.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் அவனால் வெறுக்கப்படுகின்றவள்.
செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன்-ன் படைத்தளபதி. யான்-னிடம் இருந்து சிங்-ஐ பிரித்தால் தான் தலைவன் தெளிந்த சிந்தனையுடன் நாட்டைப் பற்றி கவனம் செலுத்துவான் என்று அதற்கான வேலைகளைப் பார்ப்பவன்.
பியாண்டாங் – இளவரசன் லீ சே பட்டத்து இளவரசனாக இருக்கும் தேசம் இது. இதன் பேரரசியால் அரண்மனைக்குள் உள்கட்டப்போர் உச்ச நிலையை அடைகிறது.
ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன். நான்சி பழங்குடியினத்தைச் சேர்ந்ததை மன்னனுக்கு மறைத்து வாழ்பவன்.
நான்சி பழங்குடியினர் – பியாண்டாங் தேசத்தின் எல்லை பகுதியில் இருந்தாலும், அவர்களின் தொல்லைகளால் 15 வருடங்களுக்கு முன் அரசாங்கத்தால் [ பேரரசியால் ] முற்றிலும் அளிக்கப்பட பழங்குடி இனம்.
தளபதி சன் – பியாண்டாங் தேசத்தின் தளபதிகளில் ஒருவன். அரியணைக்கு நேர்மையாக இருப்பவன்.
மிங் லூ – பட்டத்து இளவரசரின் முதன்மைப் பணிப்பெண். யோங் நகரின் காவல் தலைவனின் மகள். சிங் மற்றும் யான் சூன் கிளர்ச்சி செய்து தப்பித்ததால் குற்றம் சாட்டப்பட்டு குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டு, இப்போது சிங்-யிடம் பணிபுரிகிறாள்.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேசத்தின் அரசாங்க தூதரான லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் மனைவி. பேரரசியுடன் சேர்ந்து சதி செய்கிறாள்.
லி யான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். முன்னாள் பேரரசரின் மகன் வழி பேரன். மதிப்பில்லாத இளவரசன். இப்போது பட்டத்து இளவரசனால் பதவி உயர்வில் அரசாங்கத்தின் மதிப்பு மிக்க இளவரசனாக ஒப்புக்கொள்ளப்படுகிறான்.
லேடி ஜிமிங் – வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் பட்டத்து இளவரசன் லீ சே வின் துணைவி. பேரரசியின் காதலன் ஜான் ஜியு-வின் சகோதரி.
.
Rebirth அத்தியாயம் 19 – சுருக்கம்
தன்னை விட்டு சிங் தந்திரமாக தப்பிச்சென்ற பிறகு யான் தேச தலைவன் யான் சூன் அதற்கு காரணமான தன் ராணி ஹெலியன் லிங்-யிடம் தன் கோபத்தைக் காட்டுகிறான். முதலில் அவளை மணப்பெண் சிங் போலவே நடத்தியதால், ராணி தான் சிங் இல்லை என்று கெஞ்ச, கானல் காட்சி மறைந்து அந்த கோபத்தையும் அவளிடமே காட்டி, இரத்தம் வழியும் காயத்துடன் அவளைப் பயத்தில் தப்பி ஓடவிடுகிறான். வெளியே, காயமடைந்து நொண்டியபடி ஓடிவந்த ராணியை தளபதி செங் யுவான் கண்டு அவளிடம் செல்கிறான்.
தளபதி செங் யுவான், அவளின் மீது பரிதாபம் கொள்ள, அதைக் கண்ட ராணி தான் அவனிடம் செய்த ஒப்பந்தப்படி சரியாவே நடந்து கொண்டுவிட்டதாகவும், இனி தன்னிடம் அதற்காக தன்மையாக நடக்க வேண்டாமென்றும் கூற, ராணி எல்லாவற்றையும் விருப்பட்டே செய்ததால், யான் சூன்-னின் அருகில் இருப்பதால் இன்னல்கள் மட்டுமே உனக்கு கிட்டும் என்பதையும் அவள் ஆரம்பத்திலேயே உணர்ந்திருக்க வேண்டும் வேண்டும் தளபதி செங் எடுத்துக் கூறுகிறான். உணர்வுகள் வெறுத்த நிலையில் ராணி தான் தன் சொந்த சகோதரனாலேயே குதிரைகளையும் நிலத்தையும் சீதனமாக பெறுவதற்காக பகடைக்காயாக வயதான பழங்குடியின தலைவனுக்கு கொடுக்க வற்புறுத்தப்பட்ட பெண் என்றும், தன்னுடைய ராணி பட்டம் என்பது வதந்திகளை அடக்குவதற்காக யான் சூன் தனக்கு வழங்கிய ஒரு கருவி மட்டுமே என்பதையும், தான் இன்று ராணியாக இல்லாவிட்டால் இப்போது வயதான வேறு ஏதாவது ஒரு தலைவனுக்கு தன் அண்ணனால் கொடுக்கப்பட்டு இருப்பாள் என்பதையும் கூறி விட்டு, தனக்கு ராணியாவதை தவிர வேறு ஏதாவது வாய்ப்பு இருந்திருந்தா? என்று அவனிடமே கேள்வியைக் கேட்கிறாள். ராணியின் மீது பரிதாபப்பட்டு தளபதி செங் இறுதியில் அவளைத் தூக்கிக்கொண்டு அவளுடைய கூடாரத்திற்குத் திரும்பச் செல்கிறான்.
பியாண்டாங் தேசத்தில் பேரரசன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதால் அரண்மனையில் சியாங்டியான் மண்டபத்தில் மூதாதையர் சடங்குகளை வழிநடத்தும் பொறுப்பு பேரரசியிடம் விடப்படுகிறது. பேரரசி இளவரசனைக் கொல்ல தான் அனுப்பிய தன் ஆண் அடிமை ஜான் ஜியு இன்னும் ஏன் வந்துசேரவில்லை என்ற எண்ணத்துடன் அங்கு செல்கிறாள். அங்கு பிராத்தனையில் இருக்கும் போது திடீரென்று, பணிப்பெண் வேடத்தில் சடங்கிற்குள் ஊடுருவியிருந்த சிங், பேரரசியின் கழுத்தில் ஒரு கத்தியை வைக்கிறாள்.
ஜான் ஜியு கொல்லப்பட்டு விட்டதாகக் கூறி, நாடுகடத்தப்பட்ட இளவரசன் லீ சே-வின் பெயரைப் பழியிலிருந்து விடுவிக்குமாறு பேரரசியிடம் அவள் பேரம் பேசிய சிங், பட்டத்து இளவரசன் மீது பழி சுமத்தப்பட்டதற்கும், இப்போது இளவரசனைக் கொல்ல முயன்றதற்கும் ‘இறந்துவிட்ட’ ஜான் ஜியு மீது பழியைப் போடுமாறும் அவள் பரிந்துரைத்ததைக் கேட்ட பேரரசி இளவரசனுக்காக தான் ஏன் அவ்வாறு செய்யவேண்டுமென்று காரணம் கேட்க, இளவரசன் லீ சே தான் அரியணைக்கு ஒரே இரத்த வாரிசு என்றும், அதனால் பேரரசர் இதனை அறிந்தால் பேரரசிக்குத் தான் சிக்கல் என்றும் கூறி, இளவரசனை விடுவிக்கக் ஒப்பந்தம் போடுகிறாள். பேரரசி எளிதில் ஒப்புக்கொள்ள வில்லை என்றதும், சிங் நான்சி பழங்குடியினர் தொடர்பான பேரரசியின் துரோகத்தை அம்பலப்படுத்துகிறாள். உண்மையில் அந்த பழங்குடியினரைக் கொன்றது பேரரசர் இல்லை என்றும், அது தளபதி சன்-க்கு இட்ட பேரரசியின் ரகசிய கட்டளை தான் என்றும் கூறுகிறாள். பேரரசி அவளின் புத்திசாலித்தனத்தை ஒப்புக்கொண்டு தான் தான் நான்சி பழங்குடியினர் அழிவுக்கு காரணம் என்று ஒப்புக்கொண்டதோடு, உண்மையான ஆதாரங்களைக் காட்டுமாறு சிங்-க்குச் சவால் விடுகிறாள்.
அந்த நேரம் அங்கு மிங் லு, உயிரோடும் இருந்த ஜான் ஜியூ-வை கத்தி முனையில் அழைத்து வந்தபோது, பேரரசி அதிர்ச்சி அடைகிறாள். [ அவனைக் கைது செய்த போதே அவனுடைய நான்சி பழங்குடியினத்தின் மீதான பேரரசின் துரோகத்தைக் கூற, ஜான் ஜியூ நம்ப மறுக்கிறான். அதனால் இங்கு கைது செய்து ரகசியமாக அழைத்துவந்து அரசி கூறுவதைக் கேட்க வைக்கின்றனர்.] பேரரசி கூறியதைக் கேட்ட ஜான் ஜியு கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தனது ‘ஒளி’யாகக் கருதித் தான் பணி செய்து வந்த பேரரசியியே, தன் பெற்றோர்களையும், தன் குடிமக்களையும் கொடூரமாக கொன்றவர் என்பதை ஜான் ஜியூ உணர்ந்து கொண்டாலும், அவனால் அரசியின் இந்த துரோகச் செயலுக்கு தூற்ற முடியவில்லை. ஆனாலும் மனம் பேதலித்து அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் முன்னாலும், பேரரசியிடம் தான் கொண்ட நித்திய பக்தி உணர்வை வருத்தத்துடன் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறான். அவனது செயலையும், சாட்சியத்தைக் கண்டு அஞ்சிய அரசி, ஒரு கூர்மையான தலைமுடியலங்கார ஊசியைக் கொண்டு அவனது கழுத்தில் ஆழமாகப் பாய்ச்சி அவனைக் கொல்கிறாள்.
ஜான் ஜியு உயிரிழந்த அடுத்தகணம், சதித்திட்டம் தீட்டியதாக சிங்-ன் மீது பேரரசி குற்றம் சாட்டி, அவளைக் கைது செய்யுமாறு பாதுகாவலர்களுக்கு உத்தரவிடுகிறாள். ஆனால் பேரரசரை ஜுக்கே யூ ஏற்கனவே பிணைக்கைதியாக பிடித்துவைத்திருப்பதாக செய்தி அங்கே வந்ததால் அனைவரும் அங்கு செல்கின்றனர். அங்கே ஜுக்கே யூ பேரரசரின் கழுத்தில் வாளை வைத்து, இளவரசி ஃபூ [ அதாவது சிங் ] ஐயும், அவளின் ஆட்களையும் விடுவிக்க வேண்டுமென்றும், பேரரசரையும், பட்டத்து இளவரசரையும் கொல்லமுயன்றதை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் பேரரசியை வற்புறுத்துகிறான். ஒப்புதல் வாக்குமூலம் முழுமையான தனது அழிவுக்கே வழிவகுக்கும் என்பதை அறிந்த பேரரசி, அதனை மறுத்து அங்கே கலவரத்தை உண்டாக்கி, அரசரைக் கொன்று விட முயலுகையில், பேரரசர் அவளது நகர்வை முன்கூட்டியே கணித்து, அந்தச் கத்தியை பேரரசியின் மார்பிலேயே திருப்பிப் பாய்ச்சி, அவளது உயிரைப் பறிக்கிறார்.
சில மணிநேரங்களுக்கு முன்னால் ஜுக்கே யூ பேரரசரிடம் சென்று பேரரசியின் துரோகங்களுக்கான ஆதாரங்களைக் காட்டி, நிலைமையை விளக்க, அவர் தனது முத்திரையை அளித்து இளவரசனை தனது ராணுவத்துடன் தன்னை பாதுகாக்க அளித்துவரச் சொல்கிறார். அதனால் இப்போது தன் தாய் இறக்கும் நேரத்தில் சரியாக அங்கே இளவரசன் லீ சே வருகிறான். அந்த நேரத்திலும் கூட பேரரசனின் மகனின் மீதான வெறுப்பில் லீ சே பார்க்கப் பார்க்கவே கத்தியை உருவி தன் மார்பில் மீண்டும் பாய்ச்சி தன்னை மாய்த்துக் கொல்கிறாள்.
பேரரசியின் மறைவிற்குப் பிறகு, பேரரசரின் உடல்நலம் தொடர்ந்து சீர்குலைந்து வந்ததால், பட்டத்து இளவரசன் லீ சே அரியணை ஏறுகிறான். இச்சம்பவங்களுக்குப் பிறகு, லீ சே தனது திட்டங்களுக்கு உதவிய ‘லுவோ’வின் இளவரசனான லி யான்-க்கு மதிப்பு மிக்க இளவரசனாக பதவி உயர்வு அளிக்கிறான். சடங்குகளின் தூதனாக இளவரசன் லீயான் இருந்ததால் அவனால் எளிதில் சிங்- ஐ பேரரசியின் சடங்கு நடக்கும் இடத்திற்கு வரவழைக்க முடிந்ததை ஜாவோ சுன்’எர் கடும் சீற்றம் அடைந்து, அவனைக் காயப்படுத்தும் போது, அவளை அடக்கி, பதவியிழந்த இளவரசியும் அவள் கூறும் ‘பயனற்ற’ இளவரசனும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் தான் என்றும், தான் அவளிடம் வாக்கு கொடுத்த படி அவளின் ஆசையை கண்டிப்பாக படிப்படியாக நிறைவேற்றுவதாகவும் கூறி, அது வரை அவள் எங்கும் வெளியே போக அனுமதி இல்லை என்றும் உணர்ச்சியற்ற குரலில் கூறுகிறான். அவளைத் தன் அருகிலேயே வைத்துக்கொள்ளும் உறுதியுடன், மாளிகையிலேயே அடைத்து வைக்குமாறு மற்றவர்களுக்கு இளவரசன் லீயான் உத்திரவிடுகிறான்.
பட்டத்து இளவரசனின் துணைவி மற்றும் பேரரசியின் காதலன் ஜான் ஜியு-வின் சகோதரியுமான லேடி ஜிமிங் தற்கொலைக்கு முயன்று கொண்டிருப்பதை சிங் கண்டு அதனைத் தடுக்கிறாள். அவளது மொத்த ஊரும் சொந்தமும் இறந்துவிட்டால், அவளது சகோதரன் இதுவரை கூட இருந்தான். ஆனால் இப்போது அவனும் உயிருடன் இல்லை என்று கூறி அழ, சிங் அவளைத் தேற்றி அவளது குழந்தைக்காக வாழச் சொல்கிறாள்.
அத்தியாயம் 20 – இன் சுருக்கம்
.