Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 18 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 18

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேசத்தின் அரசாங்க தூதரான லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் மனைவி. பேரரசியுடன் சேர்ந்து சதி செய்கிறாள்.

செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன்-ன் படைத்தளபதி. யான்-னிடம் இருந்து சிங்-ஐ பிரித்தால் தான் தலைவன் தெளிந்த சிந்தனையுடன் நாட்டைப் பற்றி கவனம் செலுத்துவான் என்று அதற்கான வேலைகளைப் பார்ப்பவன்.

நான்சி பழங்குடியினம் – பியாண்டாங் தேசத்தின் எல்லை பகுதியில் இருந்தாலும், அவர்களின் தொல்லைகளால் 15 வருடங்களுக்கு முன் அரசாங்கத்தால் [ பேரரசியால் ] முற்றிலும் அளிக்கப்பட பழங்குடி இனம்.

ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன். நான்சி பழங்குடியினத்தைச் சேர்ந்ததை மன்னனுக்கு மறைத்து வாழ்பவன்.

ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து அவனின் ராணியாக இருப்பவள்.

Rebirth அத்தியாயம் 18 – சுருக்கம்

ஜாவோ சுன்’எர் முன்னர் தனது திருமணத்தில் யான் சூன் தன்னைக் கைவிட்டதால் ஏற்பட்ட கசப்புணர்விலும், அதற்கு காரணமாக சிங்-ன் மீதான வெறுப்பாலும், இப்போது சிங்-ன் பல வீரர்களை சிறை பிடித்து சித்ரவதை செய்கிறாள். அதனைப் பார்க்க சிங்-ஐயும் சிறைக்கு வரவழைக்கிறாள். தன் வீரர்களின் சித்ரவதையை சிங் தடுக்கப் பார்க்க, ஜாவோ சுன்’எர் மேலும் அதிக ஆத்திரமுறுகிறாள். அப்போது அங்கு வந்த அவளது கணவன் இளவரசன் லீயான் அவளை சாந்தப்படுத்த, சிங் தன் வீரர்களை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்ற தீவிர எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறாள். 

சிறையில் இருந்து கோபத்துடன் வெளியேறிய சிங்-ஐ செல்லும் வழியில் யான் தேச தளபதி சிங் வழிமறைத்து பேச அழைக்கிறான். சிங்-ஐ எத்தனையோ முறை கொல்ல கடுமையாக முயற்சித்தாலும், எப்போதுமே தனக்கு சொந்த வெறுப்பு ஏதும் சிங்-ன் மீது இல்லை என்றும், யான் தேச தலைவனிடம் இருந்து அவளை தள்ளிவைக்கவே முயன்றதாகவும், இப்போது அவளுக்கு யான் சூன் மீது எந்த எண்ணமும் இல்லாததால், தனக்கும் அவள் எதிரி இல்லை என்றும் கூறி, ஒரு உணவுவிடுதிக்கு பேச தளபதி செங் சிங்-ஐ அழைத்துச் செல்ல, சிங்-ம் அவனுடன் செல்கிறாள். 

உணவு விடுதியில் சிங் யான் சூன்-னிடம் இருந்து தான் தப்பவைப்பதாக கூறுகிறான் தளபதி செங். சிங் காரணம் கேட்க, யான் சூன்-வுடன் சிங் இருந்தால் தலைவனின் சிந்தனை தடம் மாறும் என்றும், யான் தேசத்தின் தலைவன் தெளிவான சிந்தனை உள்ள புத்திசாலியாக இருக்கவேண்டும் என்றும், அவனை விட்டு சிங் நீங்கி விட்டால், தலைவனது பிடிவாதமும், குரூரமும் குறையும் என்றும், அது யான் தேசத்திற்கு நல்லது என்றும் கூறுகிறான். சிங்-ம் ஒப்புக்கொள்கிறாள். 

லிங்யுவின் ராணி, தனது காயங்களிலிருந்து குணமடைந்து, சிமெங் மன்னர் கோரிய நிலப்படத் தொகுப்பைப் ஜுக்கே யூ விடம் இருந்து பெற்றுக்கொண்டு புறப்படத் தயாராகும் போது, மன்னனின் ரகசிய கட்டளை படி ஜுக்கே வை கொல்ல பார்க்க, ஜுக்கே அதை தடுக்கும் போது எப்போதும் போல உடலில் உள்ள விஷ பாதிப்பு மீண்டும் அதிகப்பட்டு இரத்த வாந்தி எடுக்கிறான். அப்போது அங்கு வந்த சிங் அவனைக் காப்பாற்ற்றுகிறாள்.  ராணிக்கும் அவனைக் கொல்வதில் இருந்த தயக்கம் காரணமாக, எப்படியும் மாற்று மருந்து இல்லாமல் ஜுக்கே யூ நீண்ட காலம் உயிர்வாழ மாட்டான் என்பதால் லிங்யுவின் ராணி அங்கிருந்து செல்கிறாள்.

இளவரசன் லீயான் மாளிகையில் இளவரசன் லீயான்-க்கும், ஜாவோ சுன்’எர்-க்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவள் முன்னர் இவ்வாறு இல்லை என்றும், சிங்-ஐ கண்ட பிறகே அவளிடம் பயங்கரமான மாறுதல் தெரிகிறது என்றும் அவன் கோபம் கொள்ள, ஜாவோ சுன்’எர் தன்னையே வெறுத்துக்கொண்டு, தான் ஒரு கொடூரமானவள் தான் என்று கூறி, தனக்கு என்னவெல்லாம் நேர்ந்தது என்று கூறி கதறியவள், தன்னையே திருப்தி செய்துகொள்ளவே இவ்வாறு நடந்துகொள்வதாகவும், அவனுக்கு அவள் இப்படி இருப்பது பிடிக்கவில்லை என்றால்… என்று கூறியவளைத் தடுத்த இளவரசன் தான் என்றும் அவளுக்கு பக்கபலமாகவே இருக்க விரும்புவதாக கூறி அவளைத் தேற்றுகிறான். 

இளவரகன் லீ சே பேரரசரைக் கொலை செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இப்போது தன் கையில் இருந்ததால், சிங் பேரரசியைச் சந்திக்கச் அரண்மனை சென்றாள். அங்கு தான் யான் சூன்-ஐ திருமணம் செய்ய சம்மதம் என்று கூறி, பேரரசியின் தன் சொந்த மகன் மீதான வெறுப்புக்கு காரணத்தைக் கேட்கிறாள். பேரரசிக்கு சிங்-ன் துணிச்சல் பிடித்திருந்ததால் தனக்கு நேர்ந்ததைக் கூறுகிறாள். தன் கணவனைக் கொன்றுவிட்டதால் தன் வயிற்றில் வளரும் குழந்தையைக் காப்பாற்ற, புதிய பேரரசனைத் திருமணம் செய்ததாகவும், குழந்தை பிறந்த பிறகு தன்னிடம் இருந்து பிரித்து வேறு ஒரு இடத்தில் வளர்க்க எடுத்துச் செல்லப்பட்டதாகவும், சில நாள் கழித்து மர்மமான முறையில் அந்த குழந்தை இறந்துவிட்டதால் ஏற்பட்ட பேரரசனின் மீதான வெறுப்பு உணர்வு அப்படியே மனதில் தங்கிவிட்டது என்றும், பின்னர், அவள் புதிய பேரரசருக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாலும் அக்குழந்தையை ஒரு அவமானமாகக் கருதி, தன் மனம் வெறுக்கிறது என்றும் கூறுகிறாள்.

இளவரசன் லீ சே பற்றிக் கூற, அது அவனது தலைவிதி என்று பேரரசி அலட்சியமாக கூறுகிறாள். ஒரு வேளை பின்னாளில் லீ சே மன்னனாகினால் அவனும் இவ்வாறே இரக்கமற்றவனாக மாறிவிடுவான் என்றும் கூறுகிறாள். பிறகு திருமணத்திற்கு தன் சம்மதத்தைக் கூறிவிட்டு, திருமணத்திற்கு முன்னதாக, அவள் லீ சே-வைச் சந்திக்க அனுமதி கேட்க, பேரரசியும் அதற்கு அனுமதி அளிக்கிறாள்.

சிறைச்சாலையில், லீ சே முதலில் சிங்-ஐ  கண்டதும் மகிழ்ச்சியடைந்தாலும்,  அவளுக்குப் பின்னால் பேரரசியின் ஒற்றர்கள் இருப்பதை கவனித்ததும், சிங்-ஐ அங்கிருந்து கிளம்புமாறு வற்புறுத்துகிறான். தனது பாதுகாப்பு குறித்து லீ சே கவலைப்படுவதை உணர்ந்த சிங், மறுநாள் தான் யான் தேசத்தின் இளவரசியாகப் போகப்போவதை நிதானமாகக் கூறுகிறாள். அந்தத் திருமணத்தை பேரரசி ஒரு பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதை எண்ணி அவன் வருத்தம் கொள்கிறான். ஆனால் சிங் தான் ஒரு வெல்லமுடியாத தளபதி என்றும், தன்னை நம்புமாறும், தான் அவனை எப்படியும் வெளியில் எடுத்துவிடுவதாவும் கூறி விட்டு செல்கிறாள்.

திருமணத்திற்கு புறப்பட்டு செல்லும் போது தான் அரசாங்க சிறையில் இருந்த தனது வீரர்களும் தன்னோடு சிறை கைதிகளாக வருவதைக் கண்டு கோபத்துடன் காரணம் கேட்க, அது இந்த தேசத்தில் இருந்து தனக்கு கொடுக்கப்பட்ட சீதனம் என்றும், சிங் தப்பித்துச் செல்லாமல் இருக்க தான் செய்த முன்னேற்பாடு என்றும் கூறுகிறான்.

சிங் தன் திருமணத்திற்காகப் புறப்பட்டுச் சென்ற பின்னர் இளவரசன் லீ சே தன் இளவரசு பட்டத்தை இழந்து ஒரு தொலைதூரப் பகுதிக்கு நாடு கடத்தப்படுகிறான். தான் செல்லும் வழியில் எப்படியும் சிங் வந்து தன்னைக் காப்பாற்றுவாள் என்று நம்பிக்கையுடன் செல்லும் போது, தாங்கள் செல்லும் பாதை திசைமாறிச் செல்வதை அவனது உதவியாளன் கவனிக்கிறான். ஓரிடத்தில் ​​தங்களுக்குத் துணையாக வந்திருந்த காவலர்கள் அனைவரும் விட்டுவிட்டு செல்ல, அங்கே ஜான் ஜியூ-வும் அவனது ஆட்களும் அவர்களைக் கொல்ல சூழ்ந்து கொள்கின்றனர். இது தாயின் முடிவு என்று எண்ணி மனம் வருந்தி, அவர்களோடு போராட, அப்போது, ​​ஜுக்கே யூ விரைந்து அங்கு வந்து, லீ சே தப்பிச் செல்ல உதவுவதுடன், ஜான் ஜியூ-வையும் சிறை பிடிக்கிறான். 

திருமண ஊர்வலமாக யான் தேசம் நோக்கி செல்லும் வழியில் சிங் தப்பிச் செல்ல ரகசியமாக தளபதி செங் உதவுகிறான். யான் சூன் துணைவி ராணி ஹெலியன் லிங் காணாமல் போனதை அறிந்து, அவளைத் தேடிச் செல்கிறான். அவன் திரும்பி வந்தபோது, ​​சிங் தன் சிறை வீரர்களுடன் தப்பிச் சென்று விட்டதை அறிந்து, தான் மீண்டும் ஒருமுறை கைவிடப்பட்டதாக உணர்ந்து கோபத்துடன் யான் தேசம் செல்கிறான். 

திருமண ஊர்வலமாக யான் தேசம் நோக்கி செல்லும் வழியில் சிங் தப்பிச் செல்ல ரகசியமாக தளபதி செங் உதவுகிறான். யான் சூன் துணைவி ராணி ஹெலியன் லிங் காணாமல் போனதை அறிந்து, அவளைத் தேடிச் செல்கிறான். அவன் திரும்பி வந்தபோது, ​​சிங் தன் சிறை வீரர்களுடன் தப்பிச் சென்று விட்டதை அறிந்து, தான் மீண்டும் ஒருமுறை கைவிடப்பட்டதாக உணர்ந்து கோபத்துடன் யான் தேசம் செல்கிறான். தப்பிய சிங் அங்கு ஜுக்கே வுடன் சென்று சேர்ந்து கொள்கிறாள். 

.

அத்தியாயம் 17 – இன் சுருக்கம்

அத்தியாயம் 19 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top