Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 10 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 10

லிங் யூ – சிமெங் [Ximeng ] மன்னனின் ராணி – சிமெங் நாட்டில் உள்ள லிங் யூ குறுநில பெண். 

லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். தன் பாதுகாப்பில் இருக்கும் யோங் தேசத்து முன்னாள் இளவரசி ஜாவோ சுன்’எர்-ஐ நேசிக்கிறான்.

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் பாதுகாப்பில் இருக்கிறாள். 

Rebirth அத்தியாயம் 10 – சுருக்கம்

யான் தேசத்தில் யான் சூன் தன்னை விட்டு சிங் போய்விட்ட துக்கத்தில் தனது லட்சியத்தை மறந்து நடக்கிறான். அவனது அலட்சியத்தால் எல்லோரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஒரு நாள் சிங் போலவே தோற்றம் உள்ள பெண்ணின் நடத்தை ரசித்துக் கொண்டு இருக்கும் போது, யோங் இராணுவம் குறித்த அவசர உளவுத் தகவல்களைத் தனது தளபதிகள் கொண்டு வரும்போது கூட அவன் அலட்சியமாகவே இருக்கிறான். யான் சூன் தன்னை ரசிப்பதை தவறாக புரிந்து கொண்ட நடனப்பெண் அவனை மயக்க முயற்சிக்க, யான் சூன் ஒரு சாதாரண நடனக்காரியால் எப்படி இவ்வளவு விலையுயர்ந்த நகைகளை வாங்க முடிந்தது என்று கேள்வி எழுப்பியவாறே, அவன் அவளைக் கழுத்தில் பலமாகப் பற்றிக்கொள்கிறான். தன் அரியணைக்காக தன்னிடம் பேல் பழங்குடியினரால் அனுப்பப்பட்ட மூத்த பேலின் பெண் என்பதை யான் சூன் உணர்த்திருக்கிறான். மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டத்தை அவர்கள் முயற்சித்தால் அவள் உயிருடன் வெளியேற மாட்டாள் என்ற கோபமான எச்சரிக்கைக்குப் பிறகு, அச்சமடைந்த அந்தப் பெண் வெளியேறுக்கிறாள். 

இதற்கிடையில், தனக்குத் தேவையான மருந்தைபெறுவதற்காக, சிமெங் மன்னரின் இரண்டாவது பணியை ஜுக்கே யூ ஏற்றுக் கொள்கிறான். மன்னனின் முகமூடியை அணிந்து கொண்டு மன்னனாக ஜுக்கே யூ ராணியின் துணையுடன் பியான்டாங் நகருக்கு செய்கிறான்.அவர்களை வரவேற்கும் அரச குழுவில் இருக்கும் சிங் முகமூடி மனிதன் உண்மையில் மன்னன் இல்லை என்றும், அது ஜுக்கே யூ தான் என்றும், புரிந்துகொள்கிறாள். அதனை அருகில் இருக்கும் லீ சே-வுக்கும் தெரியப்படுத்துகிறாள். வரவேற்பு விருந்தின்போது, ​​பியான்டாங் பேரரசி வேண்டுமென்றே பகைமை உணர்வுடன் நடந்துகொள்கிறாள். 

உள்ளூர் மரபுகளைச் சுட்டிக்காட்டி, சிமெங் மன்னர் தனது முகமூடியைக் கழற்ற வேண்டும் என்று அவள் கோருகிறாள்.  போரின் விளைவாகத் தனது முகம் சிதைந்துவிட்டதைக் காரணம் காட்டி மன்னர் மறுக்கும்போது, பேரரசி மிரட்டலால், சிங் இதில் தலையிட்டு, பட்டத்து இளவரசர் லி சே போன்ற சம அந்தஸ்து கொண்ட ஒருவர் மட்டுமே மன்னரின் முகத்தைத் தனிமையில் காண வேண்டும் என்று பரிந்துரைக்கிறாள். அரசவையும் ஒப்புக்கொள்ள, லீ சே மன்னனின் முகத்தை தனிமையில் பார்க்கிறான். அது ஜுக்கே யூ தான் என்பதை தெரிந்து கொண்ட லீ சே வெளியே வந்து உண்மையில் மன்னரின் முகம் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாகத் தான் இருக்கிறது என்று பொய் உரைக்க, அரசவை முகமூடி விஷயத்தைக் கைவிடச் சம்மதிக்க வைக்கிறது. 

இருந்தும் சிமெங் விருந்தினர்களைத் தொடர்ந்து சீண்டும் நோக்கில், தன் சிறையில் இருக்கும் சிமெங் நாட்டின் வீரர்களை அழைத்து வந்து போட்டிக்கு ஏற்பாடு செய்கிறாள். பின் அது தொடர்ந்து ராணியை சிங்-ற்கு எதிராக மோதவிடுகிறாள். தன் உடல் இன்னமும் முழுமையாக தயாராகாத நிலையில் அவள் ராணிக்கு  ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறாள். அவளைக் காப்பாற்றிய ஜுக்கே யூ ராணியைப் போரிலிருந்து விலகுமாறு கடுமையாகக் கட்டளையிடுகிறான். இந்த நிகழ்வு பேராசிக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, சிமெங் மன்னன், இளவரசன் லீ சே, மற்றும் சிங் ஆகியோருக்கு இடையேயான விசித்திரமான, வெளிப்படுத்தாத ஒரு கடந்த தொடர்பு இருக்குமோ என்று உணர்கிறாள்.

இளவரசன் லீ சே, சிங் இருவரும் மாளிகைக்குத் திரும்பும் போது, சிங் லீ சே-விடம் ஜுக்கே யூ இங்கு வந்த காரணத்தை அறிய வேண்டும் என்று கூறி, சிமெங் மன்னனின் இருப்பிடம் நோக்கி, யாருக்கும் தெரியாமல் செல்கிறாள். ரகசியமாக சிங் தன் மாளிகையின் உள்ளே வந்திருப்பதை அறிந்த ஜுக்கே யூ-க்கு கடந்த காலத்தில் இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் நினைவுக்கு வருகிறது. இப்போது இருக்கும் அடிமை விதிமுறைகளை ஏற்று வாழும் ஜுக்கே அதனை எதிர்த்து போராட்டத்தை மேற்கொண்ட சிங்-யிடம், அவள் தேர்ந்து எடுத்த யான் சூன் முன்னர் இருத்தது போன்று எப்போதும் இருக்க மாட்டான் என்றும், இந்த போராட்டத்தில் நீ தனியாகவே செல்ல நேரிடும் என்றும், என்றாவது போராட்டத்தில் அவள் பின்வாங்கும் சூழல் உருவானால் தன் மாளிகை அவளுக்காக காத்திருக்கும் என்றும் கூறுகிறான். அதனை எண்ணி திரும்ப, சிங் அங்கிருந்து சென்றுவிட்டதை உணர்கிறான். 

அப்போது அங்கு வந்த ராணி, விஷம் அருந்தி மன்னனிடம் ஜுக்கே யூ சிக்கி இருப்பது, இன்று இளவரசி ஃபூ என்ற பெயரில் வந்த பெண்ணுக்காகத் தான் என்று தனக்குத் தெரியும் என்றும், அவளைக் காப்பாற்றியதோடு முடிந்தது என்று அவன் விலகிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிடில் அவளைக் கொல்ல நேரிடும் என்று ஜுக்கே வை எச்சரிக்கிறாள். கோபம் கொண்ட ஜுக்கே, ராணியின் முத்திரையை எடுத்து அவளிடம் காட்டி, 5 வருடத்திற்கு முன் சிமெங் மன்னன் அவளின் கணவனைக் கொடூரமாக கொன்ற பிறகு, அவனைப் பின்பற்றி அவளின் லிங் யூ மக்களுக்குத் துரோகம் செய்த லிங் யூ ராணி அவள் என்று எடுத்துக் கூறி, மிகப்பெரிய போர்தந்திரம் மிக்க ராணி உண்மையில் சிமெங் மன்னனின் அடிமை என்று நக்கல் செய்ய, கோபம் முடிந்த ராணி கொல்ல முயல, அதை முறியடித்த ஜுக்கே தன்னைத் திரும்பவும் சிங்-ஐ வைத்து மிரட்டினால், இந்த நகரத்தை விட்டு தான் உட்பட ஒருவரும் உயிருடன் திரும்ப முடியாது என்று மிரட்டிச் செல்கிறான். 

வேறு ஒரு பகுதியில் இளவரன் லீயான் இளவரசி ஜாவோ சுன்-னிடம் தன் அன்பை வெளிப்படுத்த முயல் குட்டி ஒன்றை பரிசளிக்க, அது அவளுக்கு யான் சூன்-ஐ நினைவு படுத்துகிறது. இந்த நினைவுகளில் இருந்து தனக்கு விடுதலையே கிடையாதா? என்பது போல இளவரசி அழ, இளவரசன் லீயான் ஆறுதல் அளிக்கிறான்.

அத்தியாயம் 9 – இன் சுருக்கம்

அத்தியாயம் 11 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top