dramalookup

தி அன்கிளவுடட் சோல் [ The Unclouded Soul ] என்பது சூ ஜிஜோ இயக்கிய ஒரு வரலாற்று கற்பனை நாடகத் தொடராகும், இதில் டான் சாங்யுன் [ Tan Songyun ] மற்றும் நியோ ஹௌ [ Neo Hou ] ஆகியோர் நடித்துள்ளனர்.

[ மன்னிக்கவும் – இந்த புது நாடகம் பார்ப்பதில் பழைய ‘ சீக்ரெட் கார்டன்’ கொரிய நாடகம் மீண்டும் பார்த்து கதை விளக்கம் எழுத நேரம் இல்லை. விரைவில் அதையும் பதிவிட முயற்சி செய்கிறேன். ]

தி அன்கிளவுடட் சோல் / The Unclouded Soul Chinese Drama

இது ஒரு சீன வரலாற்று கற்பனை நாடகம் ஆகும். நம் நாட்டினில் அமிழ்தத்தை அருந்தியவர்கள் சாகா வரம் பெற்றவர்கள் ஆகிறார்கள் என்று சொல்கிறோம் அல்லவா?. அதே போல அந்த நாட்டில் ஒரு கற்பனை உலகத்தில் உள்ள ஒரு நீரூற்று சாகா வரத்தை தரும் என்று கேள்விப்பட்டு அதனை அடைய ஆசை படும் மனிதர்கள் மற்றும் டெமென் என்று அழைக்கப்படும் அரக்கர்கள் என்று 2 வர்க்கத்தினரும் ஆதி காலம் தொட்டு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, அந்த தெய்வீக ஜேட் அமிர்த நீரூற்றைத் தேடி, தங்களுக்குள் சண்டை இட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆசையால் உந்தப்பட்ட மனிதர்களாலும் பேய்களாலும் தூண்டப்பட்ட முடிவற்ற மோதல்களின் பின்னணியில் இந்தக் கதை நிகழ்கிறது.

இவ்வாறு தொடரும் போர்களுக்கு இடையே ஒரு மனிதப் பெண்ணான சியாவோ யாவோவுக்கும், பத்தாயிரம் அரக்கர்களின் அரசரான ஹாங் யேவுக்கும் இடையே உருவாகும் ஒரு சோகமான காதல் கதையைச் சொல்கிறது.

தி அன்கிளவுடட் சோல் / The Unclouded Soul – சீன நாடக விவரங்கள்

  • தலைப்பு: களங்கமற்ற ஆன்மா
  • நாடு: சீனா
  • அத்தியாயங்கள்: 40
  • கால அளவு: 45 நிமிடம்.
  • வகை: வரலாற்று, கற்பனை, காதல்
  • ஒளிபரப்பப்பட்ட தேதி: டிசம்பர் 27, 2025 – ஜனவரி 8, 2026
  • ஒளிபரப்பப்பட்ட நாட்கள்: திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு
  • அசல் நெட்வொர்க்: CCTV, iQiyi, Youku
  • கால அளவு: 45 நிமிடங்கள்.

தி அன்கிளவுடட் சோல் கதை சுருக்கம்

தி அன்கிளவுடட் சோல்

ஆசையால் உந்தப்பட்டு, மனிதர்களும் டெமென் [ பிசாசு ] களும் தெய்வீகமான ஜேட் அமிர்த நீரூற்றைத் தேடினர். இது பல்வேறு பிரிவுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக இடைவிடாத மோதல்களுக்கு வழிவகுத்தது. கவலையற்ற மற்றும் கூர்மையான புத்தி கொண்ட இளம் பெண்ணான சியாவோ யாவோ, எதிர்பாராத விதமாக பத்தாயிரம் பேய்களின் பள்ளத்தாக்கு வழியாக ஒரு கற்பனை நிறைந்த பயணத்தைத் தொடங்குகிறாள், அது பேய் உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது.

மனிதர்களால் அஞ்சப்படும், பத்தாயிரம் அரக்கர்களின் வணக்கத்திற்குரிய மன்னனான ஹாங் யே, அந்தப் பள்ளத்தாக்கைப் பாதுகாக்க மீண்டும் தோன்றுகிறான். காலத்தின் சோதனைகளைத் தாண்டி வந்த அவன், அனைத்து உயிரினங்களின் உள்ளார்ந்த பலவீனங்களையும் நீண்ட காலமாகவே உணர்ந்திருக்கிறான். மேலும், அந்த ஜேட் அமிர்த நீரூற்று என்பது எண்ணற்ற ஆசைகளின் ஒரு வெளிப்பாடு மட்டுமே என்பதையும் அவன் புரிந்துகொள்கிறான். சியாவோ யாவோவுடனான தனது தொடர்புகளின் மூலம், பேராசையால் களங்கப்படாத அவளது தூய இதயத்தின் அரிதான தன்மையையும் மதிப்பையும் அவன் படிப்படியாக உணர்ந்துகொள்கிறான்.

அவர்கள் இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள், அப்போது விசித்திரமான பல வழக்குகளில் சிக்கிக்கொண்டு, ஒரு மர்மமான, வலிமைமிக்க எதிரியை எதிர்கொள்கிறார்கள்.

எங்கு பார்க்கலாம்

தி அன்கிளவுடட் சோல் [ The Unclouded Soul Chinese Drama ] என்ற சீன நாடகத்தை ஆங்கில துணை தலைப்புகளுடன் கீழே உள்ள இணைய தளத்தில் உள்ள நூலகத்தில் பார்க்கலாம். [ இணைப்பு – பட்டனில் ]

இனி வரும் நாட்களில் இந்த நாடகத்தின் கதையையும் ஒவ்வொரு எபிசோடாக பார்க்கலாம்.

    இந்த நாடகத்தின் கதாநாயகன் டெமென் அதாவது தீய சக்திகளின் மன்னன். மனித பிறப்பாக இருக்கும் கதாநாயகி கடவுளின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தன் காதலனாக இருக்கும் டெமென் மன்னனைக் கொள்கிறாள். பின் தானும் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் மறுபிறப்பில் அவள் சந்திக்கும் அவளின் காதலனால் அவள் அடையும் சிக்கல்கள், அதில் இருந்து அவள் வெளிவர அவள் எடுக்கும் புத்திசாலி முயற்சிகள், அதற்கு தீய சக்திகளின் மன்னனின் எதிர்வினைகள், மற்றும் இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் இடையில் வரும் ஒரு பெரும் வில்லனை இருவரும் சேர்ந்து எதிர்கொள்ளும் விதம் என்று இந்த நாடகத்தின் கதை செல்கிறது. இது இப்போது தொடரும் கதை. நாடகம் முழுவதும் முடிந்த பின் இங்கு மொத்த கதை சுருக்கம் தெளிவாக எழுதப்படும்.

The Unclouded Soul எபிசோட் விளக்கம்

  • விளக்கம் : எபிசொட் – 1
  • விளக்கம் : எபிசொட் – 2
  • விளக்கம் : எபிசொட் – 3
  • விளக்கம் : எபிசொட் – 4 …

Tags,

Dramalookup, the unclouded soul review in tamil, the unclouded soul chinses drama in tamil, chinese drama in tamil explanation, drama review in tamil, சீன நாடகம் தமிழில்,

.

Leave a Reply