Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 7 – சுருக்கம் 

.

Home நாடகங்கள் சைனீஸ் நாடகங்கள் > Rebirth Episode 7

லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன்

லி ஜியாவோ – பியாண்டாங் தேசத்தின் பேரரசர். மது மாது என்று சந்தோஷத்தில் திளைத்து, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்.

ஜான் ஜியு – பேரரசின் ரகசிய அன்புக்கு உரியவன்.  சடங்குகளின் மாபெரும் அமைச்சர். [ அந்த காலத்தில் அங்கு ஜோதிடர்களின் அதிகமும், அவர்களின் சடங்குகளின் நிகழ்வுகளும் மன்னர்களின் அரண்மைகளில் மிக பிரபலம்.]

மிங் லூ – பட்டத்து இளவரசரின் முதன்மைப் பணிப்பெண்.

ஜாவோ குவோ – யோங் தேசத்தைச் சேர்ந்த முஹே குலத்தின் அரசாங்க பணியாள். முஹே குலம் சிங் ன் எதிரி. 

ஜுக்கே ஹுவா – ஜுக்கே யூ வின் உறவினன். அடிமைகளை சித்ரவதைகளைச் செய்து ரசிக்கும் கொடூரன். 

Rebirth அத்தியாயம் 7 – சுருக்கம்

தன்னிடம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, அவளுடனேயே இருந்துவிட வேண்டுமென ஆசையை வெளிப்படுத்திய சிங்-யிடம் ஏதும் கூறாமல் அங்கிருந்து வருத்தத்துடன் சென்றுவிடுகிறான் ஜுக்கே யூ. அப்போது அங்கு வந்த லீ சே விடம் தனக்கு பார்வை வந்துவிட்டதை சிங் தெரியப்படுத்துகிறாள். 

சிங் ஒரு உணவகத்தின் மேல் மாடியில் லீ சே யின் வருகைக்காக காத்திருக்கும் போது, ஜுக்கே யூ வை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தாள். அவர்களின் முதல் சந்திப்பு அது. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவள் ஜுக்கே ஹுவா வின் ஹாங்ஷான் அரசவையில் ஒரு சாதாரண அடிமையாக இருந்தாள். தனது பொழுதுபோக்கிற்காக அடிமைகளை நெருப்புக் கங்குகளில் நடக்க வைத்து ரசிக்கும் கொடூரமான ஜுக்கே ஹுவாவின் இல்லத்தை சிங் யாருக்கும் தெரியாமல் நெருப்பு வைக்க, நெருப்பைக் கண்டு அங்கு வீரர்களுடன் வந்து சேருகிறான் ஜுக்கே யூ. 

அவனின் தலையீட்டால் அங்கு மாட்டி இருக்கும் அடிமைகள் தப்ப, அவர்களில் சிங்-யிடம் மட்டும் அவனுக்கு அனுதாபம் தோன்றுகிறது. மற்ற அடிமைகள் போல பயந்து போய்விடாமல், கையில் வாளை எடுத்து தாக்க வந்த வீரத்தை ரசித்து, அவளுக்கு முறையாக வாள் பயிற்சியைக் கற்றுக்கொடுப்பதாக கூறுகிறான்.

அதே உணவு விடுதியின் மற்றொரு பக்கத்தில் இருந்த ஜுக்கே யூ வை சிமெங் மன்னனின் ராணி லிங் யூ சந்தித்து, உடல் முழுவதும் பரவிய விஷத்தால் பலவீனமாக இருந்த அவனை பலவந்தமாக தங்கள் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறாள். 

நடந்த இந்த கடந்த கால நினைவுகளை யோசித்துக்கொண்டு இருக்கும் போது, லீ சே வந்து ஆவலுடன் உணவு உண்ணத் துவங்குகிறான். ஆனாலும் அவளின் எண்ணம் மீண்டும் ஜுக்கே யூ பற்றியே யோசிக்கிறது. யான் சூன் பக்கம் நின்று யான் தேசத்திற்காக சிங் யோங் தேசத்திற்கு எதிராக போர் செய்யும் சூழல் வந்தது. அன்று போர் துவங்கும் முன்பு, யான் தேசத்தில் ஜுக்கே யூ யாருக்கும் தெரியாமல் சிங் ஐ சந்திக்கிறான். இருவருமே அமைதியாக வாக்குவாத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த கடமை, பொறுப்பு, வெறுப்பில் இருந்து இருவருமே விடுபட்டு விடலாமா என்று கடைசி முறையாக ஜுக்கே கேட்க, அவளோ இது தான் தேர்ந்தெடுத்தது அல்ல, தனக்கு விதிக்கப்பட்டது என்றும், தனது ராணுவத்தை விட்டு விட இயலாது என்றும் கூறி, எப்போதுமே எதிரியாகவே இருப்பது தான் தம் இருவரின் விதி என்றும் கூறி, மறுத்துவிடுகிறாள். இந்த நிகழ்வை எண்ணி, அன்று அவன் கேட்ட போது, தான் மறுத்துவிட்டோம். இப்போது தான் கேட்டு, ஜுக்கே ஒன்றும் சொல்லாது சென்றுவிட்டது, அவளை வருத்தியது.

இங்கு மந்திரத்தின் மூலம் மீண்டு வந்த யான் சூன் தெய்வீகப் பாதுகாப்பு பெற்ற ஆட்சியாளர் என்ற பெயருடன் யான் தேசத்திற்கு தளபதி செங் மற்றும் சூனியக்காரி பெண் யுவானுடன் திரும்பியபோது, படைத்தளத்தில் அனைவரும் யான் க்கு கட்டுப்படுகிறார்கள். பெண் தளபதி ஹுவான் உள்ளூர் படைகளுக்குத் தலைமை தாங்குவதைக் கண்டான். யான் இல்லாத நேரத்தில் அவன் படைகளுக்குத் தலைமை தாங்கி உள்ளூர் கிளர்ச்சியை அடக்கி அப்பகுதியை நிலைப்படுத்தியதற்காக எல்லோருக்கும் முன் அவளை பாராட்டி, அவளின் பழங்குடியின இடத்திற்கே திருப்பி அனுப்புகிறான். ஆனாலும் தன் அனுமதி இல்லாமல் பெண் தளபதி ஹுவான் தன் இடத்திற்கு வந்தது பிடிக்காததால், பெண் தளபதி ஹுவான் தனது இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவளைக் கொல்ல யானின் கறுப்புக் கழுகுப் படையைச் சேர்ந்த கொலையாளிகளை அனுப்புகிறான். அவள் கடுமையாகப் போராடித் தப்பித்தபோதிலும், பலத்த காயமடைந்தாள். அரண்மனையில் யான் சூன் தான் சூனியக்காரி பெண்ணுக்கு கட்டுப்பட்டு நடக்க விரும்பாததால் சூனியக்காரியை இரக்கமின்றி கொன்று, அவளுக்குப் பெண் தளபதி ஹுவனின் உடையை அணிவித்து ஒரு எச்சரிக்கையாக, அந்த சடலத்தைப் பொதுவெளியில் காட்சிப்படுத்த அவன் உத்தரவிட்டான். எல்லோரும் அது தளபதி ஹுவான் என்று பயத்துடன் நினைக்க, யான் ஐ திருமணம் செய்து ராணியாக விரும்பும்  பழங்குடி பெண் ஹெலியன் லிங் சடலத்தின் கையில் பச்சை குத்தி இருந்ததைப் பார்த்து அது சூனியக்காரி என்று புரிந்து அதிர்ச்சியாகிறாள். 

சிமென் தேசத்தில் சிறையில் கொடிய விஷத்தால் வேதனைப்பட்டு துடித்துக்கொண்டு இருக்கும் ஜுக்கே யூ ஐ பார்க்க சிமெங் மன்னன் வருகிறான். மாற்று மருந்து ஏதுமின்றி ஜுகே யூ இவ்வளவு காலம் உயிர் பிழைத்திருந்ததைக் கண்டு மன்னன் பிரமித்து, அவனைப் போல ஒரு அடிமை தனக்கு தேவை என்று புரிந்து ஒரு ஒப்பந்தத்தை முன்வைக்கிறான். அதாவது மன்னனின் “நிழலாக” மாறக் கட்டாயப்படுத்தப்பட்டான். ஒப்பந்தம் ஜுக்கே யூ -ஆல் ஏற்கப்பட்டு, ஆபத்தான பணிகளைச் செய்யும் பொறுப்புடன் கூடிய ஒரு இரகசிய, உயர்நிலை அடிமையாக மாற்றப்படுகிறான்.

சிங் ஐ பற்றி அறிந்து கொள்ள, லீ சே ன் மாளிகையில் சிங் ன் அறைக்குள் முகமூடி அணிந்த ஒருவன் வந்து தேடுதலில் இருக்கும் போது அங்கு சிங் வந்துவிட, இருவருக்கும் நடக்கும் சண்டையின் இடையே அவன் தப்பிச்சென்று விடுகிறான். மறுநாள் இது பற்றி சிங் மற்றும் லீ சே இருவரும் பேசும்போது, வந்தது ஒரு பெண் என்றும், அவள் தான் வைத்திருந்த தனது படையின் கொடி-யைப் பார்த்துவிட்டதாகவும் சொல்கிறாள். இருவரும் பேரரசியை சந்தேகபடும் போது, பேரரசி அழைப்பதாக கூற, இருவரும் செல்கிறார்கள். 

சிங் இளவரசி ஃபூ என்று இளவரசன் லீ சே கூறிஇருந்த படியால்,  அரண்மனையில் பேரரசி இளவரசி ஃபூ பற்றி கேள்விகள் கேட்க, முன்னரே லீ சே கூறியிருந்த விஷயங்களைக் கொண்டு சிங் சரியாக பதிலளிக்கிறாள். இருந்தாலும் இவள்  இளவரசி ஃபூ இல்லை என்றும், இவள் யோங் தேசத்து கொலைகாரி சிங் என்றும் பேரரசி கூற, லீ சே மறுத்து திரும்ப அழைத்துச் சென்றுவிடுகிறான். 

சிங் இளவரசி ஃபூ என்று இளவரசன் லீ சே கூறிஇருந்த படியால்,  அரண்மனையில் பேரரசி இளவரசி ஃபூ பற்றி கேள்விகள் கேட்க, முன்னரே லீ சே கூறியிருந்த விஷயங்களைக் கொண்டு சிங் சரியாக பதிலளிக்கிறாள். இருந்தாலும் இவள்  இளவரசி ஃபூ இல்லை என்றும், இவள் யோங் தேசத்து கொலைகாரி சிங் என்றும் பேரரசி கூற, லீ சே மறுத்து திரும்ப அழைத்துச் சென்றுவிடுகிறான். பேரரசி தன் காதலன் ஜான் ஜியு-விடம் சிங் பற்றி யான் மற்றும் யோங் தேசத்தில் விசாரிக்கும் படி கூறுகிறாள். 

பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான் தான் காப்பாற்றிய யோங் தேசத்து இளவரசி ஜாவோ சுன்’எர் உடன் பியாண்டாங் நகரத்திற்கு வருகிறான். அவனை பேரரசி அரண்மனைக்கு அழைக்கிறாள். அதே போல இளவரசி ஃபூ திரும்ப வந்ததற்காக அரண்மனையில் விருந்து என்று கூறி, அவளையும் அங்கு அழைக்கிறார். விருந்து நடக்கிறது. இளவரசன் லீயானும் வருகிறான். இளவரசன் லீயானும் இளவரசி ஃபூ-ம் சிறு வயது தோழர்கள். அதனால் அவனிடம் பேரரசி இவள் இளவரசி ஃபூ தானா என்று கேட்கிறார். தனிமையில் இருவரும் பேசி ஒரு உடன்படிக்கைக்கு வந்ததால், இளவரசன் லீயான் அவளை இளவரசி ஃபூ தான் என்று பொய்யாக அடையாளம் காட்டுகிறான். 

தன் மாளிகைக்குத் திரும்ப விரும்ப போது, பேரரசி தனது தாயாக இருந்த போதும், தன்னை விட அதிகாரத்தையே எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதும் ஒரு உணர்ச்சியற்ற பெண் என்றும், பேரரசி தன்னை ஒரு அச்சுறுத்தலாகக் கருதிவிடாமல் இருக்கவே, தான் ஒரு ‘பொறுப்பற்றவன்’ போல நடக்கவேண்டி இருக்கிறது என்றும், லீ சே சிங்-யிடம் கூறுகிறான். நெகிழ்ந்துபோன சிங், தன் கையில் ஏற்பட்ட காயம் குணமானதும், தான் அவனுக்குத் துணையாக நின்று, அவனுக்குரிய பதவியை அடைவதற்குத் தான் உதவுவதாக உறுதியளிக்கிறாள். 

அத்தியாயம் 6 – இன் சுருக்கம்

அத்தியாயம் 8 -இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top