சீக்ரெட் கார்டன் – எபிசோட் 1
‘ரொம்ப ஒஸ்ட்’ என்று பெயர் எடுத்த ஒரு பணக்காரன் ஜோவன். பணத் தேவைக்காக வாழ்க்கையே போராட்டமாக திரைத்துறையில் ஸ்டண்ட் வேலை பார்க்கும் கிளாரா. அவளை ஒரு தலையாக நேசிக்கும் ‘அவளுடைய சீனியர்’ மற்றும் அவளுக்கு மிகவும் பிடித்த ‘அவள் ரசிகையாக இருக்கும் மேடைப் பாடகரன்’ என்று 4 பேர் இதில் வருகிறார்கள்.
4 முக்கிய கதாபாத்திரங்கள்




சீக்ரெட் கார்டன் எபிசோட் 1 கதை
ஓகே! கதை இப்ப இருந்து ஆரம்பிக்குது.
பணக்கார ஹீரோ பெயர் ஜோவன், ஜோவனின் தந்தை பிரபலமான ஹோட்டல் நடத்துபவர் என்றாலும் ஜோவனுக்கு திரைப்படம் தயாரிக்கும் தொழிலில் விருப்பம். அவனின் கசின் பெரிய பிரபலமான பாடகன். ஜோவனுக்கு தெரியும் தன் கசின் ஒரு காசினோவா என்று. [ பெண்களின் விருப்பத்திற்கு உரியவன் ] அதனால் அவன் கசின் ஒரு பெண் தோழியுடன் இருப்பதைப் பார்க்கிறான். ஒன்றும் சொல்லாமல் சென்று விடுகிறான்.
ஒரு நாள் ஜோவன் தன் குடும்பம் கூறிய பணக்கார பெண்ணை சந்திக்க ம்யூஸியம் செல்கிறான். அந்த பெண்ணோ பெண் பார்க்க யாராவது ம்யூஸியம் அழைப்பார்களா? என்று எண்ணம். இருவரும் பேசும் போது காதல் பற்றி பேச்சு வர, அவள் காதல் பிடிக்கும் என்கிறாள். ஜோவனோ அது வெறும் ஹார்மோன் வேலை என்பவன். அதனால் அவளிடம் “ராஜகுமாரனுக்காக காத்திருக்கும் பெண் எனக்குத் தேவையில்லை” என்று கூறி அவளை ரிஜெக்ட் செய்து விட்டு போய்விடுகிறான். இதில் விஷயம் என்னவென்றால் ஜோவனின் கசினின் பெண் தோழிகளில் அந்த பணக்கார பெண்ணும் ஒருவள். இருந்தும் ஜோவனைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறாள்.

ஜோவனின் ஹோட்டலில் அந்த பணக்கார பெண்ணும், தோழியும் ஜோவன் செய்ததை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, அங்கு நம் ஹீரோயின் பெயர் கிளாரா வருகிறாள். அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாமல், உடலில் பச்சை குத்திக்கொண்டு ஒரு ஆண் உடையில் கம்பிரமாக நடந்து வந்த அவளை, அந்த பணக்கார பெண்ணுக்குப் பிடிக்காமல் போகிறது. ‘விரைவில் இந்த ஹோட்டலுக்கு முதலாளி நான் தானே ஆகப்போகிறேன், என் இடத்தில் இவள் இருக்கக்கூடாது’ என்று தோழியிடம் சொல்லிவிட்டு கிளாராவை நோக்கிச் செல்கிறாள். இந்த மாதிரி பெண்ணை உள்ளே விட்டதற்காக ஹோட்டலின் பணிப்பெண்ணை திட்ட, அவளோ நம் கிளாராவின் நெருங்கிய தோழி. தன் தோழி திட்டுவாங்குவதை பொறுக்காமல் கிளாரா வெளியே செல்ல நினைக்க, அந்த பணக்கார பெண் பணிப்பெண்ணின் ஐடியை பறித்து விட்டு செல்கிறாள்.

அதை கிளாரா தடுக்க நினைக்க தோழி மறுத்து விடுகிறாள். அந்த எரிச்சலில் வெளியே வந்த கிளாரா பணக்கார பெண்ணின் பர்ஸை ஒரு திருடன் அடித்துக் கொண்டு செல்வது கண்டு அவனைப் பின்தொடர்ந்து பர்ஸைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அவர்களிடம் சேர்கிறாள். “நான் உன்னிடம் உனது பர்ஸைக் கொடுத்து விட்டேன், எனது தோழியின் ஐடியை கொடுத்து விடு” என்று கிளாரா கேட்க அதற்கு அந்த பணக்காரி குப்பைத்தொட்டியில் போட்டு விட்டதாக கூறுகிறாள். கிளாரா விற்கு கோபம் வந்து விடுகிறது. அவள் சட்டையை பிடித்து “நீயும் நானும் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் குப்பைத்தொட்டி எனக்கும் அழுக்கு தான் வந்து எடுத்துக் கொடு” என்று குப்பைத் தொட்டியின் அருகில் வந்து நிறுத்தி, அவளை அதட்டுகிறாள். தன்னை விடுவித்துக் கொண்ட அந்த பணக்காரி தனது கைப்பையில் இருந்து அந்த ஐடி டேக்கை எடுத்து நீட்ட முறைத்த படியே அதை பிடுங்கிக் கொண்டு செல்கிறாள் கிளாரா.

கிளாராவை எதிரிகள் தாக்க அவள் சண்டை செய்து கொண்டிருக்கிறாள். ஆம், அவள் ஒரு பைட்டர். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப்பாக வேலை செய்பவள். ஒவ்வொரு நாளும் அவரது வாழ்க்கை போராட்டம் தான். மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரத்திற்காக அவள் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் என்ன கூறினாலும் அதை அவர் பொருட்படுத்துவதே இல்லை. இப்போது வேலை முடிந்து அவள் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளது குழுவின் சீனியருடன் பேச நேரிடுகிறது. அவன் அவளை தொடர்ந்து பாடல் கேட்க செய்துவிட்டு வேலையை தொடர்கிறான். அவளின் சீனியர் அவளுக்கே தெரியாமல் அவளை ஒருதலையாக காதலிப்பவன். அதனால் அவள் மிகவும் விரும்பிய மேடை பாடகனின் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வாங்கி அவளை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அதே நிகழ்ச்சியில் இன்னொரு இடத்தில் நம் ஜோவனும் அமர்ந்திருக்கிறான்.
ஜோவனுக்கும் அவனின் கசின் அந்த மேடை பாடகனுக்கும் இடையே உள்ள தொழில் முறை ஒப்பந்தம் காலாவதி ஆகும் நேரம் நெருங்கி விட்டதால், அதை புதுப்பிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அதனாலேயே அந்நிகழ்ச்சிக்கு விருப்பமில்லை என்றாலும் வந்து அமர வேண்டியது ஆகிவிட்டது. ஜோவன் தனது ஹோட்டலை பார்வையிட வருகிறான். அப்படியே பாடகனின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் அவனை நாடுகிறான்.. பாடகன் அதிகம் கேட்க ஜோவனோ மறுக்க வாக்குவாதம் நடக்கிறது.

படத்தின் ஹீரோயின் பாடகனுக்கு போன் பேச அருகில் அவளின் டூப் கிளாரா நின்று கொண்டிருக்கிறாள். ஃ போனை எடுத்து படத்தின் ஹீரோயின் பாடகனை மிரட்டுகிறாள். அவன் தன்னை விட்டு விட நினைத்தால் அருகினில் இருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் இருவருக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தி விடுவதாக மிரட்டி போனை வைக்கிறாள். அதே எரிச்சலில் திரும்பி கிளாராவிடமும் காட்டுகிறாள். படத்தின் ஷூட்டிங் தொடர்கிறது. இருவரும் பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஹீரோயின் கவனக்குறைவால் இருவருக்கும் அடிபடுகிறது. எனினும் அதிகமாக அடிபட்ட கிளாராவைத் தான் படத்தின் டைரக்டர் திட்டுகிறார். அப்பொழுது அங்கு வந்த சண்டைக் குழுவின் சீனியர் அவளுக்காக பேசுகிறான்.

ஜோனுக்கு ஒரு போன் வருகிறது. கசின் தான் போன் செய்கிறான். அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி ”அந்த இடத்திற்கு போ. அங்கு நான் சொல்லும் பெண்ணை அவள் யாரிடமும் பேசி விடாமல் உன் அருகிலேயே ஒரு மூன்று மணி நேரத்திற்கு வைத்திரு. அதற்குள் நான் வந்து விடுகிறேன். நீ இதை செய்தால் நான் ஒப்பந்தத்தில் கையொப்பம் விடுகிறேன்,” என்று கூறுகிறான். உடனே ஜோவன் மகிழ்ந்து “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று புறப்பட்டு செல்கிறான். சூட்டிங் நடக்கும் இடத்திற்கு ஜோவன் செல்கிறான். அங்கு பாடகன் சொன்ன பெண்ணைக் குறித்து கேட்க, ஹீரோயினுக்கு பதிலாக அவளுக்கு டூப்பாக நடித்துக் கொண்டிருக்கும் கிளாராவை காட்டுகிறான் ஒருவன். ஆள் மாறியது தெரியாமல் நேராக கிளாராவிடம் சென்று ஜோவன் “உனக்கு பாடகனைத் தெரியும், இல்லையா?” என்று கேட்டு, “அவன் உன்னை பார்க்க வேண்டும் என்று பிரியப்படுகிறான். என்னுடன் வா” என்று அழைத்துக் கொண்டு செல்கிறான். இருவரும் அவள் பாடகனை முதலில் சந்தித்த இடத்திற்கு செல்கிறார்கள்.
ஹோட்டலில் கிளாரா லிப்ட்டில் செல்ல, ஜோவன் லிப்ட்டில் செல்வதற்கு பயந்து கொண்டு படி வழியாக ஏறி அந்த அறைக்கு செல்கிறான். அவனுக்கு முன்பே அறைக்குள் சென்ற கிளாரா முதல் முதலில் பாடகனை அங்கு சந்தித்ததை நினைத்துப் பார்க்கிறாள். முன்னர் ஒரு நாள் அந்த அறையில் நடக்கும் ஷூட்டிங்ன் போது அவனை கிளாரா பார்த்து சில வார்த்தைகள் பேசி இருக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாடகனை மிகவும் பிடிக்கும்.

இப்போது அறையில் ஜோவனும் கிளாராவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜோவன் ‘அவள் பாடகனின் கேர்ள் ஃபிரண்ட்’ என்று நினைவில் பேசிக் கொண்டிருக்க கிளாரா தனது தொழில்முறையில் பதில்களை சொல்லிக் கொண்டிருக்கிறாள். வார்த்தைகள் வேறு மாதிரி அர்த்தங்களுடன் வெளிவந்து இருவருக்கும் சுவாரசியமான வார்த்தையாடல்கள் நடக்கிறது. ஆனால் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவளுக்கு புரிந்து விடுகிறது, ‘அவன் ஹீரோயின் என்று நினைத்து அவளின் டூப்பான தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறான்’ என்று. அதனால் கிளாரா ஜோவனிடம் “எனது பெயர் என்ன?” என்று கேட்கிறாள். அவன் ‘என்ன?’ என்று கேட்க,’ பாடகன் பார்க்க விரும்பிய பெண்ணின் பெயர் என்ன’ என்று கேட்கிறாள். அவன் ஹீரோயின் பெயரை கூறியதும் அவளுக்கு சிரிப்பு வந்து விடுகிறது. அதை அவனிடம் கூற இருவருக்கும் வாக்குவாதங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு படத்தின் டைரக்டர் போன் செய்து வேலைக்கு வரச் சொல்ல, அவளும் ஜோவனை ஹீரோயினை பார்க்க தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்கிறாள்.

மீண்டும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றவன் பாடகனின் கேர்ள் பிரண்டைத் தேட அவள் அப்பொழுது தான் பத்திரிகையாளர்களிடம் பாடகனைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறாள். அவன் உடனே அவளிடம் புத்திசாலித்தனமாக பேசி அவளை தடுத்து விடுகிறான். அதனை பாடகனுக்கு போன் மூலம் தெரியப்படுத்திக் கொண்டே வெளியே வரும் பொழுது, அவன் மீண்டும் கிளாரா-வை சந்திக்கிறான். அவள் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறாள். அவளையும், அவளது திறமையையும் கண்டவனின் மனம் மெல்ல அவள்புறம் சாய்கிறது.

அவளிடம் சென்று ஜோவன் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்க எரிச்சலில் இருக்கும் அவள் அவனை காலால் உதைத்து விட்டு நடக்க ஆரம்பிக்கிறாள். திட்டிக்கொண்டே அவளைப் பார்த்தவன் அவளுக்கு அடிபட்ட கையில் இருந்து ரத்தம் வெளியேறுவதை பார்க்கிறான். பதட்டத்தில் அவளைத் தொட்டு பேச அவள் உடம்பும் அனலாக கொதித்து காய்ச்சலும் இருப்பதே உணருகிறான். அவள் மறுக்க மறுக்க அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறான். அங்கு அவளுக்கு சிகிச்சை நடக்கிறது. இருந்தும் திருப்தி இல்லாமல் தனது குடும்ப டாக்டரை அந்த மருத்துவமனைக்கு வர செய்து அவளை காணச் செய்கிறான். அந்த மருத்துவர் அவனுக்கு நெருங்கிய தோழியும் கூட. “இன்று தான் சந்தித்த இந்த பெண்ணிற்காக எனது அற்புதமான வார இறுதி நாட்களை விட்டு விட்டு வரச் செய்தாயா?” என்று கிண்டலாக அவனிடம் கேட்கிறாள். அதே நேரம் கிளாராவின் போன் அடிக்கிறது. அதை எடுத்து ஜோவன் பேச மறு பக்கம் பேசியது அவளின் சீனியர். அதன் மூலம் விவரம் தெரிந்து அவனும் மருத்துவமனைக்கு வருகிறான்.

தான் சொல்லியும் கேட்காமல் காயத்துடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு காய்ச்சலை வரவழைத்துக் கொண்ட அவளைப் பார்த்து சீனியருக்குக் கோபம் வந்து பேச ஆரம்பிக்க, அதை ஜோவன் தடுக்க இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. கிளாரா தன் சீனியரிடம் ஜோவனைப் ‘பாடகனின் வேலைக்காரன்’ என்று அறிமுகப்படுத்துகிறாள். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோவன் ‘என்ன’ என்று நினைக்கும் முன் அவளின் சீனியர், ‘தானே அவளை வீட்டில் விட்டு விடுவதாக’ கூறி அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வெளியே செல்கிறான்’ ஆனால் ஜோவன் வெளியே வரும் பொழுது, கிளாரா தன் சீனியரிடம் தானே தன் வீட்டிற்கு சென்று விடுவதாக சொல்லி அவனை மறுத்து விட, சீனியர் வருத்தப்பட்டு தனது காரை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறான்.

கிளாரா தனியே நடக்க ஆரம்பிக்கிறாள். அதைக் கண்டு ஜோவன் செல்லும் வழியில் அவளை மறித்து ‘தன்னுடன் வருமாறு’ அழைக்கிறான். அவன் அழைக்க இவள் மறுக்க பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த நேரத்தில் அங்கு அவளுக்கு மிகவும் விருப்பமான அந்த பாடகன் வருகிறான். வந்தவன் அவனுடன் இருந்தவளைக் கண்டு வழக்கம் போல தன் பாணியில் பேச ஆரம்பிக்கிறான். ஆனாலும் அவனுக்கு அவளை நினைவிருக்கிறது. அதனால் அன்று நடந்ததை கிளாராவிற்கு அவன் எடுத்துச் சொல்ல, கிளாரா மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். பாடகன் அவளின் ஸ்டண்ட் வேலையையும், அவளின் பெயரையும் கூட கூற கிளாராவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

'எந்த பெண்ணை பார்த்தாலும் ஆசை வார்த்தைகளை பேச ஆரம்பிக்கும் பாடகன்' - ஒரு பக்கம்..... 'தான் விரும்பும் பாடகர் தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறானா???' - என்ற ஆச்சரிய சங்கடத்தில் கிளாரா ஒரு பக்கம்..... அதனைப் பார்த்து எரிச்சலில் ஜோவன் இன்னொரு பக்கம் - என்று இந்த எபிசோடு 1 முடிகிறது.
மைண்ட் வாய்ஸ்
2010ல் வந்த நாடகம் தான், பழைய நாடகம் தான். ஆனால் எப்போது பார்த்தாலும் புதிது போலவே உணரும் படி எப்படித்தான் இவர்களால் எடுக்க முடிகிறதோ. ஹீரோ, ஹீரோயின் சூப்பர். ஆனா கதை டாப்பாக இருப்பதால் மட்டுமே மற்ற முகங்கள் மன்னிக்கப்படுகின்றன. நாமளும் அதையே செய்வோம். கதைகளும் எடுத்த விதங்களும் தான் பிடித்தமே தவிர, நம்ம டேஸ்டே வேற தான் இல்லையா?
Posts – Secret Garden Korean Drama Episodes Explained in Tamil
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 1
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 2
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 3
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 4
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 5
Tags,
korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 1 explain in tamil, Secret Garden korean drama tamil dubbed,
.
.
