Rebirth – Chinese Drama 2026 | தமிழ் விளக்கம்

.

Home > Rebirth

Rebirth [ மறு பிறப்பு ]

Popular Cdramas

Trailer 1

.

Trailer 2

.

சுருக்கம்

இந்த கதை சிங் என்ற அடிமைப் பெண்ணைப் பற்றி சொல்கிறது. யான் தேசத்தின் வாரிசான யான் சூன், சூ கியாவோ [ சிங் ] என்ற அடிமைப் பெண்ணைக் காப்பாற்றி, ஆவலுடன் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க முயற்சி செய்கிறான். இருப்பினும், லட்சியங்கள் மோதும்போதும், நம்பிக்கை துரோகம் செய்யப்படும்போதும், எல்லாவற்றிக்கும் மேலாக தன்னை எப்போதும் எந்த நிலையிலும் தொடர்ந்து காத்து வந்த தான் நேசிக்கும் ஜுக்கே யூ என்ற மனிதனுக்கு மற்றவர்களால் நேரிடும் நிலைக்கும் எதிராக சிங் நடத்தும் அதிகாரப் போராட்டங்களிலும் நீதிக்கான தேடலிலும் அவளே சிக்கிக்கொள்கிறாள். அரசியல் குழப்பங்களுக்கும் தனிப்பட்ட தியாகங்களுக்கும் மத்தியில், அவள் தன் மக்களையும், தாய்நாட்டையும், தனக்கானவனையும் பாதுகாக்கப் போராடி, நம்பிக்கையின் சின்னமாக உயர்வதே இந்த கதை.

நம்பிக்கைத் துரோகத்தில் விளைந்த ஒரு போரில் சூ கியாவோ [ சிங் ] மற்றும் ஜுக்கே யூ இருவரும் அடர்ந்த உருகாத பனி ஆற்றின் அடியில் மூழ்கி, கிட்டத்தட்ட உயிர் விடும் நிலை வர சென்று, மறுபிறப்பாக உயிர் பெற்று வருகிறார்கள். ஜுக்கே யூ, அவன் நண்பன் யான் தேசத்து வாரிசு, அவனின் அடிமையாக வந்து விருப்பமாக மாறும் சிங் இவர்களின் உணர்வுகளும், அவர்களை சுற்றி இருப்பவர்களின் செயல்களும் இவர்களை ஒரு பெரும் போராட்டக் காலத்திற்கு இட்டுச் செல்கிறது. இது அவர்களின் உலகைக் குழப்பத்தில் ஆழ்த்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதில் அவர்கள் எவ்வாறு தங்கள் உயிரைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள், என்பதை இந்த சைனீஸ் நாடக வரலாற்றுக் கதை. இது 2017-ல் வெளியான “பிரின்சஸ் ஏஜென்ட்ஸ்” தொடரின் அடுத்த பாகம் என்று சொல்லப்படுகிறது.

விவரங்கள்

தலைப்பு: Rebirth [ மறு பிறப்பு ]
சீனத் தலைப்பு: 冰湖重生
வகை: வரலாற்று, அதிரடி, காதல்
எபிசோடுகள்: 40
கால அளவு: 45 நிமிடங்கள்
இயக்குநர்: Lv Hao Ji Ji
திரைக்கதை ஆசிரியர்: Wei Yi
தயாரிப்பாளர்: Zhang Meng
வெளியீட்டுத் தேதி: 2026-04-08

கதாபாத்திரங்கள்

யோங் பேரரசு – ஜுக்கே யு – யோங் பேரரசின் கின்ஷான் பிரதேச குறுநில மன்னன் – புகழ்பெற்ற ஜுக்கே குலத்தின் நான்காவது மகன். 

யான் பேரரசு – வாரிசு யான் சூன் – சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்த போது ஜுக்கே யு-வின் நண்பன். பின்னர் எதிரி. 

சூ கியாவோ – சிங் என்று அழைக்கப்படும் இவள் ஜுக்கே யுவின் அடிமையாக வந்து சேர்ந்து, அவனால் போர்வீரங்கனையாக பயிற்சி கொடுக்கப்பட்டவள் – முன்னர் ஜுக்கே யுவின் தோழனாக இருந்த போது யான் சூனால் ஒரு தலையாக விரும்பப்பட்டவள். ஜுக்கே யு இவளுக்கு ‘சிங்’ என்று பெயரிட்டு அழைக்கிறான். யான் சூன்-க்கும் மற்றவர்களுக்கும் இவள் ‘சூ’

ஷியூலி இராணுவம் – சிங் உருவாக்கி, நடந்த போரில் தந்திரமாக மொத்தமாக அழிக்கப்பட்டது. 

ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண் அதிகாரி – யான் தேசத்தின் ராணியாக விருப்பம். 

செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன் படைத்தளபதி – யான் தேச துரோகி 

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன் 

ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன்

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் பாதுகாப்பில் இருக்கிறாள். 

யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண்.

ஜோங் யூ – டாடோங் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் தலைவி. யான் சூன் ஆல் பாதிக்கப்பட்ட ஒரு சிறு படைத்தலைவி. சிங் ன் மேல் மதிப்பு கொண்டு அவளுக்காக எதையும் செய்யும் பெண். சிங்-ன் நலம் விரும்பிய பெண் தோழி. தளபதி செங் ஆல் கொலைசெய்யப்பட்டவள்.

சிமெங் – சிமெங் தேசத்தின் மன்னன் 

லிங் யூ – சிமெங் [Ximeng ] மன்னனின் ராணி – சிமெங் நாட்டில் உள்ள லிங் யூ குறுநில பெண் 

லீ சே – பியாண்டாங் தேசத்து பட்டத்து இளவரசன்

‘ஹுவோட்டு நீர்’ – மிகவும் ரகசியமான ஒரு மருந்து. பார்வையை மீட்டெடுக்க, இம்மருந்தை ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். தன் பாதுகாப்பில் இருக்கும் யோங் தேசத்து முன்னாள் இளவரசி ஜாவோ சுன்’எர்-ஐ நேசிக்கிறான்.

லி ஜியாவோ – பியாண்டாங் தேசத்தின் பேரரசர். மது மாது என்று சந்தோஷத்தில் திளைத்து, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்.

ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன்.  சடங்குகளின் மாபெரும் அமைச்சர். [ அந்த காலத்தில் அங்கு ஜோதிடர்களின் அதிகமும், அவர்களின் சடங்குகளின் நிகழ்வுகளும் மன்னர்களின் அரண்மைகளில் மிக பிரபலம்.]

மிங் லூ – பட்டத்து இளவரசரின் முதன்மைப் பணிப்பெண். யோங் நகரின் காவல் தலைவனின் மகள். சிங் மற்றும் யான் சூன் கிளர்ச்சி செய்து தப்பித்ததால் குற்றம் சாட்டப்பட்டு குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டு, இவள் மட்டுமே பழிவாங்க எஞ்சி இருக்கிறாள்.

ஜாவோ குவோ – யோங் தேசத்தைச் சேர்ந்த முஹே குலத்தின் அரசாங்க பணியாள். முஹே குலம் சிங் ன் எதிரி. யோங் தேசத்தின் தூதுவனாக பியாண்டாங் தேசத்திற்கு வந்திருக்கிறான். 

ஜுக்கே ஹுவா – ஜுக்கே யூ வின் உறவினன். அடிமைகளை சித்ரவதைகளைச் செய்து ரசிக்கும் கொடூரன். 

சுன்சிங் – இளவரசன் லீயான்-ன் பணிப்பெண் 

மோஜான் – இளவரசன் லீயான்-ன் உதவியாளன். சுன்சிங்-ன் காதலன்.

ஹெலியன் சுவான் – ஹெலியன் பழங்குடியினத்தின் தலைவன். யான் சூன்-ன் ராணியாக விரும்பும் ஹெலியன் லிங்-ன் சகோதரன்.

டுபா – ஹாங்சுவான் குலத்தைச் சேர்ந்த 70 வயதான மூத்த தலைவர் டுபா. 

வாங் ஷி’யர் – தேர்ந்த ஒரு கல்லறைத் திருட்டு நிபுணன் 

சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன்.

ஜாங் கிங் ஜாவா – கருப்பு தங்கச் சுரங்கத்தை அகழ்ந்து எடுப்பதற்கான வழிமுறையைச் சொல்லக்கூடிய ஒரு அரிய வரைபடத்தை வைத்திருந்த மனிதன். இவனைத் தேடியே ஜுக்கே யூ மன்னனின் ரகசிய கட்டளை படி பியாண்டாங் தேச தலைநகரத்திற்கு வந்தான்.

லேடி ஜிமிங் – பட்டத்து இளவரசனின் துணைவி. பேரரசின் காதலனின் கையாள். 

ஜாங் சிஜெங் – டைரக்டர் சிஜெங் என்றும் லார்ட் சிஜெங் என்றும் அழைக்கப்படும் இவன்  புகழ்பெற்ற ‘படைப்பு வழிகாட்டி’ (Creation Manual) என்னும் நூல்-ஐ எழுதியவன். 

ஹே சியாவோ – ஷியூலி இராணுவத்தின் தலைவன். ராணுவம் அழிக்கப்பட்ட போது, யான் தேசத்தின் மறைவிடத்தில் கைதியாக இருப்பவன். 

லிஞ்சங் – யான் தேசத்தின் முக்கிய பிரதேசம். கைதிகள் பரிமாறிக்கொள்ளும் இடமாக இப்போது உள்ளது. 

சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.  

ஃபாங் மியாவ்மியாவோ – சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் பெண் வீரர். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறாள். 

.

எபிசொட் விளக்கம்

அத்தியாயம் 1 – இன் சுருக்கம்

அத்தியாயம் 2 – இன் சுருக்கம்

அத்தியாயம் 3 – இன் சுருக்கம்

அத்தியாயம் 4 – இன் சுருக்கம்

அத்தியாயம் 5 – இன் சுருக்கம்

அத்தியாயம் 6 – இன் சுருக்கம்

அத்தியாயம் 7 – இன் சுருக்கம்

அத்தியாயம் 8 – இன் சுருக்கம்

அத்தியாயம் 9 – இன் சுருக்கம்

அத்தியாயம் 10 – இன் சுருக்கம்

அத்தியாயம் 11 – இன் சுருக்கம்

அத்தியாயம் 12 – இன் சுருக்கம்

அத்தியாயம் 13 – இன் சுருக்கம்

அத்தியாயம் 14 – இன் சுருக்கம்

அத்தியாயம் 15 – இன் சுருக்கம்

அத்தியாயம் 16 – இன் சுருக்கம்

அத்தியாயம் 17 – இன் சுருக்கம்

அத்தியாயம் 18 – இன் சுருக்கம்

அத்தியாயம் 19 – இன் சுருக்கம்

அத்தியாயம் 20 – இன் சுருக்கம்

அத்தியாயம் 21 – இன் சுருக்கம்

அத்தியாயம் 22 – இன் சுருக்கம்

அத்தியாயம் 23 – இன் சுருக்கம்

அத்தியாயம் 24 – இன் சுருக்கம்

அத்தியாயம் 25 – இன் சுருக்கம்

அத்தியாயம் 26 – இன் சுருக்கம்

அத்தியாயம் 27 – இன் சுருக்கம்

அத்தியாயம் 28 – இன் சுருக்கம்

அத்தியாயம் 29 – இன் சுருக்கம்

அத்தியாயம் 30 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top