dramalookup

The Unclouded Soul – Episode 1 Explanation in Tamil

தி அன்கிளவுடட் சோல் – எபிசோட் 1

முன் கதை

கதை ஆரம்பிக்கும் போது சில செய்திகள் சொல்லப்படுகின்றன. மிகவும் பழைய கால உலகத்தில் இருக்கும் பல மர்மான மலைகளில் செலெஸ்டில் என்று ஒரு மலையில் ஒரு மந்திர நீரூற்று இருக்கிறது. யூலி அதன் பெயர். அந்த நீரைக் குடித்தால் மனிதர்கள் அமுதம் அருந்தியது போல சாகா வாரமும், தீய சக்திகள் 1000 வருட வாழ்வின் சக்திகளும் பெறுவார்கள். இந்த அதிசய மலை கடலுக்கும் வானத்திற்கும் இடையில் மறைந்து இருக்கின்றது. அங்கு செல்லும் வழி அறிய, பழங்காலத்தில் இருந்து தேவர்களுக்கு வழி காட்டும் குன்லுன் என்ற கண்ணாடி தேவை. இந்த கண்ணாடி இருக்கும் இடத்தைத் தேடி மனிதர்களும், தீய சக்திகளும் ஓயாது சண்டை செய்து கொண்டே இருக்கின்றனர். 

தியான்செங் நாட்டின் பேரரசனின் கனவு

தியான்செங் நாட்டின் பேரரசன்

முக்கியமாக மனித குலத்தில் இப்போது முன்னின்று போர் செய்வது பண்டைய தியான்செங் நாட்டின் பேரரசன். அந்த வயதான பேரரசனின் இடைவிடாத பெரு முயற்சியின் காரணமாக ஒரு மந்திர மலையை அவன் அடைகிறான். அவனுடன் கூட வந்த அத்தனை பெரும் இறந்து விட, தான் மட்டும் இங்கு வந்தது தான் செய்த புண்ணியம். தனக்கு இப்போது கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கப்போகிறது என்பது போல அந்த மாயாஜாலத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். 

முக்கியமாக மனித குலத்தில் இப்போது முன்னின்று போர் செய்வது பண்டைய தியான்செங் நாட்டின் பேரரசன். ஒரு நாள் இரவு, அந்த வயதான பேரரசன்  ஒரு மாயக் காட்சிக்குள் ஈர்க்கப்படுகிறான். அதில் அவன் இறுதியாக யூலி நீரூற்றையும், அழிவில்லாதவர் என்று அழைக்கப்படும் ஒரு தெய்வீகப் பிறவியையும் சந்திக்கிறான். தான் வெற்றி  அடைந்து விட்டோம் என்று சந்தோசம் கொள்ளும்போது, அவனுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில், அவன் கண்டது வெறும் மாயைதான் என்றும், உண்மையில் அது அரக்கர்களின் மன்னனான ஹாங் யேயின் கட்டுப்பாட்டில், பாதுகாப்பில் தான் இருக்கிறது, அதை அடைய, அது இருக்குமிடம் தெரிய, தேவர்களின் குன்லுன் கண்ணாடி தேவை என்றும், என்று அவள் அவரை எச்சரிக்கிறாள். மன்னம் தனது முன்னோர்கள் அவனை அளித்துவிட்டதாக கூற, தேவதை அவனிடம் ஹாங் யேய் வெறும் செயலாற்ற நிலையில் தான் இருப்பதாகவும், உனக்கு முன் அவன் அந்த நீருற்றை அடைந்து ஒரு துளி அருந்திவிட்டாலும், பின் அவனை யாராலும் வெற்றி கொள்ள இயலாது, என்றும் கூறிவிட்டு தீய சக்திகளின் அரசனின் உருவத்தையும் காட்டி மறைந்து விடுகிறாள். மன்னம் அவனின் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த உருவம் மன்னனின் கழுத்தை மாய சக்தியால் நெரித்து, நெடுநாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால், என்னை விட்டு தள்ளி நில் என்று எச்சரிக்கிறது.

பெய்யு படையின் தலைவன் பிங்க்சு

பெய்யு படையின் தலைவன் பிங்க்சு

அந்த அதிர்ச்சியில் மன்னம் கண்விழித்து பார்க்கும் போது, தான் மாய உலகத்தால் ஈர்க்கப்பதை புரிந்து கொள்கிறான். மன்னனிடம் பெய்யு என்று தீய சக்திகளை அழிக்கும் படை இருக்கிறது. அதன் வேலை இந்த நாட்டில் நுழையும் தீய சக்திகளைக் கண்டறிந்து அவற்றை அழிப்பது மட்டும் அன்று அவற்றிடம் இருந்து பேரரசனையும் பாதுகாப்பதே ஆகும். தீய சக்தி அதாவது டெமென் அரசன் தன்னை தாக்கும் போது தன்னை பாதுகாக்க வில்லை என்று பெய்யு படையின் மீது மன்னம் கோபம் கொண்டு, [ மன்னனின் கனவில் வந்து பாதுகாக்க வேண்டுமா? என்ன ஒரு அராஜகம். ] அதன் படைத்தலைவனைக் கொன்று அந்த இடத்திற்கு அடுத்த நிலையில் உள்ள பிங்க்சு என்பவனை நியமிக்கிறான். அவனுக்கு டெமென்களை [ தீய சக்திகளை ] அழிக்கும் போர்வாள் மற்றும் படைக்கு கட்டளை இடும் முத்திரை சின்னமும் அளிக்கப்படுகிறது.

நாடோடிப் பெண் சியாவோ யாவோ

நாடோடிப் பெண் சியாவோ யாவோ

இரவு நேரங்களில் டெமேன்களின்  நடமாட்டம் இருக்கும் என்பதால் மக்களை பாதுகாக்க பெய்யு படை காவல் வீரர்கள் இரவு நேரங்களில் வேட்டையாட கிளம்புவது வழக்கம். மக்களும் அதனை உணர்ந்து வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டிருப்பர். ஒரு நாள் கரடி உருவத்தில் இருக்கும் ஒரு தீய சக்தியை துரத்திக் கொண்டு ஒரு பெண் வேட்டையாடி வருகிறாள். அங்கிருக்கும் மக்கள் எல்லோரும் அச்சத்தில் தள்ளி நின்று அவளைப் பார்க்க, அவள் அங்கிருக்கும் மக்களிடம் ‘தான் தீய சக்திகளை வேட்டையாடுபவள்’ என்றும் இப்பொழுது கூட அப்படி ஒரு தீய சக்தியை பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபடுகிறாள். இதனை அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் பிங்க்சு கண்டு கொள்கிறான். ஏனெனில் உண்மையில் டெமென் அதாவது தீய சக்தி வந்தால் அவனது மந்திரவாள் அதனை காட்டிக் கொடுக்கும். ஆனால் இப்பொழுது அந்த மந்திரவாள் சாதுவாக அதன் இடத்தில் இருப்பதைக் கண்டு ‘அந்தப் பெண் ஏமாற்றுகிறாள்’ என்பதை அறிந்து அவனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு நடக்கும் விசாரணையில் அந்தப் பெண்ணும் அவளுடைய தந்தையும் மோசடி செயலில் ஈடுபட்டது தெரிய வருகிறது. இருந்தும் கூட அவளின் தந்தையால் அந்தப் பெண்ணின் உடலில் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளதை அறிந்து கொள்கிறான். அந்த பெண்ணின் பெயர் சியாவோ, இப்பொழுது சியாவோவுக்கு பிங்சுவுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் நடைபெறுகிறது. அவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும் என்றால் அங்கு இருக்கும் மிகப்பெரிய தீய சக்தியை பிடித்து அழிப்பதற்கு அவள் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அது. அதற்கு அவளும் ஒத்துக்கொள்ள, சியாவோவின் தந்தையை சிறைச்சாலையில் அடைத்து விட்டு, அவளைக் காட்டுக்குள் பிங்க்சு தனது படையுடன் அழைத்துச் செல்கிறான்.

அடர்ந்த காட்டில் சந்தேகத்துக்குரிய இடத்தில் அவன் சியாவோவின் கை ரத்தத்தைத் தெளித்து அவளை நடமாட விட காட்டில் உயிர் வாழும் விதிகளின் படி, ஒரு பழங்கால மரத்தின் பாதுகாப்பிற்குள் செய்கிறாள். அவளது இரத்தத்தின் வாசனை அந்த மரத்தில் ஒரு மாற்றத்தைத் தூண்டியது, மேலும் ஜூ ஜியுயின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு பிரம்மாண்டமான பல தலைகள் கொண்ட பாம்பு வெளிப்பட்டது. ஃபெய்யு காவலர்கள் அந்த மிருகத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, ​​ஷியாவோ முன் ஒரு பூனைப் டெமென் தோன்றியது.

அரக்கப் பேரரசன் ஹாங் யே

அரக்கப் பேரரசன் ஹாங் யே

ஷியாவோவைக் கண்டதும் அந்த ‘சியாவோ மு’ என்ற பூனை டெமென் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவளை ‘நிங்’ஆன்’ என்று அழைத்து, ‘நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் எப்படித் திரும்ப வர முடியும்’ என்று கேள்வி எழுப்பினான். அந்த பூனை டெமெனுக்கும் பிங்சுவுக்கும் நடக்கும் போராட்டத்தில் வானத்தில் அந்த அழிவில்லாத தேவதையும் தோன்றி, சியாவோவிடம் அந்த ஒளிரும் கோளத்தைத் தருமாறு கேட்கிறாள். அவளின் மந்திர நிலை எல்லோரையும் கட்டுப்படுத்த, சியாவோவும் தன்னிடம் உள்ள பொருளைக் கொடுக்க முயலும் போது, பூனை டெமென் அவள் ஒரு மாயை என்றும் அவளிடம் அதை தரவேண்டாம் என்று கத்த, சியாவோ விழித்துக்கொண்டு சட்டென்று அந்த பொருளை திரும்ப எடுத்துக்கொள்கிறாள். நடந்த இந்த போராட்டத்தில், சியாவோ ஒரு செங்குத்தான பாறையிலிருந்து கீழே விழ நேரிடுகிறது. இடையில் அவளின் கையின் ரத்தம் அந்த ஒளிரும் கோளத்தில் பட, அவளது இரத்தத்தின் ஸ்பரிசம் அந்த அரக்கப் பேரரசனைத் தட்டி எழுப்புகிறது.

கண் விழித்தவன் பார்வை கீழே விழுந்து கொண்டிருக்கும் சியாவோவைக் காண்கிறது. ‘நீ இன்னும் என்னை விட்டு போகவில்லையா?’ என்று கண்ணீருடன் கூறி, பிங் ஜூ தலையிடுவதற்குள், அவன் அவளைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் மறைந்துவிடுகிறான். இப்போது அவனின் இருப்பிடத்தில் தெளிவாக சியாவோவைப் பார்த்தபோது, ​​ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பிறவியின் நினைவுகள் அவனை சூழ்ந்தன.

ஹாங் யே-ன் இளவரசி நிங்’ஆன் பற்றிய நினைவு

அவன் அவளை ஒரு சாதாரண பெண்ணாக அல்லாமல், இளவரசி நிங்’ஆன் ஆக எண்ணிப்பார்க்கிறான். அப்போது அவள் அவனுடைய மனைவி, இறுதியில் அவனை விட தன் ராஜ்ஜியத்தையும் உலகத்தையும் தேர்ந்தெடுத்து, தன் சொந்த வாளால் அரக்கப் பேரரசனைக் கொள்கிறாள். ஹாங் யேவுக்கு, இந்த மறுசந்திப்பு மிகக் கொடூரமான விதியின் சந்திப்பாக இப்போது தோன்றுகிறது.

.

.

.

.

Tags,

Dramalookup, the unclouded soul review in tamil, the unclouded soul chinses drama in tamil, chinese drama in tamil explanation, drama review in tamil, சீன நாடகம் தமிழில், The Unclouded Soul in tamil, தி அன்கிளவுடட் சோல் எபிசோட் 1 விளக்கம் தமிழில், The Unclouded Soul episode 1 explanation in tamil,

.

.

.

Leave a Reply