
[ ஒரு சில விஷயங்களால் இந்த சீக்ரெட் கார்டன் – நாடகத்தின் எபிசொட் விளக்கங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை. பின்னர் நிச்சயமாக எபிசொட் விளக்கங்கள் திருத்தி திரும்ப பதிவிடப்படும். ]
சீக்ரெட் கார்டன் [Secret Garden ] ட்ரைலர்
.
சுயவிவரம்
நாடகம்: சீக்ரெட் கார்டன்
இயக்குனர்: ஷின் வூ-சியோல், குவான் ஹியூக்-சான், கிம் ஜங்-ஹியூன்
எழுத்தாளர்: கிம் யூன்-சூக்
நெட்வொர்க்: SBS
அத்தியாயங்கள்: 20
வெளியான தேதி: நவம்பர் 13, 2010 – ஜனவரி 16, 2011
மொழி: கொரியன்
நாடு: தென் கொரியா
முழு கதைச் சுருக்கம்
ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்த கிம் ஜூ-வோன் புத்திசாலியும் அழகானவனும் கூட. தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பரம் மிக்க ‘ரோயல்’ என்ற பல் பொருள் அங்காடியை அதாவது மால்-ஐ அவனே நிர்வகித்து வருகிறான். அவனது உறவினன் ஓஸ்கா. மிகப் பிரபலமான பாடகரான அவன் தனது இயல்பான, கவரத்தக்க பேச்சுத் திறமையால் பெண்களைத் தன் பால் ஈர்க்கும் வித்தை தெரிந்தவன். தனது விளம்பரம் ஒன்றில் ஓஸ்கா-வை ஒப்பந்தம் செய்வதன் பொருட்டு, அவன் கூறிய ஒரு நடிகையை படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அழைத்து வர செல்கிறான் கிம் ஜூ-வோன். ஆள்மாறாட்டம் காரணமாக நடிகைக்கு பதிலாக அவளின் டூப் கில் ரா-இம்-வை அழைத்து வந்து விடுகிறான்.
தற்செயலாக இருவருக்கும் நடக்கும் இந்த நிகழ்வு அவர்கள் இருவரையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. கில் ரா-இம் உயர் மட்ட அந்தஸ்தையோ அல்லது பெரும் செல்வத்தையோ கொண்டிராதவள் என்பதால் அவளை தன் மனதில் இருந்து அகற்றி விட கிம் ஜூ-வோன் முயல்கிறான். இருப்பினும் அவனால் அது இயலவில்லை. அவனுக்குள் நடக்கும் இந்த போராட்டம் கில் ரா-இம்-வையும் பாதிக்க தொடங்குகிறது. முதலில் கிம் ஜூ-வோன்-னின் மீது தனக்கான எண்ணங்களை பிரதிபலிக்கத் துவங்கும் கில் ரா-இம் அவன் ‘தன்னைவிட மிக மிக உயர்ந்த சமூக அந்தஸ்தை சேர்ந்தவன்’ என்று தெரிந்து கொண்ட பின்னர் அதுவும் அவன் அதை முக்கியமாக கருதுகிறான் என்ற பின்னர் அவனைப் புறக்கணிக்க கில் ரா-இம்-வும் முயற்சிக்கிறாள், என்றாலும் அவளாலும் அது இயலவில்லை.
இன்னொரு பக்கம் பிரபல பாடகனான ஓஸ்கா-வின் முன்னாள் பெண் தோழிகளில் ஒருத்தி மிகப்பெரிய பணக்காரி யூன்-சுல் தனது குடும்பத்தாரால் கிம் ஜூ-வோன்-னுடன் திருமணத்திற்காக பேசப்படுகிறாள். பாடகனான ஓஸ்கா-வின் மீது ஆழ்மனதில் அவளுக்கு இருக்கும் அன்பு அப்படியே இருந்தாலும், அவன் மீது இருக்கும் கோபத்தின் காரணமாக அவள் கிம் ஜூ-வோன்-ஐத் தேர்ந்தெடுக்கிறாள். அதனால் கிம் ஜூ-வோன்-ஐ எப்பொழுதும் பின் தொடர்ந்து செய்கிறாள். இது ஒஸ்கா-வையும் பாதிக்கிறது. எத்தனையோ பெண்களிடம் பழகி இருந்தாலும் அவன் அன்பு யூன்-சுல்-விடம் இருப்பதை உணர்கிறான். எனினும் தனது ரசிகையாக இருக்கும் கில் ரா-இம்-யிடம் ஓஸ்கா நட்புணர்வுடன் பழகுவது கிம் ஜூ-வோன் மற்றும் யூன்-சுல் இருவருக்குமே மனதில் புகைச்சலை ஏற்படுத்துகிறது.
இந்த நான்கு பேருக்கும் இடையே இந்த போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, இந்த நான்கு பேருமே ஜெஜூ தீவிற்கு சில காரணங்களால் செல்ல நேருகிறது. தீவில் இவர்களுக்குள் நடக்கும் போட்டி காரணமாக கிம் ஜூ-வோன்-னும், கில் ரா-இம்-வும் அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள ‘சீக்ரெட் கார்டன்’ என்ற மர்மமான உணவகத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ‘சீக்ரெட் கார்டன்’ உணவகத்தின் உரிமையாளன் இவர்கள் இருவரையும் நன்கு தெரிந்தவன் போல பேசுகிறான். இருவரும் அங்கிருந்து கிளம்பும் பொழுது, இருவருக்குமே இரண்டு பாட்டில் ஒயினை பரிசளிக்கிறான். அவர்கள் திரும்ப தங்கள் விடுதிக்கு வந்து சேர்கிறார்கள். இரவில் இருவரும் மற்றவரை நினைத்துக் கொண்டே தங்கள் தனிமையை போக்க அந்த ஒயினை குடிக்கிறார்கள்.
ஆனால் காலையில் எழுந்த பொழுது இருவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனெனில் கில் ரா-இம் மற்றும் கிம் ஜூ-வோன் இருவரின் ஆன்மாக்களும், இருவரின் உடலுக்குள்ளும் மாறி இருப்பதைக் கண்டு ‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.
கதையில் ஏற்படும் இந்த திருப்பம் அவர்களின் வாழ்வை எப்படி திசை திருப்புகிறது? என்றும், இதன் காரணமாக அடுத்து உடல் அளவிலும், மனதளவிலும் மட்டுமல்ல சுற்றுப்புற அளவிலும் கூட அவர்கள் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன? என்பதையும், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதங்களையுமே இந்த நாடகத்தில் காணலாம்.
கதாபாத்திரங்கள்
கிம் ஜூ-வோன் – பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பணத்திமிரும், ஆணவமும் கொண்ட புத்திசாலி . தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பரமான ராயல் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நடத்துகிறார். [ நாம் இவனது பெயரை ஜோவன் என்று அழைப்போம் ]
ஓஸ்கா – ஆசியா முழுவதும் பிரபலமான பாடகர். ஆனால் இவனுக்கு இசைத் திறமை இல்லை. பாடகராக இருப்பவனுக்கு இசைத் திறமை முக்கியமாக கருதப்படுவதால் இசைக் கலைஞரைத் தேடிக்கொண்டு இருப்பவன். பெண்களிடம் இதமாக பேசி மயக்கும் தன்மை கொண்ட காசினோவா. ஜோவனின் உறவினன்.
கில் ரா-இம் – ஒரு சண்டைப் பயிற்சிப் பள்ளியில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றுகிறாள். படங்களில் சண்டைக்காட்சிகளில் டூப்-ஆகவும் வேலை செய்கிறாள். அவள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவளது தந்தை இறந்துவிட்டதால், அவள் கடினமாக உழைக்கிறாள், எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதை விரும்புவதில்லை. [ நாம் இவளது பெயரை கிளாரா என்று அழைப்போம் ]
இம் ஜாங்-சூ – சண்டைப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளன். கில் ரா-இம் க்கு சீனியர். அவளை ஒரு தலையாகக் காதலிப்பவன்
யூன்-சுல் – ஓஸ்கா-வின் முன்னாள் காதலி. அவனின் பெண்களை மயக்கும் திறமையால் அவனிடம் இருந்து பிரிந்து சென்றவள். கிம் ஜூ-வோன் க்கு குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்ட பணக்கார பெண்.
பார்க் சே-ரின் – படத்தின் கதாநாயகி. அதுமட்டும் அல்லாமல் ஓஸ்கா சமீபத்தில் பிரிந்த பெண்ண்ணும் கூட. அதனால் ஆஸ்காவைப் பற்றி பத்திரிக்கைகளில் கூறிவிடுவதாக மிரட்டுபவள்.
ஹான் டே-சன் – இசைக் கலைஞன். ஓஸ்கா-வின் பாடல்களுக்கு இசைக்க கேட்டுக்கொல்லப்பட்டவன். நல்ல இசைக்கலைஞன் மட்டுமல்ல நேர்மையாளன் மற்றும் கோபம் அதிகம் உள்ள ஏழை.
.
.