
Sisyphus: The Myth
கதை : சிசிபஸ்: தி மித்
ஒரு மேதை பொறியியலாளரும், புதிய தொழில்நுட்ப நிறுவனமான குவாண்டம் அண்ட் டைமின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் டே சுல் (சோ சியுங் வூ) கதையை தி மித் சொல்கிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ அவரது மூத்த சகோதரர் ஹான் டே சானின் மரணம் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் குற்ற உணர்ச்சியில் மூழ்குகிறார். ஆனால் இப்போது நடக்கின்ற சம்பவங்கள் அவரது சகோதரர் உண்மையில் உயிருடன் இருக்க முடியுமா என்று அவரை வியக்க வைக்கிறது.
பின்னர் அவர் எதிர் கால உலகின் முழுமையான அழிவை விவரிக்கும் கொரியாவைச் சேர்ந்த ‘காங் சியோ ஹே’ என்ற பெண் சிப்பாயை (பார்க் ஷின் ஹை) சந்திக்கிறார். அவரின் நோக்கம் ஹீரோவைக் காப்பாற்றுவதே. அதற்கான காரணத்தையும், தன் அண்ணன் பற்றிய உண்மையையும் தெரிந்து கொள்ள ஹீரோ தேடலில் ஈடுபடும் போது, அவரது எதிர்காலம் மற்றும் உண்மைக்கான இந்த துரத்தலில் மர்மங்களும் இரகசிய முகமைகளும் அவரைத் தாக்கி அதிரச் செய்கின்றன.
மேலும் அது அவரை ஒரு இக்கட்டான சூழலில் கொண்டு வந்து தள்ளுகிறது. அதாவது எதிர்கால் உலக அழிவு ஏற்படாமல் தான் தடுத்துவிட்டால் தன்னால் தன் அன்புக்குரியவளை சந்திக்க இயலாது. அதனால் ஒன்று தான் உலக அழிவைத் தடுக்க வேண்டும் அல்லது அழிவை வேடிக்கை பார்த்து தன் உயிரான இணையைக் காப்பாற்ற வேண்டும். இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விவரம் :
நாடகம்: சிசிபஸ்: தி மித் [Sisyphus: The Myth]
நாடு: தென் கொரியா
அத்தியாயங்கள்: 16
அசல் நெட்வொர்க்: jTBC, நெட்ஃபிக்ஸ், [ jTBC, Netflix ]
காலம்: 1 மணி. 10 நிமிடம்.
வகைகள்: அறிவியல் புனைகதை, த்ரில்லர், அதிரடி, காதல், குற்றம், நாடகம்
முக்கிய கதாபாத்திரங்கள் :
Han Tae Sul

ஹான் டே சுல் என்ற அறிவியல் விஞ்ஞானியாகிய இவர் தனது சகோதரருடன் இணைந்து நிறுவிய புதிய தொழில்நுட்ப நிறுவனமான குவாண்டம் & டைமின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். எனினும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகோதரர் திடீரென இறந்ததால், இவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இவர் மிக மோசமான, அபாயமான சூழ்நிலையில் இருந்து கூட தனது அறிவுக்கூர்மையால் அதில் இருந்து நொடியில் வெளியேற வல்லவர். அதற்கு அவர் பயன்படுத்தும் பொருட்களும் மிக சாதாரணமானவையே.
Kang Seo-hae

ஒரு முழுமையான அழிவை சந்திக்கும் கொரியாவில் வாழ்ந்து, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் பெண்ணான காங் சியோ ஹே, உலகத்தை காப்பாற்றுவதற்காக சட்டவிரோதமாக கடந்த காலத்திற்கு பயணிக்கிறார். அந்த போராட்டத்தில் எதிர்களிடம் இருந்து தன் அன்புக்குரியவனைக் காக்க பல நேரங்களில் தன்னையே பணயம் வைக்க நேரிடுகிறது.
Han Tae-san

தன் தம்பியுடன் இணைந்து குவாண்டம் & டைம் என்ற நிறுவனத்தை நிறுவுகிறார். பின்னர் தம்பியுடன் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் திடீரென இறந்துவிட்டதாக நம்பப்படும் இவர் சிக்மாவைக் கண்டுபிடிப்பதற்காகவும், தன் தம்பியைக் காப்பாற்றுவதற்காகவும் தனது மரணத்தை போலியாக்குகிறார்.
Eddie Kim

குவாண்டம் & டைமின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர், எட்வர்ட் கிம் ஹீரோவின் சிறந்த நண்பர் ஆவார். ஹீரோவின் செயல்களால் சோர்வாக இருந்தாலும், அவரைப் பார்ப்பதற்கான அவரது விருப்பமும் அவரது லட்சியமும் விரைவில் மோதிக் கொள்கின்றன.
Sigma

கடந்த கால நிகழ்வுகளை தனக்கு சாதகமாக கையாண்ட எதிர்காலத்தில் இருந்து வரும் ஒரு மர்மமான பாத்திரம். அவர் தொடக்கப் பள்ளியில் ஹீரோவின் முன்னாள் வகுப்புத் தோழராக வந்தவர். அவர் தனது தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அதனால் ஹீரோவிடம் இருந்த கற்றுக்கொண்ட அறிவியல் சூத்திரத்தால் தந்தையைக் கொலை செய்கிறார். அவரது கடினமான குழந்தைப்பருவத்தின் காரணமாக, அவர் தனிமை உணர்வை வளர்த்துக் கொண்டார், மேலும் உலகத்தை அழிப்பதே தனது ஆணை என்று நினைத்தார். எதிர்காலத்தில், அவர் அட்வான்ஸ் குழுவின் தலைவராக உள்ளார்.