.
லி பென் – சிங் உருவாக்கிய ஷியூலி இராணுவதில் முதல் நிலை படைத்தலைவன்.
லாங் லி – சிங் உருவாக்கிய ஷியூலி இராணுவதில் துணைத் தளபதி
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-னின் மனைவி
லி யான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். முன்னாள் பேரரசரின் மகன் வழி பேரன். மதிப்பில்லாத இளவரசன். இப்போது தூதனாக நியமிக்கப்படுகிறான்.
Rebirth அத்தியாயம் 16- சுருக்கம்
பேரரசியின் அறைக்குள் மன்னனின் முன் பேரரசியும், ஜாவோ சுன்’எர், மற்றும் பொறாமையால் மன்னனிடம் உண்மையை கூறிய பெண் மூவரும் பதட்டத்துடன் நிற்கின்றனர். தான் தவறாக வழிநடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பேரரசன், தனது கோபத்தை அந்த பெண்ணின் மீது திருப்பினார்.அந்தப் பெண்ணை வெளியே இழுத்துச் சென்று, அடித்துக்கொன்றுவிடும்படி உத்தரவிட்டான். மன்னன் சென்ற பிறகு பேரரசி ஜாவோ சுன்’எர்-ஐ நேரடியாக எதிர்கொண்டு, தனது ரகசியங்கள் அவளுக்குத் தெரிந்திருந்ததற்காக அவளைக் கொன்றுவிடுவதாக மிரட்டினாள்.
பேரரசரையே ஏமாற்றி, அவருக்கு மிகப் பிடித்த பெண்ணை அவரை வைத்தே கொல்ல வைத்த பேரரசி தன்னை எதுவேண்டுமென்றாலும் செய்வாள் என்று தெரிந்து, ஜாவோ சுன்’எர் தன்னைக் கொள்ளவேண்டாமென்றும், சிங் இறந்து நரகத்திற்கு செல்வதை பார்க்கும் வரை தான் சாக விரும்பவில்லை என்றும் கூறி இறைஞ்ச பேரரசி யோசிக்க, அவள் சிங்-ன் ரகசியங்களைக் கூறுகிறாள். அவள் அன்று இருத்த நிலை, இப்போது இளவரசி ஃபூ என்று பெயர் மாற்றி ஏமாற்றுவது, தற்போது ‘லின் நகரில்’, தன் முன்னாள் துணைத் தளபதியான ‘ஹே சியாவோ’வை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது வரை அனைத்தையும் கூறுகிறாள். மேலும் யான் தேச மன்னம் யான் சூன்-ன் காதலைக் கூறி, அவனின் ஒற்றர்கள் யான் சூனின் ஒற்றர்கள், இளவரசி ஃபூ எனும் பெயரில் இருக்கும் சிங்-ஐத் தேடும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டதையும் அவள் சசுட்டிக்காட்டுகிறாள். எல்லாவற்றையும் கேட்ட பேரரசி தனக்கு ஜாவோ சுன்’எர் ஒரு பயனுள்ள கூட்டாளியாக அமையக்கூடும் என்பதை உணர்ந்து, அவளைக் கொல்லாமல் அனுப்புகிறாள்.
அரண்மனைக்குள் பதற்றம் நிலவும் இதே வேளையில், ஜுக்கே யூ நகரத்திற்கு வெளியே வான விளக்குகளைப் பார்க்க சிங்-ஐ அழைத்துவருகிறான். போரில் ஜுக்கே இறந்துவிட்டதால் போர்வீரர்கள் தலைவன் இல்லா நிலையில் வலுவிழந்து வாழ்ந்து வரும் மூன் கார்டு என்ற ஜுக்கே யூ வின் போர்வீரர்கள், தான் உயிருடன் இருப்பதை தெரிந்து கொள்ளவும், அவர்களை ஒன்றாக இணைத்து, தங்கள் இடத்துக்கு வரவைக்கவும் உதவும் சிக்னல் இது என்று கூறுகிறான். மேலும் தான் ஷியூலி இராணுவத்தின் மிச்சம் இருக்கும் வீரர்களைத் திரட்ட அவர்களை பயப்படுத்தப் போவதாகவும் கூற. சிங் மகிழ்ச்சி அடைகிறாள்.
கூறியது போலவே மறுநாள் அவன் தன் காவலர்களைச் சந்தித்தபோது, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். தான் உயிர் பிழைத்ததை யோங் பேரரசிடம் இருந்தும், தனது குடும்பத்தினரிடமிருந்தும் இரகசியமாக வைத்திருக்குமாறு ஜுக்கே யூ அவர்களுக்குத் தெரிவித்து விட்டு, ஷியூலி இராணுவத்தின் மிச்சம் இருக்கும் வீரர்களைக் கண்டுபிடிப்பதே அவர்களுக்கான முதன்மைப் பணியாக தருகிறான். அவர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.
பியாண்டாங்கில், பட்டத்து இளவரசன் லீ சே-ஐ சிக்க வைக்க ஒரு சதித்திட்டம் அரங்கேறுகிறது. பேரரசரின் அரண்மனைக்குள் ஒரு கொலையாளி ஊடுருவி, மன்னனைக் கொல்ல முயற்சித்து, பிடிபட்டதும், தன்னை இளவரசன் லீ சே அனுப்பியதாகக் கூறிவிட்டு உடனே தற்கொலை செய்து கொள்கிறான். அந்நிகழ்வைத் தொடர்ந்து, லி சே-ஐ சிறையில் அடைகின்றனர். மேலும் பட்டத்து இளவரசனின் இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு, சிமெங்கின் போலி முகமூடி மன்னரும், லிங்யுவின் ராணியும் கூட உடந்தையாக இருந்ததற்காகக் காவலில் வைக்கப்பட்டனர். இவ்வாறு இருக்கையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அழித்துவிட்டதாகக் கூறப்பட்ட நான்சி பழங்குடியினருடன் தொடர்புடைய ஒரு பச்சைக்குறி அந்த உடலில் இருப்பதை தற்செயலாக ஜெனரல் சன் பார்த்து, அந்த கொலையாளி குறித்து சந்தேகம் அடைகிறான். கொலையாளி பட்டத்து இளவரசருக்காகப் பணிபுரிந்திருக்க முடியாது என்றும், இது ஒரு ஆபத்தான அரச குடும்ப விவகாரம் என்பதைப் புரிந்துகொள்கிறான்.
பல ஆண்டுகளாக மன்னன் ஈடுபட்டிருந்த வரம்புமீறிய சுகபோகங்கள், தனிமையின் மன அழுத்தம் மற்றும் மன்னனின் உடல்நலத்தைச் சீர்குலைக்கப் பேரரசியே திட்டமிட்டு செயல்படுத்திய முயற்சிகள் என்று அனைத்தும் சேர்ந்து இப்போது தங்கள் வேலையைக் காட்ட, பேரரசன் சுயநினைவின்றிப் படுக்க நேரிடுகிறது. மருத்துவர் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பேரரசியிடம் தெரிவிக்கின்றனர். நோய்ப்படுக்கையில் கிடந்த மன்னனை உற்றுபார்த்தவாறு, பேரரசி கடந்து வந்த ஆண்டுகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள்.
நாட்டில் கலகம் வெடிக்க, அதற்கு காரணமான தற்போதைய பேரரசன் அரியணையைக் கைப்பற்றுவதற்காகத் தனது சொந்த சகோதரரான பட்டத்து இளவரசனைக் கொலை செய்கிறான். தன் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தையைக் காப்பாற்ற அவனிடம் பட்டத்து இளவரசனின் மனைவி சரணடைய, அதை தனக்கு சாதகமாக்கி அவளைத் தன் மனைவியாக ஆக்கிக்கொள்கிறான். அது மட்டும் இல்லாது, வாக்கு கொடுத்தபடி குழந்தையைக் காப்பாற்றாதது மட்டுமல்லாமல் கொன்றும் விடுகிறான். அந்த பழிவெறி மனதின் ஆழத்தில் இருக்கவே, பழிவாங்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை இறுதியாக நிறைவேற போவதாக பேரரசி சந்தோசம் கொள்கிறாள்.
ஜுக்கே யூ வின் வீரர்கள் மூலம் சிங் ஒன்று திரட்டப்பட்ட தன் ராணுவ வீரர்களைக் காண்கிறாள். அவர்களைக் காப்பாற்ற வராததற்கு சிங் மன்னிப்பு கேட்கும் போது, அவர்கள் மறுத்து, அதற்கு பதிலாக யான் தேச தளபதி சென் யுவானின் துரோகத்தின் மீது பழி சுமத்தினர். பின்னர் ஜுக்கே, சிங் மற்றும் வீரர்கள், அப்போதைய போரில் இறந்த வீரர்களின் நினைவுக் கல்லறைகளைப் பார்வையிட்டு, அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தினார்கள். தனியே ஜுக்கே யூ-வும் சிங்-க்கு ஆறுதல் சொல்கிறான்.
சிறிது நேரத்திலேயே, பியாண்டாங் தேசத்தில் இருந்து, அவர்களுக்கு பேரரசரைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இளவரசன் லீ சே கைது செய்யப்பட்ட அவசரச் செய்தி வந்தது. சிங்-ம் ஜுக்கே யூ வும் உடனடியாகத் தலைநகரை நோக்கிப் புறப்படுகின்றனர். இங்கு யான் தேச தலைவன் யான் சூன்-ஆல் பியாண்டாங் தேசத்தின் தளபதி லீ சி யின் துண்டிக்கப்பட்ட கை பேரரசிக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் தேசத்தில் தான் சிங் இருப்பதைத் தான் அறிந்துகொண்டு விட்டதாகவும், தனது யான் தேசத்தின் ராணியைத் திருப்பித் தருமாறு கோரிக்கை விடுகிறான். இது நிறைவேற்றப்படாவிட்டால், தனது கருங்கழுகுப் படையுடன் பியாண்டாங்கின் வடக்கு எல்லையை மீறுவதாக அச்சுறுத்தல் விடுகிறான்.
சிங்-வை ஒப்படைப்பது, அவளுக்கு அடைக்கலம் கொடுத்ததை ஒப்புக்கொள்வதாகிவிடும், அது பியாண்டாங்கின் சர்வதேச நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், என்று பேரரசி தயங்கினாள். அப்போது ஜாவோ சுன்’எர் பேரரசுக்கு ஒரு தீர்வை சொல்கிறாள். சிங் இப்போது இளவரசி ஃபூ என்ற பெயரில் இருப்பதால், இளவரசி ஃபூ வை யான் தேச மன்னனுக்கு திருமணம் செய்து கொடுப்பதன் மூலம், எல்லாவற்றுக்கும் முடிவு வரும் என்று கூறுகிறாள். அவளின் கூற்றுப் படி, சிங்-ஐ தன் பாதையிலிருந்து அகற்றவும், யான் சூன்-ஐத் திருப்திப்படுத்தவும், அதற்குப் பிரதிபலனாக நிலப்பகுதிகளையும் தங்கத்தையும் கோரவும் என்று பல நன்மைகள் கொண்ட இத்திட்டத்தைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த பேரரசி, அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த, இளவரசர் லீயான்-ஐ புதிய ‘சடங்குகள் துறை அமைச்சராக’ நியமிக்கிறாள்.
தனக்குக் கிடைத்த இந்தத் திடீர் பதவி உயர்வைக் கண்டு அதிர்ச்சியுற்ற லி யான், அரண்மனைக்கு தன் மனைவி அடிக்கடி செல்வதன் காரணம் குறித்து அவளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்புகிறான். அவள் இளவரசனிடம் சிங் இருக்கும் இடத்தை வெளியே கசியவிட்டது முதல், அந்தத் திருமணத்தைப் பரிந்துரைத்தது வரை, அனைத்தையும் தானே திட்டமிட்டு அரங்கேற்றியதாக ஏளனத்துடன் கூற, இளவரசன் காரணம் கேட்கிறான். இளவரசனின் பலவீனத்தையும் கோழைத்தனத்தையும் கடுமையாகச் சாடி, தான் விரும்புவதைப் பெறுவதற்காகப் போராடவே அஞ்சும் ஒரு ஆணைத் தான் ஒருபோதும் நேசிக்கப்போவதில்லை என்று அவள் அவனிடம் திட்டவட்டமாகக் கூறுகிறாள். இது இளவரசனுக்கு கோபத்தை உண்டாக்குகின்றது.
பேரரசியின் ஆணை படி, இளவரசி ஃபூ க்கு அமைதியை நிலைநாட்ட யான் தேச மன்னரை மணக்குமாறு கட்டளையிட்டது. நகரின் நுழைவாயிலில் தூதராக ஜாவோ சுன்’எர் தனது கணவன் லி யானுடன் வந்திருப்பதைக் கண்டு யான் ஆச்சர்யப்பட, அவளோ கூட்டணியை ஏற்றுக்கொண்டு கடந்தகால மனக்கசப்புகளை ஒதுக்கி வைக்குமாறு நயமாக வரவேற்கிறாள்.சிங்-வை மீண்டும் பெறுவதில் முழுமையாகக் கவனம் செலுத்திய யான் சூன், திருமணமே தனது முதன்மையான முன்னுரிமை என்று குறிப்பிட்டு, அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறான்.
அத்தியாயம் 17 – இன் சுருக்கம்
.