Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 37 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 37

தளபதி யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி. ஏழாவது இளவரசனை விரும்புகிறவள்.

கிங்ஷான் மன்றம் – இது யோங் தேசத்தின் ஒரு குறுநில பகுதி. ஜுக்கே குலம் இதனை ஆண்டு வருகிறது. யோங் தேச மன்னனுக்காக கொலைகளையும், விசாரணைகளையும் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. பெரும் ஓற்றர்களை உருவாக்கி, பயிற்சி அளிப்பதும் கூட இவர்கள் தொழில். ஜுக்கே யூ இந்த குலத்தின் வாரிசு.

மு ஷென் – யோங் தேசத்தின் முக்கிய அதிகாரத்தில் இருக்கும் தலைமைகளில் ஒருவன். இளவரசன் ஸாவோ சே-க்கு ஆதரவு அளிப்பவன்.

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். இப்போது யோங் நாட்டின் பட்டத்து இளவரசன். பெண் தளபதி ஹுவான்-ஆல் ஈர்க்கப்படுகிறான்.

தளபதி ஸிங் லே – யோங் பேரரசின் வெளிப்புற இராணுவ பலத்தில் பாதியளவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதி. யான் சூன்-னால் காப்பாற்றப்பட்டவன்.

ஷியூலி இராணுவம் – சிங் உருவாக்கி, முன்னர் நடந்த போரில் தந்திரமாக மொத்தமாக அழிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அவளாலே உருவாக்கப்பட்டது.

ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ன் ராணி. அவனால் ஒதுக்கப்பட்டு தளபதியை விரும்ப ஆரம்பிக்கிறாள்.

.

Rebirth அத்தியாயம் 37 – சுருக்கம்

ஜுக்கே யூ துரத்திச் சென்றதும், யான் சூன் கொல்லப்பட்டதும் வதந்திகள் எழுந்தன. இச்செய்திகள் சிங் மற்றும் தளபதி ஹுவான் ஆகியோரைச் சென்றடைந்ததும், அவர்கள் உடனடியாக அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முயன்றனர். கிங்ஷான் மன்றம்-இன் ஒற்றர்களால் நகரம் முழுவதும் ஒருவித பரபரப்பு நிலவிய போதிலும், யான் சூன் உடலை நேரில் காணாமல் அச்செய்தியை நம்ப சிங் மறுத்துவிடுகிறாள். ஜெனரல் செங் யுவானின் உடலுடன் யோங் தேச வீரர்கள் திரும்பியதைக் கண்ட இருவரும் யான் சூன் பற்றிய விவரம் தெரியவில்லை என்றாலும் அவன் உயிருடன் இருப்பதை உணர்ந்து கொண்டனர். ஜெனரல் செங்-ன் மீது கடந்த கால பகை சின்-ற்கு இருத்தாலும் கூட, அவனது உடலுக்கு யோங் வீரர்களால் அவமதிப்பு நேர்வதைக் காண அவள் விரும்பவில்லை. அன்று இரவு, அவளும் தளபதி ஹுவானும் இணைந்து அவனது உடலை அவர்களிடம் இருந்து வெற்றிகரமாக கைப்பற்றி, அவனுக்கு முறைப்படியான நல்லடக்கம் செய்தனர்.

யோங் தேசத்தின் படை சிமெங் நாட்டின் எல்லைக்குச் சென்று சேர்ந்து விட்டது என்ற தகவல் இங்கு ஜுக்கே-விற்கு கிடைக்கிறது. பட்டத்து இளவரசன் முன்பிருந்த ஏழாவது இளவரசனாகவோ அல்லது தான் முன்பு அறிந்திருந்த நண்பனாகவோ இப்பொழுது இல்லை என்பது அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. ஒரு நாட்டின் பிரஜையாக இல்லாமல் அந்த நாட்டின் பட்டத்து இளவரசனாகவோ அல்லது அதிபதியாகவோ மாறும்போது யாருடனும் தோழமை பாராட்டுவது இயலாத காரியம். ஆதலால் வேறு வழியில் நடக்க மறு வாய்ப்பு பட்டத்து இளவரசனுக்கும் இல்லை. அவன் பக்கத்தில் தான் நிற்காமல் விலகிவிடும் மறு வாய்ப்பு தனக்கும் இல்லை என்பதை ஜுக்கே யூ தெரிந்து கொள்கிறான். இதற்கு இடையில் முன்பு எப்போதோ நிகழ்ந்த நிகழ்வும் ஜுக்கே-வுக்கு மனதில் எழுகிறது. சிங்-கிற்கு ஜுக்கே யூ பயிற்சி அளிக்கும் காலத்தில் உயிர் கொல்லி மூலிகை நச்சுகள் குறித்த சிங்-கின் அறிவை அவன் ஒரு முறை சோதிக்கிறான். விஷத்தின் தன்மை குறித்தும், மற்றவர்களுக்கு விஷம் வைக்கும் விதம் குறித்த பயிற்சியில் அவள் தனக்குத் தானே விஷத்தை உட்கொண்டு அறிந்து கொள்ள, ஜுக்கே யூ இத்தகைய உலகத்தில் முதலில் தன்னுயிரை விட்டு விடாமல் வாழ்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறான். வெளிப்படையாக எதிரிகளை கொள்ளும் முறை இருக்க விஷத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிங் சந்தேகம் கேட்க அதற்கு அவன் அவளுடைய வழிகளையோ முறைகளையும் இந்த உலகம் எதிர்பார்க்கவில்லை என்றும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை என்றும் இரக்கமற்ற இவ்வுலகில் உயிர் பிழைத்திருக்க எத்தகைய வழிமுறைகளையும் கையாள வேண்டியது அவசியம் என்றும் எடுத்து கூறி கற்பிக்கிறான்.

மறுபுறம், சிறைபிடிக்கப்பட்ட மு ஷென்னிடம் தளபதி ஹுவான் தீவிர விசாரணை நடத்துகிறாள். உயிர் பயத்தால் மு ஷென் பட்டத்து இளவரசனின் மாபெரும் சதியை ஒப்புக்கொள்கிறான். அதாவது முகமற்ற கடவுள் வழிபாட்டு குழுவின் தலைவி புனித பெண் கூறியபடி வரவிருக்கும் பேரரசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது புனித நெருப்பை பயன்படுத்தி அவரை உயிருடன் எரிக்க திட்டமிட்டு இருக்கிறான் என்றும், புனித நெருப்பு வெகுவாக பற்றி எரிய துணை புரியும் விதமாக மு ஷென் அதிக அளவிலான தானாக தீப்பற்றும் தீர்க்கல் தூளை மூதாதையர் கோவிலின் உள்ளே மறைத்து வைத்திருக்கிறான் என்றும், மேலும் அங்கு அரண்மனை காவலர்களுக்கு பதிலாக பட்டத்தில் அரசரின் விசுவாசிகள் இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறிவிட்டு அதற்கான ஆதாரமாக மண்டபத்தின் பதிவேடுகளை சரிபார்க்கவும் கூறுகிறான். அவன் தன்னை அவ்வாறு ஒப்புக் கொள்வதைப் போல பேசிக் கொண்டிருக்க இடையே அங்கு நடக்கும் கலவரத்தில் மு ஷென்-ஐ தளபதி ஹுவான் தன் வாளால் கொன்று விடுகிறாள்.

சிமெங் மற்றும் யான் தேசத்திற்கு அபாயமாக இனி மாறும் பட்டத்து இளவரசனின் நடவடிக்கைகளைத் தடுப்பதை விட, இப்பொழுது முக்கியம், பேரரசனின் நிலைத்த தன்மையே என்பதை உணர்ந்த சிங் பேரரசனை காப்பாற்றவும் அதன் மூலம் சிமெண்ட் தேசத்திற்கு வரவிருக்கும் போரைத் தடுக்கவும் திட்டத்தை வகுக்க தொடங்குகிறாள். அவளின் திட்டப்படி சிறிது காலம் முன்பு யான் சூன்-னால் காப்பாற்றப்பட்ட தளபதி ஸிங் லே பேரரசனின் முன் திடீரென்று தோன்றுகிறான். அவன் பேரரசனிடம் தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து தன்னை காப்பாற்றியது பேரரசனின் மகள் தான் என்றும் கூறி சிங்-ஐ பேரரசனின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். அவள் வந்ததைக் கண்டு பேரரசனின் அருகில் இருந்த பட்டத்து இளவரசனும், ஜுக்கே யூ-ம் அதிர்ச்சி அடைய, அவளோ தான் ஒரு எதிரியாக இங்கு வரவில்லை என்றும், மாறாக ஆறு மாதங்களுக்கு முன்னால் தங்களின் ஆணையின் பேரில் ஒரு தூது குழு சிமெங் ராஜ்யத்திற்கு வந்தது என்றும், அதில் தான் அவருடைய காணாமல் போன மகளாக எடுத்துரைக்கப்பட்டு இருந்தது என்றும், அதனால் தான் இப்பொழுது தனது தந்தையையும் சகோதரனையும் காண இங்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறாள். 

இதனிடையே அங்கு சிமெங் தேசத்தில் போர் வரப்போகிறது என்பதால், சில வீரர்கள் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை குறித்து அச்சம் கொண்டதாலும், ரத்தம் சிந்துவதில் சளிப்பு ஏற்பட்டதாலும் தங்களுக்குள்ளேயே ஒரு தார்மீக நெருக்கடியை சந்திக்க, சிங் உருவாக்கிய அவளுடைய ஷியூலி இராணுவம் படையின் தளபதி அவர்களுக்கு தங்களின் கடமையையும், சிங்-ஆல் உயிர் பிழைத்த இப்போது வாழ்வதால் சிங்-ற்கு தாங்கள் செலுத்த வேண்டிய விசுவாசத்தையும் நினைவுபடுத்துகிறான்.

இங்கு யோங் தேசத்தில் சிங் பேரரசனின் முன்னிலையில் அவர் தனது பழைய தவறுகளை மன்னிக்கும் பட்சத்தில், தானும் தன்னுடைய சிமெங் தேசமும் யோங் தேசத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு நடப்பதாக சம்மதம் தெரிவிக்கிறாள். போர் நடக்காமல், ரத்தம் சிந்தாமல் ஒரு வெற்றியின் சாத்தியக்கூறு ஏற்பட்ட நிலையில் பேரரசன் அதற்கு ஒத்துக்கொள்ள முற்பட்டு, சிங்-யிடம் அவளது நேர்மையை குறித்து சில கேள்விகளும் எழுப்புகிறான். அதற்கு பதில் அளித்த சிங் வளமற்ற நிலப் பகுதியான சிமெங் பிறரின் பாதுகாப்பை நாடுவதே மிகவும் நடைமுறை சார்ந்த ஒரு சிறந்த தேர்வு என்று வாதித்து, அதற்கு யோங் தேசம் சிறந்தது என்றும் எடுத்து கூறுகிறாள். ஆனால் அவ்வாறு அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு சிமெங் தேசம் இருக்க வேண்டும் எனில் ஒரு நிபந்தனையையும் முன் வைக்கிறாள். அதாவது தான் பேரரசனின் மகளாக இருப்பதால் வம்சாவளி பதிவேட்டில் தன் பெயரையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் இங்கு இருக்கும் மன்னர்களின் மூதாதையர் கோயிலில் வழிபடுவதற்கு தனக்கு அனுமதி வேண்டும் என்றும் கூறுகிறாள். இதற்கு ஒப்புக் கொண்டால் அரண்மனையில் வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டு, அரச முத்திரையையும் படைத்தலைவர்களுக்கான அடையாள சீட்டுகளையும் ஒப்படைப்பதாக கூறுகிறாள். இதற்கு பட்டத்து இளவரசன் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறான். இருந்தும் பேரரசன் அவளது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறான்.

தன் விருப்பத்திற்கு எதிராக சிங்-ன் விருப்பத்தைப் பேரரசன் ஏற்றுக்கொண்டதால் தனக்கு பாதிப்பு வரும் என்று எண்ணி, அன்றே அரியணையை முன்கூட்டியே கைப்பற்றும் நோக்கத்துடன், பேரரசன் தனியாக அந்தப்புரத்தில் இருக்கும் பொழுது, கனத்த ஆயுதங்களுடன் பேரரசனின் படுக்கை அறைக்குள் நுழைகிறான் பட்டத்தை இளவரசன் ஸாவோ சே. யாரும் ஆயுதங்களுடன் நுழையக்கூடாத அந்த இடத்தில், அந்த நேரத்தில், தனது வாளுடன் நுழைந்த தன் மகனைப் பேரரசன் எந்தவித சலனமும் இன்றி வரவேற்கிறான். அவனது உள்நோக்கத்தை அறிந்து கொண்ட அரசன், தான் நெடுங்காலத்திற்கு முன்பே ஸாவோ சே தான் தனது அடுத்த வாரிசாக இருக்க வேண்டும் என்று எழுதியதாக தன் பாதுகாப்புக்காக சில நாட்களுக்கு முன்னர் தான் எழுத்திய ஒரு ஆணையை ஸாவோ சே-ஐ மறைவான இடத்தில் இருந்து எடுத்து வரச் செய்கிறான். அந்த ஆணை ஏழாவது இளவரசனை அதிகாரப்பூர்வமாக பட்டத்து இளவரசனாகவும், பேரரசனுக்கு அடுத்து வாரிசாகவும் அறிவித்த அரசாணை ஆகும். தான் ஒரு தந்தையாக ஏழாவது இளவரசனிடம் என்றும் நடந்து கொள்ளவில்லை என்றும், 13-வது இளவரசனிடம் மட்டுமே தான் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறிவிட்டு, மற்றவர்களிடம் சாதாரண தந்தையாக நடந்து கொண்டதாகவும், ஏழாவது இளவரசனிடம் மட்டும் அவன் வாரிசு என்ற காரணத்தால் அவனை பண்படுத்த தான் பேரரசனாக நடந்து கொண்டதாகவும் தனது கருத்தை தெரிவிக்கின்றான் பேரரசன். தந்தை காட்டிய ஆணையையும் அவர் கூறிய கூற்றையும் உண்மை என்று நம்பிய பட்டத்து இளவரசன் பேரரசனைக் கொல்லாமல் அங்கிருந்து வெளியேறுகிறான். அதுவரையில் பயத்தை வெளிக்காட்டாமல் இறுக்கமாக இருந்த பேரரசன் தன் மகன் வெளியேறியதும் பெருமூச்சு விட்டுக்கொண்டு, தான் இளமையில் இருந்ததைப் போலவே இப்போது இவன் இருக்கிறான் என்றும், தன்னை விட அதிக இறக்கமற்றவனாக மாறிக்கொண்டிருக்கிறான் என்றும், குறிப்பிடுகிறான். 

இங்கு யான் தேசத்தில் யான் சூன் நெடுந்தூரம் பயணம் செய்து, ஹெலியன் லிங்-யிடம் வந்து, தளபதி செங்-ன் வாளையும், அவன் தன்னுடன் வைத்திருந்த தனிப்பட்ட உடமையான அந்த சிவப்பு நிற படிக பதக்கத்தையும் ஒப்படைத்து, தளபதியை திரும்ப அவளிடம் கொண்டு வந்து சேர்க்காததற்கு மன்னிப்பு கேட்கிறான். ராணி அதிர்ந்து காரணம் கேட்க, அந்த சிவப்பு நிற பதக்கம் ராணியுடையது என்றும் அவனது உடைக்குள் இதை தான் பார்த்ததாகவும் தளபதி செங் பதக்கத்தையும் தனது கடைசி வார்த்தைகளுடன் சேர்த்து தன்னிடம் அளித்ததாக அவன் கூறுகிறான். அதிர்ச்சி அடைந்த ராணி அவனது மரணத்திற்கு அழுது கொண்டே மயங்கி சரிகிறாள். 

யோங் தலைநகரில், ஒரு அதிகாரப்பூர்வ ஆணை வாசிக்கப்பட்டு, சிங்-ற்கு ‘சிமெங் இளவரசி’ என்ற பட்டம் முறைப்படி வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சிங்-ஐ தனியே சந்தித்த ஜுக்கே யூ யோங் தேச அரசியலில் அவள் தலையிட வேண்டாமென்று எடுத்துரைக்க, சிங் உணர்வுகள் அற்ற குரலில் தான் இப்பொழுது இளவரசி என்பதால், அதற்கான மரியாதையை அளிக்க வேண்டும் என்றும், தனது பணியில் மீண்டும் தலையிட வேண்டாம் என்றும் அவனை எச்சரிக்கிறாள். மேலும் ஒரு காலத்தில் ஜுக்கே யூ தனக்கு கொடுத்த வாளைத் திருப்பிக் கொடுத்து விட்டு, அவர்களின் பாதைகள் இப்பொழுது பிரிந்து விட்டன என்பதையும் அவனிடம் தெளிவுபடுத்துகிறாள்.

சிமெங் தேசத்தில் குழப்பமான எண்ணங்கள் கொண்ட படை வீரர்கள் இப்போது தெளிவு பெற்று, அனைவரும் ஒன்றாக ஒரே குழுவாக மாறி, போருக்குத் தயாராகிறார்கள். இங்கு யான் தேசத்தில் யான் சூன்-னிடம் அவனது அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்க சம்மதம் தெரிவித்த பழங்குடியினரின் மறைத்து வைக்கப்பட்ட படைகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவனது ராணி ஹெலியன் லிங் அங்கு வந்து, அவளும், தளபதியும் இணைந்து யான் சூன்-னின் உத்திரவுப்படி இங்கு படைதிரட்டியதாக கூறுகிறாள். அவளுடைய ஹெலியன் பழங்குடி இன படை வீரர்களை மட்டுமின்றி, கிளர்ச்சியில் ஈடுபட்ட பழங்குடியின வீரர்களையும் ஒன்று திரட்டியதன் மூலம் கிடைத்த முப்பது ஆயிரம் குதிரை படைகளை யான் சூனியம் ஒப்படைக்கிறாள். இப்பொழுது யார் சூன்-னிடம் ஒரு வலிமை மிக்க பெரு படை உருவாகி இருக்கிறது.

அத்தியாயம் 36 – இன் சுருக்கம்

அத்தியாயம் 38 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top