Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 23 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 23

சூ கியாவோ – ‘சிங்’ என்று அழைக்கப்படும் இவள் ஜுக்கே யுவின் அடிமையாக வந்து சேர்ந்து, அவனால் போர்வீரங்கனையாக பயிற்சி கொடுக்கப்பட்டவள் – முன்னர் ஜுக்கே யுவின் தோழனாக இருந்த போது யான் சூனால் ஒரு தலையாக விரும்பப்பட்டவள். ஜுக்கே யு இவளுக்கு ‘சிங்’ என்று பெயரிட்டு அழைக்கிறான். யான் சூன்-க்கும் மற்றவர்களுக்கும் இவள் ‘சூ’

லி யான் – பியாண்டாங் தேச இளவரசன். உண்மையான பட்டத்து இளவரசன் சூழ்ச்சியால் மன்னனாகி, பின்னர் சிங்-ஆல் கொல்லப்படுகிறான்.

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி. பியாண்டாங் தேசத்தின் தற்போதைய மன்னனான லீயான்-ன் மனைவி.

ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் அவனால் வெறுக்கப்படுகின்றவள். 

யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் கொலை முயற்சியில் தப்பி மறைந்து வாழ்பவள். 

லீ சே – பியாண்டாங் தேசத்து பட்டத்து இளவரசன். பேரரசிக்கும் பேரரசனுக்கும் பிறந்தவன். மன்னனான பின் இளவரசன் லீ யான்-ஆல் அரியணைக்காக கொல்லப்படுகிறான்.

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து எல்லை பகுதிகளில் போர்களில் ஈடுபட்டாலும், தந்தை அதாவது அரசனால் அன்பு மறுக்கப்படுபவன். 

லிங் யூ ராணி – தன் இணைத்து மக்களைக் காப்பாற்ற, சிமெங் முகமூடி மன்னனிடம் அடிமை ராணியாக இருப்பவள். ஜுக்கே யூ வின் தோழி. 

.

Rebirth அத்தியாயம் 23 – சுருக்கம்

தற்போதைய மன்னன் லி யான் இறந்ததும், அதனைத் தொடர்ந்து அரண்மனையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இடையே, ஒரு அரண்மனை பணிப்பெண் மன்னரின் மனைவியான ஜாவோ சுன்’எர்-ஐ உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு வற்புறுத்தி அழைத்துச் செல்கிறாள். மன்னர் லி யான் ‘தனக்கு இந்த நிலை ஏற்படும்’ என்று முன்னரே கணித்து, அப்படி ஏற்படும் பட்சத்தில் தன் மனைவியான ஜாவோ சுன்’எர்-ஐப் பாதுகாக்கும் பொருட்டு சில முன்னேற்பாடுகளை செய்து இருக்கிறான். அதன்படி பணிப்பெண் அவளை யாருக்கும் தெரியாமல் அழைத்துக்கொண்டு நகரத்தை விட்டு செல்கிறாள். தன் கணவனின் இறப்பின் அதிர்ச்சியில் வருந்திக்கொண்டே அவளின் பிறந்த தேசமான யோங் தேசம் நோக்கி செல்கிறாள் ஜாவோ சுன்’எர்.

மற்றொருபுறம் யான் தேசத்து அரசன் யான் சூன் மற்றும் அவனின் தளபதி செங் இருவரும் பிரிந்து சென்ற பின்னர், யான் சூன்-னின் ராணி ஹெலியன் லிங் எஞ்சி இருக்கும் கருங்கழுகு படையின் வீரர்களுடன் தன்னாட்டிற்குத் திரும்ப செல்ல போராடுகிறாள். தன் கணவரும் தளபதியும் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில் வீரர்கள் குழப்பமடைகிறார்கள். இருவரையும் தேட ராணி முடிவெடுக்கும் பொழுது, வீரர்கள் அதற்கு மறுக்கிறார்கள். யான் தேசத்தில் விதிக்கப்பட்ட கொடுமையான வரிகளாலும், தொடர்ந்து போர் பயணங்களினால் சோர்வடைந்திருந்ததாலும் கரும்பழகு படை வீரர்கள், அரசன் மற்றும் தளபதி சென்ற பாதையில் மேலும் தேடுவது பயனற்றது என்றும், அவர்கள் திருப்பிப்போவது இல்லை என்றும் கூறி, தொடர்ந்து தங்கள் தேசம் திரும்ப மறுத்து விட்டனர். அவர்கள் தாங்கள் இந்த பியாண்டாங் தேசத்திலேயே ஒரு சிறந்த வாழ்க்கையை தேட விரும்புவதாக ராணியிடம் தெரிவிக்கின்றனர். 

ராணி ஹெலியன் லிங், பதவி மற்றும் செல்வங்களை அவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்து அவர்களைச் சம்மதிக்க வைத்து புறப்பட்டு செல்கிறாள். ஓரிடத்தில் ஓய்வு எடுத்த போது, மற்றவர்கள் தப்பிச்செல்ல இருவர் மட்டும் தாங்கள் கடமையை விட்டு விலகியது மன்னன் யா சூன்-க்கு தெரியவருவதை விரும்பாமல் அவளைக் கொல்ல வருகின்றனர். அப்போது அங்கு வந்த முன்னாள் பெண் தளபதி யோ ஹுவான், ராணியை காப்பாற்றுகிறாள். 

யான் தேசத்தில் ஒரு புகழ்பெற்ற பழங்குடியின தலைவியாக இருந்து, ‘யான் தேசத்து மன்னன் யான் சூன் ஆல் கொல்லப்பட்டுவிட்டாள்’ என்று எண்ணிய ஜென்ரல் யோ ஹுவான்-ஐ அங்கு கண்டதும் அவளைக் குறித்து கேள்விகள் கேட்டவரே மயங்கி விழுகிறாள் ராணி.  ஹுவான் அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க, தான் சந்தித்த அந்த துயரமான அனுபவத்தினால் ராணி ஹெலியன் லிங்-கின் உடல்நலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜென்ரல் ஹுவான் ஏழ்மை நிலையில் இருப்பதால், மருத்துவருக்கு சிகிச்சைக்கான சன்மானம் அளிக்கத் திணறும் அந்த வேலையில் கண்விழித்த ராணி மருத்துவச் செலவுவை ஈடுபட்ட தன்னுடைய ஒரு தூய தங்க தலைச்சீப்பை வழங்குகிறாள். பின்னர் தான் யான் தேசத்திற்கே திரும்பிச் செல்வதற்காக அவளின் குதிரையை இரவல் கேட்கிறாள்.  ஹுவான் அனுமதிக்க அவளுடைய குதிரையை எடுத்துக் கொண்டு, ராணி தன்னுடைய தேசத்திற்கு பயணம் செய்கிறாள். 

பியாண்டாங் தேசத்தின் தலை நகரத்தில் ஒரு அரண்மனை அதிகாரி ஜுக்கே யு-வை சந்தித்து, கொல்லப்பட்ட மன்னனான லீ சே-வுடன் போருக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னால் மன்னனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஜுக்கே யூ விடம் தனக்கு கீழ் இருக்கும் தன்னுடன் சேர்ந்த 500 போர் வீரர்களை அளிக்கிறான். இறப்பதற்கு முன்னதாகவே ஒப்பந்தத்தின்படி 500 படைவீரர்களைத் தனக்கு கீழ் கொடுத்து வைத்திருந்ததாக கூறி அதற்குண்டான அடையாள முத்திரையையும் அளிக்கிறான். அதற்கு நன்றி தெரிவித்த ஜுக்கே தான் ஒப்புக்கொண்டபடி சிமெங் நாட்டில் தன் வேலை முடிந்ததும் இந்த 500 வீரர்களையும் திரும்ப கொடுத்து விடுவதாக கூறி அந்த முத்திரையை வாங்கிக் கொள்கிறான்.

மறைந்த மன்னன் லீ சே போரில் இருந்து சிங் திரும்பி வந்ததும் அவளிடம் தன் காதலை சொல்வதற்காக சில விஷயங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான். என்றாலும் அவள் தன்னை மறுத்து விடக் கூடும் என்று முன்னரே தெரிந்து, அவள் உண்மையாக நேசிக்கும் ஜுக்கே யூ-ஐ மரியாதையுடன் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு அவளை ஒரு பெரும் தளபதியாக ஆக்குவதற்கான ஒரு அரசாங்க ஓலையையும் எழுதி இருக்கிறான். ஏற்கனவே லீ சே இறந்த துயரத்தில் இருந்த சிங் இவற்றைக் கண்டதும் மேலும் துயரத்தில் மூழ்குகிறாள்.

மன்னனை சிங் கொன்று விட்டதால் அங்கு வாரிசு பிரச்சனை வருகிறது. அரசவையில் அடுத்த மன்னர் குறித்த குழப்பத்தில் எல்லோரும் இருக்கும் போது, அங்கு சிங் ஒரு பச்சிளங்குழந்தையை எடுத்து வருகிறாள். அது முன்னாள் கொல்லப்பட்ட மன்னன் லீ சே-வின் துணைவியின் குழந்தை. அந்தக் குழந்தையை மறைந்த பேரரசரின் முறையான வாரிசு என்று அறிவித்த சிங், அவனைத் தத்தெடுத்து, அவன் முறையான வயது வரும் வரை தான் பேரரசியாகவும், அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றுவதாக அறிவிக்கிறாள். இதற்கு அவள் தளபதி சன் மற்றும் அவளின் விசுவாசிகளைப் பயப்படுத்திக்கொள்கிறாள். ஏனெனில் மன்னன் லீ சே சிங்-க்கு விட்டுச் சென்ற பொருட்களில், பாதியிலேயே முடிக்கப்பட்ட ஒரு அரசு ஆணையும் இருப்பதை பார்க்கிறாள் சிங். அந்த ஆணையில் அரசரின் கையொப்பமும், முத்திரையும் மட்டும் இருப்பதும், வேறு எதுவும் எழுதாத வெற்றுப் பக்கமாக இருப்பதும் தெரியவர அதனை சிங் இப்போது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாள்.

இதற்கிடையில், யோங் தேசத்தின் இளவரசன் ஸாவோ சே, தங்கி இருந்த நகரத்தில் உலா வரும் போது, ​​உணவு அருந்துவதற்காக சாலையோர கடை ஒன்றில் அமர்கிறான். அந்த ஊரில் தன் அடையாளம் மறித்து வாழும் யான் தேச பெண் தளபதி யோ ஹுவான்-ம் அங்கு இருக்கிறாள். அப்போது இளவரசன் மது அருந்தும் போது, தனது பணப்பையையும் குதிரையையும் திருட்டுக் கொடுக்க நேரிட, வேறு வழியின்றி யாரென்றே தெரியாத, ஆனால் பார்த்ததும் மனதுக்குள் பிடித்துவிடுகின்ற ஹுவான்-னிடம் உதவி கேட்கிறான். அன்று ஏற்கனவே யான் தேச ராணி தன் குதிரையை எடுத்துச் சென்று விட்டதால், தான் இரும்பு ஆலைக்குப் பயன்படுத்தும் ஒரு கழுதை மட்டுமே எஞ்சியிருப்பதாக அவள் கூறிவிட்டுச் செல்ல, வேறு வழியின்றி, இளவரசன் அந்த கழுதையை அழைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக பன்மடங்கு கைமாறு செய்வதாக உறுதியளிக்கும் ஒரு குறிப்பை விட்டுச் சென்றான். 

பியாண்டாங் தலைநகரத்தில் ஜுக்கே யூ தன் உடலில் உள்ள விஷம் அதிகம் பரவாமல் இருக்க, அதிக வீரியம் உள்ள மருந்துகளை மருத்துவனிடம் இருந்து பெற்று, அவனின் எச்சரிக்கையையும் மீறி பயன்படுத்துகிறான். அப்போது கடுமையான காயத்துடன் சிமெங் ராணியின் துணை வீரன் அங்கு ஜுக்கே விடம் வந்து லிங் யூ ராணி மிக ஆபத்தில் இருப்பதைத் தெரிவிக்கிறான். இங்கு தலைநகரத்தில் எல்லாம் சரியாக நடைபெற ஆரம்பித்ததால், தான் உடனடியாகச் சிமெங்கிற்குப் புறப்படுவதே சரி என்பதை உணர்ந்த ஜுக்கே, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகிறான். 

சிங் தன்னை பேரரசியாக அறிவிப்பதால் இறந்த பேரரசரை முறையாக இப்போது மணப்பது போன்ற முயற்சிகள் நடக்கின்றன. அதனை அறிந்து ஜுக்கே யூ அவளை சந்திக்க வரும்போது, பியான்டாங்கின் அரசப் பிரதிநிதியாகத் தொடரும் தனது முடிவை சிங் கூற, எப்போதும் போல இப்போதும் அவளது முடிவை ஜுக்கே ஏற்றுக்கொள்கிறான். 3 நாட்கள் கழித்து, திருமணம் நடக்கும் போது, அழைத்துச் செல்ல வந்த அலங்கார தேரில் பியாண்டாங் தேச அலங்காரமாக இல்லாமல் அது ஜுக்கே குடும்ப அலங்காரமான நட்சத்திர-சந்திர விளக்குகள் உள்ள அலங்காரமாக இருப்பதை ஜுக்கே யூ வீரர்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்கின்றனர். அந்த அழகான விளக்குகள் முந்தைய நாள் ஜுக்கே யூ அவளுக்கு விட்டுச் சென்ற கடிதத்தை நினைவுபடுத்துகிறது. லீ சே வாக்குறுதியளித்த படி ஜுக்கே யூ-க்கு தந்த ஐநூறு காவலர்களை அவன் சிங்-ன் பாதுகாப்புக்கு அளித்திருந்ததோடு, எப்போதாவது தேவைப்பட்டால் சிமெங்-கில் தன்னைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக ஒரு தூத்துப் புறாவையும் விட்டுச் சென்றிருந்தான்.

அத்தியாயம் 22 – இன் சுருக்கம்

அத்தியாயம் 24 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top