.
கிங்ஷான் மன்றம் – இது யோங் தேசத்தின் ஒரு குறுநில பகுதி. ஜுக்கே குலம் இதனை ஆண்டு வருகிறது. யோங் தேச மன்னனுக்காக கொலைகளையும், விசாரணைகளையும் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. பெரும் ஓற்றர்களை உருவாக்கி, பயிற்சி அளிப்பதும் கூட இவர்கள் தொழில். ஜுக்கே யூ இந்த குலத்தின் வாரிசு.
ஜுக்கே முகிங் – கிங்ஷான் குறுநிலத்தின் அதிபதி. ஜுக்கே குலத்தின் மூத்தவர். ஜுக்கே யூ-ன் குரு மற்றும் அவனது தாத்தா.
நிலவுப் பாதுகாவலர்கள் – Moon Guards என்று அழைக்கப்படும் இவர்கள் ஜுக்கே குலத்தின் ஒற்றர் மற்றும் தற்காப்புப் படை வீரர்கள்.
மிங் லூ – யோங் தேசத்தின் காவல் தலைவனின் மகள். பல வருடங்களுக்கு முன் யோங் தேசத்தால் குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டு, இவள் மட்டுமே உயிர் தப்பியவள். இப்போது சிங்-ன் துணை தலைவி.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் மனதளவில் அவனால் ஒதுக்கப்படுபவள். தளபதி செங்-ஆல் விரும்பப்படுபவள்.
யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி.
ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன். இரக்கமற்ற கொடூரன். மன்னனான தந்தைக்கு மிக பிரியமான மகன்.
யுவே ஷியி – கிங்ஷான் மன்றத்தின் முதன்மை ஒற்றன். ஜுக்கே யூ-வின் நிழல் போன்றவன்.
.
Rebirth அத்தியாயம் 33 – சுருக்கம்
‘யோங்’ பேரரசரின் விஷத்தால் தனது தற்காப்புக் கலை ஆற்றல்களை இழந்த அந்தப் மூத்தவர், இறுதியில் உயிர்துறந்தார். ஜுக்கே முகிங்-ன் எதிர்பாராத மறைவு, கிங்ஷான் மன்றத்தை ஒரு தலைவரற்ற நிலையை உண்டாக்குகின்றது. ஜுக்கே யூ தனது தாத்தாவின் நினைவிடத்தின் முன் நிற்க, அங்கே, அவனுக்குத் துணையாக தாத்தாவின் விசுவாசமிக்க ‘நிலவுப் பாதுகாவலர்கள்’ (Moon Guards) இருந்தனர்.
ஜேகேயு தனது தாத்தாவின் இறப்பிற்காக வருத்தத்தில் இருக்கும்போது, அங்கு ‘நிலவு பாதுகாவலர்கள்’ என்று அழைக்கப்படும் மற்ற காவலர்களும் வந்து ஜூகேயு-வை ‘அவனுடைய விருப்பத்திற்கு மாறாக யோங் தேசத்திற்கு வர வேண்டாம்’ என்றும் ‘தங்களுடைய உயிரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்’ என்றும் எடுத்துக் கூறி அவனை அங்கிருந்து சென்றுவிட வலியுறுத்துகிறார்கள். அப்பொழுது அங்கு வலுக்கட்டாயமாக வந்த ‘நிலவு பாதுகாவலர்’களின் வீரர்களின் ஒருவன் ‘ஜுக்கே யூ அங்கிருந்து செல்லக்கூடாது’ என்றும், ‘அவன் அவ்வாறு சென்று விட்டால் கிங்ஷான் மன்றம் ஜுக்கே குலத்தின் அடுத்த கொடூரமான வாரிசுகளின் கையில் சென்று விடும்’ என்றும், ‘அந்த வாரிசுக்கு சிங்-குக்கும் இருக்கும் ஏற்கனவே உள்ள பகையால் அவனது கோபம் தங்களின் மீது திரும்பும்’ என்றும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி கதறுகிறான். தனக்காக பார்க்கும் வீரர்களின் உயிர்கள் ஆபத்தில் இருப்பதை அறிந்தும் ஏதும் செய்ய இயலாமல் தானும் அவர்களுடன் கிங்ஷான் மன்றத்தின் தலைவனாக யோங் தேசத்திற்கு வருவதாக உறுதி அளித்துவிடுகிறான் ஜுக்கே யூ.
இதற்கிடையில் சிமெங் ராணுவ முகாமில் சிங் அளவுக்கு அதிகமான ரத்தத்தை இழந்ததால் சுய நினைவின்றி இருக்கிறாள். தங்கள் முகாமில் எதிரி நாட்டு மன்னன் இருப்பதை அறிந்து சிங்-கின் மற்ற பாதுகாவலர்கள் யான் சூன்-ஐத் தடுக்க முயல, யான் தேசத்து மன்னன் யான் சூன் அவள் கண் விழிக்கும் வரை அங்கிருந்து அகல மறுத்து, அவளுக்கு அருகிலேயே உறுதியாக நின்று விடுகிறான். நடு இரவில் ஜுக்கே யூ ரகசியமாக சிங்கை வந்து சந்தித்து, அவளின் நிலையை பரிசோதிக்க, அவளுக்கு ஏற்பட்ட காயங்கள் தனது கிங்ஷான் மன்றத்தைச் சேர்ந்த ‘பளிங்கு இரும்பு’ (Glazed Iron) எனும் சிறப்பு ஆயுதத்தால் விளைந்தவை என்பதை கண்டு கொள்கிறான். அந்த ஆயுதத்தால் ஏற்படும் காயங்கள் குணமாகுவது மிகவும் கடினம் என்பதும் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். எனவே இதனைப் பற்றி எண்ணிக்கொண்டே தான் சிங்-யிடம் கூற விரும்பும் கருத்தை ஒரு குறிப்பாக எழுதி அவளது தலையணையின் கீழ் வைக்கிறான் ஜுக்கே யூ. சூழ்நிலையின் காரணமாகவே தான் யோங் தேசத்திற்கு பயணப்படுவதாகவும், அங்கிருந்து சிமெங் தேசத்திற்கு வரும் எச்சரிக்கைகளையும், சூழ்ச்சிகளையும் தடுத்து நிறுத்தி நிலைமையை சீராக்கி விட்டு, சிங்-யிடம் தான் ஏற்கனவே கூறிய உறுதி மொழியின் படி மீண்டும் அவளிடமே வந்து சேர்ந்து விடுவதாகவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அப்போது அங்கு வந்த யான் சூன் சிங்-கின் இந்த நிலைக்கு ஜுக்கே யூ தான் காரணம் என்று அவனிடம் கோபம் கொள்கிறான். அவனைத் தடுத்து சிங்-கின் தற்போதைய நிலையை எடுத்துக் கூறி, அவளுக்கான சிகிச்சை முறைகளையும் யான் சூன்-னிடம் தெரிவிக்கிறான் ஜுக்கே. மேலும் அவள் இரண்டு நாட்களில் கண் விழிப்பாள் என்றும் கணித்து கூறுகிறான். தனது சிறு வயது நண்பனை கடைசி முறையாக மீண்டும் நம்ப தீர்மானித்து, அவனிடம் தான் திரும்பி வரும் வரை அவளை பாதுகாக்க சொல்கிறான். இதில் இடையில் ஒரு நினைவு கூறுதல் காட்சியும் இப்போது வருகிறது. இளம் வயதில் மற்ற இளவரசர்களுடன் இருக்கும் ஒன்றாக போது, ஒரு நாள் ஜுக்கே யூ மற்றும் யான் சூன் இருவரிடையே சிங் பற்றிய பேச்சு வருகிறது. அவள் தன்னைத் தேடும் ஒரு உயர் குடி இளைஞனிடம் பொய்யாக தன் விவரங்களைக் கூறி, தப்பித்ததைக் குறித்து எடுத்துக் கூறி விட்டு, அவளின் தைரியத்தைப் பாராட்டி, அவள் ஜுக்கே-வின் அடிமை ஆகையால் அவனிடம் அவளை பிடித்திருப்பதாக யான் சூன் கூறுகிறான். ஆனால் ஜுக்கே யூ மறுத்துவிடுகிறான். அந்த நிகழ்வை இப்போது எண்ணிப் பார்த்து, ஜுக்கே யூ அங்கிருந்து சென்ற பிறகு யான் சூன் அந்த கடிதத்தை படித்து எரித்து விடுகிறான்.
பல நாட்கள் கழித்து சிங் இறுதியாக சுயநினைவு பெற்று கண் விழித்த போது, ‘மிங் லூ-ம் தனது காயங்களால் உயிரிழந்து விட்டாள்’ என்ற செய்தியை எதிர்கொள்கிறாள். அதனால் துயரத்தில் மூழ்கிய சிங், ஜுக்கே-வைப் பற்றியும் விவரங்களைத் தேட, யான் சூன் ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ஜுக்கே சுயநலத்தால் அவளை விட்டு யோங் தேசத்திற்கே திரும்பிச் சென்று விட்டதாக அவளிடம் உண்மையை திரித்து கூறுகிறான். எனினும் யான் சூன் எவ்வளவு வலியுறுத்தி கூறிய போதிலும் ஜுக்கே யூ தன்னை அவ்வளவு எளிதாக கை விட்டு விடுவான் என்பதை சிங் நம்ப மறுத்து விடுகிறாள்.
இங்கு யான் தேசத்தில் யான் சூன் தன் படையுடன் சிமெங் தேச எல்லையில் இருப்பதால், இங்கு தலைநகரத்தில் சில பழங்குடியினர் கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் அமைதியின்மை நிலவுகிறது. இத்துணை வருடங்களாக தொடர்ந்து நடக்கும் போரினால் ஏற்பட்ட பெரும் சுமையால் சில பழங்குடி இன தலைவர்கள் யான் தேசத்தின் மீது கோபம் கொண்டு அவன் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தனது தாக்குதல்களை நடத்துகின்றனர். இதில் அந்த நகரத்திலிருந்த யான் சூன்-னின் ராணி ஹெலியன் லிங்-ம் பாதிக்கப்படுகிறாள். தன்னை காப்பதற்காக தன் உயிரைத் தியாகம் செய்த பணி பெண்ணின் மரணத்தை கண்ட அவள் அதிர்ச்சியில் இருக்கும் அந்த நேரத்தில், கிளர்ச்சியை அடக்குவதற்காக அங்கு வந்து சேர்கிறான் தளபதி சிங். மற்ற இடங்களில் கிளர்ச்சியை அடக்க பெண் தளபதி ஹுவான் முயற்சிக்க, ராணியை தளபதி சிங் காப்பாற்றுகிறான். ஒவ்வொரு முறையும் தனக்கு வரும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை தளபதி சென் காப்பாற்றுவதால் அவனின் மீதான அன்பு ராணியின் இதயத்தில் சிறிது சிறிதாக அதிகரிக்கிறது.
கலவரம் குறித்து நடந்த விசாரணையில் ஒரு துரோகமும் வெளிப்படுகிறது அதாவது பிடிபட்ட கிளர்ச்சியாளர்களிடையே ராணியின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வீரர்களும் கண்டறியப்படுகின்றனர். ராணியின் குலமான ஹெலியன் குலத்தின் தலைவனான அவளது சகோதரனே துரோகிகளுடன் சேர்ந்து சாதியில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. தளபதி ஹுவான்-னின் படைவீரர்களால் கைப்பற்றப்பட்டு தன் சகோதரியை எதிர்கொண்ட போது, அவன் எந்தவிதமான மன வருத்தமும் இல்லாமல் ‘தானும் தனது குடும்பமும் செல்வாக்கு இழந்ததற்கு காரணம் ராணியே’ என்று கூறி பழி சுமத்த முயல்கிறான். தனது ரத்த உறவுகளை விட யான் தேசத்தின் சட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்த ராணி ஹெலியன் லிங் அவனை தண்டனையிலிருந்து காப்பாற்ற மறுத்து விடுகிறாள். தேசத்துரோக குற்றத்திற்காக மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்பட்டபோதும் தன் சொந்த ரத்தத்தையே ரத்தம் சிந்த செய்யும் ஒரு துரோகி என்று ராணியை அவளது சகோதரன் சபிக்கிறான்.
யோங் தேச தலைநகருக்குத் திரும்பிய ஜுக்கே யூ, பேரரசரைச் சந்தித்து, தனது கிங்ஷான் மன்றத்தின் அதிகாரச் சின்னமாய் விளங்கிய மோதிரத்தைத் திருப்பியளிக்கிறான். முன்னர் முகமூடி அணிந்த சிமெங் மன்னனால் தான் நஞ்சூட்டப்பட்ட பிறகு, அவனின் ஒரு கைப்பாவையைப் போலவே தான் வாழ்ந்து வந்ததை இப்போது பேரரசனிடம் ஜுக்கே யூ எடுத்துக்கூறுகிறான். மேலும், தங்களின் ‘கிங்ஷான் அவையை’க் கலைத்துவிட்டு, அங்கு பணிபுரியும் வீரர்களான ஒற்றர்கள் அமைதியாக ஓய்வுபெற பேரரசனின் அனுமதியையும் வேண்டுகிறான். ஆனால், ஜுக்கே யூ முன்பு தனது மரணத்தை நாடகமாக்கியது குறித்து இன்னும் மனக்கசப்பு கொண்டிருந்த பேரரசன், அந்த அவையைச் சேர்ந்த எவரையும் உயிருடன் வெளியேற அனுமதிக்க மறுத்து விடுகிறான்.
யோங் தேச தலைநகருக்குத் திரும்பிய ஜுக்கே யூ, பேரரசரைச் சந்தித்து, தனது கிங்ஷான் மன்றத்தின் அதிகாரச் சின்னமாய் விளங்கிய மோதிரத்தைத் திருப்பியளிக்கிறான். முன்னர் முகமூடி அணிந்த சிமெங் மன்னனால் தான் நஞ்சூட்டப்பட்ட பிறகு, அவனின் ஒரு கைப்பாவையைப் போலவே தான் வாழ்ந்து வந்ததை இப்போது பேரரசனிடம் ஜுக்கே யூ எடுத்துக்கூறுகிறான். மேலும், தங்களின் ‘கிங்ஷான் அவையை’க் கலைத்துவிட்டு, அங்கு பணிபுரியும் வீரர்களான ஒற்றர்கள் அமைதியாக ஓய்வுபெற பேரரசனின் அனுமதியையும் வேண்டுகிறான். ஆனால், ஜுக்கே யூ முன்பு தனது மரணத்தை நாடகமாக்கியது குறித்து இன்னும் மனக்கசப்பு கொண்டிருந்த பேரரசன், அந்த அவையைச் சேர்ந்த எவரையும் உயிருடன் வெளியேற அனுமதிக்க மறுத்து விடுவது மட்டுமின்றி, ஜுக்கே யூ-வைக் கடும் வேதனையைத் தரக்கூடிய விஷத்தைப் பருக நிபந்திக்கிறான்.
அந்த நேரம் அந்த அரசவைக்கு வந்த இளவரசன் ஜாவோ யாங், தன்னுடன் ஜுக்கே யூ-வின் நிழலாக இருக்கும் யுவே ஷியி-வையும் சிறை பிடித்து வருகிறான். இதனால் சூழல் மேலும் தீவிரமடைகிறது. இப்போது இளவரசன் ஜாவோ யாங் ஒரு கொடூரமான தேர்வை முன்வைக்கிறான். அதாவது கடும் வேதனையைத் தரக்கூடிய விஷத்தை ஜுக்கே யூ பருக வேண்டும், அல்லது தன் எஜமானருக்குப் பதிலாக யுவே ஷியியே அந்த விஷத்தைப் பருகவேண்டும், என்று உயிருடன் விளையாடும் விளையாட்டை ரசித்து அனுபவிக்க, அதில் ஜுக்கே யு மறுத்து போராடி, மன்னனிடம் முறையிட்டு ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, இந்த அவையில் எதுவும் பலனளிக்காது என்று உணர்ந்து, தன் எஜமானரையும் சக காவலர்களையும் காப்பாற்றும் நோக்குடன், யுவே ஷியி அந்த விஷப் பாத்திரத்தைப் பறித்து விஷத்தைப் பருகிவிடுகிறான்.
இந்த நிலையை இத்துடன் நிறுத்துக்கொள்ள நினைத்த பேரரசன் முடிவாக ஜுக்கே யூ-வின் கடந்தகாலத் தவறுகளை மன்னித்து, இனிமேல் எவ்விதமான கீழ்ப்படியாமையும் நிகழ்ந்தால், கிங்ஷான் மன்றத்தில் உள்ள ஒவ்வொருவரும் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான். விஷத்தின் தாக்கம் தீவிரமடைந்து, யுவே ஷியி-ம் ஜுக்கே-வின் மடியிலேயே தன் உயிரை விடுகிறான். தன்னிடம் மிகுந்த விசுவாசத்துடன் வாழ்ந்த யுவே ஷியி-யின் உடலைச் சுமந்துகொண்டு ஜுக்கே யூ கிங்ஷான் மன்றத்திற்குத் திரும்பியபோது, அங்கே அவனுக்கு இன்னும் கூடுதலான துயரங்களே காத்திருந்தன. ஜுக்கே குலத்தின் எதிரியான முஹே குடும்பத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஜுக்கே-வின் இன்னும் மூன்று முக்கிய காவலர்களின் அடையாள அட்டைகள் அவனிடம் அளிக்கப்படுகின்றன. பதிமூன்றாம் இளவரசனால் கைது செய்யப்பட்டு, அவர்கள் முஹே குலத்திடம் அளிக்கப்பட்டு உயிரிழந்துவிட அவர்களின் அடையாள அட்டைகள் இவனிடம் வந்து சேருகின்றன. தங்கள் எஜமானனாகிய ஜுக்கே-விற்குத் துரோகம் செய்வதைத் தவிர்ப்பதற்காக, மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். அதுமட்டும் அல்லாது அவர்கள் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டதால், அவர்களது குடும்பத்தினரும் இதற்குள்ளாக தூக்கிலிடப்பட்டிருந்தனர். வீழ்ந்த தன் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மரணங்கள் ஜுக்கே யூ-வை சீற்றத்திற்குள்ளாக்குகிறது.
அத்தியாயம் 34 – இன் சுருக்கம்
.