.
சிமெங் – சிமெங் தேசத்தின் மன்னன்
லிங் யூ – சிமெங் [Ximeng ] மன்னனின் ராணி – சிமெங் நாட்டில் உள்ள லிங் யூ குறுநில பெண்
லீ சே – பியாண்டாங் தேசத்து பட்டத்து இளவரசன்
ஜோங் யூ – டாடோங் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் தலைவி. யான் சூன் ஆல் பாதிக்கப்பட்ட ஒரு சிறு படைத்தலைவி. சிங் ன் மேல் மதிப்பு கொண்டு அவளுக்காக எதையும் செய்யும் பெண். சிங்-ன் நலம் விரும்பிய பெண் தோழி.
.
Rebirth எபிசொட் – 4 சுருக்கம்
அந்த உறைந்த ஏரியில் நடந்த அந்த துயர சம்பவத்தை தொடர்ந்து யான் சூன் மற்றும் சிங் இருவருமே மீட்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. உறைபனி நீர் அவர்களது உள் உறுப்புகளுக்குள்ளும் புகுத்ததால் உயிருக்கு ஆபத்தான குளிர் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த யான் சூன் தளபதியும், அவனது பாதுகாவலர்களும் கண்டுபிடித்து அரண்மனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்கின்றனர். யான் சூன் சுயநினைவின்றி கிடந்ததால், பேராசை கொண்டு தளபதி செங் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரண்மனையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.
இதற்கிடையில் சுயநினைவின்றி இருந்த சிங்-கை காப்பாற்றிய ஜுக்கே யூ அவளை நாட்டின் எல்லை ஓரத்தில் உள்ள ஒரு ஒதுக்கு புறமான குகைக்கு தூக்கி செல்கிறான். அவளுக்கு ஏற்பட்டிருந்த கொடுமையான குளிர் நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்பட்ட அரிய வகை மருந்தைப் பெறுவதற்காகத் தன்னை காப்பாற்றிய சிமெங் மன்னருடன் பேச்சு வார்த்தை நடத்தி மருந்தை வாங்கி வர எண்ணுகிறான். Rebirth Chinese drama tamil explanation
எனினும், அது நிகழ்வதற்கு முன்னரே, அரசன் சிமெங்கின் அரசி தனது மெய்க்காப்பாளர்களுடன் ஜுகே யுவைத் தேடி அங்கு வந்து சேர்ந்தாள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜுக்கே யூ, அரசியை அரசனிடம் அழைத்துச் சென்று, அவளைப் பிணையாக வைத்துக்கொண்டு, “குளிர் நோய்” எனப்படும் வியாதிக்குரிய மாற்று மருந்தைக் கோரினான். அந்த மருந்து மன்னனிடம் மட்டுமே உள்ளது, தனக்கு எவரும் சொந்த ராணி கூட முக்கியமல்ல என்பதை ஜுகே யுவுக்கு உணர்த்திய மன்னன், அந்த மாற்று மருந்தை வழங்குவதற்குப் பிரதிபலனாக, ஜுகே யுவின் உயிரையும், அவனது மாறாத விசுவாசத்தையும் சேவையாகக் கோரினான். ஜுகே யு மீண்டும் தன்னிடம் திரும்புவதை உறுதிசெய்யும் பொருட்டு, மன்னன் அவனை ஒரு கொடிய விஷத்தை உட்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினான். மாற்று மருந்தை உட்கொள்வதற்காக சிமெங் தலைநகருக்கு ஜுக்கே யூ திரும்பாத பட்சத்தில், தனக்கு உயிர்வாழ எஞ்சியிருப்பது வெறும் பத்து நாட்கள் மட்டுமே என்ற மிகக் கடுமையான எதார்த்தத்தை எதிர்கொண்ட ஜுகே யு, இறுதியில் அரசனின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்தான்; அவன் அந்த மாற்று மருந்தைப் பெற்றுக்கொண்டு, அதன் வாயிலாகத் தான் பெரிதும் நேசித்த ‘சிங்’ ஐ அந்தக் குளிர் நோயின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான்.
மன்னனிடம் யூகேயு மருந்தை வாங்க பேரம் பேசும் நிகழ்வில் மற்றொரு சிறு நிகழ்வும் நிகழ்கிறது. அது மன்னனின் அலட்சியத்தால் போகவிருந்த ராணியின் உயிரை ஜுக்கே யூ காப்பாற்றுவதால் ராணியின் மனதிலும் ஜுக்கே யூ இடம் பிடிக்கிறான்.
சிங்-கை ஜுக்கே யூ குளிர் நோயிலிருந்து காப்பாற்றும் நேரத்தில், சிங் மயக்க நிலையில் இருந்த பொழுது, அவள் யோங் தேசத்தில் உள்ள கிங்ஷான் குறுநில அரசவையில் அவள் வாழ்ந்த தனது கடந்த காலத்தை பற்றிய நினைவு வருகிறது. ஒரு அடிமையாகத் தான் வாழ்ந்த காலத்தில் ஜுக்கே யூ தன்னை ஈவிரக்கமற்ற சித்திரவதைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி, தன் காயங்களுக்குச் சிகிச்சையளித்ததுடன், ‘சிங்’ (Xing) எனும் பெயரையும் சூட்டினான் என்பதெல்லாம் அவளுக்கு கண்மூடிய நிலையிலேயே நினைவுக்கு வருகிறது. பின்னர் அந்த குகையில் இறுதியாக நலமாக அவள் கண்விழித்த போது, அவள் அருகில் அவளுக்கு சிகிச்சை செய்த ஜிகேயு அங்கு இல்லை. சிமெங் மன்னனுக்குத் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, தான் உட்கொண்ட விஷத்தின் மாற்றுமருந்தை பெற்றுக் கொள்வதற்காக அவன் அங்கிருந்து சென்று விட்டிருந்தான். ‘தன்னைக் காப்பாற்றியவன் யார்?’ என்று தெரியாத நிலையில் அவளுக்கு மிகவும் பரிச்சயமான டேட் என்ற பதக்கம் மட்டும் அந்த குகையில் அவளுக்கு கிடைக்கிறது. அந்த பதக்கம் ஜுக்கே யூ னுடையது என்றும் அவளுக்குப் புரிகிறது. Rebirth Chinese drama tamil explanation
அவளது உடல்நலம் முழுமையாகத் தேறியதும், சிங் அங்கிருந்து புறப்பட்டு ‘யான்’ (Yan) பிரதேசத்திற்குள் நுழைந்தாள்; அங்கே, யான் மன்னரான யான் சூன் ன் உடல்நலக்குறைவை ஒரு சாக்காகக் கொண்டு, தளபதி செங் இழைத்து வந்த கொடூரங்களை அவள் அறிய நேர்ந்தது. அவளது திருமண நாளன்று அவளுக்குத் துணை நின்ற பழங்குடியினப் போர்வீரர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருந்ததையும், டாடோங் சங்கத்தின் பெண் தலைவி ஜோங் யூ நகரத்தின் மையப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், உயிருடனேயே தூக்கிலிடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்ததையும் கண்டு அவள் பேரதிர்ச்சி அடைந்தாள்.
அந்த இரவில், கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்த ஜோங் யூ-ஐ அவள் மீட்டு, அழைத்துச் செல்கிறாள். தன் தோழர்கள் மீது சிங் கொண்டிருக்கும் ஆழ்ந்த பாசத்தை நன்கு அறிந்திருந்த ஜெனரல் செங், எப்படியும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற சிங் நிச்சயம் வருவாள் என்பதை உணர்ந்துகொண்டு அவளைச் சிறைப்பிடிக்கத் திட்டமிட்டு, ஒரு செங்குத்தான மலை உச்சியில் அவளைச் சுற்றி வளைக்கிறான். இருவருக்கும் இடையே நடைபெற்ற மோதலின்போது, சிங் தன் உடலில் பலத்த காயங்களை அடைகிறாள். ஜெனரல் செங்-கின் வாள் வீச்சிலிருந்து சிங்கைப் பாதுகாக்க, ஜோங் யூ தன் உயிரையே தியாகம் செய்கிறாள். சிங்-ம் அந்த மலை உச்சியிலிருந்து கீழே உள்ள நீரில் வீழ்கிறாள். அவள் மீண்டும் உயிர் பிழைத்தாலும், தன் கை கால்களில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக மிகவும் வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். மேலும், ஜெனரல் செங் இறுதியில் தூவிச் சென்ற ஒருவகைத் தூளின் விளைவாக, அவளது கண்பார்வையும் மங்கத் தொடங்குகிறது.
யான் பேரரசின் வீரர்கள், சிங்-கைத் தேடும் பணியைத் தொடங்கினர்; அவளது புகைப்படத்தை தங்கள் சொந்த எல்லைகளுக்குள் மட்டுமல்லாமல், அண்டை எல்லைப் பகுதிகளிலும் பரவலாக ஒட்டினர். சிமெங் அரசியாருடன் இணைந்து, சிமெங் பேரரசை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியிருந்த ஜுக்கே யூ-வின் கவனத்தை, இந்த நிகழ்வு ஈர்த்தது. சிங் தற்போது இருக்கும் ஆபத்தான சூழலை உணர்ந்தவன், இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ராணியுடன் வந்து இணைந்து கொள்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அரசியார் அளித்த ஒரு நுட்பமான சைகையின் பேரில், அவரது மெய்க்காப்பாளர்களில் சிலரும் ஜுக்கே யூ-வைப் பின்தொடர்ந்து சென்றனர்.
பிச்சைக்காரியாக வேடமிட்டு, சிங் ஒரு நகரத்திற்குள் நுழைகிறாள். இருப்பினும், அவளது கண்பார்வைக் குறைபாட்டின் காரணமாக, அவளைத் தேடிக்கொண்டிருந்த காவலர்களிடம் அவள் சிக்கிக்கொள்கிறாள். அவர்கள் அவளை அடையாளம் காண்பதற்குள்ளாகவே, பியாண்டோங் பேரரசின் இளவரசரான லீ சே அவளை ஒரு “அழுக்கு பிச்சைக்காரி” என்று இழிவாக அழைத்தவாறு தனது விலையுயர்ந்த ஆடையை அவள் கெடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவளை மீட்பதற்காகச் சரியாக அந்தத் தருணத்தில் அங்கு வந்திருந்த ஜுக்கே யூ, இந்தச் சம்பவம் முழுவதையும் நேரில் காண்கிறான்.
இளவரசர் லீசே தனது அரச அந்தஸ்தைப் பயன்படுத்தி, சிங் ஐ பாதுகாப்பான ஓர் சத்திரத்திற்கு அழைத்துச் செல்கிறான்; அங்கு, அவளது உடலுக்கும் கண்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவரை வரவழைக்கிறான். நிரந்தரப் பார்வை இழப்பின் விளிம்பில் இருக்கும் அவளுக்கு, ‘ஹுவோட்டு நீர்’ எனப்படும் மிகவும் ரகசியமான ஒரு மருந்து தேவைப்படுகிறது. பார்வையை மீட்டெடுக்க, இம்மருந்தை ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தவறாமல் பயன்படுத்த வேண்டும். அவளுக்குத் தேவையான சிகிச்சைகளைத் தனது சொந்த ராஜ்யத்திலேயே வழங்குவதாக உறுதியளித்து, தன்னுடன் வருமாறு இளவரசர் லீசே அவளை அழைக்கிறான்; எனினும், அவள் அந்த அழைப்பை மறுத்துவிடுகிறாள். தான் கையில் வைத்திருக்கும் பதக்கம், தன்னைக் காப்பாற்றிய ஜுக்கே யூ க்குச் சொந்தமானது என்றும்; அவனை எப்படியும் காண வேண்டும் என்பதால் , இவ்விடத்தை விட்டுத் தன்னால் ஒருபோதும் வெளியேற இயலாது என்றும் அவள் அவனிடம் விளக்குகிறாள்.
வேறு வழியின்றி, இளவரசர் லி சே அவளுடனேயே அங்கேயே தங்குகிறான். இதற்கிடையில், அவளுக்கே தெரியாமல், ஒவ்வொரு இரவும் இருளின் மறைவில் ஜுக்கே யூ ரகசியமாக அவளது அறைக்குள் நுழைந்து, அவளுக்கு ‘ஹுவோட்டு’ நீரை அளித்து வருகிறான். இரவில் தனது அறைக்கு வருபவன் இளவரசர் லி சே தான் என்று சிங் கருதினாலும், அவளது உள்ளுணர்வு அந்த நம்பிக்கைக்கு முரணாகச் செயல்பட்டு, “வருவது அவன் அல்ல” என்று அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
அத்தியாயம் 5 – இன் சுருக்கம்
.