The Taste of Korean Dramas – தமிழில் / dramalookup

   

dramalookup.com

     Korean wave அப்படின்னு சொல்லப்படுற கொரியன் நாடகங்கள் உலகம் முழுதும் அடித்து, பெரும்பாலான மக்களுடைய மனங்களை சுருட்டிச்செல்கின்றன. 


The taste of Korean dramas in Tamil / கொரியன் நாடக சுவை 

dramalookup.com

 Korean wave அப்படின்னு சொல்லப்படுற கொரியன் நாடகங்கள் உலகம் முழுதும் அடித்து, பெரும்பாலான மக்களுடைய மனங்களை சுருட்டிச்செல்கின்றன. இந்த கொரிய அலை கே-டிராமா, கே-பாப் மற்றும் கே-உணவு உள்ளிட்ட வெளிநாட்டினரால் விரும்பப்படுவதைக் குறிக்கின்றது. குறிப்பாக, கொரிய நாடகம் 2000 களின் முற்பகுதியில் ஆசியாவிற்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலும் கூட பிரபலமானது. [korean drama in tamil] கொரிய நாடகங்கள் பிரபலமாக இருப்பதற்கான சில காரணங்கள் குடும்பம், அழகான பின்னணி இசை,  வரலாற்று நாடகங்களை படைக்கும் விதம்,  என்று பல காரணம் இருக்கலாம். இருந்தாலும் அதில்  பெரும்பாலும் முக்கோணகாதல் விவகாரங்கள், ஒரு தொழிலாள வர்க்கப் பெண்ணுக்கும் பணக்காரனுக்கும் இடையிலான காதல் என்பது போன்ற கருப்பொருள்கள் அதிகம் விமர்சிக்கப்படுகின்றன.
                இந்த விமர்சங்கள் எல்லாம் பலவகைகளிலும் வெளிவருகின்றன. அதுவும் நம் தமிழ்நாட்டில் ஒரு சிறு புயலைப் போல கொரிய நாடக அலை வீசினாலும் பெருமளவில் பல எதிர்மறை விமர்சனங்களையே நாம் பார்க்கின்றோம்.[korean drama in tamil]

dramalookup.com

          அடிப்படையில் நான் எந்த நாடகத்தைப் பற்றியும் தவறாக என் கருத்துக்களைக்  கூற விரும்ப மாட்டேன் ….அதிலும் நான் விரும்பும் கொரியன் நாடகம் என்னும் போது…அதைச்செய்ய எப்படி முடியும்?….நான் அவற்றை ஒரு பொழுதுபோக்காக பார்க்க மட்டுமே விரும்புகிறேன்…என்னுடைய விருப்பம் என்றால் அது எந்தக் கதையாக இருந்தாலும் அது மகிழ்ச்சியாக முடிந்திருக்க வேண்டும் …பிழியப்பிழிய சோகம் என்பதெல்லாம் எனக்கு கண்டிப்பாக செட் ஆகாது…எல்லோருமே கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்கக் கடமைப்பட்டவர்கள்…உரிமையுள்ளவர்கள் ,அது கற்பனைக் கதாபாத்திரமாக இருந்தாலும்  சரி, இல்லையா?
                   கொரியன் நாடகத்திலும் குறைகள் இருக்கின்றன. [korean drama in tamil] ஆனால் ‘ரமணிச்சந்திரன்’ கதைகளைப் போன்ற இதமான காதல் கதைகளை விரும்பும் நான் அவற்றை கருத்தில் ஏற்றிக்கொள்வது இல்லை.

                  இதமான காதல் கதைகள் மாதிரியே, அடிக்கடி அவர்கள் நவீன தேவதைக் கதைகளையும் அளிக்கிறார்கள். அதை அவர்கள் அளிக்கும் முறையும் மிகவும் ஈர்ப்பு வாய்ந்ததாகவே அமைகின்றன. 

dramalookup.com

அதைப்போலவே, நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் பள்ளி நாட்களின் துள்ளித் திரிந்த பருவம் அழியாத கோலமாய் என்றும் இருக்கும், இல்லையா? [korean drama in tamil]

dramalookup.com

            எல்லா உணர்வுகளும் சிறிது சிறிதாய்க் கலந்து, ஒரு கதம்பம் போன்ற வாசனையுடன் இருக்கும், அந்தப் பருவத்தின் நிகழ்வுகளைக் கூட, கொரியன் நாடகத்தில் மனதை அள்ளும் விதத்திலேயே நமக்கு காட்சிப்படுத்துகிறார்கள்..
                              இவற்றை எல்லாம் நம்மைப் பார்க்க வைப்பதன் மூலம் அவர்கள் நம்மை விடுபட முடியாத அளவுக்குத்  தங்கக் கம்பிகளால் கட்டிவிடுகின்றனர், என்பதே மறக்க முடியாத உண்மை.

Leave a Reply