.
சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.
ஹே சியாவோ – ஷியூலி இராணுவத்தின் தலைவன். ராணுவம் அழிக்கப்பட்ட போது, யான் தேசத்தின் மறைவிடத்தில் கைதியாக இருப்பவன்.
ஃபாங் மியாவ்மியாவோ – சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் பெண் வீரர். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறாள்.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் பாதுகாப்பில் இருக்கிறாள்.
லீ சே – பியாண்டாங் தேசத்து பட்டத்து இளவரசன். இப்போதைய பேரரசிக்கும் பேரரசனுக்கும் பிறந்தவன் என்றாலும், பிறந்ததில் இருந்தே பேரரசியால் முழுமையாக வெறுக்கப்பட்டவன்.
.
Rebirth அத்தியாயம் 15- சுருக்கம்
தன்னையும், ஜுக்கே வையும் துரத்துபவர்களிடமிருந்து தப்பித்து, மயக்கமடைந்த ஜுக்கே யூ-வை ஒரு ஒதுக்குப்புறமான சத்திரத்திற்குக் கொண்டு வருகிறாள் சிங். சிங்-ன் கையாளான சியாவோ ரான் என்ற விஷ மருத்துவன் ஜுக்கே-வைப் பரிசோதித்தபோது, அவனது நரம்புகளில் ‘பனி இரத்தம்’ எனப்படும் ஒரு விசித்திரமான விஷம் ஊர்ந்து செல்வதைக் கண்டுகொள்கிறான். விஷத்தை வெளியேற்ற முடியாது என்றாலும் அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் தற்சமயத்திற்கு சரிசெய்துள்ளதாகவும், ஜுக்கே உயிர் பிழைப்பது இனி அவனது உள்ளார்ந்த வலிமையைப் பொறுத்தே உள்ளது என்றும், கூற, அவனது நிலை, ஜுக்கே இது நாள் வரை சிங்-யிடம் மறைத்து உண்மை எது என்பதை சிங்-ற்கு தெளிவுபடுத்தியதால், நீண்ட நாட்களாவே அவனைத் தவறாக மதிப்பிட்டுவிட்டதை உணர்ந்து, அவளுக்குள் குற்றவுணர்ச்சி அலை பாய்கிறது. எனினும் லின் நகரில் கைதிகள் பரிமாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதால், மருத்துவனை ஜுக்கே-வைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, தனது பெண் வீரரான மியாவோ-வுடன் புறப்படுகிறாள்.
நகரத்தின் நுழைவாயிலில் கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் வேளையில் யான் சூன்-ன் சூழ்ச்சியால் யோங் தேச வீரர்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. சிங்-ஐ தன் முன் வரவழைக்க, கைதிகளைக் கொல்ல தன் ஆட்களுக்கு உத்தரவிடுகிறான் யான். அவர்களில் ஹே சியாவோவின் முகத்தைக் கண்ட சிங், அந்தக் குழப்பத்திற்குள் பாய்ந்து, எதிரிகளை வீழ்த்தி, அவனது விலங்குகளை அறுக்கிறாள். மேலும் மேலும் வீரர்கள் வருவதைக் கண்டு ஹே சியாவோ மற்றும் மியாவோ வை முதலில் வற்புறுத்தி அனுப்பிவிட, அவர்களும் செல்கிறார்கள். யான் சூன்-ன் அம்பால் சிங்-ன் முகத்தை மூடியிருந்த துணி விலக, அவளது முகத்தைக் கண்ட யான் சூன், தாக்குதலை நிறுத்தி, யான் தேசத்திற்குத் தன்னோடு திரும்புமாறு அவளிடம் கெஞ்சுகிறான்.
இங்கு ஜுக்கே மயக்கத்தில் இருந்து விழித்து, சிங்-ஐ காப்பாற்ற வரும் வழியில் மீதி கைதிகள் இன்னும் கூண்டுக்குள் அடைபட்டு இருப்பதைக் கண்டு, அவர்களை விடுவிக்க அருகில் செல்ல, அவர்கள் குறுநிலத்தைச் சேர்ந்த தன் மாளிகை வீரர்கள் என்பதை அறிந்துகொள்கிறான். ஜுக்கே யூ உயிர் இறந்துவிட்டதால், சிறைபிடிக்கப்பட்டு விரக்தியில் இருந்த அவன் வீரர்களை விடுவித்து, அவனோடு அழைத்துச் செல்கிறான்.
யான்-னிடம், தான் ஒரு காலத்தில் தான் அடிமைகளை விடுவிக்கவே அவர்களுக்காக போராடியதாகவும், ஆனால் அவனோ அறிவற்ற படுகொலைப் பாதையைத் தேர்தெடுத்து, பழிவாங்கும் கோரமான எண்ணத்துக்கு அடிபணிந்து விட்டதாகவும் கூறி, தங்கள் பந்தம் முடிந்துவிட்டது என்றும், இனி தாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றவே இயலாது என்றும் உணர்வற்ற வார்த்தைகளில் கூறுகிறாள். அவளது வாதங்களை ஏற்க மறுத்து, யான் அவளைக் கட்டாயப்படுத்த முயற்சிக்கிறான். அப்போது, அவளுக்குத் துணையாக அந்த இடத்திற்கு ஜுக்கே யூ தனது சொந்த வில்லாளர்களுடன் வந்து சேர்கிறான்.
அவர்கள் இருவரும் இணைந்து, யான் சூன்-ன் படைவளையத்தை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்கின்றனர். யான் தேச படை, யோங் வீரர்களிடமிருந்து ‘லின் நகரை’ வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும், சிங்-ஐ மீண்டும் இழந்துவிட்ட கசப்பிலேயே யான் சூன் விரக்தி அடைந்து, தனது தளபதி செங்-யிடம் எதிர்காலத்தில் அவளை மீண்டும் சந்திக்க நேரிட்டால் அவள் உயிருடன் இருந்தாலும் சரி, அல்லது இறந்த நிலையில் இருந்தாலும் சரி எப்படியாயினும் அவளைத் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று அவன் கடுமையாக உத்தரவிடுகிறான்.
திரும்ப இருவரும் தன் இருப்பிடம் வந்த பிறகு, அவளின் விசாரணையில், சிங்-ஐ காப்பாற்ற தன் உடலுக்குத் தற்காலிக உயிர்ப்பாற்றலைத்தரும் ஹுயுவான் மாத்திரை ஒன்றை மருத்துவரிடம் வாங்கி உண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்கிறாள். இது ஜுக்கே-வின் ஆயுட்காலத்தை வெகுவாகக் குறைக்கும் ஒரு தீவிரமான நடவடிக்கையாகும். கோபம் கொண்ட சிங் தன் அறைக்குச் சென்றுவிட, ஜுக்கே அவளைத் தொடர்கிறான். அறையில் ஒரு அமைதியான தருணத்தில், உறைந்த ஏரிக்குள் விழுந்த பிறகு தான் உயிர் பிழைத்த விதம், சிமெங் மன்னனிடம் சிங்-ன் காரணமாக சிக்கிக் கொண்ட நிலை, மன்னனின் நிழலாக மாறியது, ஜுக்கே முடிக்கவேண்டிய 3 கட்டளைகள், என்று எல்லா விஷயங்களையும் கூற, சிங் கண்ணில் நீருடன் தன்னிடம் இதையெல்லாம் முன்னரே ஏன் தெரிவிக்கவில்லை என்று அவனிடம் கோபம் கொள்கிறாள். இறுதியில், அவனை அணைத்த நிலையில், இனி தன்னிடம் எதையும் மறைக்கக் கூடாது என்று அவனிடம் எச்சரிக்கிறான். இருவரும் ஒருவரிடம் ஒருவர் அமைதியடைகிறார்கள்.
இதற்கிடையில், தன் நகரத்திற்கு இளவரசன் லீ சே திரும்புகிறான். யாருக்கும் சிமெங் மன்னன் அவனுடன் இல்லை என்பது சந்தேகம் இருந்தாலும், உறுதியாக தெரிய வராமலேயே இளவரசன் லீ சே-வால் பார்த்துக் கொள்ளப்பட்டது. தலைநகரில் ஜாவோ சுன்’எர் மற்றும் இளவரசன் லீயான் திருமணம் நடைபெறுகிறது. அவளுக்கு இளவரசன் லீயான் முன்னர் இளவரசி ஃபூ-வை விரும்பியதும், இப்போது இளவரசி ஃபூ-வாக மாற்று பெயரில் இருக்கும் சிங்-ஐ அதனாலேயே அவன் பேரரசியிடம் இருந்து காப்பாற்றியதும் தெரிய வர, அவளின் வருத்தமும் கோபமும் அதிகமாகிறது. அது குறித்து இளவரசனிடமும் கேட்டு சண்டை இடுகிறாள். தான் எங்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தனக்கு முன் சிங் இருப்பதையும், ஒரு அடிமை [சிங்] இளவரசியான தன்னை விட மேலாக எல்லோராலும் கொண்டாடப்படுவதையும் கண்டு ஆத்திரத்தில் அறிவிழந்து கத்துகிறாள். எனினும் இளவரசன் லீயான் அவளை மென்மையாக நடத்தி அவள் தன்னை உண்மையாகத் தன் கணவனாக ஏற்கும் வரை பொறுமையாகக் காத்திருப்பதாக உறுதியளிக்கிறான்.
ஜாவோ சுன்’எர் தான் திருமணம் செய்து கொண்டதால் யோங் தேச இளவரசியாக தற்போது மாறுகிறாள். பேரரசிக்கும் அவளுக்குமான தொடர்பும் அதிகப்படுகிறது. இந்நிலையில் பேரரசியைச் சந்திக்கச் சென்ற அவள், தற்செயலாக பேரரசிக்கும் ஜான் ஜியு-வுக்கும் இடையில் ஒரு அந்தரங்க தொடர்பு இருப்பது தெரிந்து திகைத்துப்போகிறாள்.
இளவரசி அங்கு இருப்பதும், தன்னை பார்த்துவிட்டது, பேரரசிக்குத் தெரியவரும் அதே நேரம், மன்னனுக்கும் இவ்விவரம் தெரிய வர, அவன் ஆவேசமாகபேரரசியின் அந்தப்புரத்திற்குள் நுழைகிறான். ஆனால் அவன் அங்கு கண்டது பேரரசியையும் அவளின் காதலனையும் அல்ல, ஆனால் பேரரசியும் இளவரசியும் குளித்துக்கொண்டு இருப்பதைத் தான். சிங்-ன் மேல் இருக்கும் அவளது ஆத்திரத்தில் பேரரசியின் இந்த செயலுக்கு இளவரசியும் துணைபுரிகிறாளா????
முன்னாள் பட்டத்து இளவரசனை கொன்று, அவனின் கர்ப்பிணி மனைவியை தன்னுடையவளாக்கி, அவளின் மகனைக் கொன்றுவிட்டதால் இப்போதைய பேரரசனை முற்றிலும் வெறுத்த பேரரசி மன்னனால் தன் வயிற்றில் உருவானதால் தன் மகன் லீ சே-வையும் முழுமையாக வெறுக்கிறாள். அதனால் அவனுக்கும் எதிராகவே அவளது செயல்பாடுகள் இருக்கும்.
.