சீக்ரெட் கார்டன் – எபிசோட் 1

‘ரொம்ப ஒஸ்ட்’ என்று பெயர் எடுத்த ஒரு பணக்காரன் தன்னுடைய பெண் பார்க்கும் நிகழ்வில், அந்தப் பெண்ணை மறுத்து விடுகிறான். பணத்திமிரில் இருக்கும் அந்த ஆணுக்கும் [ ஹீரோ பெயர் ஜோவன் ] , பணத் தேவைக்காக வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் ஹீரோயினுக்கும் [ ஹீரோயின் பெயர் கிளாரா ] முட்டிக்கொள்கிறது. கிளாரா ஒரு பைட்டர். சினிமாவில் பின்னணி சண்டை பயிற்சியாளராக வாழ்வை ஓட்டுபவள். எல்லா விஷயங்களையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டு போராடுபவள். அவளை ஒரு தலையாக நேசிக்கும் ‘அவளுடைய சீனியர்’ மற்றும் அவளுக்கு மிகவும் பிடித்த ‘அவள் ரசிகையாக இருக்கும் பாடகர்’ என்று இரண்டு கதாபாத்திரங்கள் அவள் வாழ்வில் குறிக்கிடுகிறார்கள். [ ஹீரோ வாழ்வில் என்று சொல்லவேண்டுமா???] 

ஓகே! கதை இப்ப இருந்து ஆரம்பிக்குது. பணக்கார ஹீரோக்கும் அதாவது ஜோவன்-க்கும், பாடகருக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் காரணமாக ஜோவன் ஒரு பெண்ணை சந்திக்க செல்கிறான். அங்கு ஆள் மாறாட்டம் ஏற்பட்டு, அந்த பெண்ணிற்கு பதிலாக ஃபைட்டர் ஆக இருக்கும் கிளாராவைப் பார்த்து பேச நேரிடுகிறது. அதில் அவளுக்கு இருக்கும் காயத்தையும் காய்ச்சலையும் அறிந்து கொள்கிறான். அந்த நிகழ்வில் வழக்கம்போல ஜோவன்-க்கு, நமது கிளாராவைப் பிடித்து விடுகிறது. ஆனால் ஃபைட்டர் பத்தோடு பதினொன்றாக அவனை அலட்சியப்படுத்துகிறாள்.

நிலை இப்படி இருக்கையில், ஜோவன்னும் கிளாராவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அவளது ஆஸ்தான பாடகர் நம்ம ஜோவன்னைச் சந்திக்க வருகிறான். வந்தவன் அருகில் இருக்கும் நம் கிளாராவைப் பார்த்து பேச ஆரம்பிக்கிறான். அவளும் மகிழ்வாகப் பேச ஆரம்பிக்கிறாள். ‘எந்த பெண்ணை பார்த்தாலும் ஆசை வார்த்தைகளை பேச ஆரம்பிக்கும் பாடகர்’ – ஒரு பக்கம்….. ‘தான் விரும்பும் பாடகர் தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறானா???’ – என்ற ஆச்சரிய சங்கடத்தில் கிளாரா ஒரு பக்கம்….. அதனைப் பார்த்து எரிச்சலில் இருக்கும் ஜோவன் இன்னொரு பக்கம் – என்று எபிசோடு 1 முடிகிறது.

மைண்ட் வாய்ஸ்

2010ல் வந்த நாடகம் தான், பழைய நாடகம் தான். ஆனால் எப்போது பார்த்தாலும் புதிது போலவே உணரும் படி எப்படித்தான் இவர்களால் எடுக்க முடிகிறதோ. ஹீரோ, ஹீரோயின் சூப்பர். ஆனா கதை டாப்பாக இருப்பதால் மட்டுமே மற்ற முகங்கள் மன்னிக்கப்படுகின்றன. நாமளும் அதையே செய்வோம். கதைகளும் எடுத்த விதங்களும் தான் பிடித்தமே தவிர, நம்ம டேஸ்டே வேற தான் இல்லையா?

Tags,

korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil,

.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *