Secret Garden korean drama episode 2 explained in tamil
சீக்ரெட் கார்டன் – எபிசோட் 2 கதை
ஓகே இப்போது 2வது எபிசோட் பார்க்கலாம். போன பகுதியில் பாடகன் கிளாராவிடம் அவளை சிரிக்க வைத்து பேசும்போது ஜோவன் மிகுந்த எரிச்சலில் இருந்தான், இல்லையா? அதனால் இப்போது எரிச்சலில் இருந்த ஜோவன் பாடகனிடம் அவனுக்கு தொந்தரவு அளிக்கும் அந்தப் பெண் ஹீரோயினை பற்றி சொல்லி எச்சரிக்கை செய்து, அவனை அங்கிருந்து அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருக்க, இதற்கிடையே கிளாரா அவனிடம் இருந்து விலகி அருகில் வந்துகொண்டிருந்த பஸ்ஸில் ஏறி சென்று விடுகிறாள். secret garden korean drama in tamil

பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது, கிளாரா ‘முன்பு ஒரு தடவை அவள் சூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, அங்கு பாடகன் வர எல்லா பெண்களும் அவனை நோக்கி செல்கிறார்கள். இதை கண்ட கிளாராவின் முகம் லேசாக சுருங்கியது. அப்பொழுது அருகில் இருந்த அவளின் சீனியர் ”நீ அவனுடைய ரசிகை தானே அவனை பார்க்கச் செல்லவில்லையா?” என்று கேட்க, அதற்கு கிளாரா ”பரவாயில்ல எனக்கு வேலை இருக்கிறது. நான் அவனிடம் சென்று பேசினாலும் அவனுக்கு என்னை நினைவு இருக்காது” என்று கூறியதை நினைத்து பார்த்து பேசாத சிரித்துக் கொள்கிறாள்.
வீட்டில் கிளாரா தன் தோழியிடம் அனைத்தும் கூறுகிறாள். ”அவனுக்கு என்னை நினைவு இருக்கிறது, என் பெயர் உட்பட” என்று சந்தோஷமாக கூறுகிறாள். அதற்குத் தோழி அவனைப் பற்றி மற்றவர்கள் கூறுவதை எடுத்துக் கூறுகிறாள். ‘அவன் பின்னால் நிறைய பெண்கள் சுற்றுகிறார்கள்’ என்றும் கூறுகிறாள். அதற்கு கிளாரா ”அது ஒரு பெரிய விஷயம் இல்லை. நான் தான் இனி அவனை திரும்ப சந்திக்க போவதில்லைஏ. இனி இது ஒரு கனவு மாதிரி தான். என்னை என்ஜாய் செய்ய விடு,” என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் கட்டிலில் சாய்கிறாள்.
ஜோவன் மிரட்டல்
ஜோவன் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் பொழுது, பின்னாடியே வந்து பாடகன் அவனை தொந்தரவு பண்ணுகிறான். ”அந்தப் பெண்ணிடம் இருந்து எனது புகைப்படங்களை வாங்கி விட்டாயா? அவள் என்னை ஒன்றும் செய்து விடமாட்டாள் இல்லையா? அந்த விஷயத்தை நீ எவ்வாறு செய்ய சரி செய்தாய்?” என்று தொணதொணத்துக்கொண்டே பின்னாலே வருகிறான். ஜோவனுக்கு மிகுந்த ஆத்திரம் ஆகிவிட்டது. அதனால் கோபத்துடன் ”உன்னுடைய மதிப்பு எனக்கு தெரியும். நீ என்னுடைய கம்பெனிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்யவிருக்கிறாய். இந்த நிலையில் உன்னை அப்படியே விட்டு விடுவேன், என்று எப்படி நீ நினைத்தாய்? அவளுடன் நான் இந்த விஷயம் பற்றி பேசி விட்டேன். நீ எனது ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்து இட வில்லை என்றால், அந்த புகைப்படங்கள் நாளை கண்டிப்பாக சோசியல் மீடியாவில் வந்துவிடும்” என்று கூறுகிறான். அதற்கு பாடகன் ”என்ன இது.. மிரட்டுகிறாயா?” என்று கேட்க, ”பரவாயில்லை இப்பொழுதாவது உனக்கு புரிந்தது” என்று கடுப்புடன் கூறுகிறான். secret garden korean drama in tamil
மால்-லில் பிரபலமாக இருக்கும் மேடைப் பாடகனின் ஆட்டோகிராப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு அவனுடைய ரசிகைகள் அனைவருக்கும் அவன் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருக்கிறான். ஜோவனின் தியேட்டரையும் மால்-லையும் பிரபலப்படுத்துவதற்கான வேலைகளை ஜோவன் தொடங்கி விட்டதால், அவனது ஹோட்டலில் மேல்நிலை அலுவலர்களின் மீட்டிங் நடைபெறுகிறது. கூட்டம் முடிந்தவுடன் ஜோவன் ஒரு பக்கமாக வெளியேறி விடுகிறான். பாடகன் இன்னொரு பக்கமாக வெளியேறுகிறான்.
நான் ஏன் அவளை பற்றி சிந்தனை செய்து கொண்டே இருக்கிறேன்
ஜோவன் என்ன வேலை செய்தாலும் கிளாரா அவன் கூடவே இருப்பது போல உணர்ந்து கொண்டே இருக்கிறான். ”நான் ஏன் அவளை பற்றி சிந்தனை செய்து கொண்டே இருக்கிறேன்” என்று அவனுக்கு தோன்றுகிறது. அதனால் அவள் நினைவுகளிலிருந்து அவன் வெளியே வர பார்க்கிறான். ஆனால் அவனால் அது இயலவில்லை. எனவே அவன் அடுத்த அறையில் எரிச்சலுடன் படுத்திருக்கும் அவனது கசின் பாடகனிடம் சென்று ”கிளாராவின் போன் நம்பர் இருக்கிறதா?” என்று கேட்கிறான். பாடகனும் ஏற்கனவே எரிச்சலில் இருப்பதால் ‘அவளை ஒருமுறைதான் நான் பார்த்தேன். என்னிடம் அவளின் போன் நம்பர் இல்லை’ என்று சொல்லிவிடுகிறான். அதற்கு ஜோவன் ”உன்னை தொல்லை செய்யும் அந்த ஹீரோயின் நம்பராவது கொடு” என்று கேட்கிறான். உடனே எழுந்து ”ஏன் அவளிடம் இருக்கும் புகைப்படத்தை நீ வாங்கித் தரப் போகிறாயா?” என்று ஆசையுடன் கேட்கிறான். எப்படியோ ஜோவன் அவனிடம் இருந்து அந்த ஹீரோயின் நம்பர் வாங்கி விட்டான்.
ஜோவன் மன மாற்றம்
ஹோட்டலில் ஜோவன் அந்த ஹீரோயினை சந்திக்கிறான். அதாவது சண்டை பயிற்சியின் போது கிளாராவுக்கு அடிபட காரணமாக இருந்த அந்த ஹீரோயின் தான். அவளிடம் ஜோவன் கிளாராவின் போன் நம்பரை கேட்கிறான். அதற்கு அந்த ஹீரோயின் ‘நான் போனிலேயே எனது நம்பரை சொல்ல முடியவில்லை, எனது அருகில் பலர் இருந்தனர்’ என்று காரணம் கூறுகிறாள். ‘இப்பொழுது தருகிறேன் உங்களது போனை கொடுங்கள்’ என்று அவள் கேட்கிறாள். அதற்கு அவன் ”எனக்கு உனது போன் நம்பர் தேவையில்லை. ஸ்டண்ட் வேலை செய்யும் இந்தப் பெண்ணின் போன் நம்பரை கொடு” என்கிறான். ஹீரோயின் அதிர்ச்சி அடைந்தாலும், ”இதனால் எனக்கு என்ன பயன்” என்று கேட்கிறாள்.
அதற்கு ஜான் ”உனக்கு சினி ஃபீல்டில் யாரையாவது பார்க்க வேண்டும் என்றால், உதாரணமாக மேடை பாடகனை பார்க்க வேண்டும் என்றால் நான் உதவி செய்கிறேன்” என்று கூறுகிறான்.
ஜோவன் கிளாராவின் தொலைபேசி எண்ணை வாங்கி விட்ட பிறகு, சற்று யோசித்து கிளாராவுக்கு போன் செய்கிறான். போன் எடுத்து யார்? என்று கேட்ட கிளாராவிடம் ”என் குரலை நினைவில்லையா? அவ்வளவு ஈசியாக யாரும் மறந்து விட மாட்டார்களே?” என்று கூற, அதற்கு கிளாரா ”இல்லை எனக்கு ஞாபகம் இல்லை” என்று என்று கூற, அதற்கு அவன் மருத்துவமனையில் அவளை சேர்த்ததை நினைவு கூறுகிறான். பின்னர் ‘அவளை பார்க்க வேண்டும்’ என்று கூற அதற்கு அவள் ‘தேவையில்லை’ என்று போனை கட் செய்து வைத்து விடுகிறாள்.
கிளாரா என்னை சந்திக்க நான் என்ன செய்ய வேண்டும்?

படத்தில் நடிப்பதற்கு ஆடிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்வு செய்வோர் பகுதியில் கிளாராவும், அவளின் சீனியரும் அமர்ந்திருக்கிறார்கள். அந்த நேரம் அங்கு ஜோவன் வருகிறான். ‘அவன் அடிஷனில் நடித்துக் காட்ட தான் வருகிறான்’ என்று அவனை வரிசையில் நிற்கச் சொல்கிறார்கள். வேறு வழி இன்றி வரிசையில் நின்று கடைசி ஆளாக கிளாராவின் முன் நிற்கிறான். அதிர்ச்சி அடைந்த கிளாராவும், அவளின் சீனியரும் அவனை வினோதமாக பார்க்க அவன் ‘கிளாரா என்னை சந்திக்க மறுக்கிறாள். அவளிடம் சிறிது பேச வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறான். அதற்கு மற்றவர்கள் ‘உனது திறமையை காட்டு’ என்று சொல்ல அவன் ‘நான் பணத்தை பெருக்குவதில் நிபுணன். அதனை அதிகம் செலவழிப்பதிலும் தயக்கம் இல்லாதவன்.’ என்று கூறி மொத்தமாக பெரிதாக இருக்கும் அவனது பர்ஸ்-ஐ எடுத்து அவர்களிடம் நீட்டுகிறான். அதை நடிப்பு என்று நினைத்து மற்றவர்கள் கைதட்டுகிறார்கள்.
அந்த நிறுவனத்தில் கிளாராவின் சீனியர் தான் பாஸ் என்பதால் அவனிடம் விளக்கம் அளிப்பது கிளாராவின் வேலை ஆகிறது. எனவே கிளாரா சீனியரிடம் ‘நடந்தது என்ன?’ என்று கூறுகிறாள். ”அவனுக்கு என்ன வேண்டும் என்பதே தெரியவில்லை, அவன் ஒரு முட்டாள்” என்று சீனியரிடம் கிளாரா கூற, அதற்கு சீனியர் ”அவன் முட்டாள் அல்ல. அவன் ஒரு ஆண். அழகான பெண்ணை பார்க்க வந்திருக்கிறான்” என்று கிளாராவை பார்த்து அழுத்தமாக கூறுகிறான்.
என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்?
கிளாரா ஜோவனைக் கூட்டிக்கொண்டு தனியாக பேசுவதற்கு வருகிறாள். அங்கு வந்து அவனைப் பேச விடாமல் கோபத்தில் கத்துகிறாள். அதற்கு ஜோவன் ”என்னிடம் அமைதியாக நிதானமாக பேச முடியாதா? நான் யார் என்று உனக்கு தெரியுமா? என்னை நீ இப்படி ட்ரீட் பண்ண கூடாது” என்று கூறுகிறான். அப்படியானால் என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்?” என்று கிளாரா கேட்க, அதற்கு ஜோவன் ”எனக்கும் தெரியவில்லை. வேண்டுமென்றால் இப்பொழுது உனக்கு செலவு செய்த மருத்துவமனை கட்டணத்திற்காக என்று வைத்துக் கொள்ளேன்” என்று கூறுகிறான். ‘என்ன?’ என்று கிளாரா கேட்க, அதற்கு அவன் ”உன்னுடைய காயத்திற்கான தையல் போட்ட மருத்துவ கட்டணத்தை நான்தான் அளித்தேன். ஆனால் நீ உன்னுடைய சீனியரின் கைகளில் தொத்திக்கொண்டு சென்று விட்டாய். எனக்கு நன்றி கூட சொல்லவில்லை.” என்று அமைதியாக கூறினான். அதற்கு அவள் ”எவ்வளவு கட்டணம்?” என்று கோபத்துடன் கேட்க, ஜோவன் தொடர்பில்லாமல் ”இங்கு தான் நீ பொதுவாக இருப்பாயா? இங்கு வந்தால் உன்னை பார்க்கலாமா?” என்று கேட்கிறான். ”அதை நான் ஏன் கூற வேண்டும்?” என்று கிளாரா கோபத்துடன் கேட்கிறாள்.

ஜோவன் அமைதியாக அவளை பார்த்தபடியே, ”இதனால் தான் உன்னை எனக்கு பிடிக்கிறது. நீ கோபப்படும் போது இன்னும் அழகாக இருக்கிறாய்” என்று கூறுகிறான். அவள் முகம் திருப்பிக் கொள்ள அவன் சட்டென்று அவள் இடது தோள்பட்டையின் துணியை விலக்கிப் பார்க்கிறான். அங்கு தானே காயம் இருந்தது. ”என்ன செய்கிறாய் நீ?” என்று அவள் தடுக்க, அவன் ”நான் கேட்கும் போதே நீ பதில் சொல்லி இருக்க வேண்டும். இல்லை அல்லவா? அதனால் அந்த காயத்தை பார்த்து விட்டு, விட்டு விடுகிறேன்” என்று கூறி அந்த காயத்தை பார்க்கிறான். அவள் அதிர்ச்சியில் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவன் அந்த காயத்தை பார்த்து விட்டு நக்கலாக ”இந்த காயத்தின் வடு அப்படியே தங்கி விட்டது. நீ ‘மிஸ் கொரியா’ ஆக முடியாது போலிருக்கிறது,” என்று கூறுகிறான். அவள் அவனே பார்த்துக் கொண்டிருக்க… ”நீ மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்று விட்டு எனக்கு போன் செய். இந்த காயத்தின் வடு தெரியாத படி சிகிச்சை செய்து கொள்ளலாம். எனக்கு வேறு வேலை இருப்பது இப்பொழுது தான் ஞாபகம் வந்தது. நான் செல்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல ஆரம்பிக்க, கிளாரா அவனை பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாள்.
பாடகனின் முன்னாள் காதலி

ஜோவனை திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த பணக்கார பெண் மீண்டும் ஜோவனைச் சந்திக்க பெரியவர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறாள். ஆனாலும் இந்த முறையும் ஜோவன் மறுத்து விட்டு சென்று விடுகிறான். ஏமாற்றும் அடையும் அவள் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே அந்த மேடை பாடகனை சந்திக்கிறாள். அவனின் ‘முன்னாள் காதலி’ இவள். அவனைக் கண்டு அலட்சியப்படுத்தி சென்று விடுகிறாள், என்றாலும் அவளுக்கு அவனின் நினைவு எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கிறது. அவன் மற்றொரு பெண்ணிடம் வழக்கம் போல பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இவளுக்கு இங்கு கண்கள் கலங்கி விடுகின்றன.
இருவருக்கும் ஏற்படும் மனத்தடுமாற்றம்
வீட்டில் ஜோவன் அவனின் தாயிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறான். தனக்கு வரும் வருங்கால மனைவியை பற்றி ‘அவள் எப்படி இருக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன் தன்னை அறியாமல் மாற்றி கிளாராவை பற்றி வர்ணிக்க தொடங்குகிறான். இன்னும் அவனுக்கு இரண்டு மனதாக தான் இருக்கிறது. ‘தன்னிடம் இருக்கும் பணமா? இல்லை கிளாராவா?’ என்று, ஆனாலும் வர வர அதிகமாக கிளாராவின் நினைவு தாக்குவதை ஜோவன் உணர்ந்து தான் இருக்கிறான்.
கிளாராவின் வேலைக்கு வந்து வேலைக்கான உடைகளை மாற்றும் பொழுது, அந்த காயத்தைப் பார்க்க, அவன் கூறியது அவளுக்கு நினைவு வருகிறது. அதேபோல சீனியருடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுதும் கவனம் தவறுகிறது. அதனால் சீனியர் அவளை திட்டி விட்டு சென்று விடுகிறான். அவள் வருத்தத்துடன் போய் தனியாக அமர்ந்திருக்கிறாள். அப்பொழுது அவளிடம் வந்த, அவளது குழுவில் இருக்கும் அவள் தோழன் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். பின்னர் சட்டென்று ஏதோ தோண, கிளாராவின் போனை வாங்கி, காண்டாக்ட் ஒரு பெயரை சொல்லி ‘இது அந்த பணக்காரனின் போன் நம்பர் தானே’ என்று கூறி டயல் செய்து விடுகிறான்.
அங்கு ஜோவன் ஹோட்டலில் ஒரு மீட்டிங்கில் பேசிக் கொண்டிருக்க, அவனுக்கு அங்கு போன் வருகிறது. கிளாராவிடம் இருந்து போன் என்று என்றதும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி போனை அட்டென்ட் செய்கிறான். இங்கு தோழனிடம் இருந்து தனது போனை வாங்கி சமாளிப்பாக பேசி வைத்து விடுகிறாள், கிளாரா. அவள் தான் பேசினாலா என்று மனம் குழம்பினாலும் அவனால் அவளை நினைப்பதை தடுக்க முடியவில்லை. எனவே சட்டென்று முடிவு செய்து, ஸ்டண்ட் கலைஞர்கள் அதிகம் நடித்துக் கொண்டிருக்கும் படப் குழுவுக்கு அந்த ஹோட்டலை ஷூட்டிங்-க்கு விட முடிவு செய்கிறான்.
ஜோவன் கிளாராவைப் பார்ப்பதற்கு வரும் பொழுது, கிளாராவும் அன்று ஆடிஷனில் தேர்ந்தெடுத்த ஜூனியர்களுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறாள். சண்டை காட்சிகளின் போது இறந்து போனவர்களின் சமாதிக்கு சென்று அங்கு அவர்களுக்கு உள்ள நிலைமையை எடுத்துக் கூறுகிறாள். ‘சண்டை காட்சிகளின் போது உயிர் போவதற்கு வாய்ப்புகள் இருக்கும், அதனால் பயம் கொள்பவர்கள் விலகிவிடலாம். பயம் இல்லாதவர்கள் மட்டும் தொடர்ந்து இந்த வேலையில் நீடிக்கலாம்.’ என்று கூறுகிறாள். இதை ஒரு தூணில் மறைவிலிருந்து ஜோவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கிளாராவின் நிலை புரிகிறது.
கிளாராவிடம் ஜோவனின் ஊடல்
பின்னர் கிளாரா அவள் குழுவினருடன் புட்பால் விளையாட்டு கொண்டிருக்கிறாள். அந்த நேரம் ஜோவன் அங்கு வருகிறான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. முடிவில் கிளாரா அவனை விளையாட அழைக்கிறாள். ஜோவனும் விளையாட தொடங்குகிறான். பின்னர் இதுவே தொடர ஆரம்பிக்கிறது. ஜோவன் அவளை நெருங்க நினைக்க, கிளாரா அவனை அலட்சியப்படுத்தி விரட்டுகிறாள். ஒரு முறை இருவரும் கிளாராவின் அலுவலகத்தில் இருக்கும் பொழுது, அவனது தொல்லையால் இருவருக்கும் வாக்குவாதம் நேரிடுகிறது. இரண்டு முறை ஜோவன் சுதாரிக்கும் முன் கிளாரா அவனை கராத்தே முறையில் அடித்து வீழ்த்தி விடுகிறாள். மூன்றாவது முறை அவளால் இயலவில்லை. அதற்கு பதில் ஜோவன் அவளை கீழே விழுத்தி, அவள் கைகள் இரண்டையும் பிடித்து அழுத்தி அவளிடம் பேச முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, கிளாராவின் தோழி வந்து விடுகிறாள்.
தோழியின் இடையூறு

ஜோவனை சுற்றும் பணக்கார பெண் இந்த முறை கிளாராவின் தோழியை ஹோட்டலின் மேலாளரிடம் கூறி வேலையை விட்டே விரட்டி விட, புலம்பிக்கொண்டே கிளாராவைத் தேடி வந்தவள் தரையில் கிளாரா யாரோ ஒருவனுடன் கீழே இருக்கும் நிலையைப் பார்த்து விழிக்கிறாள். இருவரும் சட்டென்று பிரிந்து எழுந்து நிற்கிறார்கள். ”இங்கு ஏதெனும் ரொமான்ஸ் படத்தின் ஷூட்டிங் நடக்கிறதா, என்ன?” என்று கேட்டவள் தன்போக்கில் மீண்டும் புலம்ப, அதைக் கேட்டு கிளாராவுக்கு கோபம் வருகிறது. அந்த நேரம் தோழியின் யூனிபார்ம் ஜோவனின் கண்ணில் படுகிறது. அவனுக்கு புரிந்து விட்டது, ‘இது அவனது ஹோட்டலின் யூனிபார்ம்’ என்று. ஆனால் அந்த ஹோட்டலின் முதலாய் இவன்தான் என்று அந்த தோழி பெண்ணுக்கு தெரியவில்லை.
அதனால் தன் போக்கில் ”அந்த பெண் சொன்னதை கேட்டு என்ன வேலையை விட்டு நீக்கிய என் முதலாளியை நான் சும்மா விட மாட்டேன். சோசியல் மீடியாவில் அவன் ஒரு ‘கே’ [ தன் பாலின விருப்பம் உள்ளவன் ] என்று சொல்லப் போகிறேன்” என்று புலம்புகிறாள். இதை கேட்ட ஜோவன்-க்கு அதிர்ச்சியாகிறது. ”என்ன கே-யா?” என்று அதிர்ச்சியாக கேட்கிறான். அதற்கு தோழி ”யார் இது” என்று கேட்க, அதற்கு கிளாரா ”தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு அவசியமில்லை. அலுவலகத்தை பூட்டிவிட்டு உன் பாஸின் செக்ரட்டரி போய் பார்க்கலாம். பார்த்து அவரிடம் விஷயங்களை எடுத்து சொல்லி மீண்டும் வேளையில் சேரும் முயற்சி செய்யலாம் வா?” என்று சொல்லி கடகடவென்று வெளியே சென்று விடுகிறாள். தோழி அங்கேயே நின்று ”நான் முயற்சி செய்து விட்டேன். போவது பயனில்லை” என்று கூறிக் கொண்டிருக்கிறாள்.
அப்போது அருகில் நின்ற ஜோவன், ”நான் தான் அந்த முட்டாள் பாஸ்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். தோழி சந்தேகத்துடன் அவனை கூர்ந்து பார்க்கும் பொழுது தான் தெரிகிறது ‘அவன் தான் அந்த பெரிய ஹோட்டல் ஓனர், அவளுடைய பாஸ் என்று’. அதனால் பதட்டத்துடன் ”ஆமாம் எனக்கு புரிகிறது, இந்த வித்தியாசமான ‘ஓவர் கோட்’ஐ நான் பார்த்திருக்கிறேன்” என்று பதற, அவன் தோழியின் வேலையை தான் பார்த்துக் கொள்வதாக கூறி, கிளாராவை பற்றி கேட்கிறான். தோழிக்கும் அவன் சொல்ல வருவது புரிகிறது. எனவே அதே நேரம் கிளாரா மீண்டும் அங்கு அவளை அழைத்துச் செல்ல வர, அவளிடம் ”நாம் போக தேவை இல்லை. எனக்கு வேலை மீண்டும் அங்கேயே கிடைத்து விட்டது” என்று கூறி, ”என்னுடைய பாஸ்-ஐ பற்றி நான் பேசியது தவறு அவர் அப்படிப்பட்டவர் அல்ல” என்று இப்பொழுது மாற்றி கூறுகிறாள். அவள் மாற்றி மாற்றி உளறுவதைக் கண்டு கிளாரா புரியாது விழிக்கிறாள்.
பின்னர் தோழி அவளையும் ஜோவன்-ஐயும் ட்ரீட் கொடுப்பதற்காக ஒரு சின்ன ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறாள். ஜோவனுக்கு அந்த தெருவோர கடைகளின் அவர்கள் உண்ணும் உணவினைக் கண்டு ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு, அவர்களின் வீட்டிற்கு வருகிறான். அவர்கள் சென்று விட அவன் அவர்களின் வீட்டையும் தன் வீட்டையும் ஒப்புமைப்படுத்தி பார்க்கிறான்.
நான் இவளின் மிகப்பெரிய ரசிகன்

ஜோவன் முன்னர் தன் மீட்டிங்கில் கூறியபடியே கிளாராவின் ஷூட்டிங் அவனது ஹோட்டலில் நடைபெற ஆரம்பிக்கிறது. அந்த ஷூட்டிங்கில் நடிக்கும் படத்தின் ஹீரோயின் ஜோவனின் கூற்றுப்படி கிளாராவின் டீம் தான் வேண்டும், என்று கேட்டு அவர்களை வரவழைக்கிறாள். அவள் கிளாராவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ”அவளுக்கு ஜோவினை எப்படி தெரியும்?” என்று கேட்கிறாள். அதற்கு கிளாரா ”யார் ஜோவன்?”என்று திருப்பி கேட்கிறாள். ஹீரோயின் சமாளித்து சென்று விடுகிறாள். ஆனாலும் பொறாமையில் அவள் கிளாராவுக்காக தேர்ந்தெடுத்த வேலை’ மேலே மாடியிலிருந்து கயிறில்லாமல் கீழே குதிக்க வேண்டும்’ என்பது தான்.

அந்த படத்தின் டைரக்டரும் ஹீரோயின் கூறியபடியே திரும்பத் திரும்ப கிளாராவை மேலிருந்து குதிக்க செய்கிறார். சோர்ந்து முடியாமல் நின்ற கிளாராவை மேலிருந்து பார்த்த ஜோவன் இறங்கி வேகமாக அவளிடம் வருகிறான். அப்பொழுதுதான் கிளாராவுக்கும் இந்த பெரிய ஹோட்டலின் ஓனர் ஜோவன் தான் என்று தெரிகிறது. ஜோவன் நேராக கிளாராவிடமும் அவள் அருகில் நின்று அந்த படத்தின் டைரக்டரிடமும் வந்து கிளாராவைத் தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி கூறுகிறான். ”நீ அவளை தொந்தரவு செய்வதை நான் பார்த்தேன். இனி அவ்வாறு செய்யாதே. என்னைப் பொறுத்தவரை இவளும் அனைத்து டாப் ஸ்டார் ஹீரோயின்களை போல தான். நான் இவளின் மிகப்பெரிய ரசிகன்” என்று கூறுகிறான். இதை அந்த டைரக்டர் உட்பட அங்கு கூடியிருக்கும் மொத்த ஜனங்களும் பார்க்கிறார்கள். ஜோவன் சொல்லிவிட்டு கிளாராவை பார்த்து புன்னகைக்க, கிளாரா அதிர்ச்சியாகி என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்கிறாள்.
Posts – Secret Garden Korean Drama Episodes Explained in Tamil
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 1
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 2
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 3
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 4
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 5
Tags,
korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 2 explain in tamil, Secret Garden korean drama tamil dubbed, korean dramas in tamil dubbed,
.
