Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 22 – சுருக்கம்

.

தளபதி சன் – பியாண்டாங் தேசத்தின் தளபதிகளில் ஒருவன். அரசன் லீ சே, சிங் மற்றும் ஜுக்கே யூ ஆகியோரின் நண்பன். அவனையும், அவன் குடும்பத்தையும் இப்போதைய அரசன் லீ யான்-ன் கொடுமையில் இருந்து காக்க மறைத்து வைக்கப்படுகிறான்.

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது சூழ்ச்சி செய்து பியாண்டாங் தேசத்தின் அரசனான லீயான்-ன் மனைவி.

லீ சே – பியாண்டாங் தேசத்து பட்டத்து இளவரசன். பேரரசிக்கும் பேரரசனுக்கும் பிறந்தவன் என்றாலும், பிறந்ததில் இருந்தே பேரரசியால் முழுமையாக வெறுக்கப்பட்டவன். இப்போதைய மன்னன் லீ யான்-ஆல் கொல்லப்பட்டவன்.

லி யான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் என்ற மாற்று பெயரில் மறைந்து வாழும் கொல்லப்பட்ட முன்னாள் பட்டத்து இளவரசனின் உண்மை வாரிசு.

அமைச்சர் ஸு சு – பியாண்டாங் தேசத்தின் அமைச்சர். லீ சே -வை மன்னனாக ஏற்க விருப்பம் இல்லாமல், இளவரசன் லீ யான் – ஐ ஆதரிக்கிறான்.

.

Rebirth அத்தியாயம் 22 – சுருக்கம்

யான் தேசத்தின் தலைவன் யான் சூன்-னுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, சிங் மற்றும் யான் இருவரும் தனித்தனியே பிரிந்து செல்கின்றனர். சிங் திரும்பும் போது அவளை அழைத்துச் செல்ல ஜுக்கே யூ அவளுக்காக காத்திருக்கிறான். 

போரில் வெற்றி கிடைத்த செய்தி பியாண்டாங் தேசத்தின் அரண்மனையை வந்தடைகிறது. இந்த செய்தி கேட்டு பேரரசன் லீ சே மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். பியாண்டாங் பேரரசை பாதுகாப்பதற்காக சிங்-கை கவுரவிக்க இன்னும் மிக பிரம்மாண்டமான மற்றும் அதி உயர்வான ஒரு பட்டத்தை அவளுக்காக அந்த நாட்டில் உருவாக்க பேரரசன் லீ சே தீர்மானிக்கிறான்.

எனினும் சிங் தனது ராணுவத்துடன் பியாண்டாங் தேசத்திற்குள் நுழைவதற்குள் தனது சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இளவரசன் லீ யான் முயற்சி மேற்கொள்கிறான். இதற்காக அவனது ரகசிய ஆதரவாளராக அமைச்சர் ஸு சு உட்பட இருவர் அவனை சந்திக்கின்றனர். கொல்லப்பட்ட முந்தைய பட்டத்து இளவரசனின் மறைமுக வாரிசு தானே என்று இளவரசன் லீ யான்-க்கு தெரிய வந்ததால் ‘தனக்கு சட்டபூர்வமாக சொந்தமானது’ என்று தான் உறுதியாக நம்பும் அரியனையை மீட்டெடுப்பதற்காக சரியான தருணத்தை எதிர்பார்த்து சில ஆண்டுகளாகவே மாறுவேடத்தில் இளவரசன் லீ யான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பழைய படுகொலையைப் பற்றியும், வாரிசு குறித்த உண்மை குறித்தும் அவர்கள் ஏற்கனவே மக்களின் இடையே வதந்திகளை பரப்ப தொடங்கி இருக்கின்றனர். சிங்-னுடைய சிறப்பு படைகள் இன்னும் வந்து சேரவில்லை, பேரரசன் லீ சே -யும் தனது ஆட்சியை இன்னும் பலப்படுத்திக் கொள்ளாத சூழ்நிலையில், அரண்மனையில் கிளர்ச்சியை ஏற்படுத்தி தாக்குதல் தொடுக்க இளவரசன் லீ யான் முடிவெடுத்ததால், ஓர் இரவில் பேரரசன் லீ சே-வை சந்திக்க செல்கிறான் இளவரசன் லீ யான். 

தனக்கு சிறிது நேரத்தில் ஏற்படவிருக்கும் துரோகத்தைப் பற்றிச் சிறிதும் அறியாத பேரரசன் லி சே, நுழைவாயிலில் உள்ள மதில்சுவரில் மிக உயர்ந்த இடத்தில் நின்றுகொண்டு, சிங் திரும்பி வருவதைத் தானே முதலில் காண வேண்டும் என்னும் ஆர்வத்தில் வடக்கு திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான். எப்போதும் போல தன் சாதுவான முகத்துடன் அவனிடம் பேச அங்கு வருகிறான் லீ யான். நடந்த நிகழ்வுகள் குறித்த மகிழ்ச்சியை லீ யான்-னுடன் மன்னன் பகிர்ந்து கொள்ளும் அந்த நேரத்தில் பேசிக்கொண்டிருக்கையிலேயே, மறைத்து வைத்திருந்த ஒரு குறுவாளை வெளியே எடுத்து இதயத்தில் பாய்ச்சிவிடுகிறான். அதிர்ந்த லீ சே காரணம் கேட்க, தான் உண்மையில் அவனைக் கொல்ல விரும்பவில்லை என்றும், விதி தனக்கு வேறெந்த வாய்ப்பையும் வழங்கவில்லை என்றும் கூறி உயரமான மதில் மேல் இருந்து தள்ளிவிட்டு கொன்றுவிடுகிறான். 

  

இளவரசன் லி யான் அரியணையைக் கைப்பற்றி, தனது புதிய ஆட்சிக்கு எதிராக இருப்பார்கள் என்று எண்ணிய, பேரரசிக்கு எதிராக செயல்பட்ட வருவாய் அமைச்சர் லி லின்-ஐ அவரின் குடும்பத்தினரோடு தூக்கிலிட்டு, தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறான். இதனை அறிந்த தளபதி சன்-னின் மாமனார், பியாண்டாங் தேசத்தின் அரசன் லீ யான்,  சிங்-ன் ஆதரவாளனான தளபதி சன்-ஐ குடும்பத்தோடு கொலை செய்வதில் இருந்து பாதுகாக்கவும், அவனின் கீழ் இயங்கும் படைவீரர்களைக் கொண்டு அரசன் லீ யான்-ஐ எதிர்க்க தளபதி கிளம்பாதிருக்கவும், அவனை அவனின் மாமனார் மறைத்து வைக்கிறார்.  

அரண்மனைக்குள், இளவரசன் லி யான் சூழ்ச்சியினால் தந்திரமாக மன்னனாக மாறியிருந்த விதத்தைக் கண்டு ஜாவோ சுன்’எர் அதிர்ச்சியடைகிறாள். அரச வாழ்வை வெறுத்து சாதாரண வாழ்வை வாழ விரும்பிய தான் இப்போது மன்னனின் மனைவி என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தான் இளவரசன் லீ யான்-ஐ ஒருபோதும் உண்மையாக அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து, பேரரசியின் ஆடைகளை அணியவோ அல்லது விழாக்களில் கலந்துகொள்ளவோ ​​மறுக்கிறாள். 

ஜுக்கே யூ -வும் சிங் -ம் திரும்பி வந்தபோது, ​​தலைநகரம் நகரம் முற்றிலும் மாறியிருப்பதைக் காண்கின்றனர். அங்கு அவர்களின் விசுவாசிகள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்க, நகரம் பகைமை கொண்ட காவலர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தளபதி சன்-னின் படைகளை நடத்தும் முத்திரை பதக்கம் மன்னன் லீ யான்-னின் கீழ் இருக்கும் மந்திரியிடம் இருக்க, அதனை திருடி, தளபதி சன்-னிடம் அளித்து அரண்மனைக்கு வெளியே உள்ள படைகளை நடத்த அறிவுத்துகிறான் ஜுக்கே யூ. அதனைப் பெற்று தளபதி சன் மற்ற சதிகார படைவீரர்களைக் கட்டுக்குள் கொண்டுவருகிறான். 

இதற்கிடையே அரண்மனைக்குள் சிங் மன்னன் லியான்-ஐ எதிர்கொள்கிறாள். லீ சே அவனின் எதிரியாக இல்லாத போது அவனைக் கொன்றதற்கான காரணத்தை கேட்கிறாள். அரியணையில் அமர்ந்து விட்டால் யாராக இருந்தாலும் மாறிவிடுவார்கள் என்றும், தனது உண்மையான அடையாளம் பற்றி பின்னர் அவன் தெரிந்து கொண்டால் தன்னை அவன் கொன்று விடுவான் என்றும், அதற்கு முன் தான் அந்த செயலை செய்து விட்டதாகவும் இப்போதைய மன்னன் லீ யான் தெரிவிக்கிறான். தனக்கான பல சமாதானங்களை லீ யான் அவளிடம் கூறி, பின்னர் அவளது ராணுவத்தை மீட்க உதவுவது மட்டுமல்ல அவளை இந்த நாட்டின் பேரரசியாகவும் உயர்த்துவதாக ஆசை காட்டுகிறான் மன்னன் லீ யான். ஆனால் சிங் அவனது எந்த சமாதானங்களையோ அல்லது ஆசைகளையோ பொருட்படுத்தாமல் அவனை கொன்று விடுகிறாள். தளபதி சன் கிளர்ச்சியாளர்கள் செயலிழக்கச் செய்ததாலும், நிரபராதியான காவலர்கள் மன்னிக்கப்பட்டதாலும், பியான்டாங் தலைநகரம் இயல்புக்குத் திரும்புகிறது. 

தனது நண்பனும், முன்னாள் அரசனுமான லீ சே இறந்த துயரம் அனுஷ்டிக்க தனது மாளிகைக்கு திரும்புகிறாள். தன்னை அடிமைகளில் ஒருத்தியாக எண்ணாமல், தன்னையும் சக மனுசியாக உணர்ந்து தன் மேல் அன்பு காட்டிய தன் நண்பன் லீ சே-வின் இழப்பை எண்ணி சிங் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகிறாள். துயரத்தின் பிடியில் சிக்கி இருக்கும் அவளுக்கு ஜுக்கே யு துணையாக இருந்து ஆறுதல் அளித்ததுடன், பழிவாங்கும் கடமை முழுமையாக நிறைவேறிவிட்டது என்றும், இனி கடந்த காலத்தின் வலியை அவள் கைவிடலாம் என்றும், அவளுக்கு நினைவூட்டி ஆறுதல் அளிக்கிறான்.

அத்தியாயம் 21 – இன் சுருக்கம்

அத்தியாயம் 23 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top