.
லிங் யூ ராணி – தன் லிங் யூ இணைத்து மக்களைக் காப்பாற்ற, சிமெங் முகமூடி மன்னனிடம் அடிமை ராணியாக இருப்பவள். ஜுக்கே யூ வின் தோழி.
மெங் என் – சிமெங் தேசத்தின் ஜெனரல். ஒரு முறை லிங் யூ ராணியால் காப்பாற்றப்பட்டவன். அதனால் மனதிற்குள் அவளிடம் அனுதாபம் உள்ளவன்.
ஜுக்கே யூ – யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னனின் வாரிசு. பல கடினமான சூழலிலும் சிங்-ன் பாதுகாப்பிற்காக வாழ்பவன். தற்போது சிமெங் தேச ராணியைக் காக்கவும், தன் விஷ முறிவு மருந்திற்காகவும் அங் செல்கிறான்.
சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். ஜுக்கே யூ-வின் உடல் நச்சுக்கு அடிக்கடி சிகிச்சை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.
.
Rebirth அத்தியாயம் 24 – சுருக்கம்
பியாண்டாங் தலைநகரத்தில் சிங் ஆட்சியின் கீழ் அடிமை முறை ஒழிக்கப்பட்டு, அடிமை வர்த்தகத்தையும் தடை செய்து, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து அடிமைகளையும் நிபந்தனையின்றி விடிவிக்கவும் உத்தரவிடுகிறாள் பேரரசியாக இருக்கும் சிங். பெண்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக அங்கு பெண்கள் பல்வேறு கலைகளை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. பிரபுக்களும். இளவரசர்களும். பெரிய குடும்பங்களும் இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிப்பார்கள் என்று உணர்ந்தாலும்.
தன் நிலையில் இருந்து பேரரசி பின் வாங்காமல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாள். ஒருமுறை சிங் நகர்வலம் வரும்போது முகத்தை மறைத்தவாறு தலையில் தொப்பி அணிந்து, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியுடன் சிங்-ன் மீது பாயும் பெண்ணை சிங் அடையாளம் கண்டு கொள்கிறாள். அதற்கான காரணத்தை அவள் கேட்க, அந்த பெண் தான் ஜான் ஜியு-ல் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு பெண் உளவாணி என்றும், அப்போதைய பட்டத்து இளவரசன் லீ சே-வின் மாளிகையில் ஒற்று வேலை செய்து தகவல் அளிப்பவளாக பணியாற்றியதையும் எடுத்துக்கூறி, தனது குரு ஜான் ஜியு-வை கொல்லப்பட்டதாலும், தங்களின் பட்டத்து இளவரசன் லீ சே இறந்து விட்டதாலும் அந்த பெண் மற்றும் அவளைச் சேர்ந்த அவளது சகப் பெண் உளவாளிகள் அனைவரின் வாழ்வும் அதன் நோக்கமும் வீணடிக்கப்பட்டு விட்டதாக கோபம் கொள்கிறாள்.
அந்த பெண்ணுடன் பேரரசி சிங் அவளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்கிறாள். அங்கு அவர்களுடன் பேசி, தன் திறமைகளை மற்ற பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கும் பொழுது, அப்பெண்கள் தங்கள் அழகில் மட்டுமே மதிப்பு இருப்பதாகவும் செல்வந்த குடும்பத்தில் திருமணம் செய்வதை தங்களின் பாதுகாப்பிற்கான ஒரே வழி என்றும் நம்பி அந்த வாய்ப்பை நம்ப மறுக்கிறார்கள். அவர்களை அவர்களின் வழியிலேயே சென்று, பேசி ஆண்களை சார்ந்து இருப்பது எப்பொழுதும் ஒரு சூதாட்டம் போலத்தான் என்பதை உணர்த்தி, லீ சே-வுக்கு சொந்தமாக இருந்த ஒரு விடுதியின் உரிமை பத்திரத்தை அவர்களிடம் வழங்கி, அந்த தொழிலை அவர்கள் திறம்பட நிறுவகித்தால் அதிலிருந்து கிடைக்கும் லாபம் முழுமையும் அவர்களுக்கே உரியதாகும், என்ற உறுதியையும் அளிக்கிறாள். தாங்கள் சொந்த எஜமானர்களாக திகழ்வதற்கான அந்த வாய்ப்பால் ஊக்கம் பெற்ற அந்த பெண்கள் அதனை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
பணிவுறைந்த மலைகள் சூழ்ந்த பிரதேசமான சிமெங் தேசத்தில் ‘கருப்பு தங்கம்’ தோண்டி எடுக்க, அடிமைகள் வற்புறுத்தப்படுகின்றனர். சிரமம் தாளாமல் மனிதர்கள் அங்கு அதிக இறப்பை சந்தித்த போதிலும், மேலும் மேலும் அடிமைகளை உள்நாட்டிலும், எல்லைப் பகுதிகளிலும் இருந்தும் பிடித்துக் கொண்டு வரப்பட்டு அவர்கள் சுரங்கத்தில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஜுக்கே யூ-ஐ கொலை செய்யாதது மட்டுமல்லாமல், உயிருடன் சிமெங் தேசத்திற்கு அழைத்தும் வராத காரணத்தினால் சிமெங் தேச முகமூடி மன்னனின் ராணியை கைது செய்து சுரங்கத்திற்கு அழைத்து வருகிறார்கள். சுரங்கத்திலிருந்து அதிக அளவு கருப்பு தங்கத்தை வெட்டி எடுக்காத பழியும் ராணியின் மீது சுமத்தப்படுகிறது. ராணியின் லிங் யூ பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் இப்பொழுது சுரங்கங்களில் எப்பொழுது வேண்டுமென்றாலும் பலியிடக்கூடிய வெறும் உழைப்பாளிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அதேபோலவே லிங் யூ பழங்குடியின ராணியின் கணவன் அதாவது முன்னாள் லிங் யூ மன்னனையும் தன் உடலில் கலந்துள்ள விஷத்தை முறிக்கும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் கெஞ்சும் நிலையை சிமெங் நாட்டின் மன்னன் உண்டாக்கி வைத்திருக்கிறான். தன் கண் முன் சீரழிந்து நிற்கும் தன் கணவனுக்காகவும், தன் பழங்குடியின மக்களின் விடுதலைக்காகவும் ராணி தன் தன்மானத்தை இழந்து மன்னன் சொல்வதைக் கேட்கும் நிலை தான் இன்றும் உள்ளது. இது ராணியை தன் சொந்த மக்களே துரோகி என்று தூற்றும் நிலைக்குக் காரணமாகிறது. இந்த நிலையில் தான் ஜுக்கே யூ அங்கு செல்கிறான்.
இதற்கிடையில் பியாண்டாங் தேசத்தில் பேரரசி சிங் தன் உள்ளுணர்வின் மூலம் ஜுக்கே யூ-விற்கு ஆபத்து நேரிட உள்ளது என்பதை உணர்கிறாள். அவளுடன் கூட இருக்கும் மருத்துவனும் தன் குறி சொல்லும் முறையின் மூலம் அதை உறுதிப்படுத்துகிறான். எனவே பியாண்டாங் நாட்டின் தலைநகரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தன் விசுவாசிகளிடம், நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒப்படைத்துவிட்டும், தான் சிமெங்-தேசம் செல்லும் இந்த நேரத்தில், அரசவையை விழிப்போடு கண்காணித்து, லீ சே-ன் குழந்தையான இளம் பேரரசரைப் பாதுகாக்குமாறு அவள் அவர்களுக்கு அறிவுறுத்திவிட்டும், தான் விரைவில் திரும்புவதாக கூறிவிட்டு ஜுக்கே யூ-வைத் தேடி கிளம்புகிறாள் சிங். அவளுடன் மருத்துவன் உட்பட அவள் பயிற்றுவித்த வீரர்களும் கிளம்புகிறார்கள்.
இங்கு சிமெங் தேசத்தில் ராணி செய்த குற்றங்களுக்காக அவளை கைது செய்து நகரில் பொதுவெளியில் ‘மெங் என்’ என்ற ஜென்ரல் அழைத்து வருகையில், ஒரு கும்பல் அவள் மீது கற்களை வீசி தாக்குகின்றனர். ஜென்ரல் மெங் என்-ம் வேறு வழியின்றி அதை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் தன் மரணத்தை ஏற்க தயாராகிக் கொண்டிருந்த அந்த வேளையில், ஜுக்கே யூ அவளை மீட்டு காட்டிற்குள் அவளை அழைத்துக்கொண்டு ஒரு மறைவிடத்திற்கு செல்கின்றான். தன் உடலில் உள்ள ‘ஸ்நோ பிளட்’ என்னும் கொடிய விஷத்தால் உடல்நிலை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும், ராணியைக் காப்பாற்ற அவன் எடுத்துக் கொள்ளும் போராட்டத்தில் அவன் உடல் நிலை இன்னும் பலவீனப்படுகிறது. அந்த நிலையில் இதற்கு மேல் இயலாது என்ற விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள ராணி முயலும் பொழுது அதிலிருந்தும் ஜுக்கே அவளைக் காப்பாற்ற, ராணி கோபம் கொள்கிறாள். ஜுக்கே-யின் மீது தனக்கு ஏற்பட்ட எதோ ஒரு அன்பினால் தன்னால் அவனை கொல்ல இயலாமல் திரும்பி வந்ததால் தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது என்ற நிலையாலும், தன்னால் தான் தனது பழங்குடியின மக்கள் முகமூடி மன்னனின் கோபத்திற்கும் ஆளாகி கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தினாலும், அவள் ஜுக்கே மீது கோபம் கொள்கிறாள். அந்த கோபத்தை அவனிடமும் வார்த்தைகளில் காட்ட அவன் புரிந்து கொண்டாலும், அதற்கு பதில் அளிக்காது அவளின் துணை வீரன் தன்னிடம் கேட்டுக் கொண்ட படி அவளைக் காப்பாற்றியதாக கூறுகிறான். பின் இருவரும் சமாதானமாகி மறைவிடம் நோக்கி செல்கின்ற வழியில் உடம்பில் விஷ வீரியம் அதிகமாகிஜுக்கே யூ ரத்தம் கக்கி துடித்தவாறு மயங்கி விழுகிறான். அவனை அழைத்துக் கொண்டு அந்த காட்டிற்குள் மறைவான இடத்திற்கு செல்கிறாள் ராணி.
சிமெங் நாட்டின் முகமூடி மன்னனிடம் இருந்து கிடைக்கும் மாற்று மருந்து இல்லாததால், அந்த விஷத்தினை தற்சமயம் கட்டுப்படுத்த அருகில் மருத்துவனும் இல்லாததால் வலியிலும், வேதனையிலும் தாங்க முடியாத ஜுக்கே யூ ஒரு கட்டத்தில் தன்னை மாய்த்துக்கொள்ள என்னும் பொழுது, அவன் உடலின் விஷத்தோடு மட்டுமல்ல அவன் எண்ணத்தோடு ராணி போராட வேண்டிய அவசியம் நேரிடுகிறது. ஜுக்கே உயிரை அவனிடம் இருந்தே பாதுகாக்கும் போராட்டம் ராணியும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது.
ஜுக்கே-விற்காக ராணி மருந்துகளை வாங்கிக் கொண்டு திரும்பி வரும் பொழுது, அவள் வந்து சேரும் அந்த மறைவிடத்திற்கு அவளை பின்தொடர்ந்து ஜென்ரல் மெங் என்-ம் வந்து சேருகிறான். அவளைப் பின் தொடர்ந்து, தன் வீரர்கள் இல்லாமல் தனியாக வந்த ஜென்ரல் மெங் என் அவளிடம், தான் முன்னர் ஒரு முறை இந்த ரகசிய இடத்தில் ராணியால் காப்பாற்றப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டவன் என்றும், அதற்கு பிரதி உபகாரமாக இந்த முறை அவளை அவன் காப்பாற்ற எண்ணுவதாகவும் கூறுகிறான். உள்ளே படுத்து இருக்கும் ஜுக்கே-வை கொண்டு சென்று முகமூடி மன்னரிடம் ஒப்படைத்து விட்டு அவள் உயிரையும், அவள் மக்கள் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள யோசனை கூறுகிறான். ராணி அதை மறுக்க, அவனுக்கு ராணி ஜுக்கே-வின் மீது ஒருதலையாக விருப்பம் கொண்டிருக்கிறாளோ என்ற சந்தேகம் எழுகிறது.
இதற்கிடையில் சிங் தன் வீரர்களுடன் முன்னர் ஜுக்கே-வால் அவளுக்கு அளிக்கப்பட்ட தூது புறாவின் உதவியுடன் அந்த மறைவிடத்திற்கு வந்து சேர்கிறாள். ஜுக்கே-வின் மீது ராணி தன் கத்தியை பயன்படுத்திக் கொண்டிருப்பதை கண்டதும் சிங் ராணியின் செயலை தவறாகப் புரிந்து கொள்கிறாள். ஆனால் அது ஜுக்கே-வின் உடலில் பரவிய நஞ்சை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்பதை விரைவில் அவள் அறிந்து கொள்கிறாள்.
வீட்டில் உள்ளே மருத்துவம் ஜுக்கே-விற்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் அதே வேலையில் வீட்டிற்கு வெளியே சிங்-ம், ராணியும் உரையாடுகிறார்கள். அப்பொழுது சிங் ஜுக்கே யூ மட்டுமல்ல ராணியின் லிங்க் யூ இனத்தின் தலைவனும் இதே கொடூர விஷத்தால் தாக்கப்பட்டிருக்கிறான் என்று தனக்குத் தெரியும் என்று அவளிடம் கூறுகிறாள். ஜுக்கே யூ மற்றும் ராணிக்காக சிறைபிடிக்கப்பட்டுள்ள லிங் யூ தலைவன் ஆகிய இருவரையும் காப்பாற்றுவதற்கான மாற்றுமருந்தை ‘எப்படியாவது முகமூடி மனனிடமிருந்து பெற்றுவிட வேண்டும்’ என்று உறுதியில் ராணி இடம் சிமெங் மன்னனின் பலவீனங்கள் என்னென்ன என்று கேட்க, அதன் அபாயத்தை உணர்ந்த ராணி அவளை எச்சரித்து விட்டு அங்கிருந்து செல்கிறாள்.
அத்தியாயம் 24 – இன் சுருக்கம்
.