பார்க்க வேண்டிய 2016 - ன் கே-டிராமாக்கள் - பகுதி 2
தவறவிடக்கூடாத 2016 ஆம் ஆண்டின் கே – டிராமாக்கள் – நாடகங்கள் பார்க்கும் நமக்கான நேரங்களில் கொரிய நாடகங்களைப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியான ஒன்று தான். போன பக்கத்தில் 2016 – ஆம் ஆண்டின் சில முக்கிய கொரிய நாடகங்களைப் பற்றி பார்த்தோம். இப்போது இந்த பக்கத்தில் இன்னும் சிலவற்றைக் காணலாம், வாருங்கள்.
தி லெஜென்ட் ஓப் தி ப்ளூ ஸி :
[ The Legend of the Blue Sea ]
நீலக்கடலின் புராணக்கதை காதல், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் கற்பனை ஆகியவற்றின் வேடிக்கையான கலவையாகும். தான் விரும்பும் மனிதனை (லீ மின் ஹோ) கண்டுபிடிக்க சியோலுக்குச் செல்லும் ஒரு தேவதை (ஜுன் ஜி ஹியூன்) கதையைச் சொல்கிறது. பணக்காரர்களை ஏமாற்றும் வேலை செய்யும் கதாநாயகன், இம்முறை கடல்கன்னி என்று தெரியாமலேயே கதாநாயகியை ஏமாற்ற முயற்சிக்கும் போது, அவளைப் பற்றிய உண்மைத் தெரியவருகிறது. அதன் பிறகு அவள் மீதுள்ள பிரியத்தால் அவளைப் பாதுகாக்க எண்ணுகிறான். நிலைமை இப்படி இருக்கையில் தன் குடுப்பத்தாரின் துரோகமும், அவர்களுடனான தனது முன் ஜென்ம வாழ்க்கைத் தொடர்பும் அடுத்தடுத்து தெரிய வர, இப்போது கதாநாயகனுக்கு ஒரு கேள்வி முன் வருகிறது. ” வரலாறு திரும்பவும் அதே போல நடக்கின்றதே. இப்போதும் முன் ஜென்ம முடிவைப் போலவே அமைந்து விடுமா?” – வெல்வது விதியா? இல்லை தன் மதியா? நாடகம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
The legend of the Blue Sea Trailer :
சிக்னல் :
[ Signal ]
இது ஒரு குற்றம் தொடர்பான சஸ்பென்ஸ் கதை நாடகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியிலிருந்து ஒரு இளம் பெண் கடத்தப்படும் அந்த நேரத்தில் தொடக்கப் பள்ளி மாணவராக இருந்து இந்த குற்றத்தை நேரில் பார்த்த மாணவன் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் குற்றவியல் விவரக்குறிப்பாளராக உள்ளார். அவருக்கு ஒரு பழைய வாக்கி-டாக்கி போலீஸ் நிலையத்தில் இருந்து கிடைகிறது. அதனோடு தொடர்பு ஏற்படும் போது தான் தன்னுடன் இப்போது தொடர்பு கொள்பவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உயிருடன் இருந்த இப்போது இல்லாத ஒரு போலீஸ் அதிகாரி என்று உணர்கிறார். மேலும் அவர் தான் சிறுவயதில் தன் கண் முன்னால் கடத்தப்பட்ட சிறு பெண்ணின் கேசை எடுத்து நடத்திக்கொண்டு உள்ளார் என்றும் தெரிய வருகின்றது. இவ்விருவர் மட்டுமின்றி மூன்றாவதாக இருவருக்கும் இடையில் வரும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி. மூவரும் ஒன்றிணைந்து நடந்தது என்ன? என்பதைக் கண்டுபிடிக்கின்றனர். வழக்கமான குற்றவியல் நாடகமாக இல்லாமல், இயல்பான தங்களின் நடிப்பால் பார்வையாளர்களை அடுத்தது என்ன? என்று எதிர்பார்க்கும் படி நாடகம் அமைந்திருப்பது சிறப்பு . 2016 – ஆம் ஆண்டின் சிறந்த நாடகங்களுள் இந்த நாடகமும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Signal Trailer :
சீஸ் இன் தி ட்ரப் :
[Cheese in the Trap ]
இந்த நாடகம் பல்கலைக்கழக மாணவ குழுவின் வாழ்க்கை மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டுள்ளது. பெண் பல்கலைக்கழக மாணவிக்கும் மற்றும் அவரது சீனியர் மாணவனுக்கும் இடையேயான நுட்பமான உறவை இந்த நாடகம் சித்தரிக்கிறது. ‘ஜங் தைராங்’ குழுமத்தின் பணக்கார மற்றும் பிரபலமான வாரிசாக கதாநாயகன் [ அல்லது வில்லனோ? ] வருகிறார். இருப்பினும், அவர் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நல்லவராகவும், கனிவானவராகவும் தோன்றினாலும், அவரின் இருண்ட பக்கம் காரணமாக, தன்னை எரிச்சலூட்டும் நபர்களை அழிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். குடும்பத்தின் மோசமான பின்னணி காரணமாக பகுதிநேர வேலை செய்பவராக வரும் இந்த அப்பாவி பெண், கதாநாயகனின் பார்வையில் பட்ட பிறகு என்ன ஆனது என்பதை வெகு நுட்பமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்கள். வெகு சிறப்பான நாடகங்களுள் இந்த நாடகத்தையும் கண்டிப்பாக கூறலாம்.
Cheese in the Trap Trailer :
வெயிட்லிப்டிங் ஃப்அரி கிம் பாக் ஜோ :
[ Weightlifting Fairy Kim Bok Joo ]
ஒரு தடகள கல்லூரி வளாகத்தில் பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது கனவுக்காக போராடுகிறார் கதாநாயகி. தடகள போட்டிகளில் பங்காற்றுபவராக வரும் கதாநாயகன் முதலில் இவரைக் கிண்டல் செய்கிறார். பின்னர் அவரை உணர்ந்து அவருக்கு உதவி செய்கிறார். இருவருக்கும் இடையில் வரும் காதல் இருவரின் கனவையும் பாதிக்குமா? பளுதூக்குதலில் மட்டுமே கவனம் செலுத்துவது அவளுடைய உறவை பாதிக்கும். ஆனால் பளுதூக்குதலை வாழ்க்கை மற்றும் காதலுக்காக விட்டுவிடுவது அவளது கனவுகளை அடைவதைத் தடுக்கும். இந்த குழப்பத்திற்கும், போராட்டத்திற்கும் தீர்வு என்ன? என்பதை டீனேஜ் காதலோடு கூறியிருக்கிறார்கள். இந்தத் தொடர் கல்லூரி விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவுகளுக்காகப் போராடி, டீனேஜ் அனுபவத்தை அனுபவித்து, அன்பைக் கண்டறிந்து, ஒவ்வொரு அடியிலும் வளர்ந்து வரும் ஒரு கதையாக காட்டப்படுகிறது.
Weightlifting Fairy Kim Bok Joo Trailer :
ரொமான்டிக் டாக்டர் கிம் :
[ Romantic Doctor Kim ]
ஒரு காலத்தில் ஒரு பெரிய மருத்துவமனையில் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவரைப் பற்றிய கதை இது. ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு, அவர் மறைந்து வேறு பெயரில் வேறு ஒரு சிறிய ஊரில், சிறிய மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றத் தொடங்குகிறார். அதே மருத்துவமனைக்கு தனது மோசமான குடும்ப பின்னணி காரணமாகவும், ஒரு விஐபியின் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தோல்வி காரணமாக பணிமாற்றம் செய்யப்பட்டு, புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த திறன்களைக் கொண்ட மற்றொரு ஆண் மருத்துவர் [ இன்னொரு கதாநாயகன் ] வருகிறார். அதே மருத்துவமனையில் மற்றொரு பெண் மருத்துவர்…இவர் இப்போது வந்து சேரும் அந்த மற்றொரு மருத்துவரின் காதல் ஒப்புதல் வாக்குமூலத்தால் சில காலத்திற்கும் முன்பு திசைதிருப்பப்பட்டவள், அவளுடைய காதலனின் விபத்தில் ஏற்பட்ட மரணத்திற்குப் பிறகு குற்றவாளியாக உணர்ந்ததால், அந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து காணாமல் போய், இங்கு வந்து பணிபுரிபவர். இந்த மூவரின் கூட்டு செயலால் ஏற்படும் விளைவுகளை மருத்துவத் துரையின் பெருமையோடு, காதளையும் சேர்த்துக் கூறியிருக்கிறார்கள்.