யோங் பேரரசு – ஜுக்கே யு – யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னன் – புகழ்பெற்ற ஜுக்கே குலத்தின் நான்காவது மகன்.
யான் பேரரசு – வாரிசு யான் சூன் – சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்த போது ஜுக்கே யுவின் நண்பன். பின்னர் எதிரி.
சூ கியாவோ – சிங் என்று அழைக்கப்படும் இவள் ஜுக்கே யுவின் அடிமையாக வந்து சேர்ந்து, அவனால் போர்வீரங்கனையாக பயிற்சி கொடுக்கப்பட்டவள் – முன்னர் ஜுக்கே யுவின் தோழனாக இருந்த போது யான் சூனால் ஒரு தலையாக விரும்பப்பட்டவள். ஜுக்கே யு இவளுக்கு ‘சிங்’ என்று பெயரிட்டு அழைக்கிறான். யான் சூன்-க்கும் மற்றவர்களுக்கும் இவள் ‘சூ’
Rebirth எபிசொட் – 1 சுருக்கம்
கின்ஷான் குறுநில மன்னனான ஜுகேயு, புகழ்பெற்ற ஜுகே குலத்தின் நான்காவது மகன். யான் பேரரசுக்கு நம்பிக்கைக்குரிய போர்வீரன். யோங் பேரரசருக்கு அரசியல் எதிரிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறான். அவர்களுக்கு எதிரான யான் குடும்பத்தின் வாரிசான யான் சூன், யோங் பேரரசால் தனது குடும்பம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜுகேயு க்கு முன்பு தோழனாக இருந்து இப்போது எதிரியாக மாறுகிறான். இப்போது கடுமையான பனி பிரதேசத்தின் மத்தியில் யான் சூனின் படைகள் ஜுகே யூவின் படைகளை முற்றிலுமாக அழித்து, பிணக்குவியல்களை பனி நீருக்குள் மூழ்கடித்து விட்டு செல்கின்றன.
கடுமையான சண்டையின் போது, முற்றிலும் தோல்வியுற்று, பிணக்குவியலின் மேல் நின்று கொண்டு இருக்கும் அந்த நிலையில் கூட ஜுகே யு சரணடைய மறுக்கிறான். ஜுகே யூவின் தளபதியான யூ கி, ஒரு மனிதக் கேடயமாகச் செயல்பட்டு, கடைசி முயற்சியாக முன்னால் பாய்ந்து உயிரை விடுகிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் சூ கியாவோ [ அவளை சிங் என்று அழைக்கின்றனர்.] , ஜுகே யூவின் உயிரை விட்டுவிடுமாறு யான் சூனிடம் கூறுகிறாள். அவளை விரும்பும் யான் சூனா தனது குறிக்கோளிலேயே முழுமையாக மூழ்கி, ஜுக்கே யூவை அம்பை செலுத்தி கொன்று, பனி நீரில் மூழ்குமாறு செய்கிறான். இதனை சற்றும் எதிர்பாராத சிங் அவனைக் காப்பாற்றுவதற்காக தானும் பனி நீரின் உள்ளே குதிக்கிறாள். இதைக் கண்ட யான் ஸுன், உடனடியாக அவளை ஏரியிலிருந்து வெளியே இழுக்குமாறு தன் ஆட்களுக்கு உத்தரவிடுகிறான்.
மூன்று மாதங்கள் கழித்து,
சிங் போர் முகாமில் சிங் கண்விழித்தாலும், அவளது மனம் அதுவரை நடந்ததை மறந்து போவது மட்டுமல்ல, நீரில் மூழ்கி தான் இறப்பது போன்ற எண்ணத்தால் குழம்புகிறாள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் யான் ஷுன் அவளைச் சந்தித்து, அவளைத் தனது ராணி என்றும் யான் பேரரசின் வீராங்கனை என்றும் அழைக்கிறான். அதாவது யோங் படைகள் நடத்திய திடீர்த் தாக்குதல் காரணமாக, சிங் பனி ஏரி தண்ணீருக்குள் விழும் முன்பு, தாங்கள் இருவரும் நிச்சயம் செய்யப்பட்டவர்கள் என்றும், திருமணம் செய்துகொள்ளவிருந்ததாகவும் அவன் வஞ்சகமாகப் பொய் கூறி, தான் அவளுக்காகத் தயார் செய்து வைத்திருந்த திருமண ஆடையை அவன் அவளிடம் காட்டுகிறான். சிங் குழப்பமடைந்து, தன்னிச்சையாக அவனிடம் இருந்து விலகவே, அவள் தன் நினைவுகளை மீண்டும் பெறும் வரை காத்திருப்பதாக யான் சூன் உறுதியளிக்கிறான்.
அப்போது யான் சூனின் நினைவு நான்கு ஆண்டுகள் பின்னோக்கி நடந்ததை நினைக்கின்றது. ஜென்ஹுவாங் நகரத்தின் ஜுக்கே யுவின் மாளிகையின் முன் யோங் பேரரசரின் கட்டளைப்படி செயல்படும் கேட்ட எண்ணம் கொண்ட வீரன் சூகே ஹுவாய், யான் சூன்-ஐ கைது செய்து, அவன் தந்தை யான் ஷிசெங் மற்றும் சகோதரன் யான் டிங் ஆகியோரின் துண்டிக்கப்பட்ட தலைகளை அடையாளம் காண வற்புறுத்துகிறான். யான் சூன்-ம் அவன் தாயாரும், யோங் பேரரசில் பிணைக்கைதிகளாக இருப்பதால் யான் தேசத்தில் இருக்கும் அவனின் மற்ற குடும்பத்தினர் அனைவரும் கொள்ளப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. யோங் அரசரின் கட்டளையின் முன்பு ஜுக்கே யுவால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தவாறு நின்று பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
சடலங்களை அடையாளம் காட்டும் பணியில் ஒத்துழைக்க அவன் மறுத்து, மற்ற வீரர்களால் தன் மகன் கொடுமை படுத்தப்படுவதை தவிர்க்க யான் சூன்-ன் தாய் தானே முன்வந்து சடலங்களை அடையாளம் காட்டுகிறாள். தன் கணவரையும் குழந்தைகளையும் ஒவ்வொருவராக அடையாளம் காட்டி, யோங் தேசத்திற்கு அவர்கள் காட்டிய கடந்தகால விசுவாசத்தையும் சேவையையும் விவரித்து, அவன் கண் முன்னே தற்கொலை செய்துகொள்கிறாள். அதனால் எழும் குழப்பத்தில் யான் சூன்-ஐ அவர்கள் கொள்வதில் இருந்து, சிங் தடுக்கிறாள். இந்த நிகழ்வு அவனை அந்த பேரரசிற்கு எதிரியாக திசை திருப்புகிறது. நான்கு வருடத்திற்கு முன் நடந்த இந்த நிகழ்வைக் கூறி, அவளுக்கு நினைவு திரும்பும் வரை தான் அவளுக்காகக் காத்திருப்பதாக கூறுகிறான்.
அந்த நேரம் யான் சூன்-ன் படை தளபதி வந்து ஜுக்கே யுவின் உடல் கிடைத்து விட்டது என்று கூறி அழைத்து செல்கிறான். மேலும் அவனை அவள் வெறுக்க வேண்டும் என்று அவனைப் பற்றி தவறான தகவல்களை கூறி, ஜுக்கே யுவின் வாள்-ஐ அவளிடம் கொடுத்து வாளையும், அவனையும் நினைவு இருக்கிறதா? என்று கேட்கிறான்.
அந்த வாளைக் கண்டும், அவர்களின் பொய்யை நம்பியும் சிங் அந்த உயிரிழந்த ஆன்மாவை அமைதிப்படுத்தும் பொருட்டு அந்த உடலைத் தகனம் செய்ய உத்தரவிடுகிறாள். கூடவே யான் சூனும் அந்த உடலின் எஞ்சிய பாகங்களை திரும்ப எதிரி நாட்டில் உள்ள ஜுக்கே யுவின் குடும்பத்துக்கே திருப்பி அனுப்புமாறு உத்தரவிடுகிறான்.
அந்த நேரத்தில், அந்த இடத்தில் நடக்கும் சிறு சண்டையில் எழுந்த சலசலப்பில் அவளுக்கு ஒரு சில விஷயங்கள் மட்டும் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் அவளால் யாரையும் முழுதாக அடையாளப்படுத்த முடியவில்லை.
கதை மீண்டும் மூன்று மாதத்திற்கு முன்னர் சண்டை நடந்த இடத்திற்கு செல்கிறது. அங்கு ஏரியின் அடியில் இருந்த நீரோட்டங்கள் அவனை அடித்துச் சென்று, சிமெங் என்ற தேசத்தின் எல்லைப் பகுதியில் கொண்டு சேர்த்ததால், ஜுக்கே யு அந்த தேசத்தின் ராஜாவின் கீழ் கொண்டுவரப்படுகிறான். சிமெங் மன்னன் அவனை அடையாளம் கண்டு கொண்டு, அத்தகைய ஒரு சிறப்புமிக்க வீரன் உயிருடன் இருப்பது தனக்கு அதிக பயனுள்ளது, என்று கருதி அவனை உயிரோடு வைத்திருக்க தேவைப்படும் வைத்தியத்தை செய்ய ஆணையிடுகிறான். அதையும் ரகசியமாக…
.