நீங்கள் கொரிய ஃபேஷனுக்கு புதியவரா? அப்படியெனில் அது உங்களை நிச்சயம் ஆச்சிரியப்படவைக்கும். பொதுவாக ஏதாவது பெருவிழாக்களுக்கு மேல் தட்டு மக்கள் உடுத்தும் உடைகளை உற்று கவனித்தீர்கள் என்றால் அது நம் கலாச்சாரத்தோடு மிக லேசாக அவர்களின் ஃபேஷன் வடிவமைப்புகளும் கலந்திருப்பதைக் காணலாம். முக்கியமாக ஆண்கள் உடைகள் அவ்வாறு இருக்கும்.
Korean drama dream world in Tamil / கொரிய நாடக கனவு உலகம்
பொதுவா கொரியன் நாடகங்களைப் பார்த்தோமென்றால், அவர்கள் உடுத்தும் உடைகள் அவர்களின் சூழ்நிலையோடு [குளிர் மற்றும் இதமான வெயில்] பொருந்துகிற விதங்களிலேயே அணிந்திருப்பார்கள் ….[korean drama in tamil]
அவை வெளிஉலகத்தின் அன்றைய பேஷன் அல்லது புதிதாக மக்களிடையே பிரபலம் அடைந்திருக்கும் உடைகளோடும் பொருந்திப் போகும். உடைகள் மட்டும் அல்ல, அதில் அவர்கள் அணியும் அணிகலன்கள், பயன்படுத்தும் பொருட்கள் கூட, அப்படித்தான்…
உதாரணமாக பெண்கள் அணியும் காதணி கூட அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அதை அணியும் முறை கூட வித்தியாசம்தான்….[korean drama in tamil] ஒரு நாடகம் வெளிவந்த பின் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே அதில் பயன்படுத்தும் பொருட்கள், ஆன்லைன் விற்பனைச் சந்தையின் உச்சத்தைத் தொட்டுவிடும், என்பதும் உண்மை.
அதனாலேயே ‘நாகரீக உலகத்தின் தற்போதைய போக்கு எவ்வாறு உள்ளது‘ என்பதை நீங்கள் அறிய வேண்டுமாயின் கொரியன் நாடகங்களைத் தொடர்ந்து பார்த்தாலே அறிந்துகொள்வீர்கள்…அவர்கள் தங்கள் நாடகங்களை எடுக்கப் பயன்படுத்தும் கேமராக்கள் கூட, மிக உயர்ந்த தரமானவையே, என்று படித்திருக்கிறேன்.
அது மட்டும் அல்ல, முக்கியமாக அதில் நடிக்கும் நடிகர்கள் மிகவும் அழகான, கவர்ச்சியானவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் நடிப்புத்திறனும் அபாரமாகவே இருக்கின்றது…[என்னைப் பொருத்தவகையில் ஹீரோக்களை விட அதில் வரும் வில்லன்களின் நடிப்புத்திறன் தான் என்னை வெகுவாக கவர்கிறது.] ஆசிய கண்டத்தில் மிகப் பிரபலமான பல நடிகர்கள் கொரியாவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்….[korean drama in tamil] சில நடிகர்கள் [லீ மின் ஹோ மாதிரி ]கொரியன் நாடக வாயிலாக அமெரிக்காவிலும் கூட பிரபலம் தான்..
தேவையில்லாமல் எந்த காட்சியும் நாடகத்தில் திணிக்கப்படுவதுஇல்லை…அதே போல எவ்வளவு பெரிய நடிகர், நடிகைகள் ஆனாலும் கூட, நாடகத்தில் தேவையில்லாமல் ஒரு காட்சியிலும் நுழைவது இல்லை. காதல் கதைகளில் கூட தேவையில்லாத காட்சிகள், வெளிநாட்டுப் படங்களைப் போல திணிக்கப் படுவதில்லை. அதனாலேயே பெரும்பாலான கொரியன் நாடகங்களை அசௌகர்யமோ, உறுத்தலோ இல்லாமல் பார்க்க முடிகிறது. [எனக்கே ‘ஜீரா‘ இருக்கும் பாத்திரத்திற்குள்ளே தவறி விழுந்தது போல ஒரே தித்திப்பாக இருக்கிறது…ஐயோ……!!!][korean drama in tamil]