Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 31 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 31

ஜுக்கே யூ – யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னனின் நான்காம் வாரிசு. ஒற்றர்களின் தலைவன். முன்னர் தன் மன்னனின் ஆணைக்கு இணங்க செயல்பட்டதால் யான் சூன்-ன் குடும்பம் தண்டனைக்குள்ளானது. தற்போது சிமெங் தேசத்தின் மன்னன்.

யான் சூன் – யான் தேசத்தின் தலைவன். சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்த போது, ஜுக்கே யூ-வின் நண்பன். பின்னர் எதிரி.

கிங்ஷான் – இது யோங் தேசத்தின் ஒரு குறுநில பகுதி. ஜுக்கே குலம் இதனை ஆண்டு வருகிறது. யோங் தேச மன்னனுக்காக கொலைகளையும், விசாரணைகளையும் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. பெரும் ஓற்றர்களை உருவாக்கி, பயிற்சி அளிப்பதும் கூட இவர்கள் தொழில். ஜுக்கே யூ இந்த குலத்தின் வாரிசு.

கருப்புத் தங்கச் சுரங்கம் – சிங் மற்றும் ஜுக்கே யூ இருக்கும் சிமெங் பிரதேசத்தில் உள்ள கருப்பு சுரங்கத்தில் கிடைக்கும் ஒரு பொருள். பணத்திற்கு பதிலாக பண்டமாற்றாக இப்பொருள் பயன்படுகிறது.

ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன். இரக்கமற்ற கொடூரன். மன்னனான தந்தைக்கு மிக பிரியமான மகன்.

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து எல்லை பகுதிகளில் போர்களில் ஈடுபட்டாலும், தந்தை அதாவது அரசனால் அன்பு மறுக்கப்படுபவன். பெண் தளபதி ஹுவான்-ஆல் ஈர்க்கப்படுகிறான்.

யூ ஷியி – கிங்ஷான் குறுநிலத்தின் முக்கிய ஒற்றன். இப்போது ஜுக்கே யூ-வின் நிழல்.

.

Rebirth அத்தியாயம் 31 – சுருக்கம்

யான் சூன்-ஐ சந்திக்க ஜுக்கே யூ அங்கு வந்தபோது அவன் ஜுக்கே-க்கு அருந்த கொடுத்த சூப்பில் சில பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதை ஜுக்கே உணர்ந்து கொள்கிறான். அவை அவனது நாள்பட்ட குளிர் பாதிப்பை தூண்டுவதற்காக உருவாக்கப்பட்ட சூப். தான் உணர்ந்து கொண்டதைப் பற்றி யார் சூன்-னிடம் ஜுக்கே யூ எடுத்துரைத்து விட்டு, அவனது ரகசிய வேலையான கருப்பு தங்கத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கையையும் யான் சூன்-யிடம் தெரிவித்து அவனது சதியை அம்பலப்படுத்துகிறான். இதனால் கோபம் கொண்ட யான் சூன் அவனைத் தாக்க தொடங்க, இருவருக்கும் நடக்கும் சண்டையில்  கிங்ஷான் குறுநிலத்தின் மிகச்சிறந்த ஒற்றன் அவன் ஆனதால் ஜுக்கே யூ எப்பொழுதும் போல வெற்றி கொள்கிறான். 

தோல்வியுற்ற கோபத்தோடு யான் சூன் அவனிடம் முன்னர் பல வருடங்களுக்கு முன்னர் தனது குடும்பம் மொத்தமும் பேரரசின் தலைநகரத்தில் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு காரணமாக ஜுக்கே யூ-ம் பின்னணியில் இருந்தானா? என்று கேள்வி எழுப்புகிறான். யான் சூன்-ன் தந்தை யான் தேசத்தின் மன்னன் உயிருடன் இருந்த காலத்தில் அவர் யோங் தேசத்திற்கு எதிராக தனது நடவடிக்கைகளை ரகசியமாக மேற்கொள்வதாக அவருக்கு எதிரான ஆதாரங்கள் இங்கு யோங் தேசத்திற்கு கிடைக்க, அவை போலியானவை என்று அந்த அரசவையில் ஜுக்கே யூ வாதிடுகிறான். இந்த ஆதாரங்களைக் கொண்டு யான் தேசத்தின் மன்னனை தண்டனைக்கு உள்ளாக்கினால் அவை யோங் பேரரசின் வடக்கு பகுதியை சீர்குலைக்கும் என்றும் எடுத்துரைக்கிறான். எனினும் ஜுக்கே யூ தன் மன்னனின் ஆசைக்கு கீழ்ப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான். அப்பொழுதும் ஜுக்கே யூ இங்கு பனையக் கைதியாக யோங் பேரரசின் தலைநகரத்தில் யான் சூன் பிடித்து வைக்கப்பட்டு இருந்ததால் அவனுக்கு இந்த தண்டனைகளிலிருந்து விளக்கு அளிக்க வேண்டி பேரரசனிடம் வெற்றிகரமாக பேச்சு வார்த்தை நடத்தி யான் சூன்-னின் உயிரை காப்பாற்றுகிறான். 

அதனை இப்போது யான் சூன்-னிடம் நினைவு கூர்ந்து கூறிய ஜுக்கே யூ தான் முன்பு பேரரசரின் கட்டளைக்கிணங்க பணி செய்ததாகவும், தனக்கும் அந்த தண்டனை செயலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் வாதிடுகிறான். ஆனாலும் மறுத்த யான் சூன்-னிடம் உணர்வற்ற குரலில் முன்னர் தான் நட்பின் காரணமாகவே ஒவ்வொரு முறையும் அவனைக் காப்பாற்றினான் என்றும், அந்த நட்பு இத்துடன் முடிகிறது இனி இருவருக்கும் இடையில் எதுவும் இல்லை என்றும் கூறிவிட்டு விலகிச் சென்று விடுகிறான்.

இங்கு சிமெங் தேசத்தின் தலைநகரத்தில் உயிர் தப்பி வந்த அந்த பெண்ணைப் பின் தொடர்ந்த சிங்-ன் கையாள் மூலம் அவளின் இருப்பிடம் அறிந்த சிங் அவளைத் தேடி உள்ளே செல்கிறாள். ஆனால் அங்கு சிங் மயக்கத்தால் செயல் இழந்து போகிறாள். சுய நினைவு திரும்பிய தான் அப்பொழுதுதான் வெடி விபத்து நேரிட்ட இடத்திற்கு நடுவில் மயங்கி படுத்திருப்பதையும், முகமற்ற தெய்வத்தின் ஆடைகளை தான் அணிந்திருப்பதையும் காண்கிறாள். தன்னைச் சுற்றி மக்கள் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு தன் முகத்தில் மூடி இருந்த திரையை விளக்க, இந்த படுகொலைக்கு காரணமான சூனியக்காரி இவள்தான் என்று நம்பி கோபமடைந்த குடிமக்கள், அவள் தங்கள் அரசனை ஏமாற்றித் தங்களுக்கு அழிவை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டி கற்களால் அவளை தாக்கத்தொடங்குகிறார்கள். 

அங்கு வந்த ஜுக்கே யூ-ம் அவனது வீரர்களும் சிங்-ஐக் காப்பாற்றி அந்த மக்களுக்கு முதலுதவி செய்கிறார்கள். இதற்கிடையில் யோங் தேசத்தின் 13வது இளவரசனான ஜாவோ யாங்-ன் தூதர் ஒருவர் சிமெங் நாட்டின் மன்னனாகிய ஜுக்கே யூ-விடம் வந்து ஒரு யோங் தேச மன்னனின் ஆணையை வழங்குகிறான். அதில் சிங் யோங் தேசத்தின் இளவரசிகளில் ஒருத்தி என்றும், அவளைப் பாதுகாப்பது அவர்களின் கடமையாக சிங்-ஐ தனது நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் செய்தி இருக்கிறது. சிமெங் தேசத்தில் அரசியல் நிலைமை மோசமானதை தொடர்ந்து இளவரசியைப் பாதுகாப்பது என்ற போர்வையில் சிமெங் தேசத்தை யோங் தேசத்துடன் இணைத்துக் கொள்வதற்கான ஒரு தந்திரமாக இது பார்க்கப்படுகிறது.

யோங் மற்றும் யான் தேசத்தின் எல்லையில், வழிதவறிய ஒரு செம்மறியாடு தொடர்பாக யான் மற்றும் யோங் தேச வீரர்களுக்கு இடையே ஒரு தகராறு எழுகிறது. யான் தேச பெண் தளபதி ஹுவான் விட்டுக் கொடுக்க மறுப்பதால், யோங் தளபதி ஜாவோ சே வரும் வரை ஒரு முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது. ஒருமுறை தனது கழுதையைத் திருப்பிக் கொடுக்காமல் “கடன் வாங்கிய” நபர் இவர்தான் என்பதை தளபதி ஹுவான் அடையாளம் கண்டுகொள்கிறாள். அந்தக் கழுதை தலைநகரத்தில் செழித்து வளர்வதாகவும், குட்டிகளை ஈன்றெடுத்துள்ளதாகவும் இளவரசன் ஜாவோ சே கூறுகிறான். ஆனால் ஹுவான் அதைப் பொருட்படுத்தாமல், கடனுக்கான வட்டியாக அந்தச் செம்மறியாட்டை வைத்துக்கொள்கிறாள். பின்னர், ஜாவோ சே என்பவன் யோங் தேசத்தின் ஏழாவது இளவரசன் என்றும், தன்னுடைய யான் தேசத்தில் அடிக்கடி மோதிய ஒரு வலிமையான தளபதி என்றும் அவள் அறிந்துகொள்கிறாள். 

முகம் தெரியா தெய்வத்தின் மந்திரப் பெண்ணைப் பற்றிய ரகசிய விசாரணையில் அவள் யோங் தேசத்திலிருந்து வந்தவள் என்றும், அவளுக்கு உதவியாக ஜாவோ சுன்’எர்-ம், 13-ஆம் இளவரசனும் இருக்கிறார்கள் என்ற தகவலும் ஜிகேக்கு தெரிய வருகிறது. முன்னர் எழுதி அனுப்பிய ரகசிய செய்தியின் படி, பியாண்டாங் தேசத்திலிருந்து ரகசியமாக சிங்-ன் படைகள் வரவழைக்கப்படுகின்றன. இங்கு சிங் ஒரு யோங் நாட்டின் உளவாளி என்றும், அவளின் அடிமைத்தனத்தின் எதிர்ப்பு ஒரு மோசடி என்றும் பொதுமக்களை நம்ப வைக்கும் நிகழ்வுகள் பரவியதால், சிமெங் தலைநகரில் கலவரங்கள் வெடிக்கின்றன. அங்கு வரவழைக்கப்பட்ட படைகளினால் சிங் தற்போது பொது மக்களிடம் இருந்து காப்பாற்றப்படுகிறாள்.

நகரத்தில் மேலும் மேலும் ஏற்படும் குழப்பதினால், ஜுக்கே யூ-விடம் வந்த யூ ஷியி, யோங் தேசத்தில் பல வருடங்களுக்கு முன்னர் ஜுக்கே யூ ரகசியமாக வாங்கி போட்ட இடங்களின் பத்திரங்களை அளித்து, சிங்-ஐ அழைத்துக்கொண்டு வரவிருக்கும் போரிலிருந்து தப்பிச் செல்லுமாறு கூறுகிறான். சிங்ஷான் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பேரரசரின் கொடுங்கோன்மைக்கு பலியானவர்கள் என்பதையும், யோங் மன்னனால் சிங்ஷான் மன்றத்தைச் சேர்ந்த ஒற்றர்களும், வீரர்களும் உயிர் இலக்கவேண்டி இருந்தால், ஜுக்கே யூ அதற்கு தொடர்பில்லை என்றும், வருந்த வேண்டியது இல்லை என்றும், கூறி, ஜுக்கே யூ தனக்காகவே வாழத் தகுதியானவர் என்பதையும் யூ ஷியி, ஜுகே யூ-விற்கு நினைவூட்டுகிறான். 

இதனால் நிகழ்ந்து போன ஜுக்கே யூ, சிங்-கிடம் வந்து ஒரு அமைதியான எதிர்காலத்தை பற்றி விவரிக்கிறான். அங்கே அவர்கள் ஒரு சாதாரண தம்பதியைப் போல வாழ்வார்கள் என்றும் எடுத்துக் கூறுகிறான். ஆனால் சிங் மறுத்து விடுகிறாள்.

அத்தியாயம் 30 – இன் சுருக்கம்

அத்தியாயம் 32 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top