Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 38 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 38

ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ன் துணை ராணி. இப்போது யான் தேச ராணியாகிறாள்.

யான் பேரரசு – வாரிசு யான் சூன் – சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்த போது ஜுக்கே யுவின் நண்பன். இப்போது யான் தேச மன்னன்.

சூ கியாவோ – சிங் என்று அழைக்கப்படும் இவள் ஜுக்கே யுவின் அடிமையாக வந்து சேர்ந்து, அவனால் போர்வீரங்கனையாக பயிற்சி கொடுக்கப்பட்டவள் – முன்னர் ஜுக்கே யுவின் தோழனாக இருந்த போது யான் சூனால் ஒரு தலையாக விரும்பப்பட்டவள். ஜுக்கே யு இவளுக்கு ‘சிங்’ என்று பெயரிட்டு அழைக்கிறான். யான் சூன்-க்கும் மற்றவர்களுக்கும் இவள் ‘சூ’

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். இப்போது யோங் நாட்டின் பட்டத்து இளவரசன்.

தளபதி ஸிங் லே – யோங் பேரரசின் வெளிப்புற இராணுவ பலத்தில் பாதியளவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதி. யான் சூன்-னால் காப்பாற்றப்பட்டவன்.

கிங்ஷான் மன்றம் – இது யோங் தேசத்தின் ஒரு குறுநில பகுதி. ஜுக்கே குலம் இதனை ஆண்டு வருகிறது. யோங் தேச மன்னனுக்காக கொலைகளையும், விசாரணைகளையும் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. பெரும் ஓற்றர்களை உருவாக்கி, பயிற்சி அளிப்பதும் கூட இவர்கள் தொழில். ஜுக்கே யூ இந்த குலத்தின் வாரிசு.

தளபதி யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி. ஏழாவது இளவரசனை விரும்புகிறவள்.

பியாண்டாங் தேசம் – யோங் தேசத்தின் அண்டை தேசம். இதன் பேரரசனின் காப்பாளராக சிங் இருக்கிறாள்.

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து இளவரசி. பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட இளவரசனான லீயான்-ன் மனைவி. வயிற்றில் குழந்தையுடன் தன் தாய் தேசத்துக்கே அடைக்கலம் தேடி வந்த இடத்தில் தன் குழந்தையையும் இழக்கிறாள்.

குவான்ராங் தேசம் – மிகவும் மூர்க்கமான வீரர்களைக் கொண்ட பழங்குடியினத்தின் தேசம்.

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். அவன் தந்தை கொலை செய்யப்பட்டதால் இப்போது அந்த நாட்டின் மன்னன்.

.

Rebirth அத்தியாயம் 38 – சுருக்கம்

யான் தேசத்தில் ராணி ஹெலியன் லிங் அந்த தேசத்தின் முதன்மை ராணியாக முடி சூட்டப்படுகிறாள். அதுவரை யான் சூன்-னின் ராணியாக இருந்தவள், அன்று முதல் யான் தேசத்தின் ராணியாக கௌரவிக்கப்படுகிறாள். அதே நேரத்தில் முக்கிய பழங்குடியின மூத்தவர்களின் பெண் பிள்ளைகள் யான் சூன்-னின் துணை மனைவிகளாக நியமிக்கப்படுகிறார்கள். தங்கள் குடும்பங்களின் விசுவாசத்தை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு நிலப் பகுதிகளும் வழங்கப்படுகின்றன. யான் தேசத்தை பாதுகாப்பதற்கும், உண்மையாகவே தான் நேசித்த பெண்ணை மீட்டெடுப்பதற்கும், தேவையான ராணுவ வலிமையை திரட்டுவதற்கு இந்த அரசியல் திருமணங்கள் ஒரு அவசியமான தியாகமாகிறது என்று அவன் நினைக்கிறான். யான் சூன்-னின் நினைவடுக்கில் இருந்த சிங்-ஐ அவன் அந்த தேசத்தின் மகாராணியாக முடிசூட்டி, அவளை ‘ஒரு நாள் மிகப் புகழ்பெற்ற மழையின் உச்சிக்கு குதிரையின் மீது சவாரி செய்து அழைத்துச் செல்வதாக’ அவளிடம் உறுதியளித்தது இப்போது அவனுக்கு நினைவு வருகிறது. அந்த அரசு ஆடம்பர விழாக்களுக்கு மத்தியிலும் யான் சூன் மனம் சிங்-ஐயே நாடுகிறது. 

திருமண இரவில் யான் சூன்-ம் ஹெலியன் லிங்-ம் அமர்ந்திருக்கும் பொழுது, அவள் மிகவும் வெளிப்படையாக பேசுகிறாள். தான் அவனுக்கு மனைவியாக வேண்டும் என்று நீண்ட கால கனவு கண்டது அது காதலுக்காக அல்ல என்றும், மாறாக தனது குலத்தின் பெருமையை சேர்ப்பதற்காகவும், தன் சகோதரனின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் என்று அவள் ஒப்பு கொடுக்கிறாள். இருவருமே ஒருவருக்கொருவர் தங்களின் நிலையை ஏற்றுக் கொள்கின்றனர். இது நடந்த மூன்றாவது நாளில் அவனது அனைத்து படைகளும் யோங் தேசத்தின் எல்லைப் பகுதிகளை நோக்கி புறப்பட தயாராகியது.

இதற்கிடையில் யோங் தேச தலைநகரில் அங்கிருக்கும் மூதாதையர் கோயிலுக்கு சிங் தனது சிமெங் நாட்டின் ராணுவ அதிகாரத்தை ஒப்படைக்கும் விழா நடக்கிறது. அவள் அந்த கூட்டணியில் அரச முத்திரையையும், கணக்கையும் பேரரசரிடம் முறைப்படி சமர்ப்பிக்கும் போது, அந்த அறையில் உள்ள சடங்கு கொடிகள் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கிறது. அங்கிருக்கும் முன்னோர்களை கோபமூட்டியதற்காக முகமற்ற கடவுளிடமிருந்து ‘தெய்வீக நெருப்பு’ வந்ததாகவும், அதற்கு இந்த சிங் காரணம் என்றும், அவளை உடனடியாக கைது செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் இந்த நிலைக்கு சிங் தயாராகவே இருக்கிறாள். அவள் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி காவலர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, பேரரசனின் கழுத்தில் கத்தியை வைத்து பிணைய கைதியாக அவனைப் பிடிக்கிறாள். கூடியிருந்த அமைச்சர்கள் வீரர்கள் எல்லோரின் முன்னிலையிலும் அதுவரை நடந்த நிகழ்வுகளை கூறி, பட்டத்து இளவரசனின் துரோகத்தையும் அம்பலப்படுத்துகிறாள். அந்த தீ தெய்வீகமானது அல்ல என்றும் அது பட்டத்து இளவரசனின் கட்டளையின்படி கொடிகளில் வைக்கப்பட்ட, தானாகவே தீப்பற்றக்கூடிய பொருளான தீக்கள் துகளின் விளைவு என்றும் அவள் விளக்கி கூறுகிறாள்.

முன்பு இந்த நகரில் ஏற்பட்ட துயரத்தின் போதும் இதே தந்திரமே கையாளப்பட்டிருப்பதாகவும், பட்டத்து இளவரசனின் போட்டியாளர்களை ஒழிக்கவே ‘முகமற்ற கடவுள்’ வழிபாட்டு குழுவை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அவள் வெளிப்படுத்துகிறாள். அதனால் பேரரசன் முன்னோர்களின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைப் பற்றிய தேடலை நடத்த உத்தரவிடுகிறான். அப்போது நடந்த சோதனையில் அக்கோயிலின் ரகசிய சுரங்கப்பாதைகள் தீக்கள் துகளால் நிரம்பி இருப்பதை தளபதி ஸிங் லே உறுதிப்படுத்தினான். இந்த சூழ்நிலை தீவிரமடைந்த வேளையில், ஒரு அவசர அறிக்கை வந்து சேருகிறது. அதாவது யான் தேசம் மற்றும் சிமெங் நாட்டின் மேற்கு கூட்டமைப்பு படைகள் யோங் தேச எல்லையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. அங்கிருக்கும் எல்லோரும் அந்த நெருப்பு விஷயத்தில் பட்டத்து இளவரசனைக் குறை கூறினாலும் அவனிடம் உள்ள பயத்தில் அமைதி காக்கிறார்கள்.

இதனை அடுத்து, பட்டத்து இளவரசன் பேரரசரிடம் ஒரு அடிமைப் பெண்ணுக்கும் தனது சொந்த வாரிசுக்கும் இடையே யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு நிர்பந்தம் செய்கிறான். அப்போது திடீரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்த ஒரு கம்பு பேரரசனின் நெஞ்சை துளைத்து, அவனை உயிரிழக்க செய்கிறது. அந்த அம்புத் தாக்குதல் நடத்தியது, இப்போது இளவரசனின் கூட்டாளியாகவும், கிங்ஷான் அவையின் தலைவனாகவும் இருக்கும் ஜுக்கே யூ. பேரரசன் உயிரிழந்ததை தொடர்ந்து பட்டத்து இளவரசன் அந்த நாட்டின் புதிய ஆட்சியாளனாக ஜுக்கே யூ-ஆல் பிரகடனப்படுத்தப்படுகிறான். சிங்-ஐக் கைது செய்வதற்காக வீரர்களுக்கும் உத்தரவிடுகிறான். 

அவளைக் காப்பாற்றுவதற்காக தளபதி யோ ஹுவான் பட்டத்து இளவரசனிடம் வந்து அவனை பிணைக்கதியாக கத்தியை காட்டி பிடித்து சிங்-கையும் அவளுக்கு உதவியாக இருந்த தளபதி ஸிங் லே-யையும் அரண்மனையில் இருந்து தப்பிக்க செய்கிறாள். அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பி சென்றதும், ஹுவான் இளவரசனுக்குத் தங்கள் காதலை நினைவூட்டி, போரை நிறுத்துமாறு அவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவனும் தனக்கு இனி வேறு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அதற்கு சம்மதிப்பது போல நடித்து, அவள் தனது பாதுகாப்பை குறைத்த உடனையே, மனதில் பெரும் துயரத்துடன் வேறு வழியின்றி அவளை இரக்கமின்றி குத்தி கொன்று விடுகிறான்.

சிங்-ம் தளபதி தளபதி ஸிங் லே-யும் உள்நாட்டிற்குள்ளே தலைமறைவாக இருந்து சூழலை உன்னிப்பாக ஆராய்கின்றனர். யான் தேசத்தின் யான் படைகள் யோங் தேசத்தின் தென்மேற்கு எல்லையை ஊடுருவி நுழையும் அதே வேளையில் 5000 வீரர்களை கொண்ட பியாண்டாங் தேசத்தின் படையும் அந்த ஆக்கிரமிப்பில் இணைந்து கொண்டதாக தகவல் வருகிறது. இதன் விளைவாக யோங் படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றன. 

சூழலில் விதம் இருக்க முன்பு யான் சூன்-னால் தற்செயலாக, தவறுதலாக வயிற்றில் குத்தப்பட்ட இளவரசி, இப்போது தன் வயிற்றில் தான் தாங்கி இருந்த கருவை இழந்ததால் தற்கொலைக்கு முயல்கிறாள். அதிலிருந்து அவளை முகமறியா புனித பெண் காப்பாற்றுகிறாள்.

யோங் தேச நாட்டின் அரசவையில், மன்னன் ஸாவோ சே-க்கும் மற்ற அமைச்சர்களுக்கும் போர் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்திற்கு இளவரசி வந்து ஒரு தீவிரமான தீர்வை முன்மொழிகிறாள். அதாவது குவான்ராங் தேச பழங்குடியினருடன் ஒரு திருமண கூட்டணி. தன்னை அவர்களின் தலைவனுக்கு திருமணம் செய்து கொடுத்து அதற்கு ஈடாக ஒரு லட்சம் வீரர்களை இந்த யோங் பேரரசை நிலைப்படுத்த வரவழைத்துக் கொள்ளுதல். 

இந்த திட்டம் அமைச்சர்களுக்கு இடையே  குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஜுக்கே யூ இந்த திட்டத்தை எதிர்த்து, குவான்ராங் தேச பழங்குடியினர் ரத்த வெறி கொண்ட நம்பத் தகாத காட்டுமிராண்டிகள் என்று எச்சரிக்கிறான். இதனால் ஜுக்கே யூ-வின் மீது ஏற்கனவே இருந்த சந்தேகம் இப்பொழுது மன்னன் ஸாவோ சே-க்கு அதிகரிக்கிறது. ஜுக்கே யூ அன்று ஏன் மறைந்த தன் தந்தையாகிய பேரரசனைக் கொன்றான் என்ற கேள்வி மன்னன் மனதை உருத்தியதால் அவனைத் தனியே முகம் தெரியா தெய்வத்தின் கோவிலில் சந்திக்கிறான். 

கோவிலில் மன்னன் ஸாவோ சே தன் மனதில் உள்ள சந்தேகங்களை அவனிடம் கேட்கிறான். அதாவது ஜுக்கே யூ உண்மையிலேயே யோங் தேசத்தின் வெற்றிக்காக ஒத்துழைக்கிறானா? இல்லை யோங் தேசம் தோல்வி அடைந்து திரும்ப, சிங்-உடன் சிமெங் நாட்டின் தலைவனாக போய் வாழ ஆசை கொள்கிறானா? என்றும், முந்தைய நாள் நிகழ்வில் அவன் தன் தந்தையை கொல்லவில்லை என்றால் சிங் தப்பி செல்ல வாய்ப்பு இருந்திருக்காது என்றும், தான் தளபதி ஹுவானை எல்லோருக்கும் முன் கொலை செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும் தெரிவிக்கிறான். இப்பொழுதும் ஜுக்கே யூ நிதானமாக தான் மன்னனின் நலனுக்காகவே அனைத்தையும் செய்ததாக உரைக்கிறான். ஆனாலும் மன்னனின் சந்தேகம் தீராமல் ஜுக்கே யூ-வை அவனின் எல்லை தெரிந்து நிற்க வேன்றுமென்று எச்சரிக்கவே செய்கிறான்.

அத்தியாயம் 37 – இன் சுருக்கம்

அத்தியாயம் 39 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top