.
ஜுக்கே யூ – யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னனின் வாரிசு. பல கடினமான சூழலிலும் சிங்-ன் பாதுகாப்பிற்காக வாழ்பவன்.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேசத்தின் அரசாங்க தூதரான லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் மனைவி. பேரரசியுடன் சேர்ந்து சதி செய்கிறாள்.
ஜெனரல் லீ – லாங்கியின் கணவாய் பிரதேசத்தில் உள்ள பியாண்டாங் தேசத்தின் படைகளின் தளபதி.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் அவனால் வெறுக்கப்படுகின்றவள்.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.
.
Rebirth அத்தியாயம் 21 – சுருக்கம்
இராணுவ முகாமுக்கு வெளியே சிங் அமர்ந்திருக்கும் போது ஜுக்கே யூ அங்கே அவள் உண்பதற்கு உணவு கொண்டு வருகிறான். அதில் இருந்த உணவு அவளுக்கு முன்னர் அவளும் யான் சூன்-ம் அடிமை வாழ்வு வாழ்ந்த போது கிடைக்கும் உணவினை நினைவு படுத்துகிறது.இருவருக்கும் அங்கு கெட்டுப்போன உணவே கிடைக்கும் என்றும், சில நேரங்களில் தங்கள் இருவரையும் கொல்ல உணவில் விஷம் வைப்பது வழக்கமாதலால் எப்போதுமே உணவை எலிகளுக்கு கொடுத்து சோதித்துப் பார்த்தே உண்பதும் வழக்கம் என்றும், சிங் நினைவு கூறுகிறாள்.
இளவரசி ஜாவோ சுன்’எர் யான் சூன் மீது உள்ள அன்பில் அவ்வப்போது யான் சூன்-னிற்குச் சிற்றுண்டிகளை அனுப்பி வைப்பதுண்டு, ஒருமுறை அவ்வாறு அனுப்பிய உணவில் கூட நஞ்சு வைத்திருப்பது தெரியாமல் அவன் உண்டு சாகும் நிலைக்குச் செல்கிறான். மரணத்திடம் இருந்து மீட்டெடுக்க, சிங் மருந்தை மிகுந்த அவசரத்துடன் தேட போராடவேண்டியிருந்தது. பின்னர் அந்த உணவில் நஞ்சைக் கலந்தது யார் என்பது தெளிவாக தெரியவில்லை என்ற போதிலும், யான் சுன் அதனை இளவரசியிடம் கூறவில்லை. அது யாரென்று இளவரசிக்கும் தெரியாது என்றே தோன்றுகிறது. அவன் அந்த உணவை வெறுக்கத் தொடங்கியிருந்த போதிலும், தன் சந்தேகத்தை மறைப்பதற்காக அவளுக்கு முன்னாலேயே அவற்றை அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டே இருந்தான். யான் ஷூனின் அந்தச் சகிப்புத்தன்மையும், உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த வெறுப்புமே அவன் இன்று இவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்று இந்த நிகழ்வுகளை எல்லாம் ஜுக்கே யூ விடம் சிங் கூறுகிறாள். பின்னர் ஜுக்கே வை இந்த கஷ்டங்களில் இருந்து விடுவிப்பதற்காக, அவனை ‘யோங்’ நகருக்கே திரும்பிச் சென்று ஜுக்கே குடும்பத்தின் உயர்குடி வாரிசு என்ற தனது அடையாளதோடு வாழுமாறு வலியுறுத்துகிறாள்.
ஜுக்கே அவளை விட்டுப் பிரிய மறுக்கவே, அவன் உறங்கிக்கொண்டிருந்த போது, அவனுக்காக ஒரு இறுதிச் செய்தியையும், ‘தன்னை மறந்துவிட்டுத் தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்புமாறும், எழுதிவைத்து விட்டு யான் சூன்-னிடம் செல்கிறாள். அதனைத் தெரிந்து கொண்ட ஜுக்கே யூ தனது யோங் தேசம் நோக்கி செல்கிறான். படைத்தளத்தில் சிங்-ன் துணைப் படைத்தலைவன் ஜுக்கே யூ பற்றி ஜெனரல் லீ-யிடம் கூறி ஏதேனும் வழி பிறக்கும் என்றும் கவலை வேண்டாமென்றும் கூற, சிங்-ன் பாதுகாப்புக்கு எப்போதும் கூட இருப்பவன் யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னனின் வாரிசு ஜுக்கே யூ என்று அப்போது தான் ஜெனரல் லீ உணர்ந்து கொள்கிறான்.
யான் சூன் அவள் திரும்பியதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தாலும், உடனடியாக அவளை தப்பிச்ச சென்றுவிடாதபடி ஓர் இரும்புக்கூண்டில் சிறையும் வைக்கிறான். அவனிடம் அவன் வாக்கு கொடுத்தபடி தன் வார்த்தையைக் காப்பாற்றி பியாண்டாங் தேசத்தை விட்டு போய்விட வேண்டும் என்று கூற யான் சூன் தனது வெற்றி முழுமையடையும் வரை பின்வாங்க மறுத்துவிட்டு செல்ல, அங்கு ராணி ஹெலியன் லிங், சிங்-க்கு உணவு கொண்டு வருகிறாள். வந்தவள் சிங் தப்பிக்க முயற்சி செய்வதைக் கண்டு அதுகுறித்து பேச, ஹெலியன் லிங்-ற்கு போட்டியாக ஒரு பெண் யான் சூன்-க்கு வரும் பட்சத்தில் அது அவளையும் அவளது பழங்குடியின மக்களையும் சிதைத்து விடும் என்று கூற ராணி ஏதும் பேசாமல் சென்று விடுகிறாள்.
இதற்கிடையில், ஜுக்கே யூ யோங் பேரரசின் ஏழாவது இளவரசன் ஸாவோ சே-வைச் சந்திப்பதற்காக யோங் தலைநகருக்குப் பயணம் செய்கிறான். அங்கு சென்று ஜுக்கே யூ இளவரசனிடம் தான் பியாண்டாங் தேசத்தின் புதிய மன்னரின் தூதன் என்றும், யோங் தேசத்திடம் யான் தேச படைகளை சமாளிக்க படைவீரர்களையும், தானியங்களையும் அளித்து உதவ கேட்கிறான். பியாண்டாங் தேசம் வீழ்ந்தால், யான் தேசத்தின் ‘கருப்பு கழுகுப் படை’ தெற்கு நோக்கி நகர்ந்து, யோங் பேரரசின் தலைநகருக்கே வந்து அச்சுறுத்தல் விளைவிக்கும் என்று இளவரசனை எச்சரிக்கிறான். ஜுக்கே யூ தலையை முற்றிலும் மறைக்கும் விதத்தில் ஒரு அகலமான தொப்பி அணிந்து இருந்ததால் இளவரசனால் ஜுக்கே யூ-வை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அவனது தோற்றம், குரல் வைத்து அவன் ஒருவேளை முன்னொரு காலத்தில் தன்னோடு தோளோடு தோள் நின்று போர் செய்த தன் நண்பனாக இருப்பானோ என்ற சந்தேகமும் எழுகிறது. பின்னர் நிலைமையை உணர்ந்து அவசர நிவாரணத்திற்காக ஐம்பதாயிரம் ‘டான்’ அளவு தானியங்களை அனுப்ப ஒப்புக்கொண்ட இளவரசன் படைவீரர்களை அனுப்ப பேரரசரின் அனுமதிவேண்டும் என்றும் அவருக்கு எழுதி அனுப்புகிறான் என்றும் கூற, ஜுக்கே விடைபெறுகிறான்.
யான் சூன்-னின் மனதில் ஹெலியன் லிங்-ற்கு எந்த இடமும் இல்லை என்பதை மறைமுகமாக அவளுக்கு உணர்த்தி அவளின் உதவியை சிங் பெறுகிறாள். அவள் மூலம் யான் படைத்தளத்திற்கு உணவு வரும் பாதையை ஜுக்கே யூ விற்கு தெரியப்படுத்துகிறாள். ஜுக்கே யூ அதனைக் கைப்பற்ற முயலும் போது அது அவர்களைப் பிடிக்க யான் சூன் வைத்த பொறி என்று புரிந்து புரிந்து போராடி தப்பிச்செல்லுகிறார்கள். ஜுக்கே யூ தனது வியூகத்தை மாற்றி, யான் ஸுன் தனது முக்கியப் படையை அழைத்துக் கொண்டு லாங்கியின் கணவாயை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு குறுகலான பள்ளத்தாக்கில் ஜுக்கே யூ வின் தாக்குதலுக்கு ஆளாகிறான்.
இங்கு யான் படைத்தளத்தில் சிங் தனது திட்டம் தோல்வி அடைந்ததற்கு ராணி காட்டிக்கொடுத்ததே காரணம் என்று புரிந்து அவளைக் கொண்டே அந்த இடத்தில் இருந்து தப்பிக்கிறாள். அவளின் கழுத்தில் கத்தியை வைத்து, கூண்டில் இருந்து வெளியே வந்து தப்பிக்கும் போது, அவர்களின் தானியக்கிடங்குகளையும் கொளுத்திவிட்டு தப்பிக்கிறாள். ஜுக்கே யூ வின் தாக்குதலுக்கு ஆளாகி கருங்கழுகுப் படையின் பின்வாங்கல் தடுக்கப்பட்டபோதும், அபாயகரமான மற்றொரு சதுப்பு நிலங்கள் வழியாக தப்பிச் செல்லுமாறு, தளபதி செங் வற்புறுத்துகிறான். உயிர் பிழைப்பதற்காக யான் சூன் அந்த அபாயகரமான பாதையைதேர்ந்தெடுப்பதை முன்னரே ஜுக்கே யூ வும் எதிர்பார்த்து காத்து இருக்கிறான். அதே நேரம் முகாமிலிருந்து தப்பி வந்த சிங் யான் சூன்-ஐ அந்த சதுப்பு நிலத்தில் வழிமறிக்கிறாள்.
பல வருடங்களுக்கு முன்னால் யோங் தேசத்தில் படுகொலை மேடையில் யான் சூன் கண் முன்னால் அவனது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவுப் பொருட்களை இப்பொழுது சிங் யான் சூன்-க்கு முன்னால் நின்று அவனிடம் அவள் சமர்ப்பிக்கிறாள். இதனை சேகரிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு அவள் ஜாவோ சங்-ன் உதவியை நாடியிருக்கிறாள். அதனைக் கூறிவிட்டு, யான் சூன் குடும்பம் இறப்புக்கு பழிவாங்க சிங்-ம், அவனும் ஒன்றாக சேர்ந்து போராட போவதாக அவள் நம்பியதாகவும், அது நடந்து முடிந்த பின்னர் யான் தேசத்திற்கு அமைதி திரும்பிய பின் இந்த நினைவுப் பொருட்களை யான்-னிடம் கொடுக்க விரும்பியதாகவும், ஆனால் அவனது புத்தி மாறாட்டத்தால் இனி ஒருபோதும் அத்தகைய பழிவாங்கல் நடக்க வாய்ப்பில்லை என்று இப்பொழுது தான் நம்புவதாகவும் எடுத்து யான் சூன்-க்கு கூறிவிட்டு, அவனது குடும்பத்திற்கும், தந்தைக்கும், அவனை நம்பிய மக்களுக்கும் அவன் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறாள். பிறகு அவனுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறாள். ஒன்று அவளோடு இந்த நேரம் போர் செய்து யாராவது ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்க வேண்டும் என்றும், அல்லது இன்னொரு வாய்ப்பாக அடுத்த 10 வருடத்திற்கு பியாண்டாங் தேசத்திற்குள் அவன் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்றும், இரண்டு வாய்ப்புகளை அவனுக்கு வழங்குகிறாள். அவன் அவள் கொடுத்த இரண்டாவது வாய்ப்பான அடுத்த 10 வருடங்களுக்கு தான் பியாண்டாங் தேசத்திற்குள் நுழையப் போவதில்லை என்று கூறிவிட்டு அவளை விட்டுச் சென்று விடுகிறான்.
அத்தியாயம் 22 – இன் சுருக்கம்
.