ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண் அதிகாரி – யான் தேசத்தின் ராணியாக விருப்பம்.
செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன் படைத்தளபதி – யான் தேச துரோகி
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன்
ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன்
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலிக்கிறாள்.
ஜோங் யூ – டாடோங் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் தலைவி. யான் சூன்-ஆல் பாதிக்கப்பட்ட ஒரு சிறு படைத்தலைவி. சிங் ன் மேல் மதிப்பு கொண்டு அவளுக்காக எதையும் செய்யும் பெண்.
Rebirth எபிசொட் – 2 சுருக்கம்
சிங் ன் மறதி குறித்து தனிமையில் யான் தேசத்து மன்னன் யான் சூன்-னிடம் அவனின் தளபதி எச்சரிக்கை செய்ய, யான் சூன் தளபதியை அலட்சியம் செய்து, சிங் ன் பணிப்பெண்ணிடமும் எச்சரிக்கை செய்கிறான்.
அன்றைய இரவில், யான் சூன்-ன் தளபதி செங் தனிமையில் ஹெலியன் என்ற பழங்குடி பெண் அதிகாரியை சந்திக்கிறான். தான் யான் தேசத்திற்கு துரோகம் செய்தது, சிங்-ன் படைவீரர்களை அழித்து, அவளைக்கொண்டே ஜுக்கே யூவை கொன்றது, ஆகியவை சிங்-கு நினைவு வந்துவிட்டால் தன் நிலை ஆபத்தாகிவிடும், என்று தளபதி செங்-ம், யான் பேரரசிற்கு தன் பெண் ராணியாக வேண்டும் என்ற ஹெலியன் பழங்குடி இன ஆசையும் இருவரையும் இணைக்கிறது. இருவரும் சிங்-ஐ கொல்ல சூழ்ச்சி செய்கிறார்கள்.
இதற்கிடையில், மெய்லின் கணவாயில், கெலின், லான்சுவான் மற்றும் ஹொங் சுவான் ஆகிய பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர்கள், யான் சூன்-கு துணையாகக் கூடுதல் படைகளை அனுப்ப மறுக்கின்றனர். தங்கள் வீரர்கள் ‘யான்’ தேசத்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே தவிர, யான் குடும்பத்தினரின் தனிப்பட்ட பழிவாங்கும் சண்டைகளுக்குத் தீனி போடுவதற்காக அல்ல என்று அவர்கள் வாதிடுகின்றனர். தளபதி செங் மற்றும் யான் சூன்-ன் ‘கருப்பு கழுகுப் படை’ (Black Eagle Army) ஆகியவை முற்றிலுமாக அழிக்கப்படும் ஆபத்து இருந்தபோதிலும், அந்த தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாகவே நிற்கின்றனர்.
யான் சூன் வெற்றிகரமாக யோங் தானியக் கிடங்குகளை எரித்து, ஏழாவது இளவரசரான ஸாவோ சே-ஐ வளைத்துப் பிடிக்கிறான். இராணுவத்தை தன் கீழ் கொண்டுவர உணவுப் பொருட்களைத் தாமதப்படுத்திய பதின்மூன்றாவது இளவரசரான ஜாவோ யாங்-கால் ஜாவோ சே கைவிடப்பட்ட நிகழ்வான யோங் அரச குடும்பத்திற்குள் நடக்கும் உள் சதியை யான் ஸுன் அம்பலப்படுத்துகிறான். தான் இந்த இளவரசனைக் கொள்வதைவிட, யோங் நாட்டின் உள்நாட்டு சதி இன்னும் அதிகப்படுத்துவதற்காக பதின்மூன்றாவது இளவரசரான ஸாவோ யாங்-ஐ கொள்ளாமல் திருப்பி அனுப்புகிறான்.
போர் முகாமில் சிங் குணமடைந்து வரும்போது, அவளது சந்தேகங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. மற்றவர்கள் அவளை ஒரு வீராங்கனை என்று போற்றினாலும், அவளுக்குள் கேள்விகள் எழுகின்றன: அவளால் ஏன் ஒரு வாளைப் பயன்படுத்த முடியவில்லை? மேலும், அவள் உண்மையிலேயே ஒரு வீராங்கனை என்றால், தன்னைப் போன்ற ஒரு சாதாரண அடிமைக்கு போர்க்கலையை யார் கற்றுக் கொடுத்தது?
இந்த சந்தேகங்களை உணர்ந்த தளபதி செங், அவளுக்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சை தேவை என்ற காரணத்தைக் கூறி, அவளை யான் இராச்சியத்தின் தலைநகருக்கு அனுப்ப ஒரு இரகசிய உத்தரவைப் பிறப்பிக்கிறான். அவள் கிளம்பிய பிறகு பாசறைக்கு யான் சூன் திருப்பி வந்தபோது, சிங்-ஜக் காணாததால், தளபதி அவளை தன் அனுமதி இல்லாமல் அனுப்பியதற்கு கோபம் கொண்டு எச்சரிக்கிறான். தன் ஆட்களையும் தேடலுக்கு அனுப்புகிறான்.
பயணத்தின் போது ஜோங் யூ என்ற பெண்ணின் தலைமையிலான ஒரு குழு சிங்-ன் தேரை வழி மறைத்து அவளை கடத்துகிறது. யான் சுனுடன் திருமணத்தை தவிர்ப்பதற்காக சிங் தான் ஆட்களை அழைத்து வந்து தன்னைக் காப்பாற்றும்படி ஒரு கடிதம் அனுப்பியதாக கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் அந்தப் பெண். ‘தனக்கு எதுவுமே நினைவில் இல்லை’ என்றும் ‘தான் யான் சூன்-ஐ திருமணம் செய்து கொள்ள ஏன் விரும்பவில்லை’ என்றும் தனது குழப்பத்தை சிங் வெளிப்படுத்த, அதைக் கேட்ட அந்தப் பெண் யான் சூன்-ன் இருண்ட பக்கத்தை அவளுக்கு வெளிப்படுத்துகிறாள். யான் சூன் தனது குழுவை மட்டுமல்ல ‘சிங்-கின் ஆர்மி படையினையும் முழுவதுமாக’ ஒழித்தது, ‘ஹே ஜியோ என்பவனின் மரணத்திற்கு காரணமாக’ இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக ‘யான் சூன் ஒரு தூண்டிலாக சிங்-கை பயன்படுத்தி ஜுக்கே யுவை பதுங்கி தாக்கி, அவனை உறைந்த ஏரி நீரில் விழச் செய்தது’ என்று யானசோனின் அனைத்து செயல்களையும் எடுத்துக் கூறுகிறாள். பேசிக் கொண்டிருக்கும் பொழுதே யான் சூன் வந்து அவர்களை கைப்பற்றி விடுகிறான்.
இன்னொரு பக்கத்தில் யான் சூன் ஐ ஒருதலையாக காதலித்த யோங் ராஜ்யத்தின் முன்னாள் இளவரசி ஜாவோ மதுவில் தன் துயரங்களை முழுகடித்து, காவலர்களின் ஏளனத்திற்கு ஆளாகி, ஒரு மோசமான அவல நிலை வாழ்க்கை வாழ்கிறாள். பழங்குடியின பெண்ணான ராணியாகும் ஆசை கொண்டே ஹெலியன் லிங் அவளை சந்தித்து யான் சூன் சிங் ஐ திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி, ‘எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சிங் அடிமை பெண்தான்’ என்றும் ‘எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் இளவரசி இளவரசி தான்’ என்றும் எடுத்துக் கூறி, முடிந்தால் அதனை தடுக்குமாறு தூண்டிவிடுகிறாள்.
இங்கு போர் பாசறையில், யான் சூன் சிங்-கை தப்பிச் செல்ல முடியாதவாறு ஒரு கௌரவமான சிறையில் வைத்தது போன்று நிலையை உருவாக்குகிறான். இருவரும் வெளியில் உலாவச் சென்ற பொழுது முன்னாள் இளவரசியால் கடத்தப்படுகிறார்கள். இருவரும் கண்விழிக்கும் பொழுது அடிமைகளுக்காக பயன்படுத்தப்படும் கனமான சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பாழடைந்த குடிசையில் கண்விழிக்கிறார்கள். கடத்தியது முன்னாள் இளவரசி தான் என்று அறிந்த யான்சூன் அவளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறான். அதீத கோபத்தில் இருந்த இளவரசி யான் சூன்-ன் முன்னிலையில் சிங்-கின் முதுகில் ‘அடிமை’ என்ற அடையாளத்தை பதித்து, அவளை மட்டும் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு அழைத்து சொல்கிறாள். அங்கு பெண்கள் இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் இளவரசியின் ஆள் சிங்-கை மயக்கப்படுத்துகிறான்.
.