Leave a Comment

Scroll to Top