Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 9 – சுருக்கம்

மிங் லூ – பட்டத்து இளவரசரின் முதன்மைப் பணிப்பெண். யோங் நகரின் காவல் தலைவனின் மகள். சிங் மற்றும் யான் சூன் கிளர்ச்சி செய்து தப்பித்ததால் குற்றம் சாட்டப்பட்டு குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டு, இவள் மட்டுமே பழிவாங்க எஞ்சி இருக்கிறாள்.

ஷியூலி இராணுவம் – சிங் உருவாக்கி, நடந்த போரில் தந்திரமாக மொத்தமாக அழிக்கப்பட்டது. 

ஜாவோ குவோ – யோங் தேசத்தைச் சேர்ந்த முஹே குலத்தின் அரசாங்க பணியாள். முஹே குலம் சிங் ன் எதிரி. யோங் தேசத்தின் தூதுவனாக பியாண்டாங் தேசத்திற்கு வந்திருக்கிறான். 

ஹே சியாவோ – சிங்-ன் ஷியூலி இராணுவ படையின் துணைத் தளபதி. தற்போது யோங் நகரில் அடிமை. 

Rebirth எபிசொட் – 9 சுருக்கம்

கடும் பாதுகாப்பு நிறைந்த லியான் நகரத்திலிருந்து ஜுக்கே யூ தப்பி வந்ததும் அல்லாமல் சிமெங் மன்னனின் கழுத்தில் கத்தியை வைத்து, தன் உடலில் உள்ள விஷ ரத்தத்தை முற்றிலும் ஒழிக்கும் உண்மையான மாற்று மருந்தைக் கேட்கிறான். மன்னன் வாளின் முனையில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவன் தந்திரமாகவே இருந்து, அந்த மருந்து தன்னிடம் மட்டுமே இருப்பதாக ஜுக்கே யூ வுக்கு நினைவூட்ட இருவருக்கும் மீண்டும் ஒரு ஒப்பந்தம் உருவாகிறது. 

சிமெங் மலையில் மன்னன் தன்னைக் காப்பாற்றியதால், ஜுக்கே யூ ஒரு புதிய ஒப்பந்தம் போடுகிறான். நச்சுமுறி மருந்தையும் தனது விடுதலையையும் பெறுவதற்கு ஈடாகவும், ஜுக்கே மூன்று பணிகளை நிறைவேற்றுவதாக கூறுகிறான். முதல் பணி லீ ஆன் நகர போர் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் மன்னனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் எஞ்சிய இரண்டு பணிகளும் முடிவடைந்த பிறகு ஜுக்கே உயிரை எடுத்துவிட தனது கீழ்நிலை அதிகாரிகளுக்கு இரகசியமாக உத்தரவிடுகிறான் மன்னன்.

லீ சே ன் மாளிகையில் தன்னைக் காப்பாற்றியது இளவரசனின் பணிப்பெண் மிங் லூ என்பதை அறிந்து, சிங் காரணம் கேட்கிறாள். மிங் லூ-வின் தந்தை யோங் தேச தலை நகரத்தின் முன்னாள் அரச காவல் தலைவன். யோங் தேசத்தில் பணயக் கைதியாக யான் சூன் இருக்கும் போது, யான் சூன் மற்றும் சிங் இருவரும் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டை விட்டுத் தப்பித்த போது, மிங் லூ-வின் மொத்த குடும்பமும் அழிக்கப்பட்டது. தப்பி வெறியேறியது இவள் மட்டுமே. இது சிங்-ன் ஷியூலி இராணுவத்தின் மீது அவளுக்கு இருந்த ஆழ்ந்த வெறுப்பைத் தூண்டியது. 

மிங் லூ வாய்ப்பு கிடைத்தால் தான் சிங்-ஐ மீண்டும் கொள்ளப்போவதாக உரைத்த போதும் கூட, தனது கடந்தகாலச் செயல்களால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்குத் தானே பொறுப்பு என உணர்ந்த சிங், அவளைப் போக விட்டுவிடுகிறாள். அது குறித்து லீ சே கேள்வி எழுப்பியபோது கூட, யோங் நாட்டில் அடிமைகள் நிலைகள் பற்றியும், அதற்கு எதிரான தனது கிளர்ச்சி பற்றியும் தெரிவித்து, வேதனைகள் எல்லோருக்கும் பொதுவானது. அவை இல்லா அமைதியான தேசம் சாத்தியமே என்று தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறாள். பேசிக்கொண்டு இருக்கையில் பேரரசிக்கு சிங் குறித்து செய்தி கூறியது மிங் லூ இல்லாமல் வேறு யாராக இருக்கும்? என்று சந்தேகம் எழுந்தது. இந்த நகரின் நுழைவாயிலில் தன்னைப் பார்த்த யோங் தேசத்தின் தூதுவன் ஜாவோ குவோ என்கிறாள் சிங். 

முஹே குலத்திடம் தகவல் தெரிவிப்பதற்காக தூதுவன் ஜாவோ குவோ ‘பியான்டாங்’ நகரிலிருந்து புறப்படுகிறான் என்று அறிந்த சிங், அவனை தடுத்து அப்புறப்படுத்த நினைக்க, லீ சே அவள் மீது பேரரசிக்கு சந்தேகம் வராதிருக்க சிங்-உடன் சேர்ந்து தந்திரம் செய்கிறான். செல்லும் வழியிலேயே சிங் அவனை மறித்து, முற்றுகையிட தன் உயிரைக் காத்துக்கொள்ள அவன் தன்னிடம் இருந்த ஒரு தகவலைக் கூறுவதாக பேரம் பேரசுகிறான். அதாவது, சிங்-ன் அழிக்கப்பட்ட சியூலிப் படையின் துணைத் தளபதியான ஹே சியாவோ, மெய்லின் கணவாயில் உயிரிழக்கவில்லை என்றும், மாறாக அவர் தற்போது ‘யோங்’ நகரில் ஒரு அடிமையாகவும், கைதியாகவும் இருக்கும் தகவலைத் தெரிவித்து தன்னை விட்டுவிடும் படி கூறுகிறான். ஆனாலும் அவனைக் கொண்டுவிடுகிறாள். 

இந்த நிகழ்வு நடக்கும் நேரத்தில் சிங் மாளிகையில் தான் இருந்தாள் என்று பேரரசியை நம்பவைக்க நடக்கும் தந்திரத்திற்கு, பழிவாங்க வந்து சிங்-ஆல் மனம் மாறிய மிங் லூ-ம் உதவி செய்கிறாள். அன்றிரவு, நகரத்திற்கு வெளியே தூதுவன் ஜாவோ குவோ படுகொலை செய்யப்பட்டதாகப் பேரரசிக்குச் செய்தி கிடைத்தது. தன் மகனால் தான் தந்திரமாக ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொண்ட பேரரசி தன் மகன் தோற்றத்தை விட மிகவும் சூழ்ச்சிக்காரன் என்பதை உணர்கிறாள். 

இந்த நிகழ்வு நடக்கும் நேரத்தில் சிங் மாளிகையில் தான் இருந்தாள் என்று பேரரசியை நம்பவைக்க நடக்கும் தந்திரத்திற்கு, பழிவாங்க வந்து சிங்-ஆல் மனம் மாறிய மிங் லூ-ம் உதவி செய்கிறாள். அன்றிரவு, நகரத்திற்கு வெளியே தூதுவன் ஜாவோ குவோ படுகொலை செய்யப்பட்டதாகப் பேரரசிக்குச் செய்தி கிடைத்தது. தன் மகனால் தான் தந்திரமாக ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொண்ட பேரரசி தன் மகன் தோற்றத்தை விட மிகவும் சூழ்ச்சிக்காரன் என்பதை உணர்கிறாள். 

இதற்கிடையே ஜுக்கே யூ-விற்கு அடுத்த பணி சிமெங் மன்னனிடம் இருந்து வருகிறது. மேலும் தன்னைக் கொல்ல ஜுக்கே முயலும் போது, கவனக்குறைவாக இருந்த காவலர்களை சித்ரவதை செய்து, கட்டி வைத்திருந்தான். அவர்களை மன்னனின் சித்ரவதையில் இருந்து காப்பாற்ற, ராணி அவர்களை கொன்றுவிடுகிறாள். பின்னர் ராணிக்கு மன்னன் 2 ரகசிய கட்டளை இடுகிறான். அதாவது எந்த நிலையிலும் ஜுக்கே யூ-வை விட்டு விலகாமல் அவனைக் கண்காணிப்பது மட்டுமல்ல அவனைப் பற்றிய ரகசியம் அவளைத் தவிர யாருக்கும் தெரியவரக்கூடாது. எந்த வகையிலாவது சரி, தான் விரும்பும் ஆளை அந்த ஆளுடைய ஆவணங்களுடன் சேர்த்து திரும்பக் கொண்டு வரவேண்டும், என்பது ஒன்று. இரண்டாவது போகும் காரியம் வெற்றி அடைந்தவுடன் ஜுக்கே யூ-வைக் கொன்றுவிடுவது. 

மறுநாள், சிங் விஷத்தால் பாதிக்கப்பட்டது, தூதுவன் கொலைசெய்யப்பட்டது குறித்து விசாரிப்பதற்காகப் பேரரசி இளவரசன் லி சே-வை அழைக்க, தன்மீது பேரரசிக்கு வளர்ந்துவரும் அவநம்பிக்கையை உணர்ந்துகொண்டு, திறமையற்றவனாயினும் மிகுந்த பக்தி கொண்ட ஒரு மகனைப் போலவே நடந்துகொண்டான். ஒரு படி மேலே சென்று, தான் வகிக்கும் அரசப் பிரதிநிதிப் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாகவும், நாட்டின் அந்தப் பெரும் பொறுப்பை, தொடர்ந்து பேரரசியே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள, பேரரசியின் உடனடிச் சந்தேகங்கள் தணிந்தன என்றாலும், அந்த மாளிகையில் வசிப்பவர்களை அவள் தொடர்ந்து கண்காணித்து வரவே விரும்பினாள். 

தன் துணைப்படைத்தலைவன் உயிரோடு இருப்பதை அறிந்த சிங் அது குறித்து யோங் நாட்டில் செய்தி அறியவும், அவனை மீட்கவும் இளவரசன் லீ சே-ன் உதவியைக் கேட்கிறாள். பதிலுக்கு லீ சே ‘தனியாக தனக்கு மட்டுமே விசுவாசமான, ஒரு உயரடுக்கு போர்ப் படையை உருவாக்கும்’ விருப்பத்தைத் தெரிவித்து, அதற்கு சிங் உதவ கேட்கிறான். சிங்-க்குத் தேவையான நிதியையும் வளங்களையும் வழங்குவதாகவும் கூறி, அதற்குப் பதிலாக, யோங்-கில் உள்ள துணைப்படைத்தலைவன் ஹே சியாவோ-வைக் கண்டுபிடிக்கத் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும், அவரை மீட்க சிங்-ற்கு உதவுவதாகவும் உறுதியளிக்கிறான்.

அத்தியாயம் 8 – இன் சுருக்கம்

அத்தியாயம் 10 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top