Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 8 – சுருக்கம்

.

ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன்.  

சுன்சிங் – இளவரசன் லீயான்-ன் பணிப்பெண் 

மோஜான் – இளவரசன் லீயான்-ன் உதவியாளன். சுன்சிங்-ன் காதலன்.

லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன்

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்தவன். இப்போது இளவரசன் லீயான் பாதுகாப்பில் இருப்பவள்.

சிமெங் – சிமெங் தேசத்தின் மன்னன் 

லிங் யூ – சிமெங் [Ximeng ] மன்னனின் ராணி – சிமெங் நாட்டில் உள்ள லிங் யூ குறுநில பெண் 

Rebirth எபிசொட் – 8 சுருக்கம்

பேரரசியின் கனவில் அவரது மறைந்த முன்னாள் கணவனின் ஆவி வந்த அச்சுறுத்துகிறது. தன் மனைவியையும் மகனையும் காப்பாற்ற முன்னாள் பேரரசன் முயலும் பொழுது உயிர் துறந்து விடுகிறான். ஆனால் அவன் மனைவி தன் கணவனின் தம்பியை மணந்து கொண்டது மட்டும் அல்லாது அவளின் மகனையும் பாதுகாக்க தவறி விடுகிறாள். பேரரசியின் கனவில் இந்த குற்ற உணர்வு கனவாக வந்து ஒவ்வொரு நாளும் அச்சுறுத்துகிறது. அந்தப் பதட்டத்தில் அவள் இருக்கும் பொழுது பேரரசியின் அந்தப்புர அறைக்குள் ஜான் ஜியு நுழைந்து அவளை சமாதானப்படுத்துகிறான். இந்த குற்ற உணர்வால் அவளின் ஆழ்மனதிற்குள் இப்போதைய பேரரசரின் மேல் ஆத்திரம் கனன்று கொண்டே இருக்கிறது.

தன்னை இங்கு அழைத்து வந்தவன் உண்மையில் பியாண்டாங் ராஜ்ஜியத்தின் இளவரசன் என்பதை அறிந்ததும், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் மீண்டும் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததும், யோங் ராஜ்ஜியத்தின் முன்னாள் இளவரசியான ஜாவோ சுன்’எர் அங்கிருந்து புறப்படத் தயாரானாள். அரச குடும்பத்தின் மேல் அவளுக்கு இருந்த வெறுப்பின் காரணம் தெரியாமல் வருந்திய இளவரசன் லியான் அவளைத் தடுத்து, தான் இந்த ராஜ்ஜியத்தில் ஒரு கைப்பாவை இளவரசர் மட்டுமே என்றும், தன் வாழ்நாள் முழுவதும் பேரரசரின் தொடர்ச்சியான சந்தேகத்தின் கீழ் வாழ்வதாகவும் விளக்குகிறான். அவள் ஒரு எளிய, சாதாரண வாழ்க்கையை விரும்புகிறாள் என்று நம்பிய அவர், தனது அரண்மனையில் இருந்த பணிப்பெண்கள் அனைவரையும் வரவழைத்து, அவர்களின் கடமைகளிலிருந்து விடுவித்து, அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவும் வகையில் வெள்ளிப் பரிசுகளுடன் அனுப்பி வைக்கிறான். இளவரசர் லியான் இளவரசிக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்தாலும் கூட,  அவளது மனம் கடந்த கால வேதனை நினைவுகளால் சூழப்பட்டு தான் இருக்கிறது.

இளவரசன் லீ சே-ன் மாளிகையில் இளவரசன் லீயான் கேட்ட இளவரசி ஃ பூ-ன் வரைபடத்தை அரண்மனையில் யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து அளிக்கிறான். மேலும் சிங் குறித்து பேரரசியிடம் பொய் கூறிய காரணத்தையும் கேட்கிறான். இளவரசனின் தந்தையும், அப்போதைய பட்டத்து இளவரசரும் ஒரே தாய்க்கு பிறந்தவர்கள். இருவரையும் கொன்றுவிட்டு தம்பி உறவில் இருப்பவன் மன்னனாகினான். பட்டத்து இளவரசரின் மகனைக் கொன்று மனைவியை தனக்கு மனைவி ஆக்கினான். இளவரசன் லீயான் ஐ தன் தந்தையுடன் நாடு கடத்தினான். பலவருடங்கள் கழித்து இப்போது தான் லீயான் தன் நாட்டிற்கு திரும்புகிறான். எனினும் இந்த அரண்மனையில் உள்ள சாதாரண பணியாளரின் பவர் கூட இளவரசனுக்கு இல்லை. இதனை லீ சே க்கும், சிங் க்கும் எடுத்துக்க கூறிவிட்டு, அவர்களின் அதிகாரத்தின் கீழ், எப்பொழுதும் தான் அதிகாரம் இல்லாதவன், அதனால் தான் பல வருடங்களுக்கு முன்னால் இளவரசி ஃ பூவைத் தன்னால் காப்பாற்ற இயலவில்லை என்றும், அதேபோல சூழ்நிலை இன்று வரவும் தனக்கு சிங்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் கடவுள் இன்னொரு வாய்ப்பு தனக்கு தந்ததாக எண்ணி சிங்கை காப்பாற்றி அதைத் தான் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறான். இதனால் பேரரசர், பேரரசி க்கு எதிராக 2 இளவரசர்களும் கரம் கோர்க்கிறார்கள். 

யான் தேசத்தில் யான் சூன் நினைவில் சிங் கடைசியாக பனி நீருக்கு அடியில் புதைந்து போனதே இருந்ததால், பனி நீரில் தனது இடைவிடாத தேடலை தொடர்ந்தான். தளபதி செங்-கால் கொலை செய்யப்பட்ட சிங்-ன் பெண் தோழி ஜோங் யூ-ன் மொத்த குழுவும் யான் தேசத்தால் அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவனிடம் சென்று யான் சூன்-னின் விசாரணை முடிவடைகிறது. ‘தன்னை யோங் தேசத்தில் இருந்து காப்பாற்றிய அமைப்பையே அழித்த ஒரு நன்றி கெட்ட மனிதன்’ என்று தூற்றிய அவன் கடைசியில் பனி நீரிலிருந்து சிங் காப்பாற்றப்பட்டாள் என்ற உண்மையை உரைக்கிறான். அப்பொழுது தான் யான் சூன் தளபதி சென் யுவான் சிங்-ஐப் பிடிக்க அவளின் தோழி ஜோங் யூ-வைக் கொலை செய்ததையும் அறிந்து கொள்கிறான். யான் சூன்-னின்கோபத்தை அறிந்த தளபதி செங் அவனின் பழிவாங்கும் நடவடிக்கைக்குத் தடையாக சிங் இருப்பதால் அவளை அகற்றுவதற்காக மட்டுமே தான் அவ்வாறு செய்ததாக அவனிடம் கூறுகிறான். இருந்தும் யான் சூன் கோபம் கொண்டு தளபதி செங் ஐ நாடு கடத்தி இனி ஒருபோதும் தன் முன் தோன்றக்கூடாது என்று எச்சரித்து அனுப்புகிறான்.

லீ சே வின் மாளிகையில் அவனின் பாதுகாப்பிற்காக சிங் செய்யும் சில வேலைகளால் அவளுடைய முன்னிலையில் ஒரு புதிய பாதுகாப்பு உணர்வை லீ சே உணர்கிறான். மேலும் லி சே விடம் தற்காப்புக் கலைத் திறன்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட சிங் அவனுக்கு மூன்று குறிப்பிட்ட தற்காப்பு உத்திகளைக் கற்றுக் கொடுக்கிறாள். அதில் இறுதியாக இருப்பது எந்த சூழ்நிலையிலும் உயிரைக் காத்துக்கொண்டு எதிரியிடம் இருந்து ஓடிவிடுவது. லீ சே யின் பாதுகாப்பை ஒருபுறம் செய்து கொண்டே, மறுபுறம் மறுபுறம் ஜுக்கே யூ வை நினைத்துக்கொண்டே தன் உடல் பலவீனத்தை வெற்றி கொள்ள போர் பயிற்சிகளையும் செய்கிறாள். சிங் ஐ ஒழித்துக்கட்ட ஜான் ஜியு அனுப்பிய 2 பணிப்பெண்களை அனுப்ப, சிங்-ன் கூர்மையான உள்ளுணர்வால் அந்த முதல் தாக்குதலை அவள் முறியடிக்கிறாள். 

இதற்கிடையில், மேற்குப் பிராந்தியங்களில் அதாவது சிமெங் பிரதேச எல்லைகளில், ஜுக்கே யூ  தனது உயிர் பிழைப்பிற்காக ஒரு கடும் போராட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தான். சிமெங் தேசத்தால் தோற்கடிக்கப்பட்ட லீ ஆன் என்ற நகருக்கு சிமெங் மன்னன் தன் மனைவியுடன் செல்கிறான். அங்கு அவர்களின் தந்திரத்தால் அவர்களிடம் மன்னன் தனியே சிக்க நேரிடுகிறது. ஆனால் ஒரு திருப்பமாக மன்னனின் முகமூடியுடன் அங்கு சென்றது ஜுக்கே யூ, அந்த நகரை மீண்டும் பிடிக்கும் எண்ணத்துடன் தன் முகமூடியுடன் ஜுக்கே வை ஒரு பொறியாக மன்னன் அனுப்பியது பிறகே அவனுக்குப் புரிந்தது. இந்த நிகழ்வில் நடக்கும் சண்டையில் ஜுக்கே தன்னுடன் வந்த மன்னனின் ராணி லிங் யூ வை அந்த பொறியில் இருந்து காப்பாற்றி வெளியே அனுப்பி விட்டு தான் மட்டும் தனியாக பகை வீரர்களால் சூழப்படுகிறான். ஜுக்கே போராடி, மிகுந்த களைப்புற்று, நிலைகுலைந்து விழும் தறுவாயில் இருந்த அவனது மனதிற்குள், ‘தோல்வியுறாதவர்கள் மீண்டும் பிறப்பெடுக்க முடியும்’ என்று சிங் கூறுவது போன்று குரல் ஒலித்தது. இந்த குரல் அவனுக்குப் புதிய இறுதி வலிமையைத் தர, அதன் துணையுடன் அவன் எதிரிப் படைகளை கொன்று குவிக்கிறான்.   

சிங் தொடர்ந்து எடுத்த பயிற்சியின் விளைவாக அவளால் தன் கைகளின் பலவீனத்தை உடைத்து, வாளைச் சுழற்றுவதில் வெற்றி பெறுகிறாள். அந்த மகிழ்ச்சியில் இருக்கும் போது, மாளிகையில் சிங் நீரில் விழுந்து தத்தளித்த ஒரு பணிபெண்ணைக் காப்பாற்றும் நிகழ்வில், ஜான் ஜியு-ன் பொறியில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து வேறு ஒருவரால் அவள் காப்பாற்றப்படுகிறாள். 

அத்தியாயம் 7 – இன் சுருக்கம்

அத்தியாயம் 9 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top