.
ஷியூலி இராணுவம் – சிங் உருவாக்கி, முன்னர் நடந்த போரில் தந்திரமாக மொத்தமாக அழிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அவளாலே உருவாக்கப்பட்டது.
சூ கியாவோ – ‘சிங்’ என்று அழைக்கப்படும் இவள் ஜுக்கே யுவின் அடிமையாக வந்து சேர்ந்து, அவனால் போர்வீரங்கனையாக பயிற்சி கொடுக்கப்பட்டவள் – முன்னர் ஜுக்கே யுவின் தோழனாக இருந்த போது யான் சூனால் ஒரு தலையாக விரும்பப்பட்டவள். இப்போது சிமெங் தேசத்தின் அதிபதி.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் மனதளவில் அவனால் ஒதுக்கப்படுபவள். தளபதி செங்-ஆல் விரும்பப்படுபவள்.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து எல்லை பகுதிகளில் போர்களில் ஈடுபட்டாலும், தந்தை அதாவது அரசனால் அன்பு மறுக்கப்படுபவன். பெண் தளபதி ஹுவான்-ஆல் ஈர்க்கப்படுகிறான்.
யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி.
ஜுக்கே முகிங் – கிங்ஷான் குறுநிலத்தின் அதிபதி. ஜுக்கே குலத்தின் மூத்தவர். ஜுக்கே யூ-ன் குரு மற்றும் அவனது தாத்தா.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி. பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட இளவரசனான லீயான்-ன் மனைவி. வயிற்றில் குழந்தையுடன் தன் தாய் தேசத்துக்கே அடைக்கலம் தேடி வந்தவள். இப்போது 13வது இளவரசனின் கட்டுப்பாட்டில் இருப்பவள்.
மிங் லூ – யோங் தேசத்தின் காவல் தலைவனின் மகள். பல வருடங்களுக்கு முன் யோங் தேசத்தால் குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டு, இவள் மட்டுமே உயிர் தப்பியவள். இப்போது சிங்-ன் துணை தலைவி.
.
Rebirth அத்தியாயம் 32 – சுருக்கம்
ஜுக்கே யூ மற்றும் சிங் இருவரும் சந்தித்தபோது, சிங் மன உறுதியுடன், ஜுக்கே உடன் தனியாக சென்று தனக்கென்று ஒரு வாழ்க்கையை வாழ்வது தன்னால் இயலாது என்றும், இந்த சிமெங் தேசத்தில் தான் கழித்த காலத்தில் உணர்ந்து கொண்டது, தனக்கும் மக்களுக்கும் இடையே ஒருவருக்கொருவர் பரஸ்பர தேவை இருப்பதை அவள் உணர்ந்திருப்பதாகவும் கூறுகிறாள். ஒரு காலத்தில் அடிமைகளாக நடத்தப்பட்ட தன்னைப் போன்ற அடிமை மக்கள் இறுதியாக தங்களுக்கு என்று ஒரு சொந்த இடத்தை பெறப்போகிறோம் என்று அவள் கனவு முன்னர் கண்டாள். அந்த லட்சியங்களுக்கு உண்மையாக இப்போதும் இருக்க, அவள் தனது ஷியூலி ராணுவத்தின் தளபதி சிங்-காகவே நீடிக்க விருப்பம் தெரிவிக்கிறாள். அவளது மனதை முழுவதும் புரிந்து கொண்ட ஜுக்கே யூ-ம் அவளை தடுக்க முயற்சிக்கவில்லை. அவளது முடிவை அவனும் ஏற்றுக் கொள்கிறான்.
யோங் தேச ராணுவத்தை எதிர்கொள்ள, திரண்டு இருந்த தனது படைகளுக்கு முன்னால் நின்று மன உறுதியை அதிகரிக்க சிங் ஒரு எழுச்சியூட்டு முறையை ஆற்றுகிறாள். யோங் தேசத்தின் ஒரு அடிமையாக இருந்த தனது வேதனையான கடந்த காலத்தை அவள் அப்பொழுது விவரிக்கிறாள். அங்கு உயிர் வாழ்வதே பெரும் கடினமாக இருந்தது. மேலும் அவளது உடன்பிறப்புகள் தூசிகளை போல ஒதுக்கப்பட்டனர். ஒருவரின் பிறப்பை பொருட்படுத்தாமல் நீதி நிலைநாட்டப்படும் ஒரு நிலத்தை உருவாக்கவே தான் இந்த தேசத்திற்கு வந்ததாக அவள் விளக்குகிறாள். அவளின் கனவுப்படி அவளுக்கு புதிதாக கிடைத்த இந்த தன்னாட்சியை யோங் ராணுவம் நசுக்கு முயல்கிறது என்றும், அவர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க தன்னுடன் சேருமாறு ஷியூலி ராணுவ வீரர்களையும், சிமெங் தேச படை வீரர்களையும் அவள் அழைப்பு விடுகிறாள். அவனது இந்த நெகிழ்ச்சியான உரையால் அவளது ஆதரவாளர்கள் தங்களது விசுவாசத்தை அவளுக்கு அளித்து உறுதி அளிக்கின்றனர்.
இதற்கிடையில் யான் சூன் கருப்பு தங்கச் சுரங்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறான். அப்போது ஒற்றர்கள் வந்து யோங் தேச வீரர்களை எதிர்ப்பதற்காக சிமெங் தேசம் தனது எல்லை காவலர்களை அவர்களை நோக்கி நகர்ந்துவதாக தெரிவிக்கின்றனர். இப்போது எளிதில் தாக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் அந்த சுரங்கத்தை தாக்குவதற்கு அதுவே சரியான நேரம் என்றும் அவரது ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் யான் சூன் தயங்கி தனது படைகளை போர் நடக்கும் திசை நோக்கி திருக்குமாறு உத்தரவிடுகிறான். சிமெங் தேசம் விழுந்தால் யான் தேசம் தான் அவர்களின் அடுத்த இலக்காக இருக்கும், அதற்கு தன்னிடம் போதுமான வழக்கமான படைகள் இல்லை என்பதை அறிந்து யான் சூன் தனது ராணி ஹெலியன் லிங்-ன் உதவியை நாடுகிறான். அதாவது யான் தேசத்திற்கு சென்று அங்கிருக்கும் பல்வேறு பழங்குடி இன மூத்தவர்களைச் சந்தித்து அவர்கள் வைத்திருக்கும் தனியார் படைகளை யான் தேசத்திற்காக ‘கடன் வாங்க’ அவளுக்கு உத்தரவிடுகிறான். இங்கு கடன் என்பது மேலோட்டமாக நாகரீகமான பெயராக இருந்தாலும் அதன் உள் அர்த்தம் பேராசை கொண்ட அந்த பழங்குடியின தலைவர்களை திறம்பட அச்சுறுத்தி தனக்கு இணங்க வைத்தல் என்பது. அந்தப் பணியை செய்ய தனது ராணியை அனுப்புவதுடன், அவளுக்கு பாதுகாவலாக தளபதி செங்-கையும் அனுப்புகிறான் யான் சூன்.
இந்த பதட்டமான நிலையில், ஓரிடத்தில் ஏழாவது இளவரசன் ஸாவோ சே தனது ‘கழுதை கடனை’ பெண் தளபதி ஹுவான்-னிடம் திருப்பி செலுத்துவதற்காக முயல்கிறான். ‘தான் முன்பு கடனாக பெற்ற கழுதை இதுதான்’ என்று கூறி, அவளின் முன் ஒரு கருப்பு கழுதையை கொண்டு வந்து நிறுத்துகிறான். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் எடுத்துச்சென்ற கழுதையை கொடுக்க இயலாத நிலையில், அதற்கு பதிலாக வேறு கழுதையை கொடுத்து ஏமாற்றும் இந்த ஏமாற்று வேலையை உடனடியாக அவள் தெரிந்து கொள்கிறாள். அந்த கழுதை தவறான இனத்தைச் சேர்ந்தது மட்டுமல்லாமல், தவறான பாலினத்தையும் கொண்டிருந்ததை அறிந்த தளபதி ஹுவான் அந்தக் கழுதையை வாங்க மறுத்து, தனது சொந்த ஆண் குழந்தையை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்திக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்டு தளபதிகளும் ஒன்றாக ஒரே இடத்தில் இருந்து கழுதை பேரம் நடத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அவர்களைச் சுற்றி வளைத்து கொல்ல முயற்சிக்கின்றனர் ஒரு சிறிய குழு வீரர்கள். அதிலிருந்து இருவரும் தப்பிக்கும் பொழுது ஏழாவது இளவரசனின் காலில் காயம் ஏற்படுகிறது. தன்னை தாக்கியது தனது சொந்த ராணுவத்தைச் சேர்ந்தவர்களே என்றும், அதற்கு காரணம் 13வது இளவரசன் என்றும் தெரியவர அவனுக்குள் கோபம் ஏற்படுகிறது. அவனின் துணை வீரர்கள் எல்லோரும் கொலை செய்யப்படுவதை மறைந்து இருந்து பார்த்த ஏழாவது இளவரசனை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மறைத்து அழைத்துச் செல்கிறாள் ஹுவான். காட்டில் அவர்கள் இருவரும் மறைந்திருக்கும் பொழுது, இதே போன்ற சூழலை தானும் எதிர்கொண்டிருப்பதாகவும், தன்னுடைய நாட்டு சொந்த ராணுவ வீரர்களாலே தான் கொல்லப்படும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அதில் இருந்து தப்பித்து ஏதோ ஒரு ஊரில் தனியாக இருக்கும் பொழுது தான் ஏழாவது இளவரசன் அங்கு கழுதைக்காக தன்னை சந்திக்க வந்ததாகவும் தளபதி ஹுவான் கூறுகிறாள். இருவரும் ஒரே மாதிரியான சூழலை எதிர்கொண்டவர்களாக இருந்த காரணத்தால் இருவருக்குள் நெருக்கமாக ஏற்படுகிறது.
சிங்-ஐ யோங் தேச இளவரசி என்றும், அவள் அவர்களுடன் யோங் தேசத்திற்கு வரவேண்டும் என்றும் கூறி, அவளை வரவைப்பதற்காக யோங் இராணுவம், அப்பாவி சிமெங் குடிமக்களைக் கொள்ளையர்கள் என்று முத்திரை குத்தி சிறைப்பிடித்ததாலும், ஒவ்வொரு நாளும் ஒரு குழுவினரைக் கொன்றதாலும் சிமெங் கணவாயில் நிலைமை மோசமடைகிறது. அந்த யோங் தேச இராணுவத்திற்கு தலைமை ஏற்று இப்போது வந்திருப்பது, ஜுக்கே யூ-வின் தந்தையும் குருவுமான ஜுக்கே குல தலைவன் ஜுக்கே முகிங்.
ஏழாவது இளவரசன் ஸாவோ சே தனது கொலை முயற்சியில் இருந்து தப்பித்ததோடு அல்லாமல், எதிரியான யான் தேசத்து தளபதியுடன் சென்றது ஒற்றர்களின் மூலம் யோங் தேசத்திற்கு செய்தியாக வருகிறது. இங்கு யோங் தேசத்தில் ஜாவோ சுன்’எர் 13-வது இளவரசனுடன் இருக்கும் பொழுது, அந்த செய்தியை அவனிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து, எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் எதிரி நாட்டுடன் சேர்ப்பது தேச துரோகம் என்றும், ஏழாவது இளவரசன் எதிரி நாட்டு தளபதியுடன் சென்றதால், அவனுக்கு பேரரசரிடம் தண்டனை நிச்சயம் என்றும் கூறி 13 வது இளவரசனை மகிழ்ச்சி படுத்துகிறாள். அப்பொழுது ஜுக்கே குலத்தின் எதிரியான முகே குலத்தின் தலைவன் 13வது இளவரசனிடம் சிமெங் தேசத்தின் குழப்பமான சூழல் பற்றியும், அங்கு சிங்-கிற்கு அவர்கள் ராணுவம் உண்டாக்கும் நெருக்கடி குறித்தும் செய்தி கூறுகிறான். அதன் மூலம் சிமெங் தேசத்தின் இப்போதைய அதிபதி ஜுக்கே யூ என்றும், அவனுடன் சிங் மகாராணியாக இருக்கிறாள் என்றும் ஜாவோ சுன்’எர்-க்குத் தெரிய வருகிறது.
இங்கு மக்களைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்த சிங், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மிங் லு-வுடன் யோங் இராணுவ முகாமுக்குள் நுழைகிறாள். அங்கு சிமெங்கை இணைப்பதை நியாயப்படுத்துவதற்காக, சிங்-யிடம் ஒரு அரச ஆணையை ஜுக்கே முகிங் முன்வைக்கிறார். அந்த அரச ஆணை அவளை யோங் தேசத்தின் நீண்டகாலமாகத் தொலைந்துபோன இளவரசி என்பது கூறுகிறது. பிணையக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை சிங் அதற்கு இணங்கி நடிக்கிறாள். அவர்கள் பாதுகாப்பாக சென்றவுடன் சிமெங் தன்னாட்சி பெற்றதாகவே இருக்கும் என்று சிங் சவாலாக அறிவித்து, அந்த ஆணையைத் தீயில் எறிகிறாள். சிங்-ம், மிங் லுவும் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேற போராடியபோது, ஒரு கொடூரமான கைகலப்பு அங்கு வெடிக்கிறது. இதில் மிங் லூ பலத்த காயமடைகிறாள். இந்த சூழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜுக்கே யூ, அவளைக் காப்பதற்காக முகாமுக்கு விரைகிறான்.
சிங் ஜுக்கே யூ இருவருமே தன்னிடம் இப்பொழுது கைதியாக இருப்பதாக ஜுக்கே யூ-வின் தாத்தா ஜுக்கே முகிங் அவனிடம் எள்ளலாக கூற, அதனை எதிர்கொண்டு ஜுக்கே யூ தனக்கு யோங் தேசத்தின் ராணுவ பலவீனங்கள் தெளிவாக தெரியும் என்றும், தான் எங்கிருந்தாலும் வெறும் 3000 வீரர்களைக் கொண்டு விடிவதற்குள் யோங் ராணுவத்தின் முழு பாதுகாப்பு அரணையும் தன்னால் தகர்க்க முடியும் என்றும் ஒரு கடுமையான அச்சுறுத்தலை தன் தாத்தாவை எதிர்கொண்டு கூறுகிறான். மேலும், ஜுக்கே முகிங்-கின் படைகள் தளபதி மெங்கிடம் இருந்து தற்காலிகமாகப் பெறப்பட்டவை மட்டுமே என்றும், ஆனால் சிமெங் வீரர்கள் தங்கள் வீடுகளுக்காகப் போராடுகிறார்கள் என்றும், ஒரு கடுமையான போராட்டத்தில் அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்றும் அவன் சுட்டிக்காட்டுகிறான். தன் கடமைக்கும் பேரனின் செல்வாக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஜிகே முகின் இந்த பேச்சுவார்த்தை மோதல் காரணமாக எழுந்த் மனக்கலக்கத்தாலும் ஏற்கனவே இருந்த நோயாலும் அவர் பேச்சுவார்த்தை முடிந்து ஜுக்கே யூ அங்கிருந்து செல்ல ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்து உயிர் விடுகிறார். இந்த நிகழ்வு அவனை உடனடியாக சிங்கை பின் தொடர விடாமல் தடுத்து அங்கேயே இருக்கச் செய்கிறது.
இதற்கிடையில் மற்றொருபுறம் உடலில் பெரும் காயமடைந்த மிங் லூ-ம், சிங்-கும் பாதுகாப்பான இடத்தை நோக்கி போராடிக் கொண்டு நடந்து செல்லும் பொழுது, யான் சூன் அங்கு வருகிறான். அப்போது எதிர்பாராத விதமாக ரத்தப்பெருக்கத்தால் மிங் லூ இறந்த நிலையில், ஜுக்கே யூ-வைக் காப்பாற்றுமாறு யான் சூன்-னிடம் கூறிக் கொண்டே சிங் மயங்கி விழுகிறாள்.
அத்தியாயம் 33 – இன் சுருக்கம்
.