.
Dramas > Korean Dramas > Secret Garden > episode – 1
கிம் ஜூ-வோன் – பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பணத்திமிரும், ஆணவமும் கொண்ட புத்திசாலி . தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பரமான ராயல் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நடத்துகிறான். [ நாம் இவனது பெயரை ஜோவன் என்று அழைப்போம் ]
ஓஸ்கா – ஆசியா முழுவதும் பிரபலமான பாடகர். ஆனால் இவனுக்கு இசைத் திறமை இல்லை. பாடகராக இருப்பவனுக்கு இசைத் திறமை முக்கியமாக கருதப்படுவதால் இசைக் கலைஞரைத் தேடிக்கொண்டு இருப்பவன். பெண்களிடம் இதமாக பேசி மயக்கும் தன்மை கொண்ட காசினோவா. ஜோவனின் உறவினன். சியோல்-ன் முன்னாள் காதலன்.
கில் ரா-இம் – ஒரு சண்டைப் பயிற்சிப் பள்ளியில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றுகிறாள். படங்களில் சண்டைக்காட்சிகளில் டூப்-ஆகவும் வேலை செய்கிறாள். அவள் கடினமாக உழைக்கிறாள், எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதை விரும்புவதில்லை.
இம் ஜாங்-சூ – சண்டைப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளன். கில் ரா-இம் க்கு சீனியர். அவளை ஒரு தலையாகக் காதலிப்பவன்.
சியோல் – ஓஸ்காவின் முன்னாள் காதலி. இப்போது ஜோவனின் திருமணத்திற்கு பார்க்கப்படும் பணக்கார பெண். [ இரண்டாவது கதாநாயகி ]
சே-ரின் – கிளாரா பணிபுரியும் படத்தின் கதாநாயகி. ஓஸ்காவின் பெண் தோழிகளில் ஒருத்தி.
சீக்ரெட் கார்டன் எபிசோட் 1 விளக்கம்
தனியாருக்கு சொந்தமான மிக நேர்த்தியாக பராமரிக்கப்படும் ஒரு பரந்த பிரதேசத்தைக் கடந்து செல்வமும் செழிப்பும் ஆடம்பரமும் மிக்க ஒரு பிரம்மாண்டமான மாளிகை… அது ‘ஜோவனு’க்கு சொந்தமானது. அவன் அங்கே வசிக்கிறான். அதேபோல செல்வந்தரும் வெற்றிகரமான பிரபல பாடகரும் ஆன ‘ஓஸ்கா’ அவனது உறவு முறையில் சகோதரனாவான். அவனும் அதே சுற்றுப்புறத்தில் தான் மற்றொரு மாளிகையில் வசிக்கிறான்.
அன்று காலையில் ஜோவன் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, சாலை ஓரத்தில் ஓஸ்கா தனது பெண் தோழியுடன் நெருக்கமாக இருப்பதை பார்க்கிறான். ஓஸ்காவின் நிலையைக் கண்டு ‘இவன் திருந்த மாட்டான்’ என்பது போன்று பார்வை ஜோவனிடம். அதனால் எதுவும் சொல்லாமல் சென்று விடுகிறான். ஓஸ்கா ஒரு காசினோவா [ அதாவது பெண்களின் விருப்பத்திற்கு உரியவன் ] தன் பெண் தோழிகளிடம் ‘உறவு நன்றாக இருந்தது, பிறகு பார்க்கலாம்’ என்ற அலட்சியமாக கூறி, அந்த உறவைப் புன்னகையுடனே முறித்துக் கொள்வது ஓஸ்கா-வுக்கு வழக்கமான ஒன்றுதான்.
தன் குடும்பம் கூறியபடி, பெண் பார்க்கும் நிகழ்வின் காரணமாக ஜோவன் ஒரு பணக்கார பெண்ணை அருங்காட்சியத்தில் சந்திக்கிறான். அந்த பணக்கார பெண் ‘சியோல்’. அவள் தனது அழகு, பின்னணி ஆகியவற்றால் அவனை கவர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறாள். ஆனால் அதில் எல்லாம் அவன் எளிதில் கவரப்படவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. அவனது முரட்டுத்தனமான அலட்சியம் மற்றும் வார்த்தைகள் மிகவும் மறைமுகமாக இருந்ததால் ‘அவன் தனக்கு புரியாத ஒன்றைப் பற்றி பேசுகிறானா’ அல்லது ‘தன்னை அவமானப்படுத்துகிறானா’ என்று அவளுக்கு உறுதியாக தெரியவில்லை என்றாலும், அவன் தன்னை மறுக்கிறான் என்பது அவளுக்கு புரிகிறது. இருந்தும் அவன் பணக்காரன் என்பதற்காக ஜோவனைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறாள்.
ஜோவனின் ஹோட்டலில் அந்த பணக்கார பெண் சியோல்-ம், தோழியும் ஜோவன் செய்ததை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, அங்கு ரா இம் வருகிறாள். அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாமல், உடலில் பச்சை குத்திக்கொண்டு ஒரு ஆண் உடையில் கம்பிரமாக நடந்து வந்த அவளை, சியோல்-க்குப் பிடிக்காமல் போகிறது. ‘தான் ஜோவனைத் திருமணம் செய்தால், இந்த ஹோட்டல் தனக்குத் தானே சொந்தம்’ என்ற எண்ணத்தின் அகங்காரத்தின் தன் இடத்தில் இருந்து அவளை அப்புறப்படுத்த எண்ணி ரா இம்-வை நோக்கிச் செல்கிறாள். இந்த மாதிரி பெண்ணை உள்ளே விட்டதற்காக ஹோட்டலின் பணிப்பெண்ணை திட்ட, அவளோ ரா இம்-வின் நெருங்கிய தோழி. தன் தோழி திட்டுவாங்குவதை பொறுக்காமல் ரா இம் வெளியே செல்ல நினைக்க, சியோல் பணிப்பெண்ணின் ஐடியை பறித்து விட்டு செல்கிறாள்.
அதை ரா இம் தடுக்க நினைக்க தோழி மறுத்து விடுகிறாள். அந்த எரிச்சலில் வெளியே வந்த ரா இம் ஒரு பணக்கார பெண்ணின் பர்ஸை ஒரு திருடன் அடித்துக் கொண்டு செல்வது கண்டு, அவனைப் பின்தொடர்ந்து பர்ஸைக் கைப்பற்றிக் கொண்டு வந்து அவர்களிடம் சேர்கிறாள். பர்ஸைக் கொடுத்தவள், சியோல்-யிடம் தன் தோழியின் ஐடியைக் கேட்க…சியோல் அதை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டதாக கூறுகிறாள். ரா இம்-விற்கு கோபம் வந்து அவளின் சட்டையைப் பிடித்து இழுத்துவந்து அதை எடுத்துத் தரச் சொல்லி கேட்கிறாள். தன்னை விடுவித்துக் கொண்ட சியோல் தனது கைப்பையில் இருந்து அந்த ஐடி டேக்கை எடுத்து நீட்ட, முறைத்த படியே அதை பிடுங்கிக் கொண்டு செல்கிறாள் ரா இம்.
ரா இம்-வை எதிரிகள் தாக்க அவள் சண்டை செய்து கொண்டிருக்கிறாள். அவள் ஒரு ஸ்டண்ட்வுமன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப்பாக வேலை செய்பவள். ஒவ்வொரு நாளும் அவரது வாழ்க்கை போராட்டம் தான். மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரத்திற்காக அவள் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் என்ன கூறினாலும் அதை அவள் பொருட்படுத்துவதே இல்லை. இப்போது வேலை முடிந்து அவள் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளது குழுவின் சீனியருடன் பேச நேரிடுகிறது. அவளின் பேச்சின் போக்கை வளர விட விருப்பம் இல்லாமல், அவன் அவளை தொடர்ந்து பாடல் கேட்க செய்துவிட்டு வேலையை தொடர்கிறான். அவளின் சீனியர் அவளுக்கே தெரியாமல் அவளை ஒருதலையாக காதலிப்பவன். அதனால் அவள் மிகவும் விரும்பிய மேடை பாடகனின் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வாங்கி அவளை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அதே நிகழ்ச்சியில் இன்னொரு இடத்தில் ஜோவனும் அமர்ந்திருக்கிறான்.
ஜோவனுக்கும் அவனின் கசின் அந்த மேடை பாடகன் ஓஸ்காவுக்கும் இடையே உள்ள தொழில் முறை ஒப்பந்தம் காலாவதி ஆகும் நேரம் நெருங்கி விட்டதால், அதை புதுப்பிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அதனாலேயே அந்நிகழ்ச்சிக்கு விருப்பமில்லை என்றாலும் ஜோவன் வர வேண்டியது ஆகிவிட்டது. ஜோவன் தனது ஹோட்டலை பார்வையிட வருகிறான். அப்படியே பாடகனின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் அவனை நாடுகிறான்.. பாடகன் அதிகம் கேட்க ஜோவனோ மறுக்க வாக்குவாதம் நடக்கிறது.
படத்தின் ஹீரோயின் சே-ரின் ஓஸ்காவுக்கு போன் பேச, அருகில் அவளின் டூப் ரா இம் நின்று கொண்டிருக்கிறாள். ஃ போனை எடுத்து சே-ரின் பாடகனை மிரட்டுகிறாள். ‘அவன் தன்னை விட்டு விட நினைத்தால் அருகினில் இருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் இருவருக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தி விடுவதாக’ மிரட்டி போனை வைக்கிறாள். அதே எரிச்சலில் திரும்பி அதனைக் ரா இம்-விடமும் காட்டுகிறாள். படத்தின் ஷூட்டிங் தொடர்கிறது. இருவரும் பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஹீரோயின் கவனக்குறைவால் இருவருக்கும் அடிபடுகிறது. எனினும் அதிகமாக அடிபட்ட ரா இம்-வைத் தான் படத்தின் டைரக்டர் திட்டுகிறான். அப்பொழுது அங்கு வந்த சண்டைக் குழுவின் சீனியர் அவளுக்காக பேசுகிறான்.
ஜோனுக்கு ஒரு போன் வருகிறது. ஓஸ்கா தான் போன் செய்கிறான். அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி, சே-ரின் ஐ ஒரு 3 மணிநேரத்திற்கு யாரிடமும் எதையும் பேசவிடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்கிறான். அவளை இதுவரை பார்த்திராத ஜோவனும் ஓஸ்காவின் ஒப்பந்தம் வேண்டுமே என்ற எண்ணத்தில் சரி என்றபடி சூட்டின் நடக்கும் இடத்திற்கு செல்கிறான். அங்கு பாடகன் சொன்ன பெண்ணைக் குறித்து கேட்க, ஹீரோயினுக்கு பதிலாக அவளுக்கு டூப்பாக நடித்துக் கொண்டிருக்கும் ரா இம்-வைக் காட்டுகிறான் ஒருவன். ஆள் மாறியது தெரியாமல் நேராக ரா இம்-விடம் சென்று ஜோவன் ஓஸ்காவைக் காணலாம் என்று கூறி அவளை அங்கிருந்து அழைத்துச் செல்கிறான். இருவரும் ரா இம் பாடகனை முதலில் சந்தித்த இடமான ஹோட்டலுக்குச் செல்கிறார்கள்.
ஹோட்டலில் ரா இம் லிப்ட்டில் செல்ல, ஜோவன் லிப்ட்டில் செல்வதற்கு பயந்து [ ஏன் ] கொண்டு படி வழியாக ஏறி அந்த அறைக்கு செல்கிறான். அவனுக்கு முன்பே அறைக்குள் சென்ற ரா இம் முதல் முதலில் பாடகனை அங்கு சந்தித்ததை நினைத்துப் பார்க்கிறாள். முன்னர் ஒரு நாள் அந்த அறையில் நடக்கும் ஷூட்டிங்ன் போது ஓஸ்காவை ரா இம் பார்த்து சில வார்த்தைகள் பேசி இருக்கிறாள். அவன் தான் பெண்களிடம் பேசி அவர்களின் மனங்களைக் கவர்வதில் வல்லவன் ஆகிற்றே.. அந்த நிகழ்வில் ரா இம்-விற்கு ஓஸ்காவை மிக பிடித்துவிடுகிறது.
இப்போது அதே அறையில் ஜோவனும் ரா இம்-வும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜோவன் ‘அவள் பாடகனின் கேர்ள் ஃபிரண்ட்’ என்று நினைவில் பேசிக் கொண்டிருக்க, ரா இம் தனது தொழில்முறையில் பதில்களை சொல்லிக் கொண்டிருக்கிறாள். வார்த்தைகள் வேறு மாதிரி அர்த்தங்களுடன் வெளிவந்து இருவருக்கும் சுவாரசியமான வார்த்தையாடல்கள் நடக்கிறது. ஆனால் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவளுக்கு புரிந்து விடுகிறது, அவன் ஹீரோயின் சே-ரின் என்று நினைத்து அவளின் டூப்பான தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று. அதை அவனிடம் கூற இருவருக்கும் வாக்குவாதங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு படத்தின் டைரக்டர் போன் செய்து வேலைக்கு வரச் சொல்ல, அவளும் ஜோவனை ஹீரோயினை பார்க்க தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்கிறாள்.
மீண்டும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றவன் சே-ரின் ஐத் தேட, அவள் அப்பொழுது தான் பத்திரிகையாளர்களிடம் ஓஸ்கா-வைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறாள். ஜோவன் உடனே அவளிடம் புத்திசாலித்தனமாக பேசி அவளை தடுத்து விடுகிறான். அதனை ஓஸ்காவுக்கும் போன் மூலம் தெரியப்படுத்திக் கொண்டே வெளியே வரும் பொழுது, அவன் மீண்டும் ரா இம்-வை அந்த சூட்டிங்கில் சந்திக்கிறான். அவள் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறாள். அவளையும், அவளது திறமையையும் கண்டவனின் மனம் மெல்ல அவள்புறம் சாய்கிறது.
அவளிடம் சென்று ஜோவன் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்க, எரிச்சலில் இருக்கும் அவள் அவனை காலால் உதைத்து விட்டு நடக்க ஆரம்பிக்கிறாள். திட்டிக்கொண்டே அவளைப் பார்த்தவன் அவளுக்கு அடிபட்ட கையில் இருந்து ரத்தம் வெளியேறுவதை பார்க்கிறான். பதட்டத்தில் அவளைத் தொட்டு பேச, அவள் உடம்பும் அனலாக கொதித்து காய்ச்சலும் இருப்பதே உணருகிறான். அவள் மறுக்க மறுக்க அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறான். அங்கு அவளுக்கு சிகிச்சை நடக்கிறது. இருந்தும் திருப்தி இல்லாமல் தனது குடும்ப பெண் டாக்டரை அந்த மருத்துவமனைக்கு வரச் செய்து அவளை காணச் செய்கிறான். அந்த மருத்துவர் அவனுக்கு நெருங்கிய தோழியும் கூட. அதே நேரம் ரா இம்-ன் போன் அடிக்கிறது. அதை எடுத்து ஜோவன் பேச மறு பக்கம் பேசியது அவளின் சீனியர் ஜாங்-சூ. அதன் மூலம் விவரம் தெரிந்து அவனும் மருத்துவமனைக்கு வருகிறான்.
தான் சொல்லியும் கேட்காமல் காயத்துடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு காய்ச்சலை வரவழைத்துக் கொண்ட அவளைப் பார்த்து ஜாங் சூ-வுக்கு கோபம் வந்து பேச ஆரம்பிக்க, அதை ஜோவன் தடுக்க இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. ரா இம் தன் சீனியரிடம் ஜோவனைப் ‘பாடகனின் வேலைக்காரன்’ என்று அறிமுகப்படுத்துகிறாள். ஜோவன் அதிர்ச்சியில் நிற்க, ஜாங்-சூ தான் அவளை வீட்டில் விட்டு விடுவதாக அழைக்கிறான். எப்போதும் போல இந்த முறையும் ரா இம் மறுக்க ஜாங்-சூ வருத்தப்பட்டு சென்றுவிடுகிறான்.
ரா இம் தனியே நடக்க ஆரம்பிக்கிறாள். அதைக் கண்டு ஜோவன் செல்லும் வழியில் அவளை மறித்து ‘தன்னுடன் வருமாறு’ அழைக்க இவள் மறுக்க என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த நேரத்தில் அங்கு அவளுக்கு மிகவும் விருப்பமான ஓஸ்கா வருகிறான். வந்தவன் அவனுடன் இருந்தவளைக் கண்டு வழக்கம் போல தன் பாணியில் பேச ஆரம்பிக்கிறான். எப்போதோ பார்த்திருந்தாலும் ஓஸ்காவுக்கு ரா இம்-வை நினைவிருக்கிறது. அதனால் அன்று நடந்ததை ரா இம்-விற்கு அவனே எடுத்துச் சொல்ல, அவள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். பாடகன் அவளின் ஸ்டண்ட் வேலையையும், அவளின் பெயரையும் கூட கூற அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
‘எந்த பெண்ணை பார்த்தாலும் இதமான வார்த்தைகளை பேச ஆரம்பிக்கும் ஓஸ்கா’ – ஒரு பக்கம்….. ‘தான் விரும்பும் ஓஸ்கா தன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறானா???’ – என்ற ஆச்சரிய சங்கடத்தில் ரா இம் ஒரு பக்கம்….. அதனைப் பார்த்து எரிச்சலில் ஜோவன் இன்னொரு பக்கம் – என்று இந்த எபிசோடு 1 முடிகிறது.
இங்கு இந்த நாடகத்தின் விளக்கத்தை தமிழில் படித்துவிட்டு netflix ல் இந்த நாடகத்தைப் பார்த்தால் எளிதில் புரியும்.
சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 2
.
Tags,
korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 1 explain in tamil, Secret Garden korean drama tamil dubbed,
.
.