.
யுன்னியாங் – நளினம், மனதைரியம், தற்காப்புக்கலையில் வல்லவள், ஜுக்கே குளத்தின் மூன்றாம் மகன் ஜுக்கே ஸி மாளிகையில் அவனுடைய அடிமையாக இருப்பவள். சிங்-ன் போர் மற்றும் தந்திர கலை ஆசிரியர்.
ஜுக்கே யூ – யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னனின் நான்காம் வாரிசு. பல கடினமான சூழலிலும் சிங்-ன் பாதுகாப்பிற்காக வாழ்பவன். தற்போது சிமெங் தேசத்தின் மன்னன்.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து எல்லை பகுதிகளில் போர்களில் ஈடுபட்டாலும், தந்தை அதாவது அரசனால் அன்பு மறுக்கப்படுபவன்.
யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி.
ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன். மன்னன் விருப்பத்திற்கு உரிய இளவரசன். கொடூர குணம் கொண்டவன்.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் மனதளவில் அவனால் ஒதுக்கப்படுபவள்.
.
Rebirth அத்தியாயம் 27 – சுருக்கம்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, யோங் நாட்டில் தலைநகரத்தில் இளம் அடிமையாக இருக்கும் போது, சிங் ஒரு மாளிகையில் அத்துமீறி நுழைந்ததற்காகத் தன்னை உயிரோடு உரித்துவிடுவோம் என மிரட்டிய காவலர்களிடமிருந்து தப்பிக்கும் தீவிர முயற்சியில் எதேச்சையாக வேறு ஒரு மாளிகைக்குள் நுழைகிறாள். அது ஜுக்கே குலத்தின் மூன்றாம் மகன் ஜுக்கே ஸி-ன் மளிகை, அதாவது ஜுக்கே யூ-வின் சகோதரன் மாளிகை. பெண்களை தனக்கு அடிமைப்படுத்துவதையும், அவர்களைக் கொள்ளுவதில் இன்பமும் கொள்ளுபவன். அங்கு உள்ள அடிமைகளில் முயன்று தன் உயிரை தந்திரத்தால் காப்பாற்றிக்கொண்டு வாழ்பவள் யுன்னியாங். அவளின் பார்வையில் உயிருக்கு பயந்து ஓடிவரும் சிங் படுகிறாள். துரத்தி வரும் காவலரிடம் இருந்து யுன்னியாங் அவளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவளுக்குத் தற்காப்புக் கலைகளையும், உயிர்வாழ்வதற்கான தத்துவங்களையும் கற்றுக்கொடுக்கவும் தொடங்குகிறாள்.
ஒரு நாள் யுன்னியாங் சிறுமி சிங்-கு ஒரு பாடம் சொல்கிறாள். அடிமைகளில் இரு வகையினர் உண்டு. விதியின் காரணமாகவே அந்த நிலைக்குள் பிறந்தவர்கள் ஒரு வகையினர் என்றால் தங்கள் தாழ்வுநிலையைத் தாங்களே மனமுவந்து ஏற்றுக்கொள்வதன் மூலம் உண்மையான அடிமைகளாக மாறியவர்கள் மற்றொரு வகையினர். ஒருவன் தன் சூழலுக்கு அடிபணிய மறுக்கும் வரை மட்டுமே அவனின் நம்பிக்கை உயிர்ப்புடன் இருக்கும் என்பதால், வாழ்க்கையோடு போராடுவதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்று வலியுறுத்திக்கூறுகிறாள். பின்னர் ஒரு பச்சை நிற படிக காப்பு-ஐ பரிசாக கொடுத்து விட்டு, தான் வேறு ஒரு இடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, சிறுமி சிங்-யிடம் ‘தான் விரும்பும் வாழ்க்கையை அடைய வேண்டுமெனில், முதலில் சிங் உயிர் பிழைத்திருக்க வேண்டும்’ என்பதையும் அழுத்தமாக நினைவூட்டிச் செல்கிறாள்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து, மூன்றாம் எஜமானரான ஜுக்கே ஷி-யைப் படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, யுன்னியாங் அடித்துக் கொல்லப்பட்டார் எனும் பேரதிர்ச்சி தரும் செய்தியை சிறுமி சிங் அறிந்துகொள்கிறாள். தன் வழிகாட்டியைக் கடைசியாக ரகசியமாக காண்பதற்காக செல்கிறாள். அங்கே, ஒரு காலத்தில் மிகுந்த கம்பீரத்துடன் திகழ்ந்த அந்தப் பெண் உடல் முழுவதும் காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதைக் காண்கிறாள். அது அவளால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு காட்சியாக அமைகிறது.
தற்போது சிமெங் தேசத்தில் ஜுக்கே யூ விஷ முறிவு மருந்தால் முழுவதும் குணமடைந்து, சிமெங் மன்னனாக தலைமை ஏற்கிறான். அவர்கள் இருவரும் தங்குவதற்காக ‘சிங்’ மாளிகை அமைத்து அங்கு குடியேறியபோது, தான் இப்போது அவளது குடும்பத்திற்குள் மணம் முடித்து வந்த ஒரு உயர்குடிப் பெருமகனாகத் திகழ்வதாக ஜுக்கே யூ கேலியாக தன்னைத்தானே குறிப்பிடுகிறான். அப்போது நகருக்கு வெளியே மக்கள் கூட்டம் ஒன்று கூடுகிறது. புதிய மன்னரின் கருணைக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, அங்கு வந்துள்ள பெற்றோர்கள் தங்கள் மகள்களைப் பணிப்பெண்களாக அர்ப்பணிக்க வேண்டி, அவர்களைக் கட்டி வைத்திருந்தனர். பதறிய ஜுக்கே யூ அந்த குழந்தைகளைத் திரும்ப அழைத்துச் செல்ல பணித்துவிட்டு, தனக்கு அடிமைகள் எவரும் தேவையில்லை என்றும், எப்பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பண்டமாற்றும் பொருளாகவோ அல்லது விற்பனையோ செய்ய அனுமதியில்லை என ஒரு உறுதியான ஆணையைப் பிறப்பிக்கிறான்.
அதே போல, அரண்மனையிலும் தனக்கு இனி பெண்கள் தேவையில்லை என்பதை குடிமக்கள் புரிந்துகொள்ளும் வகையில், ஒரு அரச திருமணத்தை அறிவிக்குமாறு சிங் எடுத்துக் கூறுகிறாள். திருமண கொண்டாட்டம் தொடங்கி, திருமணத்தில் முடிகிறது. பிறகு இருவரும் சேர்ந்து அந்த சிமெங் தேசத்தை அடிமைகள் இல்லாத தேசமாக அறிவிக்கின்றனர். தினை விதைகள் மற்றும் நிலங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. மக்கள் தாங்களே தங்கள் நிலத்தையும் நீர்ப்பாசனத்தையும் நிர்வகிக்க கற்றுக்கொள்கின்றனர்.
சிமெங் தேசம் இவ்வாறு இருக்க, யோங் நாட்டில் ஏழாவது இளவரசர் ஜாவோ சே, பெண் தளபதி யோ ஹுவான்-விடம் இருந்து இரவல் வாங்கிய கழுதையுடன் யோங் தேச தலைநகர் நோக்கி வருகிறான். அங்கு வாயிலிலேயே நிற்கவைக்கப்பட்டு, நகரத்திற்குள் ராணுவத்தை அழைத்து வரக்கூடாது என்ற மன்னனின் எண்ணப்படி பதின்மூன்றாவது இளவரசனின் ஆணை கிடைக்கிறது. மன்னன் மட்டுமே ராணுவ தளபதிக்கு கட்டளை இடவேண்டி இருக்க, இளவரசனின் கட்டளை வீரர்களை கோபம் கொள்ள வைக்கிறது, என்றாலும், எனினும் தான் மன்னனின் அனுமதி இல்லாமல் ஜுக்கே யூ-க்கு உணவுப் பொருட்கள் அனுப்பி உதவி செய்த தவறு தன் மீது இருப்பதால், தேவையற்ற இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்காக, தனது இராணுவப் பதிவேட்டையும் முப்பத்தி நான்கு கட்டளைச் சின்னங்களையும் ஒப்படைத்து, எதிர்க்க வேண்டாம் எனத் தீர்மானித்து, தான் மட்டும் நகருக்குள் நுழைகிறான். ஏழாவது இளவரசன் ஸாவோ சே அரசரிடம் எதிர் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்த காரணத்தால், அவனுக்குக் கருணை காட்ட முடிவெடுத்து, நகருக்கு வெளியே உள்ள கணவாயில் தங்கியிருந்து, தன் சேவையின் மூலம் தன்னை மீட்டெடுத்துக் கொள்ளுமாறு பேரரசர் இளவரசருக்குக் கட்டளை இருக்கிறார்.
இங்கு யான் தேசத்தில் ராணி ஹெலியன் லிங் இடைவிடாத கவலையுடனே வாழ்கிறாள். இப்போது புதிய கவலையாக அவளது சகோதரன் யான் சூனின் ஆட்சிக்கு எதிராக பகை உணர்வோடு இருக்கும் 2 பழங்குடியின மூத்தவர்களுடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருவதும் சேர்ந்துகொண்டது. ராணி யான் சூன் அனுப்பி இருக்கும் பரிச பொருட்களை பார்வையிட்டு கொண்டு இருக்கும் போது, அங்கு அவளது சகோதரன் வருகிறான். ராணியிடம் தனது கையறு நிலையை எடுத்துக்கூறி, அவற்றை சீர் படுத்த, மற்ற பழங்குடி இன தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்துகொள்ளுமாறு அவளை வற்புறுத்துகிறான். உண்மையில், அவன் ஏராளமான லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டு, பிற குலத்தவர்களின் கையில் ஒரு கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் ராணியும் அங்கு செல்ல சம்மதிக்கிறாள்.
விருந்தில் மற்ற தலைவர்களுடன் ராணி என்ற முறையில் கலந்துரையாடுவது என்று எண்ணி வந்தவள் அங்கு உல்லாச விருந்து நடைபெறுவதைப் பார்த்து, திரும்பிச்செல்ல எண்ணுகிறாள். அங்கு யான் சூன் தலைமையை வெறுக்கும் பழங்குடியின தலைவர்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பொதுவாக பேச எண்ணுகையில், அவளது சகோதரனை ஆசை காட்டி அங்கிருந்து அனுப்பிவிட்டு, ராணியை அவமானப்படுத்த முற்சிக்கிறார்கள். ராணியை தாக்கி யான் சூன்-ஐ அவமானப்படுத்தும் தனது நோக்கத்தை நேரிடையாக கூறி, மற்ற விருந்தினர்கள் மது போதையில் இருந்தபோது, வன்மம் கொண்ட ஒருவன் மட்டும் ராணியிடம் தவறாக நடக்க முயல, யான் சூன்-ன் தளபதி செங் அப்போது அங்கு வந்து அவளைக்காப்பாற்றுகிறான். ஆனாலும் ராணியின் கோபம் அடங்காமல் தன் கையாலேயே அவனைக் குத்திக்கொன்றுவிட, மற்றவர்கள் பயத்தில் ஓடிவிடுகிறார்கள்.
இப்போது ஒரு திருப்பமாக தளபதி செங் யுவான் அங்கு கொலை செய்த நடுக்கத்தில் நின்றிருந்த ராணியைத் தன் கரங்களில் அணைத்து, அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.
அத்தியாயம் 28 – இன் சுருக்கம்
.