Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 6 – சுருக்கம்

லீ சே – பியாண்டாங் தேசத்து பட்டத்து இளவரசன்

‘ஹுவோட்டு நீர்’ – மிகவும் ரகசியமான ஒரு மருந்து. பார்வையை மீட்டெடுக்க, இம்மருந்தை சில நாட்களுக்குத் தொடர்ந்து தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன்

லி ஜியாவோ – பியாண்டாங் தேசத்தின் பேரரசர். மது மாது என்று சந்தோஷத்தில் திளைத்து, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்.

ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன்.  சடங்குகளின் மாபெரும் அமைச்சர். [ அந்த காலத்தில் அங்கு ஜோதிடர்களின் ஆதிக்கமும், அவர்களின் சடங்குகளின் நிகழ்வுகளும் மன்னர்களின் அரண்மைகளில் மிக பிரபலம்.]

மிங் லூ – பட்டத்து இளவரசரின் முதன்மைப் பணிப்பெண்.

ஜாவோ குவோ – யோங் தேசத்தைச் சேர்ந்த முஹே குலத்தின் அரசாங்க பணியாள். முஹே குலம் சிங் ன் எதிரி. 

Rebirth அத்தியாயம் 6 – சுருக்கம்

பியாண்டாங் தலைநகரில், பேரரசர் லி ஜியாவோ அதீத ஈடுபாட்டின் காரணமாக, ஒழுக்கக்கேடான வாழ்க்கையில் மூழ்கி, உடல் நலம் பாதிக்கப்படுகிறார். மன்னரின் மனைவி அன்புள்ளம் கொண்டவர் போல நடித்து, நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அவரின் உண்மை அன்பு ஜான் ஜியூ என்ற வேறு ஒரு ஆணிடம் ரகசியமாக இருக்கிறது.

இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது அந்த தேசத்தின் பட்டத்து இளவரசன் ஒரு சந்தேகத்திற்கு இடமான பெண்ணுடன் நாட்டிற்குள் நுழைந்ததை அறிந்து அவளைப் பற்றி விவரங்களை சேகரிக்க சொல்கிறாள். மேலும் பேரரசரின் கவனம் தன் மீது திரும்பாது இருக்கவும் தனது செல்வாக்கில் அவரின் தலையீடு இல்லாமல் செய்யவும் புதிய அழகிகளை தொடர்ந்து அரண்மனைக்குள் பேரரசு இடம் அழைத்துவரும் வேலையையும் அவள் தன் விருப்பமான ஆனான ஜான் ஜியோவிடம் ஒப்படைக்கிறாள்.

இதற்கு இடையே தான் நதிக்கரையில் காப்பாற்றிய யோங் தேசத்து இளவரசியை அவள் யார் என்று தெரியாமலேயே அவளிடம் நட்பு கொள்ள முயற்சிக்கிறான் லியோ பகுதியின் இளவரசன் லியான்.

தனது மாளிகைக்குத் திரும்பிய பட்டத்து இளவரசனான லீ சே தனது மாளிகை முழுவதும் தன் தாயின் ஒற்றர்களால் சூழப்பட்டிருப்பதை உணர்கிறான். அதனால் அவர்களிடம் இருந்து சிங்-ன் உண்மையான அடையாளத்தை மறைக்க தான் பயணங்களில் இருந்து கொண்டு வந்த பகட்டான உடல் அழகை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய சொல்கிறான்.

அவர்கள் வந்துவிட்டதை அறிந்து, ஜான் ஜியூ உடனடியாகப் பேரரசிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, இது குறித்து விசாரிக்க இளவரசரின் அரண்மனைக்கு விரைகிறான். சிங் அந்த ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கு முன்னரே, அரசாங்கத்தில் பட்டத்து இளவரசருக்கு அளிக்கும் பரிசுகளை அவருக்கு அளிக்கும் காரணத்தை வைத்துக்கொண்டு ஜான் சியூ மாளிகையின் உள்ளே நுழைந்துவிடுகிறான். நுழைந்ததுமே சிங்-ஐ பார்த்து அவள் ஒரு கொலையாளி என்று முத்திரை குத்தி, அவளை கைது செய்யுமாறு தன் ஆட்களுக்கு உத்தரவிடுகிறான். இளவரசன் லீ சே அவனைத்தடுத்து தான் அழைத்து வந்த பெண் கொலையாளி இல்லை என்றும், பல வருடங்களுக்கு முன் போர்க்களத்தில் உயிரை விட்ட ‘பிங்னான்’ இளவரசரின் தொலைந்துபோன மகளான ‘ஃபூ’ என்றும், திரும்பிச் சென்று பேரரசியிடம் கேட்டுக்கொள்ளுமாறும் கூறி ஜான் ஜியூ ஐத் திருப்பி அனுப்புகிறான்.

பட்டத்து இளவரசரை உளவு பார்க்க பேரரசியால் அனுப்பப்பட்ட அந்தப்புரப் பெண்களின் வருகையால் லீ சே யின் மாளிகை சலசலக்கிறது. அந்த சலசலப்பில் சிக்கிக்கொள்ளும் சிங்-ஐ மிங் லூ என்ற பட்டத்து இளவரசரின் முதன்மைப் பணிப்பெண் காப்பாற்றி அழைத்துச் செல்கிறாள்.

இதற்கிடையே சடங்குகள் செய்யும் மந்திரக்காரி ஒருத்தி யான் தேசத்தில் கோமாவில் இருக்கும் யான் சூன் ஜக் காப்பாற்ற அவனை கருப்பு மலைத்தொடருக்கு அழைத்துச் செய்கிறாள். அங்கு நடக்கும் சடங்கில் யான் உயிர் பிழைத்து எழுந்து விட, எல்லோரும் திரும்ப யான் தேசம் திருப்புகிறார்கள்.

பியான்டாங் தேசத்தில் லீ சே விடம் இருந்து திரும்பி வந்த ஜான் ஜியூ, பேரரசியை சந்தித்து லீ சே கூறியதைக் கூறுகிறான். பிங்னான் இளவரனை அப்போது போர்க்களத்திற்கு அனுப்பி அவன் மற்றும் அவன் மனைவி குழந்தையின் மரணத்திற்கு தானே காரணம் என்பதை எண்ணிப் பார்த்து, ஜான் ஜியூ விடம் எப்போதோ இறந்துவிட்ட இளவரசி ஃபூ வின் பெயரில் வந்திருக்கும் அவளைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு ஜான் ஜியூவிற்கு உத்தரவிடுகிறாள்.

அவள் இளவரசி ஃபூ தான் என்பதை மாளிகை ஒற்றர்களுக்கு தெரியப்படுத்த சிங் ன் அறைக்குச் சென்று லீ சே பேச்சுக்கொடுக்கிறான். நடிப்பு என்பதால் சிங் ம் அனுமதிக்கிறாள். இங்கு இவ்வாறு இருக்க, அங்கு ஜுக்கே யூ, சிங் ஐ பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். அரண்மனை நுழைவாயிலில் சிங்-கைக் கண்டு அதிர்ந்த யோங் தேசத்து முகே குலத்தைச் சேர்ந்த எதிரி, அதனை தன் எஜமானனுக்கு தெரியப்படுத்த இரண்டு வீரர்களை அனுப்ப, அவர்களை அங்கேயே ஜுக்கே யூ கொன்று விடுகிறான்.

இங்கு இளவரசன் லீ சே விடம் சிங் பேசிக்கொண்டு இருக்கும் போது, பார்வை தெளிவாக இல்லாவிட்டாமும், பலவருட அனுபவம் காரணமாக ஏதோ தங்களை நோக்கி வருவதை உணர்ந்து, லீ சே வைக் கீழே தள்ளி, தானும் அருளுகிறாள் சிங். உருண்டவர்களின் முன் முகே குலத்தின் பிரத்யேக ஆயுதமான விஷம் தடவிய ஈட்டி குத்திட்டு நிற்கிறது. அதனைப் பார்த்து இருவரும் எதிரி இங்கு குறி வைத்திருப்பது இளவரசனான லீ சே க்கு அல்ல, சிங்-கைத் தான் என்று புரிந்து கொள்கிறார்கள். அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்த சிங், மறுநாள் அவர்களை ஒரு பொறியில் சிக்க வைத்து தனியே அழைத்துச் செல்கிறாள். ஆனால் அங்கு இவளின் உடல்நிலை காரணமாகவும், பார்வை தெளிவு இல்லாததாலும் எதிரியான முகே குல அதிகாரியான ஜாவோ குவோ மற்றும் அவனது ஆட்களால் சுற்றி வளைக்கப்படுகிறாள்.

சிங்-கை எப்பொழுதும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜுக்கே யூ இந்த முறையும் அவளைக் காப்பாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறான். சரியாக அந்த நேரம், தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்தால் அவளது தெளிவில்லாத பார்வை திரும்ப வருகிறது. தன்னை இப்பொழுது மட்டுமல்ல தொடர்ந்து சில நாட்களாகவே காப்பாற்றிக் கொண்டு வருகிறவன் ஜுக்கே யூ தான் என்பதையும், அதைத் தான் நன்கு உணர்ந்து கொண்டிருப்பதாக ஜுக்கே யூ க்கு சிங் தெரியப்படுத்தி ‘அவன் உயிருடன் இருந்தும் எதற்காக தன்னிடம் இருந்து மறைந்து வாழ்கிறான்?’ என்ற கேள்வியும் கேட்கிறாள்.

அவன் மௌனமாக இருப்பதைப் பார்த்து இரண்டு பேரின் இராணுவமும் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதால் இப்பொழுது அவர்கள் இருவரும் தான் ஒருவருக்கொருவர் எஞ்சியிருக்கும் ஒரே குடும்பம் என்பதை அவனுக்கு நினைவூட்டி தன்னுடனையே தங்குமாறு அவனிடம் வேண்டுகிறாள். சிங்-ன் கடினமான தருணங்களில் அவன் அவளைக் காத்தது போல, இப்பொழுது அவனைக் காத்து ஆதரிப்பவளாக தான் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவதைப் போல அவளது நடவடிக்கையும் கேள்விகளும் இருந்தன.

அத்தியாயம் 5 – இன் சுருக்கம்

அத்தியாயம் 7 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top