dramalookup

Secret Garden Korean Drama Episode 3 in Tamil Explained

முந்தைய எபிசோடில் எல்லாருக்கும் முன்னால் கிளாராவை ஜோவன் தனக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினான், அல்லவா? இந்த எபிசோட்டில் என்ன நடக்கிறது?, என்று பார்ப்போம்.

ஹோட்டல் மாலில் நடந்த படப்பிடிப்பின்போது, ​​ஜோவன் அமைதியாக ‘நான் கிளாராவின் மிகப்பெரிய ரசிகன்’ என்று எல்லோருக்கும் முன்னால் படத்தின் டைரக்டரிடம் அறிவிக்கிறான். இது அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இதுவும் வெளிப்படையாக எல்லோரிடமும் தன்னை வெளிப்படுத்துவது போலத்தான், இல்லையா?

ஜோவன் படக்குழுவினர் அனைவருக்கும் அங்கு உணவகத்தில் மதிய உணவு விருந்தளிக்கிறார், அதே சமயம் கிளாரா இதற்கெல்லாம் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் திகைத்து மௌனமாக அமர்ந்திருக்கிறாள். ஜோவன் கிளாராவை எல்லோரும் பார்க்கும் படி தனியாக உணவு உண்ண அழைத்துச் செல்கிறான். இது படக்குழுவினரிடையே அர்த்தம் பொதிந்த ‘ஓஹோ’ என்ற முணுமுணுப்புகளை ஏற்படுத்துகிறது. இதில் பொறாமையுடன் அந்த படத்தின் ஹீரோயின் சில வார்த்தைகள் பேச, அதற்கு ஒரு ஸ்டண்ட் கலைஞன், ‘உங்கள் இருவரில் நீங்கள் தான் அற்பமானவள்’ என்று பதிலடி கொடுக்கிறான்.

அங்கு அழகான பிரம்மாண்டமான டின்னர் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஜோவன் அவளுக்காக நாற்காலியை இழுத்துப் போடுகிறான், அந்த மரியாதையான செயலைத் தனக்குப் பிடிக்காதது போல் நடித்து, அவள் தன் தடுமாற்றத்தை சமாளிக்கிறாள். ஆனால் இதற்கு முன்பு யாரும் அவளுக்காக நாற்காலியை இழுத்துப் போட்டதில்லை என்பதை ஜோவன் யூகித்துவிடுகிறான். பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன் சொல்லும் எல்லாவற்றிற்குமே அவள் சாந்தமாக தலையை அசைத்து ஆமோதிக்கிறாள். அவளது உடனடி சம்மதித்தாள் ஜோவனுக்கு ஆச்சர்யம் ஏற்படுகிறது. Secret Garden korean drama tamil dubbed

அதை அவன் கூற, அதற்கு அவள் ”உங்களுக்கு நான் கோபப்பட்டால் பிடிக்கும் அல்லவா? அதனால் நான் கோபம் கொள்ளவில்லை” என்று அமைதியாக கூறுகிறாள். அதே அமைதியுடன் ”இனி எப்போதும் இந்த மாதிரி செய்யாதீர்கள். என்னுடைய அலுவலகத்திற்கும் வராதீர்கள். அது உங்களது விளையாட்டு மைதானம் அல்ல” என்று அமைதியாக தெளிவாக கூறிவிட்டு எழுந்து சென்று விடுகிறாள். ஜோவன் அதிர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

அவள் உணவகத்திற்குத் திரும்ப வந்தபோது, ​​அது காலியாக இருக்கிறது. மேலும் அங்கு மீதி இருந்த ஒரு கிண்ணம் சோற்றை எடுக்கிறாள். அவளைப் பின்தொடர்ந்து வந்த ஜோவன் கோபமாக அதை அவளிடமிருந்து பிடுங்கி விட்டு, ”எனக்கு நீ செய்வது இதுவும் புரியவில்லை. எனக்கு புரிய வைக்கிறாயா?” என்று கேட்கிறான். அவள் எழுந்து செல்லவும் திரும்பவும் அவளிடம், ”என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி செய்கிறாய்? எனக்கு வேண்டியது எல்லாம் நீ யாரிடமும் அந்த அளவுக்கு மன்னிப்பு கேட்க கூடாது, என்பது தான்” என்று சிறிது கோபத்தோடு கூறுகிறான். [ ஆம், அவள் ஒவ்வொரு முறையும் குதிப்பதற்கு மேலே செல்வதற்கு முன்னால் அத்தனை பேரின் முன்னாலும் திரும்பத் திரும்ப அந்த படத்தின் டைரக்டர் இடம் மன்னித்து விடுங்கள், என்று சொல்லி சொல்லி செல்வதை ஜோவன் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.] 

கிளாரா அவனை திரும்பிப் பார்த்து என் வாழ்க்கை அது தான் மன்னிப்பு கேட்பது என் வாழ்க்கையில் இயல்பான ஒன்று. இப்பொழுது எல்லோரும் எனக்கு பெரிய இடத்துத் தொடர்பு இருப்பது போல யோசிக்க தொடங்குவார்கள். இதனால் இன்னும் அதிகமான சூழ்நிலையில் நான் மன்னிப்பு கேட்க வேண்டி வரும். எவ்வளவு தூரம் எவ்வளவு எண்ணிக்கையில் நான் மன்னிப்பு கேட்க முடியும். நான் என்ன தேவதையின் கதையிலா வாழ்கிறேன். நான் பணக்காரன் பணக்காரன் என்று ஒவ்வொரு முறையும் தன்னை சொல்லிக்கொண்ட பரோபகாரி எனக்கு தேவையில்லை. நான் திரும்ப உங்களை பார்க்க விரும்பவில்லை”. என்று கடினமாக சொல்லிவிட்டு அந்த உணவுக்கூடத்தை விட்டு சென்று விடுகிறாள்.

செல்வதற்கு முன் தனது நிராகரிப்பைத் தெளிவாகத் தெரிவிப்பதற்காக,கிளாரா  நான்கு பணத்தாள்களை மேஜையின் மீது வைக்கிறாள். (இது அவன் செலவு செய்த பணத்தில் மிகக் குறைவு தான். இது இந்த உணவுக்கும் அவளுடைய மருத்துவமனைச் செலவிற்கும் ஆன கட்டணம், இதன் மூலம் அவர்களுக்குள் உள்ள உறவை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைத்திருக்கலாம்.). Secret Garden korean drama tamil dubbed

எதிர்பார்த்தபடியே, அவள் படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பியதும், அவளுடைய செல்வாக்கையும், அருமையான மதிய உணவையும் ஒரு சக ஸ்டண்ட் நடிகனாக இருக்கும் தோழன் பாராட்டுகிறான். இயக்குநர்கூட கிளாராவை முகஸ்துதி செய்து, அவளுக்கு அந்த கடின வேலையிலிருந்து விலக்கு அளித்துவிட்டு, அவளுக்கு பதிலாக அந்த படத்தின் ஹீரோயினையே டூப் இல்லாமல் செய்யச்சொல்லி விடுகிறார். அது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது டைரக்டர் சென்றதும் படத்தின் ஹீரோயின், ”நான் முன்பு கேட்ட பொழுது அவருக்கும் உனக்கும் தொடர்பு இல்லை, என்றாயே. இப்பொழுது இது என்ன?” என்று கேட்க, கிளாராவுக்கு கோபம் வந்து விடுகிறது. லேசான கோபத்துடன் ”உனக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?” என்று கேட்டு விட்டு திரும்பி செல்கிறாள்.

கிளாராவின் அலுவலகத்தில் அவளின் சீனியரிடம், அங்கு வேலை செய்பவன் ஹோட்டலில் நடந்த அனைத்தையும் சொல்கிறான். இந்நிகழ்வு சீனியருக்கு அவ்வளவாக மகிழ்ச்சியை அளிக்கவில்லை, எல்லோருக்கும் நல்ல உணவு என்பதை விட, கிளாரா தனியாக உண்டாள் என்பதே வருத்தத்தை அளித்தது. அவன் தனது விரக்தியைப் போக்க பாறை ஏறும் பயிற்சிக்குச் செல்கிறான். அங்கும் அமைதி ஏற்படவில்லை.  

மேடை பாடகனின் செட்டில் தன் குழுவினருடன் அவன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது கூட இருப்பவன் பாடகனின் முன்னாள் காதலியே பற்றி கூறுகிறான். பாடகனுக்கு லேசான கோபம் வருகிறது அவன் அது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவனது மொபைலுக்கு ஒரு போட்டோ வருகிறது.  [ பாடகரின் பெயர் ஓஸ்கா. என்ன பேரோ இது. கடவுளே!!!!, சரி நாமும் ‘ஓஸ்கா’ என்றே அழைப்போம்.] அந்த போட்டோவை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைகிறான். அதில் அவன் ஜோவனின் ஹோட்டலில் ஓஸ்காவுடன் ஒரு பரிசுப் பயணத்தை வழங்கும் ஒரு விளம்பரப் பிரச்சாரம் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஜோவனின் வேலை என்று யோசித்து அவனைத் தேடி வீட்டிற்கு செல்கிறான். 

ஜோவன் வீட்டில் ஜோவன் கிளாரா கூறியவற்றையே யோசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது பாடகன் வேகமாக வந்து அவளிடம் கோபமாக கத்துகிறான். எனக்கு தெரியாமல் நான் எந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று கத்துகிறான். எந்தவித சலனமும் இல்லாமல், ஜோவன் தன் கசின்-ஐ அமைதியாக இருக்கும்படி கூறுகிறான். ஏனென்றால் எப்படியும் கடைசியில் அந்த விளம்பரத்தை அவன் தான் செய்யப் போகிறான். ஓஸ்கா எதிர்ப்பைத் தெரிவித்து பெருமூச்சு விடுகிறான்.

இன்று, செய்தித்தாள்களில் வந்த ஒரு உண்மை இல்லாத கட்டுரையின் அடிப்படையில், ஓஸ்கா புதிய திறமைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்கிறான். அதனால் ஓஸ்கா சில நாட்களுக்கு முன்னர் பார்த்த கிளப்பில் பாடிக்கொண்டிருந்த ஒரு பையனைக் கண்டுபிடிக்குமாறு தனது மேலாளரிடம் ஒரு புதிய திட்டத்தைக் கூறுகிறான்.

ஓஸ்கா தன் காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ​​ஜோவன் அங்கு வருகிறான். விடுமுறை கொண்டாட்டத்தைப் பற்றி அவனுக்கும், ஓஸ்காவுக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்படுகிறது. பிறகு ஜோவன் , “உனக்கு அந்த சண்டைக்காட்சி நடிகையைத் தெரியுமல்லவா? மிகவும் கோபக்காரியும், அலட்சியமாகப் பேசக்கூடியவளுமான ஒரு பெண் அவள். அவளைப் போன்ற வேறு யாரையாவது உனக்குத் தெரியுமா?” என்று கேட்கிறான். ஓஸ்காவுக்கு கோபம் வந்து, எரிச்சலுடன் “நீ மறுபடியும் அவளைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாயா?” என்று கேட்டாலும், அந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறான். தன் முன்னாள் காதலி அப்படித்தான் இருந்தாள் என்று கூறுகிறான். இதற்கு ஜோவன் மீண்டும், “ஒரு பெண் உன்னைத் திட்டும் போது நீ எப்போதாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாயா?” என்று கேட்கிறான். அதற்குப் ஓஸ்கா கோபமாக கத்த, ஜோவன் ஆழ்ந்த சிந்தனையில் அங்கிருந்து சென்றுவிடுகிறான். [ ஹாஹா…போவதற்கு முன்னால் ஒரு சின்னதனமான காமடி வேறு ஓஸ்காவை வெறுப்பேத்த ஜோவன் செய்கிறான். ஓஸ்காவின் காதலி போட்டு இருக்கும் உடை முன்னர் அவனின் வேறு ஒரு காதலி போட்டிருந்த உடை தானே என்று கேட்டுக்கொண்டே ஜோவன் போக… ஓஸ்கா வெறுத்துப் போகிறான்.] Secret Garden korean drama tamil dubbed

கிளாராவின் சீனியர் ஜோவனைப் பார்ப்பதற்காக அவனது அலுவலகத்திற்கு வருகிறான். அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பெனி ஆட்களுக்கு மதிய உணவு வாங்கி கொடுத்ததை ஆட்சிபிக்கிறான். மேலும் கிளாராவிடம் வம்பு செய்ய வேண்டாம் என்றும் அவனை எச்சரிக்கிறான். ”அவள் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறாள். அவள் வேலையில் அவள் மிகவும் திறமையானவள். அதனால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று ஆழ்ந்த குரலில் அமைதியாக கூறினாலும், அவன் குரலில் எச்சரிக்கை தெரிகிறது. ஜோனுக்கு அது பிடிக்கவில்லை, என்றாலும் அந்த கருத்தை ஒப்புக்கொள்கிறான். ‘அவளுக்கு அவன் உதவ விரும்புவதாகவும். அதனால் இனி சீனியர் அதில் குறுக்கே வர வேண்டாம், வம்பு செய்ய வேண்டாம்’ என்றும் கூறினான். இருவரும் அமைதியாக பேசினாலும், ஒரு சூடான வாக்குவாதம் தொடங்குவதற்கு அடித்தளமான சூழ்நிலை அங்கு நிலவுகிறது. சீனியர் மேலும் அங்கு இருக்க விருப்பப்படாமல் எழுந்து வெளியே வந்து விடுகிறான்.

ஓஸ்கா விரைவில் வெளியிடும் மியூசிக் ஆல்பத்திற்கான வேலை விஷயமாக அவனின் முன்னாள் காதலி வருகிறாள். [ முன்னாள் காதலி பெயர் ‘சியூல்’. நாம் இனி சியூல் என்றே குறிப்பிடுவோம்.] சியூல் ஓஸ்காவின் இடத்திற்கு வர, அங்கே அவன் இல்லை, அவனுடைய மேலாளரை மட்டுமே அவள் காண்கிறாள்,. அவர்கள் இருவரின் முன்னாள் உறவுகளையும், அந்த வேதனையான கடந்த காலத்தையும் பற்றி அந்த மேலாளர் அறிந்திருந்ததால், அவன் அவளை பார்த்ததில் மகிழ்ச்சி அடையவில்லை, அவர்கள் மியூசிக் வீடியோ இயக்குனராக தான் வேலை செய்வது பற்றிய அவளுடைய திட்டத்தை அவள் கூற, ‘ஏற்கனவே வேறொருவரை தேர்ந்தெடுத்து விட்டதாக’ கூறி அந்த மேலாளர் அதை மறுத்து விடுகிறான். ‘இனிமேல் இங்கே வரவேண்டாம்’ என்று அவளிடம் கூறி விடுகிறான்.

தொலைபேசியில் ‘தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்’ என்பதை அறிய சியூல் தன் நண்பன் ஒருவனின் உதவியை கேட்கிறாள். பின்னர் அருகில் ஜோவனின் கண்ணாடி வீடு இருப்பதை அறிந்து அங்கு செல்கிறாள். அந்த நேரத்தில் ஜோவன் அங்கு வர, அவனிடம் விஷயத்தை கூறி ”உங்களுக்கு இன்று வேலை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்கிறாள். ஜோவனும் ‘இல்லை’ என்று கூற, மிகவும் மகிழ்ச்சியுடன் ”எனக்கும் எந்த வேலையும் இல்லை” என்று கூறுகிறார். ஜோபன் லேசான சிரிப்புடன், ”ஓகே, நல்லா என்ஜாய் பண்ணுங்க, நான் போகிறேன்” என்று வீட்டிற்குள் சென்று விட அவ்வளவு விழித்துக் கொண்டு நிற்கிறாள்.

வீட்டினுள் சென்ற ஜோவன்க்கு கிளாராவின் எண்ணங்கள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கிளாராவின் அந்த நான்கு ரூபாய் நோட்டுகள். அவை அவனை மிகவும் எரிச்சல் அடையச் செய்கிறது. சிறிது யோசனையுடன் முடிவாக, அவன் தன் மருத்துவ தோழியை அழைத்து ‘கிளாராவின் மருத்துவ கட்டணத்திற்கான ரசீதை’ கேட்கிறான்.

கிளாரா தனது அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலமாரியின் முன் நின்று கொண்டிருந்தபோது, ஜோவன் அவளைக் காண வருகிறான், கிளாரா அவனிடம் ”இங்கே வரவேண்டாம் என்று நான் உன்னிடம் சொல்லவில்லையா?” என்று கேட்கிறாள். அதற்கு ஜோவன் ‘தான் கிளாராவை இப்போதெல்லாம் காண்பது இல்லை, என்றும் தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொள்ளவே இப்பொழுது வந்திருப்பதாகவும்,’ கூறி அவளிடம் ‘ஐந்து டாலர்கள்’ கேட்கிறான். அப்பொழுது அந்த அளவுக்கு கிளாராவிடம் பணம் இல்லை. அதனால் இருவருக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்படுகிறது. ஜோவன் ‘கிளாரா கோபத்துடன் அங்கிருந்து செல்லும் வரை’ அவளை இன்னும் கொஞ்சம் சீண்டி பார்க்கிறான். அதனால் தன் அலமாரி கதவை வேகமாக அடித்து சாட்சி விட்டு அங்கிருந்து கோபமாக செல்கிறாள். ஆனால் அலமாரி கதவு லேசாக திறந்து கொள்ள, இப்பொழுது அந்த அலமாரி ஜோவனின் கண்ணில் படுகிறது. Secret Garden korean drama tamil dubbed

கிளாராவின் லாக்கருக்குள் எட்டிப் பார்க்கும் எண்ணத்தை ஜோவனால் தவிர்க்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே வந்தவன், அவளும் அவள் தந்தையும் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, அவனின் போனில் போட்டோ எடுத்தான். பிறகு அவள் ஒட்டி வைத்திருந்த ஓஸ்காவின் புகைப்படத்தை பார்த்ததும் அவனுக்கு பொறாமை ஏற்படுகிறது. அந்த புகைப்படத்தில் ஒஸ்காவுடன் போஸ் கொடுக்கும் பெண்ணின் முகத்தின் மீது கிளாராவின் முகம் ஒட்டப்பட்டிருந்தது. கோபத்துடன் ஜோவன் அந்தப் புகைப்படத்தை எடுத்து கசக்கி போடுகிறான்.

கிளாரா சண்டைக் குழுவினருக்கு பயிற்சிகளை அழித்துக் அளித்துக் கொண்டிருக்கிறாள். அங்கு வந்த ஜோவன் வேண்டும் என்றே, மற்றொரு சண்டை கலைஞரின் உதவியை மறுத்து, ‘தனக்கு காலை பிடித்துக் கொள்ள ஒருவர் தேவை’ என்று கிளாராவிடம் கூறுகிறான். கிளாரா எரிச்சல் அடைந்தாலும், வேறு வழியில்லாமல் அவன் சொன்னதை செய்ய, அவனது கால்களை பிடித்துக் கொண்டு, அவனை ‘சரியாக செய்ய’ சொல்கிறாள். ஆனால் அப்படிச் சொன்னது அவளை கூச்சப்படுத்தும் என்றோ, கோபப்படுத்தும் என்றோ கிளாரா எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் ஜோவன் கிளாராவை சீண்டி விட செய்யும் செயல் அவர்களை ஆபத்தான நெருக்கத்தில் நேருக்கு நேராக கொண்டு வந்து நிறுத்துகிறது. கிளாரா இந்த நெருக்கத்தில் சங்கடமாக உணர்ந்து கூச்சத்துடன் தன் பார்வையை தாழ்த்துகிறாள். அதே நேரத்தில் ஜோவன் ஒவ்வொரு முறையும் பயிற்சி முடிக்கும் போது, அவளை நேருக்கு நேராக பார்ப்பதே ரசிக்கிறான். ‘சீட் அப்’ – உடற்பயிற்சி இவ்வளவு ரசனையான காட்சியாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்?

ஜோவன் கிளாராவின் அழகை பற்றி பேசி அவளை கூச்சப்படுத்துகிறான். அதில் அவளுக்கு மேலும் கோபம் வந்து அவனை உதைத்து விட்டு வெளியேறுகிறாள். நேராக மாடிக்குச் சென்று நின்ற கிளாராவின் பின்னோடு ஜோவனும் வேகமாக வருகிறான். அவனிடம் தான் மிகவும் கோபமாக இருப்பதை கூறி அவனை எச்சரிக்கை செய்துவிட்டு, அவனை ஆழமாக பார்த்து ”ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்? நீ என்னை விரும்புகிறாயா? அதனால் தான் மீண்டும் மீண்டும் வருகிறாயா?” என்று கேட்கிறாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜோவன், ”என்னை பார்த்தால் பைத்தியமாகவும், முட்டாளாகவோ தெரிகிறதா? உன்னை மாதிரி ஒருத்தியை, என்னை மாதிரி ஒருவன் விரும்ப முடியுமா? உனக்கு ஒரு விஷயம் சொல்லவா மிக மிக தகுதியான எத்தனையோ பெண்கள் என்னை திருமணம் செய்து கொள்ள வரிசையில் காத்திருக்கிறார்கள். உன்னுடைய தகுதி என்ன? உன்னிடம் ஒன்றுமே இல்லை,” என்று நிதானமாக கூறுகிறான். அவனுடைய பதில் ஒரு திட்டவட்டமான மறுப்பைப் போலத் தோன்றினாலும், அவன் அவளின் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்பதை உணரலாம். 

அவனின் பதிலிலும்,நிதானத்திலும் எரிச்சல் அடைந்து,” பின் எதற்கு என்னை பின் தொடர்ந்து வருகிறாய் எப்பொழுதும்,” என்று அவள் கேட்க, அதற்கு அவன், “அதை நீயே கேட்டுக்கொள்” என்று, அது ஒரு முற்றிலும் நியாயமான பதில் என்பது போல பதில் கூறிவிட்டு, ”நான் எப்போதும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும்போது நான் என்ன தான் செய்ய முடியும்? நான் உன் அருகில் இல்லாதபோதும், நீ என் அருகில் தான் இருப்பது போலவே உணர்கிறேன். நான் என்னதான் செய்ய வேண்டும்?” என மீண்டும் பைத்தியக்காரத்தனமாக உளற ஆரம்பிக்கிறான். ஜோவன் உண்மையிலேயே ஆச்சர்யமாக ”“நீ எனக்கு என்ன செய்துவிட்டாய்? ஏன் எனக்கு மட்டும் இப்படி? நான் உன்னை என் சிந்தனையில் இருந்து வெளியேற்ற ஏதேதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் உன்னிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீ கோபப்படுகிறாய்; விரட்டி விடுகிறாய்; வன்முறையாக நடந்து கொள்கிறாய். உண்மையில் நீ விசித்திரமானவள் தான். ஆனால் அது தான் பிரச்சனையே. ஏனென்றால் நீ விசித்திரமாக இருப்பது தான் உன்னை நோக்கி என்னை இழுக்கிறது,’ என்று அவளைப் பார்த்து அவனின் இயலாத நிலையை ஜோவன் கூறுகிறான். கிளாரா அவன் கூறுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். எல்லாவற்றையும் கூறிவிட்டு கடைசியாக, ”இனி நான் இங்கு வரமாட்டேன். நான் போகிறேன்” என்று திரும்பிச் செல்கிறான்.

ஓஸ்கா தனது பின்னணி நடன கலைஞர்களுடன் ஒத்திகை பார்த்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவனது மேலாளர் வந்து, ஏற்கனவே ஒஸ்கா கண்டுபிடிக்க சொன்ன கிளப் பாடகனை கண்டுபிடித்து விட்டதாகவும் அவனுக்கு ஓஷ்கா யார் என்றே தெரியவில்லை என்றும் கூறுகிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒஸ்கா மேலாளரிடம் இருந்து போனை பிடுங்கி, அவனுக்கு போன் செய்து, ‘தான் ஓஸ்கா’ என்று கூற, அதற்கு எதிர்முனையில் இருக்கும் பாடகன் ”அதனால் என்ன? உங்கள் இசையை நான் ஒரு முறை கூட கேட்டதே இல்லை. உங்களுக்கு என்னை சந்திக்க வேண்டும் என்றால் உங்களுடைய இசையை அனுப்பி வையுங்கள்.” என்று கூறி போனை வைத்து விடுகிறான். தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதது ஓஸ்காவிற்கு ஒரு தனிப்பட்ட அவமானமாக தோன்றுகிறது. ஆனால் அந்தப் பாடகன் ஒரு கடையில் நின்று கொண்டு, தனது கீபோர்ட்டை ஏனோ விற்றுக் கொண்டிருக்கிறான். மேலும் பாடல்கள் எழுதுவதையும் விட்டுவிட முடிவு செய்துள்ளான்.

கிளாராவின் தோழி ஒரு அறிமுகம் இல்லாத நபருடன் டேட்டிங் [ அதாவது சாப்பிட்டுக் கொண்டே பெண் பார்ப்பது ] செல்கிறாள். ஆனால் அங்கு சென்றதும் தான் தெரிந்தது தன்னுடன் வேலை பார்க்கும் மேல் அதிகாரி ஒருவன் தான் அது என்று. அந்த செயலாளர் ”ஐந்து ஆண்டுகளாக….” என்று ஏதோ சொல்ல தொடங்கும் போது, அவன் இத்தனை காலமாக தன்னைப்பின் தொடர்ந்து வருவதாக கிளாராவின் தோழி நினைத்து, உடனடியாக அந்த உணவகத்தை விட்டு வெளியேறி விடுகிறாள். அவள் வெளியே வந்ததும் கைகளில் மத்தாப்புகளை ஏந்திய படி, அவளுடன் பணிபுரியும் மற்ற ஆண்கள் அவளை வரவேற்கிறார்கள். அப்போது செயலாளர் ஒரு இனிய புன்னகையுடன் அவளை வரவேற்று அவளுடைய ஐந்து வருட பணி நிறைவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறான். தோழியும் மகிழ்ந்து அவ்வாறு சட்டென்று எழுந்து வந்ததற்கு வருந்துகிறாள்.

இதற்கு இடையில் வீட்டில் கிளாரா தனது தொலைபேசியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது ஜோவனிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதனால் கிளாரா ஒரு ஆடம்பரமான பப் போன்ற உணவகத்திற்கு அவனை சந்திக்க செல்கிறாள். இப்பொழுது அவளுடைய மனநிலை சிறிது மாறி இருக்கிறது. முதல் முறையாக லேசான விருப்பத்துடன் செல்கிறாள். அவர்களின் சந்திப்பின்போது கிளாரா ஜோவனுக்கு ஒரு பீர் வாங்கி கொடுப்பதாக சொல்கிறாள்.

அதே நேரத்தில் ஜோவன் அவளுடைய பழைய கிழிந்து பையும், அதை ஊக்கால் குத்தி சரிசெய்த விதமும் பார்க்கிறான். அவனுக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது. ‘அவள் லேசாக மனம் மாறி இருக்கிறாள்’ என்பதை உணராமல், மெதுவான குரலில் அழுத்தமாக கத்த ஆரம்பிக்கிறான்.

”என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் சமாளிக்க முடியாத ஒரு பெண்ணை பார்க்கிறேன். இதற்கு முன்னால் நான் எத்தனையோ லாப நட்டங்களை கணக்கிட்டு இருக்கிறேன். ஆனால் இப்பொழுது நான் பார்க்கும் இந்த சிறிய பையின் விலை எவ்வளவு? என்பதை என்னால் கணக்கிட இயலவில்லை. சிறிதளவாவது என்னை பற்றி யோசித்து இருந்தால் நீ இந்த இடத்திற்கு என்னைப் பார்க்க கவனமாக வந்திருப்பாய். வெறும் இரண்டு டாலருக்காக நான் உன்னை இங்கே அழைத்து இருக்கவில்லை, இல்லையா? உன்னிடம் இந்த ஒரே உடையும், இந்த பையும் தான் இருக்கிறதா? நல்லதாக ஒரு சிறிய பை வாங்கக்கூடிய அளவு கூட உன்னிடம் இல்லையா? அல்லது அதற்கு உனக்கு நேரம் இல்லையா? பதில் சொல். ஒரு புதிய ஹேண்ட்பேக் கூட வாங்க முடியாத அளவுக்கு உள்ள ஒரு பெண்ணிடமா நான் ஆசை வைத்தேன்,” என்று கடுமையாக கேட்கிறான். அதிர்ந்து கலங்கிய கிளாரா, ”நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் இதற்காக மட்டும் தான் வந்தேன்,” என்று தன்னிடம் இருந்த இரண்டு டாலர் ரூபாய்களை அவனிடம் எடுத்து வைத்து விட்டு சென்று விடுகிறாள். Secret Garden korean drama tamil dubbed

கிளாரா கிளப்பில் இருந்து வெளியே வருகிறாள். அப்பொழுது ஒஸ்காவும் அங்கு வருகிறான். தன்னை ஒரு பிரபலமாக மதிக்க தயாராக இல்லாத அந்த முகம் தெரியாத இசை கலைஞனைப் பற்றி மிகுந்த கோபத்தில் இருக்கிறான். ஆனாலும் அந்த நேரத்தில் அங்கு கிளாராவை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அவளிடம் பேச அவளை நிறுத்துகிறான். அதே நேரம் ஜோவனும் க்ளப்-ல் இருந்து வெளியே வருகிறான். கிளாரா செல்வதை தடுக்க ஒஸ்கா அவளுடைய கைப்பையைப் பற்றி இழுக்கும்பொழுது, ஏற்கனவே கிழிந்திருந்த பை முற்றிலும் கிழிந்து அறுந்து விடுகிறது, இது ஜோவனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஒஸ்காவோ ஜோவன் செய்தது போல கோபப்படாமல், மாறாக கிளாராவினுடைய சமயோகித புத்தியை பாராட்டுகிறான், ஆனாலும் கூட ஜோவனைப் பார்த்து விட்ட இந்த நிகழ்வு அவளை மேலும் பாதிக்கிறது. அதனால் ஜோவனைப் பதட்டத்துடன் பார்க்கிறாள். ஆனால் ஜோவனோ ஒரு வார்த்தையும் பேசாமல் கோபத்துடன் அங்கிருந்து காரை எடுத்துச் சென்று விடுகிறான்.

‘ஒஸ்கா காண வந்த இசைக்கலைஞன் அந்த கிளப்பை விட்டு வெளியேறி விட்டான்’ என்பதை கேட்ட பிறகு, ஒஸ்கா கிளாராவிடம் ”சிறிது நடந்து விட்டு வரலாமா?” என்று அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். கிளாரா சோகமாக இருப்பதை பார்த்து, ”ஒருவரின் மனதை காயப்படுத்தக்கூடிய வன்மையான சொற்களை சொல்லுவதில் ஜோவன் மிகவும் திறமைசாலி. அவனுடைய தாயின் கருவறையை விட்டு வெளியில் வரும் பொழுதே அவனது மரியாதையான நடத்தையையும் விட்டுவிட்டு வந்து விட்டான்” என்று அவளை ஆறுதல் படுத்திவிட்டு, ”உங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடக்கிறது? ஜோவனுடன் அவளுக்கு என்ன உறவு?” என்று மில்லிதான குரலில் கேட்கிறான். அதற்கு கிளாரா ”ஒரே ஒரு பையன் மூலம் நாங்கள் ஒருவருக்கொருவர் எங்கள் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விதமான உறவு” என்று மழுப்பலாக பதில் சொல்கிறாள்.. அவன் உடனே கிளாராவிடம் ”அவன் உன்னிடம் என்ன செய்தான்? அவனது ஏதாவது பெரிய விஷயமாக உன்னிடம் இருக்கிறதா? அதனால்தான் உன்னை பற்றி எப்பொழுதும் பேசிக் கொண்டே இருக்கிறானா? ‘அது என்ன’ என்று என்னிடம் கூற முடியுமா? எனக்கு அது தேவைப்படுகிறது,” என்று ஒஸ்கா கேட்கிறான். இப்பொழுது சிறிதான ஆச்சர்யமாக அவனைப் பார்த்து, ”உங்கள் இருவருக்குள் என்ன? ஏன் இப்படி பேசுகிறீர்கள்?” என்று கேட்க, ”உனக்கு தெரியாதா? நாங்கள் இருவரும் கசின்ஸ். ஜோவன் யாருக்கும் இதை தெரிய விடமாட்டான். எங்களுக்குள் குழப்பமான ஒரு குடும்ப உறவு இருக்கிறது” என்று கூறுகிறான். ஒஸ்கா பேசிக்கொண்டே இருக்க, இந்த விஷயம் அவளுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவன்… அவளைப் பற்றிப் பேசுகிறானா?

அவர்கள் இருவரும் நடந்து செல்லும் பொழுது, ஜோவனின் சகோதரி அவர்களை பார்த்து விட்டு வருகிறாள். ஒஸ்கா அவளை அறிமுகப்படுத்த அவளோ கிண்டலாக கிளாராவிடம் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுகிறாள். பின் இருவரும் ஜோவனைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். ஜோவன் ‘சியூல்’-உடன் ஒரு அறிமுக டேட்டிங் சென்றதாகவும், ஆனால் சியூல் ஜோவனைப் பிடிக்காமல் நிராகரித்து விட்டதாகவும் வதந்தி பரவி இருக்கிறது, என்று ஜோவனின் சகோதரி கூறுகிறாள். சியூல் பற்றி கேட்ட ஓஸ்கோவின் புன்னகை மறைந்து முகம் யோசனையில் ஆகிறது.

           [ சியூல்-ன் பெயரைக் காப்பாற்றுவதற்காக ஜோவன் கொடுத்த யோசனை தான் அது. தான் அவளை நிராகரிக்கவில்லை ஆனால் சியூல் தான் தன்னை நிராகரித்து விட்டாள் என்று...]

ஒஸ்கா காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, தனக்கும் சியூல்-க்கும் இடையில் இருக்கும் உறவை நினைத்து பார்க்கிறான். பல ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு அது. அவன் பிரபலமாக ஆகத்தொடங்கிய நேரம், அவனுடைய ரசிகைகள் அவனை சூழ்ந்து கொள்வதைப் பார்த்து கோபத்தோடு பொறாமை பட்டு அங்கிருந்து சியூல் சென்றதை இப்போது நினைத்து பார்க்கிறான்.

அந்த இரவு இரு உறவினர்களும் வீட்டின் வெளியே நடந்து கொண்டே பீர் குடிக்கிறார்கள். முதலில் தனித்தனியாக, பின்னர் ஒன்றாக…

     [ அவர்களின் வார்த்தையாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, ரசனைக்குரியதாக....அவை அப்படியே கீழே 👇👇👇 ']

இருவரும் தான் தான் முதலில் பேசி பதில் கேட்க விரும்புகிறார்கள்.  இதில் இருவருக்கும் பதில் கிடைக்காமல் மாற்றி மாற்றி கேள்விகளை மட்டுமே கேட்கும் முரண்பாடாக வெளிப்படுகிறது.

ஜோவன் : உன்னிடம் ஒரு கேள்வி
ஓஸ்கா : உன்னிடம் ஒரு கேள்வி

ஜோவன் : நான் தான் முதலில் கேட்டேன்
ஓஸ்கா : நான் தான் முதலில் கேட்டேன்

ஜோவன் : அவளை நீ வீட்டிற்கு அழைத்துச் சென்றாயா?
ஓஸ்கா : இந்த முறை உன் டேட்டிங் எப்படி இருந்தது?.

ஜோவன் : புதிதாக ஒன்றும் இல்லை. அவள் என்னைப் பற்றி பேசினாளா?
ஓஸ்கா : ‘நீ தான் நிராகரிக்கப்பட்டாய்’ என்பது உண்மையா?

ஜோவன் : ஏதாவது கொஞ்சமாவது….
ஓஸ்கா : அப்படித்தானா?

ஜோவன் : “அவள் இன்னும் அந்த பழைய பையைத் தான் வைத்திருந்தாளா? ஒரு பிளாஸ்டிக் பை கூட இதைவிட நன்றாக இருக்கும்.”

கேள்விகள் இப்படியே தொடர ஒரு கட்டத்தில் ஒஸ்காவுக்கு கோபம் வந்து விடுகிறது. சட்டென்று அவன், ”நீ அவளை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா? இல்லை அல்லவா? நீ ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை தான் செய்யப் போகிறாய். அதனால் அவளைப் பற்றி சீரியஸாக பேசுவதை நிறுத்திவிட்டு, கடைசி முறையாக டேட்டிங் சென்ற பெண்ணை பற்றி சொல்,” என்று கோபம் கொள்கிறான். அதற்கு ஜோவன் ”நீ ஏற்கனவே கேள்விப்பட்டாய், அல்லவா? நான் தான் நிராகரிக்கப்பட்டேன் என்று, பிறகு என்ன? கிளாராவை பற்றி கூறு” என்று கேட்க, ஒஸ்கா சிறிது நேரம் அவனை பார்த்துவிட்டு ”இந்த அளவிற்கு நீ புலம்புவதை பார்த்தால், உன் தவறு என்ன அவளிடம் இருக்கிறது? உன்னுடைய புகைப்படம் ஏதாவது அவளிடம் இருக்கிறதா?” என்று அபத்தமாக கேட்கிறான். அதற்கு ஜோவன் ”என்ன புகைப்படம்? நான்தான் அவளது புகைப்படத்தை எடுத்தேன்” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு, எழுந்து செல்கிறான். [ முன்னர் அவளின் அலமாரியில் இருந்து அவளின் புகைப்படத்தை எடுத்தான், இல்லையா? அதைத்தான் இப்பொழுது கூறுகிறான் போல…]

கிளாராவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில், லோயல் பல்பொருள் அங்காடியில் நடந்த ஒரு பரிசுப் போட்டியில் அவள் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அது தன் தோழி வேலை செய்யும் இடம் என்பதால், அவள் தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறாள். ஆனால் ‘இதில் அவளின் முதலாளிக்கு தான் அதிகம் சம்பந்தம் இருக்க முடியும்’ என்று அவளுடைய தோழி எடுத்துக் கூறுகிறாள். அவளுக்குள் ஏதோ யோசித்து தோழியிடம் அவளுடைய கைப்பையை ஒரு நாளுக்கு இரவலாகக் கேட்கிறாள்.

என்ன முயன்றும் ஜோவனால் கிளாராவை மறக்க இயலவில்லை. அதனால் ஜோவன் அவளுடைய பழைய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே தன் காரில் அமர்ந்திருக்கிறான். யோசனையுடன் கிளாராவின் அழைப்புக்காகக் காத்திருந்து சோர்வடைந்த அவன், காரிலிருந்து இறங்கி கதவை நோக்கிச் செல்கிறான். கதவைத் தட்டத் தன் கையை உயர்த்துகிறான் ( தட்டும் போது மிகவும் சுத்தமான தன் கை அழுக்காகாமல் இருக்க, ஒரு கைக்குட்டையால் கையைச் சுற்றிக்கொள்கிறான் ). ஆனாலும் கூட பிறகு அவன் தயங்கி, பெருமூச்சு விட்டு, அந்த முடிவைக் கைவிடுகிறான். Secret Garden korean drama tamil dubbed

மறுநாள், ஜோவன் தன் செயலாளருடன் பல்பொருள் அங்காடியில் நடந்து செல்லும்போது, கிளாராவை சந்திக்கிறான். கிளாரா தான் இரவலாக வாங்கிய பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, தனது பரிசைப் பெற வந்திருக்கிறாள். இருவரும் தங்கள் பாதையிலேயே நின்று ஒருவரையொருவர் உற்றுப் பார்க்கிறார்கள்.

     இத்துடன் எபிசொட் 3 முடிவடைகிறது. மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம். 

Posts – Secret Garden Korean Drama Episodes Explained in Tamil

Tags,

korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 3 explain in tamil, 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *