Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 20 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 20

தளபதி சன் – பியாண்டாங் தேசத்தின் தளபதிகளில் ஒருவன். அரியணைக்கு நேர்மையாக இருந்து, அரசன் லீ சே யால் பதவி உயர்வு பெற்று அரசனுக்கு துணையாக இருக்கிறான். 

சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான். 

அமைச்சர் ஸு சு – பியாண்டாங் தேசத்தின் அமைச்சர். புதிய அரசை ஏற்றுக்கொள்வதில் முரண்பாடு உள்ளவர்.

ஜெனரல் லீ – லாங்கியின் கணவாய் பிரதேசத்தில் உள்ள பியாண்டாங் தேசத்தின் படைகளின் தளபதி.

யோங் தேசம் – ஜுக்கே யூ வின் தேசம். யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னன் – புகழ்பெற்ற ஜுக்கே என்ற குலத்தின் நான்காவது மகன் ஜுக்கே யூ ஆதலால் அங்கு அவன் பெரும் செல்வத்தின் அதிபதி. 

லி யான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். முன்னாள் பேரரசரின் மகன் வழி பேரன். மதிப்பில்லாத இளவரசன். இப்போது பட்டத்து இளவரசனால் பதவி உயர்வில் அரசாங்கத்தின் மதிப்பு மிக்க இளவரசனாக ஒப்புக்கொள்ளப்படுகிறான். பின்னர் தன் பிறப்பு உண்மையைத் தெரிந்து கொள்கிறான். 

இளவரசன் சாங் – முன்னாள் மன்னனின் கடைசி மகன். கொல்லப்பட்ட பட்டத்து இளவரசனின் தம்பி. இவனை இவனின் குடும்பத்துடன் நாடு கடத்துகிறான் லீ சே-வின் தந்தை. இவனின் குழந்தையை தான் பேரரசின் குழந்தைக்கு பதிலாக இறந்தது. 

.

Rebirth அத்தியாயம் 20 – சுருக்கம்

பியாண்டாங் தேசம் தன்னிடம் சிங்-ஐ கொடுப்பது போல கொடுத்து, யான் தேச தலைவனான தன்னை ஏமாற்றிவிட்டது என்றும், இதன் மூலம் யான் தேசத்தை அவமதித்து விட்டது என்றும், கோபம் கொண்டு யான் சூன் தனது கருங்கழுகுப் படை [Black Eagle Army] யை பியாண்டாங் தேசத்திற்கு எதிரான போருக்கு ஆயத்தமாகிறான்.

பியாண்டாங் தேசத்தில் பேரரசன் லீ சே யான் தேச தலைவன் யான் சூன் படையெடுத்து வரும்  கிடைக்கிறது. ஏற்கனவே 3 நகரங்களைக் கைப்பற்றிவிட்டதாகவும், அவனது படைகள் தற்போது லாங்கியின் கணவாயை நோக்கிப் பெருவேகத்துடன் முன்னேறி வருவதாகவும் தெரிந்து கொள்கிறான். அண்மையில் தான் அரியணை ஏறியிருந்த லீ சே க்கு தனது அரியணையை நிரந்தரப்படுத்துவதற்குள் போர் என்பது சிக்களைக் கொண்டு வருகிறது. புதிய பேரரசரின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள மனதளவில் தயாராகாத தளபதிகள் ஒருபுறம் என்றால், சிங்-ஐ காரணமாக வைத்து வரும் போரை விரும்பாத தளபதிகள் ஒருபுறம். இந்த அச்சுறுத்தலில் சிங்-ஐ இடையில் கொண்டுவரவும் பேரரசன் லீ சே க்கு விருப்பம் இல்லை. இந்த நேரத்தில் ஜுக்கே யூ அங்கு வருகிறான். 

ஜுக்கே யூ பேரரசன் லீ சே விடம் தான் இந்த போரில் தலைமையேற்று செல்வதாகவும், தான் வெற்றிபெற்றால் தனக்கு ஒரு படையை வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தை முன்வைக்கிறான். பழைய ஒப்பந்தமான கரிய தங்கச் சுரங்கத்தில் முப்பது சதவீதப் பங்கை நினைவு படுத்திய லீ சே அது என்னாயிற்று என்று கேள்வி கேட்டு குதிக்க, ஜுக்கே தன் வேளை முடிந்த வுடன் தான் அந்த முப்பது சதவீதப் பங்குடன் லீ சே யின் படைவீரர்களையும் கூட அவனிடமே திருப்பித் தந்துவிடுவதாக கூறுகிறான். இருவருக்கும் சிறு வாக்குவாதம் உண்டாகிறது. லீ சே ஜுக்கே வை சிமெங் மன்னரின் கைப்பாவை என்று கேலி செய்ய, ஜுக்கே லீ சே வை சிறிது நாள் முன்பு வரை அவனும் அப்படி இருந்தவனே என்று திரும்ப பேச, என்றாலும் தேவை இருவரையுமே ஒப்பந்தத்திற்கு இசைய வைக்கிறது. 

இதற்கிடையில், இங்கு சிங் தனது சொந்த மாளிகையிலேயே கிட்டத்தட்ட ஒரு கைதி மாதிரி வெளியே செல்ல முடியாமல் இருப்பதைக் உணர்கிறாள். வெளிப்படையாக இல்லாமல் அவளை சுற்றி இருக்கும் எல்லோருமே எதோ காரணம் கூறி தடுக்கின்றனர். பேரரசன் லி சே பரிசுகளை அனுப்பி, தன்னுடைய முன்னாள் மாளிகையை அதிகாரப்பூர்வமாக ‘சியூலி தளபதியின் மாளிகை’ எனப் பெயர் மாற்றம் செய்த போதிலும், ஏதோ ஒன்று தனக்கு மறைக்கப்படுவதாக உணரும்போது, அங்கு ஜுக்கே யூ வந்து அவளை வெளியே அழைத்துச் செல்கிறான். நகரத்தின் நுழைவாயிலில் ​​வீழ்ச்சியடைந்த வடக்கு நகரங்களிலிருந்து தப்பி ஓடிவந்த அகதிகளைக் கண்டு உண்மைநிலையை உணர்ந்து கொள்கிறாள். இந்த போர் சிங்-ற்காக என்பதால் தளபதிகள் பெரும்பாலானவர்கள் அவளை யான் சூன்-னிடம் கொடுத்துவிடவே விரும்புகின்றனர். அகதிகளாக தலைநகருக்கு வரும் மக்களும் தங்களின் இந்த நிலைக்கு அவளையே குற்றம் சாட்டுகின்றனர். 

லீ சே வின் அரசவையில் உள்ள அனைவரும் கூட யான் சூன்-ன் சீற்றத்தைத் தணிக்கும் பொருட்டு, சிங்-ஐ யான் தேச தலைவனிடம் ஒப்படைக்குமாறு லி சேவிடம் மன்றாடுகின்றனர். பேரரசன் இந்த சூழ்நிலையால் திணறும் போது, அரசவைக்குள் சிங் நுழைகிறாள். லீ சே வின் அரசவையில் உள்ள அனைவரும் கூட யான் சூன்-ன் சீற்றத்தைத் தணிக்கும் பொருட்டு, சிங்-ஐ யான் தேச தலைவனிடம் ஒப்படைக்குமாறு லி சேவிடம் மன்றாடுகின்றனர். நாட்டின் பாதுகாப்பிற்காக, ஒரே ஒரு பெண்ணின் உயிரைத் தியாகம் செய்வது தவறில்லை என்று அவர்கள் வாதிட்டனர். பேரரசன் இந்த சூழ்நிலையால் திணறும் போது, அரசவைக்குள் சிங் நுழைகிறாள். அங்கிருக்கும் அமைச்சர்களின் மனைவியருக்குச் சொந்தமான தலை ஆபரணங்களின் தொகுப்பு ஒன்றை அவைக்கு முன்வைத்து, அவர்களைத் தான் கடத்திச் சென்றுவிட்டதாக அறிவிக்கிறாள்.

சிங் மன்னனிடம் தன்னை யான் தேசம் அனுப்பாமல் இருந்தால் எல்லோரையும் விடுவிப்பதாக கூறவும், எல்லோரும் அவளிடம் கோபம் கொண்டு பேசினாலும் இறுதியில் மக்களுக்காக மனைவியை இழப்பது தவறில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வருகின்றனர். அப்போது சிங் அவர்களிடம் தங்கள் சொந்த மனைவியரின் பாதுகாப்பிற்காககூட தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அவர்கள் முன்வராத நிலையில், யான் சுன் போன்றதொரு வெற்றியாளன் ஒரே ஒரு பெண்ணுக்காக தன் வாழ்நாள் லட்சியத்தையும், தான் வெற்றிபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போரையும் கைவிடுவார் என்று அவர்கள் எப்படி நம்புகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறாள். இந்த கேள்வி அவர்களிடையே சலசலப்பை உருவாக்குகிறது. சிங்-ன் இந்தத் தர்க்கமும் உறுதியும் அரசவையைத் அவள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. யான் சூன்-ஐ பற்றி நன்கு அறிந்த சிங் அவனுடைய செயல்பாடு எவ்விதம் இருக்கும் என்று எடுத்துரைத்து, யானுக்கு எதிராக செல்லும் படைக்குத் தலைமை தாங்க தன்னை நியமிக்குமாறும், ஒரு மாதத்தில் வெற்றியை அளிக்கவில்லை என்றால் தானே சென்றுவிடுவதாகவும் கூறுகிறாள். 

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மனைவிகள் எல்லோரும், சிங்-ன் மாளிகையில் சிறு விருந்தில் கலந்து கொண்டு, சிறிது நேரம் கழித்து பரிசுப்பொருள்களுடன் அவர்களின் இல்லங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் ஜுக்கே யூ, சிங்-கிற்கு ஒரு வாளை பரிசளிக்கிறான். பனி ஏரி போரில் தொலைந்து போன அவர்களின் பழைய வாள்களான சூரிய அஸ்தமன வாள் மற்றும் நிலவொளி வாளின் துண்டுகளைச் சேகரித்து, அவற்றை ஒன்றாக இணைத்து 2 வாள்களை உருவாக்கி ஒன்றை சிங்-யிடம் அளித்து, இருவரும் இனி ஒன்றாக போர் புரிவோம் என்று கூற, சிங்-ம் ஆமோதிக்கிறாள். 

இருப்பினும் ஜுக்கே யூ, விஷத்தால் தனது உடல் மேலும் பலவீனமாக இருப்பதை அறிந்து, மருத்துவன் சியாவோ ரான்-ஐத் தேடிச் சென்று ஹுயுவான் மாத்திரைகளைக் கேட்க, மருத்துவன் தயங்குகிறான். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக ஜுக்கே வின் போர் வலிமையை அதிகரித்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது மரணத்தை நிச்சயமாக அளிக்கக்கூடியது. தான் பிழைக்கவில்லை என்றால் தனது உடலை மருத்துவனின் ஆராய்ச்சிக்கு கொடுப்பதாக அவனிடம் உறுதியளித்து 4 மாத்திரைகளை வாங்குகிறான். 

சிங்-ற்கு ஆதரவாக, பேரரசன் லீ சே தனது நாட்டின் தலைசிறந்த வீரர்களான மூவாயிரம் உயரடுக்கு அரச காவலர்களை அவளிடம் கொடுக்கும் பொறுப்பை அமைச்சரிடம் ஒப்படைக்க, பழிவாங்கும் எண்ணம் கொண்ட அமைச்சர் ஸு சு, பயிற்சி பெறாத புதிய வீரர்களும், ஊனமுற்ற முன்னாள் வீரர்களுமாக உள்ள இருபதாயிரம் பயனில்லாத படை என்று நினைத்த வீரர்களை வழங்கி அவளைச் சீர்குலைக்க முயல்கிறார். சிங்-ஐ சேர்ந்தவர்கள் கோபம் கொண்ட போதும், அவள் அந்த வீரர்களை அழைத்துக்கொண்டு லாங்கியின் கணவாய்-க்கு வருகிறாள். 

அங்கு ஜெனரல் லீ சிங்-யிடம் தன்னை அறிமுகம் படுத்திக்கொள்கிறான். நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்திருந்த தேக்கநிலையும், கடுமையான குளிரும் பியாண்டாங் படைவீரர்களைப் பெரிதும் பாதித்துக்கொண்டிருந்தன. மேலும் உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. அதனால் அங்கிருந்த வீரர்களுக்கும், வந்து சேர்ந்த வீரர்களுக்கும் இடையே கலவரம் உண்டாகிறது. உணவு விநியோகப் படை வர பத்து நாட்கள் தாமதமாகிறது. தானியம் இறுதியாக படைத்தளம் வந்து சேர்ந்தபோது, அமைச்சர் ஸு சு அரிசிக்குப் பதிலாக மணல் நிரப்பப்பட்ட பைகளை அனுப்பியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி ஆகிறார்கள். 

சிங் மேலிடத்திற்கு தகவல் கொடுக்கிறாள். அங்கு வந்த அகதிகளும் இராணுவ வீரர்களும் பட்டினியால் வாடுவதைத் தடுப்பதற்காக, ஜுக்கே யூ தனது கீழ் அதிகாரியான யூ ஷி-யிடம், யோங் தேசத்தில் உள்ள தன் குறுநில வங்கிக்கு அனுப்பி, ஜுக்கே யின் வாழ்நாள் சேமிப்பையும் நிலப் பத்திரங்களையும் அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்துமாறு சொல்லி அனுப்புகிறான். 

சிங் மேலிடத்திற்கு தகவல் கொடுக்கிறாள். அங்கு வந்த அகதிகளும் இராணுவ வீரர்களும் பட்டினியால் வாடுவதைத் தடுப்பதற்காக, ஜுக்கே யூ தனது கீழ் அதிகாரியான யூ ஷி-யிடம், யோங் தேசத்தில் உள்ள தன் குறுநில வங்கிக்கு அனுப்பி, ஜுக்கே யின் வாழ்நாள் சேமிப்பையும் நிலப் பத்திரங்களையும் அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்துமாறு சொல்லி அனுப்புகிறான். சிங் படைக்கு தலைமை ஏற்க வந்துவிட்டதை அறிந்த யான் சூன் அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், லாங்கியின் கணவாயில் தங்கியிருந்த அகதிகள் மத்தியில் ஒரு வதந்தியைப் பரப்புமாறு தளபதி சென்-கிற்கு உத்தரவிடுகிறான்.  அதன் படி, சிங் தன்னை யான் தேசம் வசம் ஒப்படைத்துக்கொண்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்றும் அதற்கு மேல் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வதந்திகள் பரவியது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நம்பிக்கையிழந்து, பசியால் வாடிய அகதிகள் கூட்டம் ஒன்று இராணுவ முகாமிற்கு வெளியே திரண்டு, சிங்-ஐ கண்ணீர் மல்கக் குனிந்து வணங்கி, தங்கள் நலனுக்காகத் அவளைத் தியாகம் செய்யுமாறு கெஞ்சுகிறார்கள். 

இங்கு பியாண்டாங் தேசத்தில் இளவரசன் லி யான், மறைந்த பேரரசியின் கல்லறைக்குச் சென்று மரியாதை செய்கிறான். அவனுக்கு தந்தை இளவரசர் சாங் சாகும் தருவாயில் தன்னிடம் கூறிய வார்த்தைகளில் லீயான்-யின் பிறப்பு பற்றிய உண்மையை அறிகிறான். உண்மையில் பேரரசிக்கும், கடந்த கால பட்டத்து இளவரசனுக்கு பிறந்து இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட மகன் தான் தான் என்றும், எப்படியும் பேரரசன் தன் குழந்தையைக் கொல்ல தயங்கமாட்டேன் என்று தெரிந்து, முன்னாள் பட்டத்து இளவரசனின் தம்பி இளவரசன் சாங்-ன் குழந்தையை மாற்றி கொடுத்து அனுப்புகிறாள். அவ்வாறு அனுப்பிய குழந்தை தான் இறந்துவிட்டது என்று செய்தி வருகிறது. தன் சொந்த மகனின் உயிர் முக்கிய என்பதை உணர்ந்து பேரரசி அதனை சாகும் வரை தன் மகன் இளவரசன் லீ யான் உட்பட யாருக்கும் தெரியாவிடவில்லை. இப்போது அந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து, பேரரசியின் ஆசை படி தனக்கு உரிமையானதை தான் கண்டிப்பாக அடைவதாக தாயின் கல்லறையில் கூறுகிறான். அங்கிருந்து செல்லும் போது, பேரரசின் முதன்மை பணிப்பெண் பேரரசி தந்து, தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த லீ யான்-னின் அடையாள சின்னத்தை அளிக்கிறாள். 

அத்தியாயம் 19 – இன் சுருக்கம்

அத்தியாயம் 21 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top