.
ஹெலியன் சுவான் – ஹெலியன் பழங்குடியினத்தின் தலைவன். யான் சூன்-ன் ராணியாக விரும்பும் ஹெலியன் லிங்-ன் சகோதரன்.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண் அதிகாரி – யான் தேசத்தின் ராணியாக விருப்பம்.
டுபா – ஹாங்சுவான் குலத்தைச் சேர்ந்த 70 வயதான மூத்த தலைவர் டுபா.
வாங் ஷி’யர் – தேர்ந்த ஒரு கல்லறைத் திருட்டு நிபுணன்
சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன்.
.
Rebirth அத்தியாயம் 11 – சுருக்கம்
யான் தேசத்தில் உள்ள ஹெலியன் பழங்குடியினத்தின் தலைவன் ஹெலியன் சுவான் தன் தங்கையை [ ஹெலியன் லிங் ] ‘அவள் யான் சூன்-ன் ராணியாக விரும்புகிறாள்’ என்று தெரிந்தும் மற்றொரு பழங்குடியினமான ஹாங்சுவான் குலத்தைச் சேர்ந்த 70 வயதான மூத்த தலைவர் டுபா-க்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறான். இதனால் தனக்குக் கிடைக்கப் போகும் பெரும் செல்வத்திற்காக அவளையும் வற்புறுத்துகிறான். அவள் விரக்தியில் இருக்கும் நேரம் யான் சூன்-ஆல் வெளியேற்றப்பட்ட தளபதி செங் ஹெலியன் லிங்-ஐ சந்தித்து பரஸ்பர உதவிக்கு அழைக்கிறான். யான் சூன்-ஐ மிகச் சிறப்பாக தான் அறிந்திருப்பதாகவும், தன்னால் அவளை யான் சூன்-ன் அரசியாக்க இயலும் என்றும் கூறுகிறான். அந்தப் பெண் அவனது நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறாள்.
தன் கழுகு எப்படியும் சிங்-ஐத் தன்னிடம் அழைத்துவரும் என்று நம்பும் யான் சூன்-னிடம் கழுகின் வாயிலாகவே வந்து சேருகிறாள் ஹெலியன் லிங். எப்போதும் போதையில் இருக்கும் யான் சூன்-னின் கண்களுக்கு இப்போது ஹெலியன் லிங் சிங்-ஐப் போல தெரியவே, அவளைத் தன் படுக்கையறைக்கு அழைத்துச் செல்கிறான். மறுநாள் காலையிலேயே, அவன் அவளை எல்லோருக்கும் யான் தேசத்தின் துணை ராணி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறான்.
பியான்டாங் தேசத்தில், லி சே-யின் ரகசியங்களை, அதாவது இளவரசி ஃபூ என்று லீ சே அழைத்துவந்தவள் உண்மையில் யோங் தேசத்தின் அடிமையாக இருந்தவள் என்றும், யான் தேசத்துடன் சேர்ந்து கிளர்ச்சி செய்த ஷியூலி இராணுவத்தின் தளபதி என்றும், இருவரும் சேர்ந்து சிமெங் மன்னனுடன் கூட்டாக இருந்து நாட்டிற்கு பாதிப்பை உண்டாக்குவார்களோ என்றும், பேரரசனிடம் பேரரசி கூறிவிடுகிறாள். ஆனால் அவளுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் பேரரசன் பதிலளிக்கிறான். உண்மையில் அவள் சிங் என்றால் லீ சே இந்த நாட்டின் பாதுகாப்புக்காக அவன் சரியான வழியில் தான் செய்கிறான் என்று கூறி, பேரரசிக்கு பிடித்த இனிப்பை அவளுக்கு கொடுத்து அவளின் பேச்சை நிராகரித்து விடுகிறான். அந்த இனிப்பு அவளது கடந்த காலத்தை அவளுக்கு நினைவூட்டுகிறது. தற்போதைய பேரரசன் பேரரசியை மணந்த பிறகு பேரரசிக்கும் கொலை செய்யப்பட்ட முன்னாள் பட்டத்து இளவரசனுக்கும் பிறந்த மகனைக் கொன்று விட்டு, இங்கே அரண்மனையில் அவளுக்கு மிகவும் பிடித்த இனிப்பை வழங்கி உண்ணச்செய்கிறான். தன் மகன் இறந்தவிட்டதை அறியாமல் உண்டுவிட்டு அதே இனிப்பை இப்போதும் பேரரசன் கொடுக்கவே அவளது ஆழ்மன கோபம் அதிகமாகியது. அந்த கோபத்தைத் தன் காதலன் மீது காட்டி ஆணுக்கு 40 கசையடிகளைக் கொடுக்கச் செய்கிறாள்.
பேரரசின் சந்தேகத்தைத் தொடர்ந்து, தங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை உணர்ந்த லீ சே மற்றும் சிங் இருவரும் சேர்ந்து திட்டங்களைத் தீட்டத்துவங்கினர். முதல் திட்டமாக தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மிங் லு வை தன்னுடன் சேர்ந்து யோங் தேசத்தை எதிர்க்க சம்மதிக்கச் செய்கிறாள் சிங். அடுத்து சிறையில் இருந்து பட்டியல் பெற்று இருவரை தேர்வு செய்கின்றனர். ஒருவன் இளவரசிகள் கல்லறைகளைத் திருட்டுத்தனமாக திறந்து செல்வங்களைக் கொள்ளை அடிக்கும் திறன் கொண்ட வாங் ஷி’யர், மற்றொருவன் நச்சு மூலிகைகளை உயிர் விடும் நிலையில் இருப்பவர்களிடம் சோதனைகளைச் செய்து பார்க்கும் மருத்துவன். இதே வழியில் சிங் தேர்ந்தெடுத்த பல புதிய ஆட்களை லீ சே ஒரு சிதிலமடைந்த சத்திரத்தில் ஒன்றுதிரட்டினான். அங்கு அவர்களை அழைத்து வந்தது யார்க்கு வேலை செய்வதற்கு என்பதை எடுத்துச் சொல்லி, அவர்களை ஒழுங்குபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் திறமைவாய்ந்தவர்கள் என்றாலும் சிறை செல்லும் அளவிற்கு சிக்கல் நிறைந்தவர்களும் கூட.
ஒரு மாலை, சிங் தெருவில் கூட்டமாக இருந்த விளக்குத் திருவிழாவைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, அருகில் கூட்டத்தில் ஜுக்கே யூ நடந்து செல்வதைக் காண்கிறாள். தேடித் சென்றும் பார்க்க முடியாமல் திரும்பிவிட, மக்கள் கூட்டத்தில் மறைந்தவாறு ஜுக்கே யூ அவளையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான். அவனது நினைவுகள் அவளை சுற்றியே இருக்கின்றன. சிங் எப்போதும் நகரத்தைச் சுற்றியபடியே இருப்பதால், வசதிகள் நிறைந்த, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தேரை லி சே அவளுக்குப் பரிசளிக்கிறான்.
ஒரு மாலை, சிங் தெருவில் கூட்டமாக இருந்த விளக்குத் திருவிழாவைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, அருகில் கூட்டத்தில் ஜுக்கே யூ நடந்து செல்வதைக் காண்கிறாள். தேடித் சென்றும் பார்க்க முடியாமல் திரும்பிவிட, மக்கள் கூட்டத்தில் மறைந்தவாறு ஜுக்கே யூ அவளையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான். அவனது நினைவுகள் அவளை சுற்றியே இருக்கின்றன. சிங் எப்போதும் நகரத்தைச் சுற்றியபடியே இருப்பதால், வசதிகள் நிறைந்த, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தேரை லி சே அவளுக்குப் பரிசளிக்கிறான். சிங் இளவரசன் லீ சே-க்கு நன்றி தெரிவித்தாலும், பியான்டாங் தேசத்தின் தலைநகரத்திற்கு ஜுக்கே வருகை தந்திருப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு மறைமுக நோக்கம் இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொண்டு, லீ சே-விடம் கவனமாக இருக்கும் படி எச்சரிக்கை செய்கிறாள். இதற்கிடையில் ஜுக்கே யூ இளவரசன் லீ சே-ஐ அழைத்துக்கொண்டு, நகரத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்க்கிறான்.
அத்தியாயம் 12 – இன் சுருக்கம்
.