Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 35 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 35

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி. யான் சூன்-ஐ முன்பு ஒருதலையாக விரும்பியவள். பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட இளவரசனான லீயான்-ன் மனைவி. வயிற்றில் குழந்தையுடன் தன் தாய் தேசத்துக்கே அடைக்கலம் தேடி வந்தவள். இப்போது 13வது இளவரசனின் கட்டுப்பாட்டில் இருப்பவள்.

ஸாவோ யாங் – யோங் பேரரசின் 13வது இளவரசன். இரக்கமற்ற கொடூரன். மன்னனான தந்தைக்கு மிக பிரியமான மகன்.

லி யான் – பியாண்டாங் தேச இளவரசன். உண்மையான பட்டத்து இளவரசன் சூழ்ச்சியால் மன்னனாகி, பின்னர் சிங்-ஆல் கொல்லப்படுகிறான்.

யான் சூன் – யான் தேசத்தின் தலைவன். சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்த போது, ஜுக்கே யூ-வின் நண்பன். பின்னர் எதிரி.

பியாண்டாங் தேசம் – யோங் மற்றும் யான் தேசத்தின் அண்டை தேசம். அதன் அரசனின் பாதுகாவல் அன்னையாக அதாவது பேரரசியாக சிங் இருக்கிறாள்.

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து எல்லை பகுதிகளில் போர்களில் ஈடுபட்டாலும், தந்தை அதாவது அரசனால் அன்பு மறுக்கப்படுபவன். பெண் தளபதி ஹுவான்-ஆல் ஈர்க்கப்படுகிறான்.

யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி. ஏழாவது இளவரசனை விரும்புகிறவள்.

.

Rebirth அத்தியாயம் 35 – சுருக்கம்

சிங்-ஐக் காப்பாற்ற வேண்டுமென்றால், முன்பு தன்னால் நிராகரிக்கப்பட்ட, இப்போது யோங் பேரரசில் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ள 13வது இளவரசர் ஸாவோ யாங்-இன் நம்பிக்கையை பெற்றுள்ள ஜாவோ சுன்’எர்-ஐத் தான் எதிர்கொண்டாக வேண்டும் என்பதை யான் சூன் உணர்ந்து அவளைக் காண வருகிறான். அவளது நிலையற்ற மனநிலையை நன்கு அறிந்திருந்த அவன், இளவரசியை அணுகி, தான் யான் தேசத்தின் கட்டுப்பாட்டை இறந்துவிட்டதாகவும், அதனை மீட்க உதவும் படியும் கேட்கிறான். யான் தேசத்தில் தனது பழைய அந்தஸ்தை மீட்டெடுக்க [ உண்மையில் சிங்-க் காப்பாற்ற ] என்ற போர்வையில் எதையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறி, தன்னை ஒரு பகடைக்காயைப் போல அவளிடம் சித்தரித்துக்கொள்கிறான்.

முன்னர் யான் சூன் செய்த துரோகத்தால் வெறுப்பு கொண்ட ஜாவோ சுன்’எர் அவனை 12 மணி நேரம் வெளியே மண்டியிட்டு இருக்குமாறு கட்டளையிட்டு, பின்னர் சிறிது நேரத்திலேயே உள்ளே அழைக்கிறாள். உள்ளே அவளது நிலையற்ற தன்மை மீண்டும் முழுமையாக வெளிப்படுகிறது. அவள் யான் சூன்-ஐத் தனது கணவனான லி யோன்-ன் ஆடைகளை அவனிடம் கொடுத்து அணியுமாறு கட்டாயப்படுத்துகிறாள். பெரும் துக்கத்திலும், மனப்பிறழ்வு நிலையிலும் சிக்கித் தவித்த அவள் யான் சூன் தான் தனது கணவன் லி யான் என்று பிரேமைக் கொண்டு அவனிடம் அழுது, ஆத்திரப்பட்டு அவனை அடிக்கிறாள். எவ்வழியிலும் சிங்-ஐக் கண்டுபிடிப்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் யான் சூன் இளவரசியின் இந்த கொடுமையை பொறுத்துக் கொண்டு அவளது நம்பிக்கையை பெறுவதற்காக ஒரு போலியான அரவணைப்பை அவளுக்கு அளிக்கிறான். ஆனாலும் அவளிடம் அவனுக்கு பரிதாபமே தோன்றுகிறது. பின்னர் அவள் உறங்கியதும் யான் சூன் அவளது பணிப்பெண்ணைக் கத்தியை காட்டும் விரட்டி, சிங்-கின் இருப்பிடத்தை அறிந்து அங்கு செல்கிறான். அங்கு சிங் ஒரு நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு, முன்பு கைது செய்யும் போது கொடுத்த தசைகளை மென்மையாக்கும் பொடிக்கான மாற்று மருந்தை இப்போது சிங்-கிற்கு அருகில் வைத்து விட்டு சென்று விடுகிறான். 

மறுநாள் யான் சூன் ஜாவோ சுன்’எர்-க்கு பணிவிடைகள் செய்து தன் நாடகத்தை தொடர்கிறான். இருப்பினும் அவள் அவனிடம் கொடூரமாகவே நடந்து கொள்கிறாள். அன்று நடக்க இருக்கும் சிங்-கின் மரண தண்டனை நிகழ்வை நேரில் காண்பதற்காக அவனையும் ஜாவோ சுன்’எர் மாளிகையின் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் சிங் நெருப்புக்குச் சிதைக்கு மத்தியில் நிற்கவைக்கப்பட்டு இருக்கிறாள். 13வது இளவரசன் மக்களிடம் சிங் யோங் வம்சத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த முன்னால் அடிமை என்றும், இப்பொழுது ‘முகமற்ற தெய்வ’த்தின் புனித பெண்ணாக, தன்னை ஒரு போலியான வேடமிட்டுக்கொண்ட பெண் என்றும் பொய்யாக  குற்றம் சாட்டி சிங்-ஐ நெருப்புக்கு இரையாக்க உத்தரவிடுகிறான். அப்போது அவள் அருந்திய மாற்று மருந்து செயல்படத் துவங்க, தனது கட்டுக்களை உடைத்துக் கொண்டு சிங் மேடையில் இருந்து குதித்து 13வது இளவரசன்-ஐப் பனைய கைதியாக பிடித்துக் கொள்கிறாள். யான் சூன்-ம் தன் அருகில் இருந்த ஜாவோ சுன்’எர்-ஐ பனைய கைதியாக பிடித்து வைத்துக் கொள்கிறான். அப்பொழுது சிங் அங்கு குடியிருக்கும் பெருவாரியான மக்களிடம் தான் சிமெங் தேசத்தின் ராணியாக இப்பொழுது இருப்பதாகவும், தன் நாட்டு மக்களுக்கு விஷம் வைத்து அதன் வளங்களை திருடுவதற்காக இந்த ‘முகமற்ற தெய்வ’ வழிபாட்டு முறையை இவர்கள் பயன்படுத்துவதாகவும், ஜாவோ சுன்’எர் மற்றும் 13வது இளவரசன் ஆகிய இருவரின் மீதும் பகிரங்க குற்றச்சாட்டை வைக்கிறாள். 

பிறகு நடந்த குழப்பத்தில் 13வது இளவரசன் யான் சூன்-ஐப் பிடித்து ஜாவோ சுன்’எர்-ஐ நோக்கித் தள்ளிவிட, அதில் எதிர்பாராதவிதத்தில் யான் சூன்-னின் வாள் அவளது வயிற்றில் பயந்து விடுகிறது. அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழவே, யான் சூன் கோபம் கொண்டு தன்னை தள்ளிவிட்ட இளவரசனைக் கொல்ல முற்படுகிறான். அப்பொழுது அங்கு ஜுக்கே யூ தோன்றி, தான் கிங்ஷான் அரசவையின் தலைவர் என்றும், யோங் அரச குடும்பத்தினரின் பாதுகாவலர் என்றும் தன்னை அறிவித்துக் கொண்டு, அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொள்கிறான். சிங்-கை தன்னிடமிருந்து விலக்கி வைக்கவும், அவனுடன் அவள் மேலும் தொடர்பு கொள்வதை தடுக்கவும், தேவையான உரையாடல்களை முன்னெடுத்து வைத்து சிங் மற்றும் யான் சூன் இருவரையும் கைது செய்ய உத்தரவிடுகிறான். அவனின் துரோகத்தால் மனம் உடைந்த நிலையில் சிங் இருக்கும் பொழுது அங்கு ஒரு அரசாணை வருகிறது. பியாண்டாங் தேசத்திலிருந்து வந்த தூதுவர்கள் தங்கள் பேரரசி குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதால், யோங் தேசத்தின் பேரரசன் சிங்-கையும், யான் சூனையும் விடுவித்து அழைத்து வரச் செய்ய உத்தரவிடும் அரசாணை அது. அவர்கள் இருவரும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதும், அவர்களை உயிருடன் விட்டதற்காக 13வது இளவரசன் கோபம் கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று பின்னால் நெருப்பு பற்றிக் கொள்ள 13வது இளவரசனும் கருப்பு ரத்தம் கக்கி இறந்து விடுகிறான். அதே நேரத்தில் அங்கிருந்த முகமறியாத தெய்வத்தின் புனித பெண்ணோ கூச்சலிட்டு கத்துகிறாள். முகமறியா தெய்வத்தின் கோபத்திற்கு 13வது இளவரசன் ஆளாகி விட்டான் என்றும், அதனால் இறந்துவிட்டான் என்றும் அவள் பறைசாற்றுகிறாள். அந்த கொலை தெய்வத்தின் பெயரால் என்ற நிலையில் சூழ்நிலை அங்கு கட்டுக்குள் வருகிறது.

13வது இளவரசன் உயிர் இழந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தன் தந்தையை அதாவது பேரரசனை நேரில் சந்தித்துக் கேள்வி எழுப்புவதற்காக, ஏழாவது இளவரசன் ஜாவோ சே அரண்மனைக்குள் செல்கிறான். யோங் பேரரசிற்காகத் தான் செய்த போர்கள், எண்ணற்ற இராணுவத் தியாகங்கள் என்று தான் வாழ்ந்த போதிலும், பல ஆண்டுகளாகப் பேரரசர் தன்மீது கொண்டிருந்த சந்தேகத்தாலும், தன் சகோதரனின் திறமையின்மையாலும் உந்தப்பட்டு, அவனை தன் வழியில் இருந்து விளக்கவே அவனுக்குத் தான் விஷம் அளித்து, கொன்று அந்த செயலை தெய்வத்தின் மீது திசைதிருப்பியதாக தன் தந்தையிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான் இளவரசன். தன்னையும் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிவிடுவானோ என்ற பயத்தில், தனக்கு வேறு வழியே இல்லை என்பதையும் உணர்ந்த பேரரசர், ஜாவோ சே-வை பட்டத்து இளவரசனாக நியமிக்கும் ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுகிறான். 

ஏழாவது இளவரசன் ஸாவோ சே-ம், ஜுக்கே யூ-ம் பரஸ்பர ஒப்பந்தத்தின் காரணமாக செயல்பட, அதன் விளைவு இப்போது ஏழாவது இளவரசன் பட்டத்து இளவரசனாகவும் ஆகிறான். யான் சூன்-ம் சிங்-ம் இருந்தால் யான் தேசமும் பியாண்டாங் தேசமும் தனக்கு எதிராக திரும்பும் அபாய நிலை ஏற்படும் என்று பட்டத் இளவரசன் நிலையிலிருந்து எண்ணி பார்த்து, தப்பிவிட்ட அவர்கள் இருவரையும் கொல்ல ஆணை இருக்கிறான் ஸாவோ சே. இதனால் ஜுக்கே யூ-வுடன் செய்த ஒப்பந்தத்தை மீறும் நிலை வர, அதை அலட்சியமாக கடந்து செல்கிறான் பட்டத்து இளவரசன்.

பின்னர் பட்டத்து இளவரசன் எதிர்கால அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு இறுதி முயற்சியாக, யான் தேசத்திலிருந்து யோங் தேசத்திற்கு ஒப்பந்தம் பேசுவதற்காக வந்து தன் நாட்டில் தங்கி இருக்கும் பெண் தளபதி ஹுவான்-ஐத் தன்னிடம் அழைத்து வரச் செய்கிறான். இந்த அழைப்பை ஏற்று அவளும் வருகிறாள். அவளிடம் யான் தேசத்தின் பொறுப்பாளராக அவள் மாறினால், யான் தேசமும் யோங் தேசமும் என்றும் நட்புணர்வுடன் இணைந்து வாழ முடியும் என்று கூறி தன் உணர்வுகளின் அடையாளமாக தனது அரச மோதிரத்தையும் அவளிடம் கொடுக்கிறான். அதற்கு அவள் ஒப்புக்கொள்ள அவர்கள் ஓர் இரவை இணைந்து கழிக்கிறார்கள். 

ஆனால் மறுநாள் காலையில் இளவரசன் எழுந்து பார்க்க அவள் அங்கு இல்லை. அவள் அவனுக்காக விட்டுச் சென்ற குறிப்பில், தான் யான் தேசத்திற்கு சொந்தமானவள் என்றும், தான் என்றும் யோங் தேசத்துடன் ஒன்றாக இயலாது என்றும் தெரிவித்து, தான் என்றும் அவனை விரும்புவதாகவும் இந்த இரவு இனிமையான இரவு என்றும் தெரிவித்து, மீண்டும் போர்க்களத்தில் சந்தித்தால், அவர்கள் ஒன்றாகக் கழித்த இரவை மறந்துவிட வேண்டும் என்றும், கருணை காட்டக்கூடாது என்றும் அவள் தன் எண்ணத்தை அதில் பதிந்து விட்டு சென்றிருந்தாள் தளபதி ஹுவான்.

அத்தியாயம் 34 – இன் சுருக்கம்

அத்தியாயம் 36 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top