.
ஜாங் கிங் ஜாவா – கருப்பு தங்கச் சுரங்கத்தை அகழ்ந்து எடுப்பதற்கான வழிமுறையைச் சொல்லக்கூடிய ஒரு அரிய வரைபடத்தை வைத்திருந்த மனிதன். இவனைத் தேடியே ஜுக்கே யூ மன்னனின் ரகசிய கட்டளை படி பியாண்டாங் தேச தலைநகரத்திற்கு வந்தான்.
லேடி ஜிமிங் – பட்டத்து இளவரசனின் துணைவி. பேரரசின் காதலனின் கையாள்.
.
Rebirth அத்தியாயம் 12 – சுருக்கம்
ஜுக்கே யூ, பியான்டாங் நகரத்தின் பல்வேறு மண்டபங்களில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். தான் சிமெங் மன்னனின் ரகசிய ஆணைப்படி இந்த நகரத்திற்கு எந்த நோக்கத்திற்காக வந்தானோ அதற்காக அந்நகரின் பாதுகாப்புக்காக குறித்துவைத்துள்ள வரைபடங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியில் அவன் கண்டுபிடித்த அந்த ரகசிய மாளிகைக்கு சிமெங் மன்னனின் ராணியை அழைத்துக் கொண்டு, நள்ளிரவில் செல்கிறான். பயன்பாடு இல்லாத அந்த மாளிகையில் தேடுதல் வேளையில் இறங்கும் போது, அங்கு மறைவில் இருக்கும் இயந்திர பொறியை செயல்படுத்தி விட, அச்செயலின் சத்தத்தால் உஷாரான காவலர்கள் அப்பகுதியைச் சூழ்ந்து அவர்களைத் துரத்துகின்றன. லிங்யு ராணிக்கும் காலில் காயம் ஏற்படுகிறது. ராணி தப்புவதற்காக ஜுக்கே காவலர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்து அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்கிறான்.
இரவு நேர வேளையில் சுற்றும் சிங்-ன் கண்களில் இது பட, காவலர்களை ஜுக்கே-வை விட்டு வேறு திசைக்கு தந்திரமாக அனுப்பிவிட்டு, ஜுக்கே விடம் ஏதும் கேளாமல் செல்கிறாள். சிங் செல்லத்துவங்கவும், ஜுக்கே அவளிடம் தன்னிலைவிளக்கமாக அவள் மனதில் உள்ள கேள்விகளுக்குத் தன்னால் பதில்சொல்ல இயலாது என்று கூற ஆரம்பிக்கும் போது, இனி தன்னை எப்போதும் போல பாதுகாக்க வேண்டாமென்றும், தன்னால் தனியாகவே இருக்க இயலும் என்று கூறி, விரக்தியுடன் சென்றுவிடுகிறாள்.
பின்னர், வீட்டிற்குத் திரும்பியதும், அவளை உற்சாகப்படுத்தும் விதமாக, லீ சே ஒரு மொம்மலாட்ட நாடகத்தை நடத்துகிறான். பிறகு இருவரும் மனம் விட்டு பேசும் போது, சிங் மனதில் ஜுக்கே இருப்பதை இளவரசன் லீ சே தெரிந்து கொள்வதை போல, லீ சே தன்னை விரும்புவதையும் சிங் உணர்ந்து கொள்கிறாள். இருவருமே அதற்கு ஏதும் செய்ய இயலாத நிலையில் இருப்பதை உணர்கின்றனர்.
ஒரு உணவு விடுதியில் ஜுக்கே யூ இளவரசன் லீ சே வைச் சந்திக்கிறான். சந்திப்பின் போது கருப்பு தங்கச் சுரங்கம் இருப்பதாகவும், அதை அகழ்ந்து எடுப்பதற்கான வழிமுறையைச் சொல்லக்கூடிய ஒரு அரிய வரைபடத்தை வைத்திருந்த ஜாங் கிங் ஜாவா என்ற மனிதனைக் கண்டுபிடிப்பதற்காகவே தான் இந்த நகரத்திற்கு வந்திருப்பதாகவும் தெரியப்படுத்துகிறான். தான் பெயரளவில் மட்டுமே பட்டத்து இளவரசனாக, அதிகாரம் அற்ற நிலையில் இருப்பதாக கூறி விரக்தி அடைந்த இளவரசன், ‘கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்’கை இளவரசனுக்கு தருவதாக ஜுக்கே உறுதியளித்ததைத் தொடர்ந்து இளவரசன் ஒத்துக் கொள்கிறான். இந்த பேச்சு வார்த்தைக்கிடையே முந்திய நாள் இரவு சிங்-யிடம் தான் தெரிவித்த காதல் நிராகரிக்கப்பட்டது என்று இளவரசன் லீ சே குறிப்பிட்டபோது அது ஜுக்கே-வுக்கு புன்னகையை தோற்றுவிக்கிறது.
இதற்கிடையில் சிங் பட்டத்து இளவரசனின் மாளிகைக்குள் இருந்த பேரரசியின் ஒற்றர்களைப் பற்றி விசாரிக்க தொடங்குகிறாள். அதில் அவளுக்கு இளவரசனின் துணைவியாக அம்மாளிகையில் இருக்கும் லேடி ஜிமிங்-ன் மீது அவளுக்கு சந்தேகம் வருகிறது. இது குறித்து அவளிடம் கேட்கும் பொழுது, தான் சிறுவயதில் இருக்கும் பொழுது முந்தைய பட்டத்து இளவரசனால் தனது குடும்பம் மொத்தமும் அழிந்துவிட்டது, என்று ஒரு சோக கதையை கூறி சிங்-ன் அனுதாபத்தை பெறுகிறாள்.
ஜுக்கே யூ இளவரசனிடம் ரகசிய நோக்கத்தைக் கூறி உதவி கேட்டதை அறிந்த ராணி லிங் யூ ஜுக்கே-வை எச்சரிக்கை செய்ய, இளவரசனால் எந்த ஆபத்தும் வராது என்று மறுத்துவிட்டுச் செல்கிறான்.
ஜுக்கே யூ இளவரசனிடம் ரகசிய நோக்கத்தைக் கூறி உதவி கேட்டதை அறிந்த ராணி லிங் யூ ஜுக்கே-வை எச்சரிக்கை செய்ய, இளவரசனால் எந்த ஆபத்தும் வராது என்று மறுத்துவிட்டுச் செல்கிறான். மனதின் ஓரத்தில் லேடி ஜிமிங் பற்றிய சந்தேகம் ஒரு கலக்கத்தை அவளுக்குத் தருகிறது. அதனால் ஜாங் கிங் ஜாவா-வை அந்த நகரத்தில் தேடும் வேளையில் இப்போது சிங்-ம் அவர்களுடன் இணைந்து கொள்கிறாள். ரகசிய இடத்தை அறிந்து கொண்டதும் அங்கு செல்ல தீர்மானிக்கின்றனர். இதில் இளவரசன் லி சே தனது ‘இளவரசர்’ எனும் அந்தஸ்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைவதாகவும், ஜுக்கே யூ மட்டும் மறைவிலேயே இருந்து செயல்படவும் ஒப்புக்கொண்டனர்.
இளவரசன் லீ சே இந்த திட்டம் குறித்து சிங்-யிடம் கூறும் போது, அங்கு லேடி ஜிமிங் வந்து தன் வயிற்றில் இளவரசனின் வாரிசு வளர்வதாக கூறுகிறாள். இன்னொரு பக்கம், யான் தேசத்தில் ஹெலியன் பழங்குடியினரின் உள் அதிகாரப் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. யான் சூன்-ன் துணைவி ஆனதால் புதிய ஹெலியன் அரசியான ஹெலியன் லிங், பழங்குடித் தலைவரும், தன் சகோதரருமான ஹெலியன் சுவானின் மீது தனது ஆத்திரத்தைக்காட்டி, அவனது கோழைத்தனத்தைக் கேலி செய்ததோடு, அவனது பதவி முற்றிலும் தனது செல்வாக்கையே சார்ந்துள்ளது என்பதையும் நினைவூட்டுகிறாள். இது அவனுக்கு கையாலாகாத கோபத்தை ஏற்படுத்துகிறது.
நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, இளவரசன் லீ சே பல கடைகள் மற்றும் சொத்துக்களின் பத்திரங்களை சிங்-யிடம் கொடுத்து, ஒருவேளை இந்தப் பணி தன் உயிருக்கு ஆபத்தானதாக மாறினால், தப்பித்துத் தன் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கூற, சிங் கோபம் கொள்கிறாள். இரவில் இளவரசன் மாளிகையில் பணியாளர்களுக்கு இடையே நடக்கும் பேச்சுக்களின் மூலம் லேடி ஜிமிங் பேரரசியின் கையாளாக இருப்பதை அறிந்து கொள்ள அவளுக்கு கலக்கம் அதிகமாகிறது.
.