Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 29 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 29

கருப்புத் தங்கச் சுரங்கம் – சிங் மற்றும் ஜுக்கே யூ இருக்கும் சிமெங் பிரதேசத்தில் உள்ள கருப்பு சுரங்கத்தில் கிடைக்கும் ஒரு பொருள். பணத்திற்கு பதிலாக பண்டமாற்றாக இப்பொருள் பயன்படுகிறது. 

கிங்ஷான் – இது யோங் தேசத்தின் ஒரு குறுநில பகுதி. ஜுக்கே குலம் இதனை ஆண்டு வருகிறது. யோங் தேச மன்னனுக்காக கொலைகளையும், விசாரணைகளையும் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. பெரும் ஓற்றர்களை உருவாக்கி, பயிற்சி அளிப்பதும் கூட இவர்கள் தொழில். ஜுக்கே யூ இந்த குலத்தின் வாரிசு. 

ஜுக்கே முகிங் – கிங்ஷான் குறுநிலத்தின் அதிபதி. ஜுக்கே குலத்தின் மூத்தவர். ஜுக்கே யூ-ன் குரு மற்றும் அவனது தாத்தா.

ஜிங் க்ஸியோபா – சிங்-ன் சகோதரி. பலவருடங்களுக்கு முன்பே பிரிந்துவிட்டார்கள். 

.

Rebirth அத்தியாயம் 29 – சுருக்கம்

யான் தேசத்தில் பல பகுதியில், ‘கருப்புத் தங்கச் சுரங்கம்’ (Black Gold Mine) என அறியப்படும் ஓர் அரிய கனிப்பொருள் உள்ளூர் வியாபாரிகளிடையே பெருமளவில் புழக்கத்திற்கு வந்திருப்பதை தளபதி செங் யுவான் தெரிந்துகொள்கிறான். சிமெங் தேசத்தின் சுரங்க வளத்தின் உற்பத்தி மிக அதிக அளவில் எட்டியிருப்பதை யான் தேசம் வரை புழக்கத்திற்கு வந்திருப்பதன் மூலம் யான் தேச அரசுக்கு தெரியவருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, அந்நாட்டின் இராணுவம் தளவாடங்கள் மற்றும் ஊதியப் பட்டுவாடாவில் கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதை பற்றி அரசவையில் விவாதம் நடக்கும் நேரம் இதனை தளபதி செங் மன்னனிடம் தெரிவிக்கிறான்.

இங்கு சிமெண்ட் பிரதேசத்தில் ஜுக்கே-விற்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகிறது. ஒன்று யோங் தேசத்திலிருந்து சில ஒற்றர்களின் நடமாட்டம் இங்கு இருப்பது, இரண்டாவது ஜுக்கே-வின் குருவும் தாத்தாவும் ஆன ஜுக்கே குலத்தின் மூத்தவர் அவனை தேடி இங்கு சிமெங் பிரதேசத்திற்கு வருவது. இது ஜுக்கே-விற்கு கவலையை அளிக்கிறது. மற்ற தேசங்களில் மட்டுமல்ல இந்த சிமெங் தேசத்திலும் கூட அவர்களின் ஒற்றர்கள் அதிக அளவில் இருப்பதையே இது காட்டுவதாக அவன் கவலை கொள்கிறான். மூன்று நாட்கள் கழித்து அவர் தங்கி இருக்கும் இடமறிந்து தேடிச் செல்கிறான் ஜுக்கே யூ. அங்கு தனது தாத்தாவும் குருவும் ஆன மூத்தவர் ஜுக்கே முகிங் நடக்க இயலாத நிலையில் வீல்சேரில் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். யான் தேசத்துடன் பல வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட போரில் ஜுக்கே யூ தோல்வியடைந்து இறந்து விட்டதாக ஏற்பட்ட நிலையில், ஜுக்கே குடும்பத்தின் மீது பேரரசர் ஐயம் கொள்கிறார். அதனால் தனது விசுவாசத்தை அந்த குலம் மன்னரிடம் நிரூபிக்கும் பொருட்டு தன்னை ஒரு கொடிய விஷத்தை அருந்துமாறு கட்டாயப்படுத்தியதாக மூத்தவர் ஜுக்கே முகிங் கூறுகிறார்.  

மேலும் பல காலமாக  வழி வழியாக தங்கள் குறுநில பகுதியில் தாங்கள் செய்து வரும் பணியை அபகரிக்க துடிக்கும் போட்டியாளரான முகே என்ற குலத்தின் குடும்பத்தினரிடமிருந்து பெரும் நெருக்கடியையும் இந்த குலம் சந்தித்து வருகிறது என்பதாகவும் கூறுகிறார். அது மட்டுமல்லாது தனது போட்டியாளரான முகே குலத்தின் யோசனைப்படி மன்னர் தனது ஒற்றர்களில் பாதிப்பேரை கொலை களத்தில் பலியிட்டு தனது கோபத்தை தணித்துக் கொண்டான் என்றும், இவை எல்லாவற்றையும் நேராக்கும் பொருட்டும். மன்னரின் கோபத்தை தணிக்கும் காரணத்திற்காகவும் அவனைத் திரும்ப தன்னுடன் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் கூறுகிறார். தற்போது சிமெங் மன்னராக பதவி வகிக்கும் அந்தஸ்தின் மூலம் தங்கள் குடும்பத்தின் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று நம்பும் அந்த மூத்தவர் ஜுக்கே யூ அங்கு வந்து மன்னருக்கு அடிபணிந்து சிமெங் தேசத்தை அவருடைய ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்வதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கும் உயர்வு கிடைக்கும் என்றும் அவனை வற்புறுத்துகிறார். எனினும் ஜுக்கே யூ  தான் இனிமேல் யோங் தேசத்திற்கு சேவை செய்ய வரப்போவதில்லை என்றும், அத்துடன் தன்னை மறந்து விடுமாறும் தனது தாத்தாவிடம் கேட்டுக்கொள்கிறான்.  கிங்ஷான் குறுநிலத்தின் ஒரு உறுப்பினராக தான் வாழ்ந்த அந்த வாழ்க்கை அந்த உறைந்த ஏரி பனியிலேயே முடிவடைந்து விட்டதாகவும், இனிமேல் தான் சிங்-உடன் அமைதியான வாழ்க்கை வாழ விருப்பவதாகவும், ஜுக்கே யூ உறுதியாக கூறுகிறான். 

ஒரு அடிமைப் பெண்ணுடன் வாழ்வதற்காக தன் கடமையை கைவிடுகின்ற பொறுப்பற்றவன் என்று அவனை ஜுக்கே முகிங் குற்றம் சாட்டுகிறார். முன்னர் அந்த கடமைக்காக எண்ணற்ற நிரபராதிகளின் ரத்தத்திற்கு பொறுப்பானவன் ஜுக்கே யூ என்றும், அவன் தன் கைகளில் படிந்துள்ள அந்த ரத்த கரையை அவனால் ஒருபோதும் முழுமையாக கழுவி நீக்க இயலாது என்றும் அவர் அவனுக்கு நினைவூட்டி,  அதனால் தனது குலத்தின் சிறப்பைக் காக்க தன்னுடன் வரும்படி அழைக்கிறார். ஆனால் ஜுக்கே யூ எதுவும் கூறாமல் வெளியேறுகிறான்.

இந்த நிலையில் சிங்-ம் ஜுக்கே-யும் அரண்மனையில் இருக்கும் பொழுது சிங்-ன் சகோதரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு பெண் வந்து பெறுகிறாள். பல ஆண்டுகளுக்கு முன்பு அடிமை வாழ்வின் கொடுமையில் இருந்து தப்பி ஓடிய போது இருவரும் பிரிந்து விடுகின்றனர். அதிலிருந்து சிங் அவளைத் தேடிக்கொண்டே இருக்கிறாள். இப்பொழுது அவளை கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறாள். இருப்பினும் அவள் சகோதரி ஜிங் அந்த ஆடம்பரமான அரண்மனையை நோக்கிய போது அவளது கண்கள் பொறாமையாலும், வெறுப்பாலும் நிறைந்திருக்கின்றன. தான் ஒரு பிச்சைக்காரியாக துன்புற்று இருக்கும்போது, தன் சகோதரி ஆடம்பரத்தில் திளைத்து வாழ்வதாக அவள் உணர்ந்து மனதில் வெறுப்பை தேக்கி கொள்கிறாள். 

அதனால் அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் பொருட்டு அவள் யாருக்கும் தெரியாமல் ஜுக்கே யு-வின் படுக்கையறைக்குள் நுழைந்து, நாடகமாடி அவன் தன்னிடம் தவறிழைத்ததாக பொய்யாக குற்றம் சாட்டி, அதன் மூலம் சிங்-கை அவனுக்கு எதிராக திருப்ப முயற்சிக்கிறாள்.  ஆனால் இந்த முயற்சியில் தோல்விதான் அவளுக்கு கிட்டுகிறது. ஜுக்கே யூ ஒருபோதும் அத்தகைய செயலை செய்ய மாட்டான் என்பதை நன்கு அறிந்திருந்ததால் அதனை தன் சகோதரிக்கும் புரிய வைக்கிறாள் சிங். இதனால் ஜிங் தன் பாசாங்கு செயலை நிறுத்திக் கொண்டு தன் உடன் இருந்த அனைத்து அடிமைகளின் இறப்பிற்கும் அவர்களே காரணம் என்று குற்றம் சாட்டி வெறுப்பை கக்குகிறாள். 

தனக்கு துரோகம் நடந்த போதிலும், சிங்-ஆல் தன் சகோதரிக்கு தீங்கு விளைவிக்க மனம் வரவில்லை. அதனால் அவள் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவளுக்கு ஒரு குதிரை, அதிகமான வெள்ளி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி அவளை அனுப்பி வைக்கிறாள். அந்த சூழ்நிலையில் சந்தேகம் கொண்ட ஜுக்கே யூ-ம் சிங்-ன் சகோதரி ஜிங்-ஐ பின் தொடர்கிறான். அவள் வைத்திருக்கும் கத்தி தன் கிங்ஷான் அரசவைக்கு உரிய ஆயுதமான மெருகூட்டப்பட்ட இரும்பினால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொழுது, அவன் மற்றொன்றையும் அறிந்து கொள்ள நேரிடுகிறது. அவளை அங்கு அனுப்பி வைத்ததே அவனது தாத்தா தான். தன் வீரர்களுக்கு யோங் தேசத்தில் இருந்து வேறு யாராவது ஒருவன் தலைவனாக மன்னன் தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் இந்த வீரர்களையும், இவர்களின் குடும்பத்தையும் நாசம் செய்துவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறி, இப்பொழுதும் 5 நாட்கள் கெடு தந்து அவனை தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்துகிறார்.

இதற்கிடையில் ஜான் தேசத்து தலைவன் யார் சோனம் அவன் துணைவி ராணியும் சிமங்கு நாட்டிற்கு வியாபாரிகள் என்ற போர்வையில் வந்து சேர்கிறார்கள்

5 நாட்கள் பிறகு, ஜுக்கே யூ சற்றும் மனம் தளராமல், சிமெங்-கிற்குள் இருந்த கிங்ஷான் அரசவையின் நான்கு புறக்காவல் நிலையங்களின் தலைவர்களைத் தான் ஏற்கனவே பிடித்துவிட்டதாக கூறி, அவர்களைத் தனது தாத்தாவின் முன் நிறுத்துகிறான். மேலும் தானும் அவர்களில் ஒருவனாக இருந்தவன் தான் என்பதால் அந்த பயிற்சியின் மூலம் பத்து நாட்களுக்குள் யான் மற்றும் பியாண்டாங் தேசங்களில் உள்ள ஜுக்கே குலத்தின் ஒவ்வொரு மறைந்திருக்கும் உளவாளியையும் தன்னால் ஒழித்துவிட முடியும் என்றும், அதன் மூலம் ஜுக்கே முகிங்-ன் பல ஆண்டுகால உழைப்பை வீணாக்கிவிட முடியும் என்றும் ஜுக்கே யூ தனது தாத்தாவை எச்சரிக்கிறான். 

தனது பேரனின் உறுதி அசைக்க முடியாதது என்பதை உணர்ந்த ஜுக்கே முகிங், இறுதியாகத் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார். ஜுக்கே யூ-வை தன்னால் கட்டாயப்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொண்ட அவர், வரவிருக்கும் அரசியல் புயல்களில் இருந்து தப்பிப் பிழைக்க ஜுக்கே யூ தன்னை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்று எச்சரித்து விட்டு செல்கிறார். அவர்களிடம் இருந்து சிங்-ன் சகோதரியை மீட்டு அனுப்பிவைக்கிறான் ஜுக்கே யூ.

அத்தியாயம் 28 – இன் சுருக்கம்

அத்தியாயம் 30 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top