Why do people like Korean dramas? – தமிழில் / dramalookup

Why do people like Korean dramas? - தமிழில் / dramalookup

நீங்கள் ‘கொரியன் அலை’ ரசிகரா ? உங்களையும், என்னையும் போல மிக ஏராளமான மக்களை ஒவ்வொரு நாளும் அது தனக்குள் உள் இழுத்துக்கொண்டு தான் செல்கிறது. ஏன் மக்கள் அதை விரும்புகின்றனர்,  என்று பார்ப்போமா?

Why do people like Korean dramas? in Tamil :

Korean drama waves’ – னு சொல்லப்படற கொரியன் நாடக அலைகள் என்றால்…அது அவர்களின் நாடகங்கள், சினிமாக்கள், இன்னும் அற்புதமான அந்த இசை உட்பட அவை யாவும் ஏறக்குறைய உலகம் முழுவதும் பரவி வருவதையே குறிப்பிடுகின்றது…[korean drama in tamil]

Why do people like Korean dramas? - தமிழில் / dramalookup

மக்கள் ஏன் கொரியன் நாடகங்களை விரும்புகின்றனர்? :

குறைந்த அத்தியாயங்கள் 

 பொதுவாக நல்ல கதை தான் இருக்கிறதே, என்பதற்காக வளவளவென்று இழுத்துக் கொண்டு செல்லாமல், பட்டுக் கத்தறித்தார் போல, நறுக்கென்று கதையைக் கூறிவிடுகின்றனர். உலகப்  பார்வைக்கு வரும் எந்த ஒரு கொரியன் நாடகமும், ஒரு நாள் – ஒரு மணிநேரம் என்ற கணக்கில் 16 – ல் இருந்து 20 – அத்தியாயங்களுக்கு மேல் போவதில்லை. அல்லது ஒரு நாள் – அரை மணிநேரம் என்ற கணக்கில் 32 – ல் இருந்து 40 – அத்தியாயங்களுக்கு மேல் செல்லாது.

நடிப்பவர்களின் வசீகரம்

                       கண்டிப்பா இத சொல்லியே ஆகணும், பாஸ்..ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் மிக முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர்கள் எல்லோருமே அழகு மற்றும் நடிப்பு என்று வரும் போது, ஒருவருக்கு ஒருவர் சளைக்காதவர்கள். முக்கியமாக ஹீரோக்கள் [korean drama in tamil] என்றாலும், வில்லன்கள்  கூட வசீகரமானவர்களாகவே இருக்கின்றனர். அவர்களின் வசீகரத்தில்,நாடகம் பார்ப்பவர்கள் தம்மைத் தொலைத்துவிட்டு, ‘கொரியன் நாடக அலை’களில் மூழ்கிவிடுகின்றனர் என்பது 100% உண்மை.

இணைக்கப்பட்ட அத்தியாயங்கள் 

Why do people like Korean dramas? - தமிழில் / dramalookup

அதாவது ஒரு அத்தியாயத்தின் முடிவில் எதோ ஒரு சஸ்பென்ஸ், அது காதல், திகில் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ‘காட்சி திருப்பம்’ என்று சொல்லப்படும் திருப்புமுனைக் காட்சியாகவோ வைக்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்படும். அது அடுத்து வரும் அத்தியாயத் தொடக்கத்தில் தெளிவாக்கப்பட்டு, பின்னர் அடுத்தக் காட்சிகள் தொடர்கின்றன. கொரியன் நாடகங்கள் எல்லாவற்றிலுமே அளிக்கப்படும் அத்தியாயங்கள் பெரும்பாலும் ஒன்றுகொன்று தொடர்புடையதாகவே இருக்கின்றது…
             அதனாலேயே ஒரு நாடகம் பார்க்க ஆரம்பித்தால், நம்மால் ‘அடுத்து என்ன நடக்கும்‘ என்ற பெரும் ஆவலையோ, அல்லது அடுத்தடுத்த அத்தியாயங்களை உடனே [korean drama in tamil] பார்ப்பதையோ கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது.

உணவு

Why do people like Korean dramas? - தமிழில் / dramalookup

எல்லா கொரியன் நாடகங்களிலும் கண்டிப்பாக உணவு உண்கின்ற காட்சிகள் வைத்திருப்பார்கள். அதில் காட்டப்படும் உணவுகள் எல்லாமே மக்களின் உண்ணும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையான உணவுகளாகவே காட்டப்படும். வித்தியாசமான, புதுபுது செய்முறையில் உணவுவகைகளைக் காட்சிப் படுத்துவதன் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள உணவுப்பிரியர்களை வசீகரித்து விடுகின்றனர். உணவில் மயங்காத மக்களும் இருக்கின்றனரா, என்ன?

உடை 

Why do people like Korean dramas? - தமிழில் / dramalookup

  நாகரீக உலகத்தின் தற்போதைய பேஷன் என்ன? என்பதை அறிய வேண்டுமானால் கொரியன் நாடகத்தில்  மூழ்கி எழுந்தால் போதும். இளைஞர்களிடையே பிரபலம் அடைந்தது [korean drama in tamil] மட்டுமல்லாமல் பிரபலமடையப் போகும் பொருட்களைப் பற்றிக் கூட உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

இசை 

எனக்கு மிகவும் பிடித்தமான இசை [ இசையை ரசிக்க மொழி தெரிய வேண்டுமா… என்ன?]

நடனத்துடன் கூடிய, மிக அற்புதமான நமது நாட்டு இசையைப் போலவே, மனதைக் கவரும் வகையிலான இசையினையே அவர்கள் தங்களது நாடகத்துக்கு அமைகின்றனர். கதைக்கு ஏற்ற உணர்வுகளை, இசையிலேயே அவர்கள் நம்மை உணர வைத்து விடுகின்றனர். அவர்களின் கொரியன் ‘k-pop’ என்று சொல்லப்படும் இசை வகையும் உலகம் முழுதும் பிரபலமானவையே….

காட்சி அமைப்பு 

Why do people like Korean dramas? - தமிழில் / dramalookup

80 சதவீதத்திற்கு மேல் கற்பனையான, நம்பவே இயலாத எந்த ஒரு விஷயமுமே வேடிக்கையானது, விநோதமானது தான். அதற்கு மக்களாகிய நாம் என்றுமே அடிமை தான், இல்லையா? அது இந்த கொரியன் நாடக உலகத்துக்கு மிகப் பொருந்தும், என்பது ‘கொரியன் அலை’யில் மூழ்கிய ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக மருத்துவம் மற்றும் தொழில்முறை சார்ந்த நாடகங்களைப் பார்க்கையில் அந்த தொழில் மீதான நுட்பங்கள் புரிபடுவதுடன், அத்துறையின் மீது பிரமிப்பும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

Why do people like Korean dramas? - தமிழில் / dramalookup

அந்த நாடகங்களில் காட்டப்படும் காதல், நிபந்தனை இல்லாத அன்பு என்பதையெல்லாம் பார்க்கும் நமக்கு அவை எல்லாம் கற்பனையானவை என்பதாலேயே, அவற்றைப் பார்ப்பதில் ஒருவித ஆர்வம் ஏற்படுகிறது…[korean drama in tamil] பேராசை, சுயநலம், ஆத்திரம், எல்லாம் அவர்கள் நாடகங்களிலும் காட்டப்பட்டாலும், அவை காட்சிப்படுத்தும் விதத்தில் நம்மை ஈர்த்துவிடுகின்றனர். 

Leave a Reply